ஏப்ரல் 18, 2010

மக்களே உஷார் III

மக்களே உஷார் I
மக்களே உஷார் II

பெண்களுக்கு எவ்வாறெல்லாம் தொல்லை கொடுக்கலாம் என்று நம்ம ஆட்கள்கிட்டதாங்க கத்துக்கணும் . உங்களுக்கு தெரியாமயே உங்கள் போட்டோ இணையதளங்களில் வலம் வரலாம். பல்வேறு கீழ்தரமான தளங்களில் இடம்பெறலாம். எப்படின்னு கேக்கறீங்களா? தொடர்ந்து படிங்க ..


இன்னிக்கு  பெண்களுக்கு எதிரான முக்கிய ஆயுதமே  கேமரா செல்போன்தான். இன்னிக்கு நெறைய பேர் இந்தமாதிரி போன்தான் உபயோகிக்கறாங்க. அதில சில பேர்தாங்க இந்தமாதிரி வேலையெல்லாம் செய்யறாங்க. இன்னிக்கு நாகரீகம்னு சொல்லிக்கிட்டு மேல்நாட்டு உடைகளை போடறீங்க.(குறிப்பா கல்லூரி மாணவிகள் மற்றும்  பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோர்) கேட்டா வசதியா இருக்கு இந்த கோடைகாலத்தில அப்படின்னு. ஆனா பாருங்க உங்களுக்கு வசதியா இருக்கற விசயமே உங்களுக்கு ஆபத்தாக முடியும். உடலை மறைக்கற மாதிரி உடை என்றால்  பிரச்சனை இல்லை. பல உடைகள் அப்படியா இருக்கு?

இந்த மாதிரி உடை அணிந்து நீங்கள் பொது இடங்களுக்கு செல்லும்பொழுது உங்களுக்கே தெரியாமல் சில விஷமிகளின் கீழ்த்தரமான எண்ணங்களுக்கு நீங்கள் பலி ஆகிறீர்கள். நீங்கள் படிக்கும் கல்லூரியோ அல்லது பொருட்கள் வாங்க செல்லும் ஸ்பென்சர், சிட்டி சென்ட்டர் அல்லது கடற்கரை போன்ற இடத்திலையோ நீங்கள் புகைப்படம் எடுக்கப்படலாம். பின்பு அது பலரிடம் கைமாறும் இணையதளத்திலும் போடப்படலாம்.  .

நீங்கள் கல்யாணமாகாத இளம்பெண்ணாக இருந்து உங்கள் படம் இவ்வாறு தளங்களில் வந்தால் உங்கள் வாழ்க்கை  ? . அதேபோல்தான் திருமணம் ஆனவர்களுக்கும். தேவையற்ற பல சிக்கல்கள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும்.வெளில போறப்ப நாம எப்படி உடை அணிகிறோம் என்பது முக்கியம்.  பார்ப்பதற்கு நன்றாக இருந்தால் மட்டும் போதாது , உடலை மறைப்பதாகவும் இருக்கணும் எனவே முடிந்த வரை வெளியில்  செல்லும்பொழுது நமது உடையில் கவனம் செலுத்துவோம்.


செய்வீங்களா?

24 கருத்துகள்:

மனோ சாமிநாதன் சொன்னது…

இன்றைய இளம் பெண்களுக்கு உதவும் பயனுள்ள கட்டுரை! நன்றாக எழுதியிருக்கிறீர்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!!

Porkodi (பொற்கொடி) சொன்னது…

arivurai ellam solringa.. ketuka vendiyadhu thaan! :)

அநன்யா மஹாதேவன் சொன்னது…

இந்த காலத்துக்கு தேவையான பகிர்வு.
நன்றி கார்த்திக்!

என்னதான் நீ சொன்ன மாதிரி உடம்பை மூடி உடை அணிந்தாலும் விஷமிகளை மாற்ற முடியறதில்லை. ஒரே வழி. எப்ோதும் விழிப்புணர்வுடன் இருப்பது தான். ஏதோ நியாபகத்தில பொது இடங்களில் நடப்பது, தன்னை மறந்த நிலையில், காதில் ஈயர் ப்ளக் வைத்துக்கொண்டு, ரேடியோ கேட்டு ரசிப்பது, சதா ஃபோனில் உரையாடிக்கொண்டே இருப்பது இது போன்ற செய்கைகயினால், சுற்றும் முற்றும் நடப்பதை இக்கால பெண்கள் அறிவதில்லை. இதையெல்லாம் குறைத்தாலே விழிப்புணர்வு ஆட்டோமேட்டிக்காக வந்து விடும்!

தக்குடுபாண்டி சொன்னது…

//பார்ப்பதற்கு நான்றாக இருந்தால் மட்டும் போதாது , உடலை மறைப்பதாகவும் இருக்கணும் // correctuthaan LK

தமிழ் உதயம் சொன்னது…

நாம என்ன சொன்னாலும் கேட்கிற நிலைமைல யாரும் இல்ல. இருந்தாலும் ஊதுற சங்கை ஊதி வைப்போம்.

ஜிஎஸ்ஆர் சொன்னது…

நல்லா சொல்லியிருக்கிங்க இனியாவது இது போன்ற உடையணிபவர்கள் இதை கவனத்தில் எடுத்துக்கொண்டால் நலம்

வாழக் வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

அப்பாவி தங்கமணி சொன்னது…

நல்லா சொன்னீங்க LK ... காலம் கெட்டு கெடக்கு

அமைதிச்சாரல் சொன்னது…

காலத்துக்கேத்த கட்டுரை எல்.கே. ஆனா, புடவை கட்டிக்கிட்டு போனாக்கூட இந்த விஷமிகள் கிட்டேர்ந்து தப்ப முடியறதில்லை. அவங்க வீட்டிலும் பெண்கள் இருக்காங்க என்பதை எப்போத்தான் உணர்வாங்களோ :-((

ஸாதிகா சொன்னது…

அவசியாமான இடுகை.பிடியுங்கள் என் வாழ்த்துக்களையும் ஓட்டையும்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

சரிதான்.

:)

கண்மணி/kanmani சொன்னது…

சரியாச் சொன்னீங்க.குறிப்பாக துணிக்கடைகளில் துணி சரியா இருக்கான்னு பார்க்கும் போது எச்சரிக்கை அவசியம்.
வீட்டுல போய் சரி பார்த்துக்கலாம்.
பொது இடங்களிலும் கவனமாக இருக்கனும்

Ananthi சொன்னது…

பயனுள்ள தகவல்.. வாழ்த்துக்கள்.

LK சொன்னது…

// மனோ சாமிநாதன் said...

இன்றைய இளம் பெண்களுக்கு உதவும் பயனுள்ள கட்டுரை! நன்றாக எழுதியிருக்கிறீர்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!!//

நன்றிமா

//Porkodi (பொற்கொடி) said...

arivurai ellam solringa.. ketuka vendiyadhu thaan! :)//
பொற்ஸ் எதோ என்னால முடிஞ்சது

//அநன்யா மஹாதேவன் சிட்
், சுற்றும் முற்றும் நடப்பதை இக்கால பெண்கள் அறிவதில்லை. இதையெல்லாம் குறைத்தாலே விழிப்புணர்வு ஆட்டோமேட்டிக்காக வந்து விடும்!//

சரியாய் சொன்ன
//தக்குடுபாண்டி said...

//பார்ப்பதற்கு நான்றாக இருந்தால் மட்டும் போதாது , உடலை மறைப்பதாகவும் இருக்கணும் // correctuthaan //

:)

LK சொன்னது…

//தமிழ் உதயம் said...

நாம என்ன சொன்னாலும் கேட்கிற நிலைமைல யாரும் இல்ல. இருந்தாலும் ஊதுற சங்கை ஊதி வைப்போம்.//
நம்ம கடமை சங்கை ஊதறது ஊதுவோம்

LK சொன்னது…

//ஜிஎஸ்ஆர் said...

நல்லா சொல்லியிருக்கிங்க இனியாவது இது போன்ற உடையணிபவர்கள் இதை கவனத்தில் எடுத்துக்கொண்டால் நலம்

வாழக் வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்//
நன்றி ஞானசேகர்

//அப்பாவி தங்கமணி said...

நல்லா சொன்னீங்க LK ... காலம் கெட்டு கெடக்கு//
:)

LK சொன்னது…

//அமைதிச்சாரல் said...

காலத்துக்கேத்த கட்டுரை எல்.கே. ஆனா, புடவை கட்டிக்கிட்டு போனாக்கூட இந்த விஷமிகள் கிட்டேர்ந்து தப்ப முடியறதில்லை. அவங்க வீட்டிலும் பெண்கள் இருக்காங்க என்பதை எப்போத்தான் உணர்வாங்களோ :-((//
அதைத்தான் அவங்க நினைக்க மாட்டேன்கரங்க

// ஸாதிகா said...

அவசியாமான இடுகை.பிடியுங்கள் என் வாழ்த்துக்களையும் ஓட்டையு//
நன்றி ஷாதிகா
// கண்மணி/kanmani said...

சரியாச் சொன்னீங்க.குறிப்பாக துணிக்கடைகளில் துணி சரியா இருக்கான்னு பார்க்கும் போது எச்சரிக்கை அவசியம்.
வீட்டுல போய் சரி பார்த்துக்கலாம்.
பொது இடங்களிலும் கவனமாக இருக்கனும்//
சரிதான் கண்மணி

//Ananthi said...

பயனுள்ள தகவல்.. வாழ்த்துக்கள்.//
நன்றி ஆனந்தி

Harini Sree சொன்னது…

Nalla pathivu! Inge palarukku udalai maraippathu enbatharkku arthame theriyaathu! :)

SARAVANAN சொன்னது…

NANBA NEENGAL EAPDI ETHANAI MURIAI SOONALUM ENDRAI PENMANIGAL ATHAI ORU PORUTAGAVEY EDUTHUKOLLA MATARGAL.
NAMATHU KALACHARAM SIRALIVU PALLATHAKIL VEELUNTHU VEGU KALAMAGIVITTATHU.
ERUPINUM NAMATHU PANPADU, KALAACHARAM KAKA PADUPADUM UMAMAI ERUKARAM VANANGI PRAY PANNUKIREN.
NANDRI NANBANEY, NANDRI.

அன்புடன் மலிக்கா சொன்னது…

மிக மிக மிக அவசியமான பதிவு.
காலம் கடல்தாண்டிப்போச்சி..

R.Gopi சொன்னது…

பயனுள்ள இடுகை தலைவா....

மேலும் இது போன்று உபயோகமான இடுகைகள் அனைத்து வலைஞர்களும் இட வேண்டும் என்பதே என் அவா..

க.பாலாசி சொன்னது…

நல்லா சொன்னீங்க போங்க.... காமிரா செல்போன் கண்டுபிடிச்சதும்போதும் இந்த பொம்பளைங்களுக்குதாங்க இன்னும் பிரச்சனை ஆரம்பமாயிடுச்சு....

நல்ல இடுகை....

prabhadamu சொன்னது…

இந்த காலத்துக்கு தேவையான பகிர்வு.
நன்றி கார்த்திக்!

LK சொன்னது…

//Harini Sree said...

Nalla pathivu! Inge palarukku udalai maraippathu enbatharkku arthame theriyaathu! :)/
சரிதான் ஹரிணி
//SARAVANAN said...

NANBA NEENGAL EAPDI ETHANAI MURIAI SOONALUM ENDRAI PENMANIGAL ATHAI ORU PORUTAGAVEY EDUTHUKOLLA MATARGAL.
NAMATHU KALACHARAM SIRALIVU PALLATHAKIL VEELUNTHU VEGU KALAMAGIVITTATHU.
ERUPINUM NAMATHU PANPADU, KALAACHARAM KAKA PADUPADUM UMAMAI ERUKARAM VANANGI PRAY PANNUKIREN.
NANDRI NANBANEY, NANDRI//
நம்ம வேலைய நம்ம செய்வோம் சரவணன். யாராவது ஒரு சிலர் திருந்தின கூட சந்தோசம்தான்

அன்புடன் மலிக்கா said...

மிக மிக மிக அவசியமான பதிவு.
காலம் கடல்தாண்டிப்போச்சி.//
நன்றி மலிக்கா

//R.Gopi said...

பயனுள்ள இடுகை தலைவா....

மேலும் இது போன்று உபயோகமான இடுகைகள் அனைத்து வலைஞர்களும் இட வேண்டும் என்பதே என் அவா..//
கண்டிப்பா தல
// க.பாலாசி said...

நல்லா சொன்னீங்க போங்க.... காமிரா செல்போன் கண்டுபிடிச்சதும்போதும் இந்த பொம்பளைங்களுக்குதாங்க இன்னும் பிரச்சனை ஆரம்பமாயிடுச்சு....

நல்ல இடுகை....//
:)
// prabhadamu said...

இந்த காலத்துக்கு தேவையான பகிர்வு.
நன்றி கார்த்திக்!//
வருகைக்கு நன்றி பிரபு

Kanchana Radhakrishnan சொன்னது…

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.