முதலில் பதிவுலகில் நான்கு வருடங்களை கடந்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் திருமதி கீதா பாட்டிக்கு என் வாழ்த்துக்கள். (சத்தியமா ...
இது எனது 50 வது பதிவு. அதனால் வழக்கம் போல மொக்கை போடாம உருப்படியா ஒரு சில விசயங்களை உங்ககூட பகிர்ந்துக்கறேன்.
உங்க மொபைல் ரீ சார்ஜ் பண்றப்ப தயவு செய்து உங்களுக்கு மிகவும் பழக்கமான வாடிக்கையான கடையில் மட்டுமே பண்ணவும். இப்ப மொபைல் எண்ணை வச்சி விளையாடறது ஒரு சிலரோட பொழுதுபோக்கா இருக்கு. என் சகோதரிக்கு இப்படித்தான் இரண்டு வாரத்துக்கு முன்னாடி ஒரு நம்பர்ல இருந்து கால் வந்துச்சி. என் சகோதரியோட மொபைல் எண் எங்க குடும்பத்தினற்கு மட்டும் தெரியும் .அவங்க நம்பர் வேற யாருக்கும் தர வில்லை. கால் பண்ணவன் நீங்கதான் எனக்கு மெசேஜ் பண்ணி கால் பண்ண சொன்னேங்கனு சொன்னான். அப்புறம் இல்லை என் நண்பனோட நம்பருக்கு மெசேஜ் பண்ணி என்னை கால் பண்ண சொன்னீங்கனு சொன்னான். இதை கேட்டவுடன் என் சகோதரிக்கு செம டென்ஷன். திட்டிட்டு லைன கட் பண்ணிட்டாங்க. அப்புறம் அடுத்த நாளும் அவன்கிட்ட இருந்து கால் வர ஸ்டார்ட் ஆச்சி. இது சரி வரதில்லன்னு , அந்த நம்பர் யாருடயுதுன்னு சைபர் க்ரைமில வேல பாக்கிற எங்க நண்பர் மூலமா விசாரிச்சோம் . பார்த்த கடைசியா மயிலாப்பூர் போனப்ப அவசரத்துக்கு அங்க இருக்கற ஒரு கடைல ரீ சார்ஜ் பண்ணி இருக்காங்க. அப்ப அங்க இருந்த பையன்தான் இந்த மாதிரி கால் பண்ணி டென்ஷன் பண்ணி இருக்கான். அப்புறம் என்ன அந்த பையனை கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சிட்டு வந்தோம்.
இதே மாதிரி எங்க வீடு தங்கமணிக்கும் அனாமதேய அழைப்பு ஒரு 5 மாசத்துக்கு முன்னாடி. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நம்பர்ல இருந்து வரும். 2 நாள் செம குழப்பமா இருந்துச்சி. அவங்க நம்பரும் யாருக்கும் தர வழக்கம் இல்லை. அப்புறம் யோசிச்சு பார்த்த ஒரு வங்கி கடன் வாங்க அப்ளை பண்ணி இருந்தேன். அதற்காக ஆவணங்களை சரி பார்க்க வந்த நபர், வீட்ல இருக்கவங்க நம்பர் வேணும்னு கேட்டு வாங்கி இருக்கார். அதை வச்சிகிட்டு அவர் தங்கி இருந்த அறையில் இருந்த நண்பர்கள் போன்ல இருந்து கால் பண்ணி இருக்கார். அதையும் சைபர் க்ரைமில இருக்கற நண்பர் மூலம்தான் சரி பண்ணோம்.
தயவு செய்து இந்த மாதிரி தெரியாத நபர்களிடம் உங்கள் போன் நம்பரை தரவேண்டாம். அப்புறம் இந்த மாதிரி தேவை இல்லாத பிரச்சனைகள்தான் . அதே மாதிரி அனாமதேய எங்களில் இருந்து கால் வர ஆரமிச்சி திட்டினபிறகும் தொடர்ந்தால் சைபர் க்ரைமை அணுகவும். கண்டிப்பாக அந்த நபருக்கு என்ன தரணுமோ தருவாங்க.இந்த விசயத்துல காவல் துறைய பாரட்டனும்.
அதே மாதிரி இணையத்துல பழக்கமாகின்ற நபர்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியோ அல்லது போன் நம்பரோ உடனே தர வேண்டாம். இதனால நிறைய பிரச்சனைகள் உருவாகின்றன. தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கோ அந்த அளவுக்கு அதை சார்ந்த குற்றங்களும் வளர்ந்து உள்ளன. எனவே நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
என்னை தொடர்ந்து வந்து ஓட்டு, பின்னூட்டம் அளித்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி !!!
39 கருத்துகள்
ஊக்கிவித்த = ஊக்குவித்த, ஐம்பதாயிரம் முறை இம்பொசிஷன் எழுதவும்,
கீதாபாட்டி என்று சொன்னதை வன்மையாகக் கண்டிக்கிறேன் எல்கே தாத்தா!
ஆஹா பெரியவா கையாள முதல் பின்னூட்டமா. ரொம்ப நன்றி
சரி பண்ணிட்டேன்
ஐம்பதாவது போஸ்டு போடும் எல்.கே இந்தா உனக்கு பொற்கிழி! வாழி உமது புகழ்!
உன்னையும் நம்பி வர்ற 25 பேரை கைவிட்டுடாம, செங்கோல கோணாமல் ஆட்சி புரிவாயாக!
ஊக்கிவித்த = ஊக்குவித்த, ஐம்பதாயிரம் முறை இம்பொசிஷன் எழுதவும்///கீதா மாமி, ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள் இருக்கு இந்த பதிவுல! இவன் லைஃப்லாங் இம்பொஸிஷன் எழுத வேண்டீது தான்!
உருப்படியான தகவல் பகிர்ந்துண்டதுக்கு நன்றி!
நன்று. நன்று. கார்த்திக். தமிங்கிளிஷை தொடரவும்.
நன்றி அனன்யா
நன்றி நாக்ஸ் அண்ணா
முதலில் ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.இப்படியே தங்கு தடையில்லாமல் நல்ல பதிவுகள்+மொக்கைகள் போடுவதை தொடருங்கள்.அப்படியே கொஞ்சம் எழுத்துப்பிழைகளையும் சரி பண்ணிடுங்க.
நன்றி சாரல் . இனி வரும் பதிவுகளில் பிழைகள் இருக்காது
congrats LK!.....:)
கீதாபாட்டி என்று சொன்னதை சந்தோஷமாக ஆதரிக்கிறேன்....:)
@தக்குடு
இதுக்காகவே நீ சென்னை வரப்ப உனக்கு விருந்து உண்டு
குட்டிப் பாப்பா கீதாவை பாட்டி என அழைத்து அவமரியாதை செய்த உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
சந்தோசம் தானே கீதா......
@மஞ்சூர், ஆஹா, ரொம்பவே சந்தோஷம்! :P :P
அநன்யா, மிச்சம் தப்பெல்லாம் மெதுவாச் சொல்ல நினைச்சேன். (சமாளி, சமாளி)
எல்கே தாத்தா, ஐம்பதாயிரம் எல்லாம் பத்தாது. அடுத்த பதிவு இம்பொசிஷன் பதிவு தான்! :P:P:P
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜா
Congrats LK! neenga pota post maathiri enakum irandu moondru murai nadanthu irukku! ivangalukku ellam vera vela vetty a illayanu sema kadupaagum! Sila per en kita thittu kooda vaangi irukanga! :P
congrats
@LK
Congrats on your 50th Post... Best wishes for your journey in Blog World..!
Romba useful / thoughtful Tip kuduthirukkeenga.. thanks..
நன்றி அண்ணாமலையான்
நன்றி ஆனந்தி
நன்றி ஹரிணி
அப்படி பண்ண கூட திருந்தாத சில ஜென்மங்கள் இருக்கு
Congrats on your 50th post! Good going, keep doing it!
congrats......... keep rocking...
Congratulations, LK! Best wishes!
thanks aparna,chitra and balaji
அட, இப்படியெல்லாம் நடக்குதா...உஷாராதான் இருக்கணும். ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!
நன்றி ஸ்ரீராம் மற்றும் தேவன் மாயம்
சர்வ சாதாரணமா கடைக்காரர்கிட்டே மொபைலை கொடுக்கறாங்க. கார்டை வாங்கி தானே அப்டேட் பண்ண வேண்டியதுதானே? அதென்ன பிரம்ம வித்தையா?
அண்ணா
இப்ப ஈ ரீ சார்ஜ் தான் நிறைய கடைல வச்சிருக்க. ஒரு சில இனத்தில மட்டுமே கார்டு வச்சிருக்கா. முடிந்த வரை கார்ட் வாங்கி ரீ சார்ஜ் செய்தல்நல்லது
//அண்ணா
இப்ப ஈ ரீ சார்ஜ் தான்..... //
கீ அக்கா நோட் தெ பாய்ண்ட்!
:-)))
தாத்தா, அதென்ன ஈ ரீ சார்ஜ்?? எறும்பு ரீ சார்ஜ் இல்லையா??? கொஞ்சம் விளக்குங்க!
அப்புறமா அதிலே பாருங்க, இந்த மொபைலை சார்ஜ் பண்ணி வைக்கவே மறந்துடும், அதோட சார்ஜ் பண்ணி வச்சுட்டாலும் நினைவா மறந்து வீட்டிலே வச்சுட்டுப் போவோம். இன்னும் பழக்கம் ஆகலை, ஒரு வருஷம் ஆகுது, இன்னுமானு பொண்ணு முறைக்கிறா! என்னத்தைச் செய்யறது??
எலக்ட்ரானிக் ரீ சார்ஜ் அதைத்தான் ஈ ரீ சார்ஜ்னு போட்டேன். தப்பா இருந்தா சரியான வார்த்தை தரவும் . திருத்தி கொள்கிறேன் .
//ஒரு வருஷம் ஆகுது, இன்னுமானு பொண்ணு முறைக்கிறா! என்னத்தைச் செய்யறது?? //
பொண்ணு முறைக்கிறாளா! அடடா அப்ப நான் தான் தப்பு செஞ்சிட்டேனா! பாப்பான்னு இல்லே நினெச்சேன்....
இப்பத்தான் உண்மை வெளிவருது....
அப்ப பாட்டின்னு சொன்னதில் தப்பே இல்லை.
இப்படி எத்தனைப் பேர் கிளம்பியிருக்கீங்கன்னு தெரியலெயே...
அட?? அதைத் தப்புனு யாரு சொன்னாங்க? விளக்கம் தானே கேட்டேன்???
@மஞ்சூரார், பொண்ணுனா எத்தனையோ பேரு இருக்காங்க. இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க? :P:P:P:P
கலக்கல் டிப்ஸ்!
அந்த மாதிரி கால் பண்ணும் காவாலிகளை சட்டப்படி கடுமையா தண்டிக்கணும்!
50க்கு வாழ்த்துக்கள்
@என்.ஆர்.சிபி
இஸ்லாமிய தேசங்களில் உள்ளது போன்ற கடுமையான சட்டங்கள் வேண்டும்
வாழ்த்துகளுக்கு நன்றி
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சொன்னதுக்கு நன்றி.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா
ரொம்ப சரியா சொன்னீங்க. உலகம் ரொம்ப மோசமா இருக்கு. :(
நன்றி விக்னேஸ்வரி
கருத்துரையிடுக