Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

மக்களே உஷார் II

இதே தலைப்பில் கடந்த வாரம் எவ்வாறு அலைபேசி மூலம் பெண்களை தொல்லை படுத்துகின்றனர் என்று எழுதி இருந்தேன் . இந்த வாரம் இந்த இணைய உலகத்தில் எவ்வாற...

இதே தலைப்பில் கடந்த வாரம் எவ்வாறு அலைபேசி மூலம் பெண்களை தொல்லை படுத்துகின்றனர் என்று எழுதி இருந்தேன் . இந்த வாரம் இந்த இணைய உலகத்தில் எவ்வாறு பெண்களுக்கு தொல்லைகள் நேரிடலாம் என்பதை பார்ப்போம்.

இணைய உலகில் இன்று இளைய தலைமுறை இடையே மிக பிரபலமாக இருக்கும் முக்கிய தளம் ஆர்குட். உலகில் எங்கு இருந்தாலும், நமது ஒத்த ரசனை உள்ள குழுவில் இருந்து நமது கருத்துக்களை பறிமாறிகொள்ளலாம் . நல்ல விசயம்தான இதுல என்ன பிரச்சனைன்னு கேக்காம படிங்க. என்ன பிரச்சனைன்னு உங்களுக்கே புரியும்.

இந்த கருத்து பரிமாற்றம் மட்டும் இருந்துச்சுனா பிரச்சனை இல்லேங்க. அதற்கு அடுத்த லெவெலுக்கு போறப்பதான் பிரச்சனை. யாருனே தெரியாத ஒரு நபரை உங்க நண்பரா சேர்க்கறீங்க. கொஞ்ச நாள்ல உங்க போட்டோவும் பார்க்க அனுமதிக்கறீங்க. இங்கதாங்க பிரச்சனை. அந்த நபர் நல்லவரா  இருந்தா பிரச்சனை இல்லை இல்ல கொஞ்சம் மோசமானவனா இருந்தா உங்க படத்தை அவனோட சிஸ்டம்ல சேமித்து வைத்து அதை அவனுடைய விருப்பத்திற்கு ஏத்தமாதிரி எப்படி வேணும்னாலும் உபயோகப்படுத்த முடியும்.

நான் என் கல்லூரி நண்பர்கள் அல்லது உறவினர்களை மட்டும்தான் என் நண்பர்கள வச்சிருக்கேன்.என் போட்டோசும் லாக் பண்ணி வச்சிருக்கேன் . வேற யாரும் பக்க முடியாதே அப்படின்னு நினைக்கறவங்களுக்கு  ஒன்னு சொல்லிகிறேன். இந்த இணையதளத்துல எத்தனையோ விதமான மென்பொருள்கள் உள்ளன. நீங்க பூட்டி  வச்சிருக்கற போட்டோக்களைப்  பாக்கறதுக்கும் மென்பொருள் உண்டு, எனவே உங்க போட்டோக்களை ஆர்குட்ல போடறத நிறுத்துங்க முதல்ல.

அதே மாதிரி முடிஞ்ச வரைக்கும் உங்க அலைபேசி எண்ணோ இல்ல வீட்டு முகவரியோ தராதீங்க . உங்கள் அலைபேசி எண் வேறு விதத்தில் இணையதளங்களில் பரப்பப்பட வாய்ப்புகள் அதிகம்.

 இந்த மாதிரி இன்னொரு மோசடி இருக்கு. நீங்க பெண்ணாக நினச்சு பேசிட்டு இருக்கவர் ஆணாகக்  கூட இருக்க வாய்ப்புகள் அதிகம் .நீங்க பொண்ணுன்னு நினைத்து தனிப்பட்ட விசயங்களை பகிர்ந்துகிட்டா அதை வைத்து உங்களை பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு உங்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது,

முடிஞ்ச வரைக்கும் இணைய நட்பை இணையத்தோட நிறுத்திக்கிறது நல்லது. இணைய பரிமாற்றங்கள் மூலமா நிறைய நன்மைகள் உண்டு. அதே போல் கெடுதியும் உண்டு. எனவே மிகவும் கவனமாக இருங்கள்.

நன்றி

35 கருத்துகள்

அண்ணாமலையான் சொன்னது…

நல்ல விஷயம்தான்

BalajiVenkat சொன்னது…

Very good message to the people, especially to the parents of adolescents..

பெயரில்லா சொன்னது…

இணைய நண்பர்கள் பற்றிய பதிவிற்கு நன்றி

எல் கே சொன்னது…

நன்றி பாலாஜி

எல் கே சொன்னது…

/இணைய நண்பர்கள் பற்றிய பதிவிற்கு நன்றி//
நன்றி வெங்கடேச சிவம்

Chitra சொன்னது…

A good advice for people, especially for teenagers.

Ananya Mahadevan சொன்னது…

நல்லா சொல்லு! குட் ஜாப்!

Geetha Sambasivam சொன்னது…

100/100

எல் கே சொன்னது…

//A good advice for people, especially for teenagers.//

கேக்கணுமே

எல் கே சொன்னது…

//நல்லா சொல்லு! குட் ஜாப்!//

danks

எல் கே சொன்னது…

// கீதா சாம்பசிவம் said...

100/100/

ரொம்ப நன்றி

சுசி சொன்னது…

பயனுள்ள பதிவு.

எல் கே சொன்னது…

//சுசி said...

பயனுள்ள பதிவு.///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசி

Harini Nagarajan சொன்னது…

fake profiles a pathiyum konjam solli iruntha innum nalla irunthu irukum! and intha internet ulagathula naama ragasiyamnu yethayume vechukka mudiyathungaratha correct a solli irukel!

எல் கே சொன்னது…

//fake profiles a pathiyum konjam solli iruntha innum nalla irunthu irukum! and intha internet ulagathula naama ragasiyamnu yethayume vechukka mudiyathungaratha correct a solli irukel!//
@ஹரிணி

ஒருத்தர் எப்ப தன்னை வேற ஒரு பாலினமா காமிச்சிட்டு பேசராரோ அப்பவே அது போலிதான். வருகைக்கு நன்றி f

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

Very nicely said..

Anaivarum therindhu kolla vendiya visayam..

pakirndhadharku nandri.. :-)

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ரொம்ப நல்ல விஷயம் சொல்லியிருக்கிறீர்கள். டீனேஜர்கள் கேக்கணும்.மத்தவங்களும் புரிஞ்சிக்கிடணும்.

எல் கே சொன்னது…

//Anaivarum therindhu kolla vendiya visayam..

pakirndhadharku nandri.. :-)//

நன்றி ஆனந்தி

எல் கே சொன்னது…

//ரொம்ப நல்ல விஷயம் சொல்லியிருக்கிறீர்கள். டீனேஜர்கள் கேக்கணும்.மத்தவங்களும் புரிஞ்சிக்கிடணும்.//
முக்கியமா பெற்றோர்கள் இதை படிக்கணும். தங்கள் வீட்டு மகன் / மகள் என்ன பண்றாங்கன்னு பார்க்கணும்

நன்றி சாரல்

தக்குடு சொன்னது…

//என் போட்டோசும் லாக் பண்ணி வச்சிருக்கேன் // உங்க போட்டோ வேணுன்னாதான் உங்க ப்ளாக் வந்தா போதுமே! எப்படியும் வராவாரம் போட்டோ மாத்துவீங்க, அப்பரம் என்ன கவலை!....:) உம்ம போட்டோவை வச்சு என்னய்யா பண்ணமுடியும்???...:)

தக்குடு சொன்னது…

//முக்கியமா பெற்றோர்கள் இதை படிக்கணும். தங்கள் வீட்டு மகன் / மகள் என்ன பண்றாங்கன்னு பார்க்கணும்// LK-வோட அம்மா அப்பா இதை கவனிக்கவும்...;)LOL

எல் கே சொன்னது…

//என் போட்டோசும் லாக் பண்ணி வச்சிருக்கேன் . வேற யாரும் பக்க முடியாதே அப்படின்னு நினைக்கறவங்களுக்கு ஒன்னு சொல்லிகிறேன்/

தம்பி முழுசா படிக்கணும் . பாதி பாதிய படிக்க கூடாது சரியாய். திரும்பி ஒழுங்கா படிச்சு பாரு புரியும்

எல் கே சொன்னது…

//LK-வோட அம்மா அப்பா இதை கவனிக்கவும்//

avanga computer use panna mattanga :D

Kanchana Radhakrishnan சொன்னது…

பயனுள்ள பதிவு.

Geetha Sambasivam சொன்னது…

LK-வோட அம்மா அப்பா இதை கவனிக்கவும்...;)LOL //

enna LOL vendi kidakku thakkudu?? LK thathavoda tm kavanicha pothume! annikku kuda tm kite puri kataiyala adi vangindu romba sokama udkarnthirunthar LK thatha, appurama nan poy samathanam panninen! :)))))))

எல் கே சொன்னது…

//enna LOL vendi kidakku thakkudu?? LK thathavoda tm kavanicha pothume! annikku kuda tm kite puri kataiyala adi vangindu romba sokama udkarnthirunthar LK thatha, appurama nan poy samathanam panninen! :)))))))//

paati tm ooruku poyacchu :D

மனோ சாமிநாதன் சொன்னது…

அருமையான கருத்துக்கள், குறிப்பாக இன்றைய இளம் பெண்களுக்கு!!

எல் கே சொன்னது…

//அருமையான கருத்துக்கள், குறிப்பாக இன்றைய இளம் பெண்களுக்கு!!/

கண்டிப்பா

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா

கவிதன் சொன்னது…

நல்ல பதிவு நண்பரே! நிறைய பேர் பாதிக்கப்படுவதை அவ்வப்பொழுது பத்திரிக்கைகளில் காணமுடிகிறது .... !!! நன்றி!

எல் கே சொன்னது…

//கவிதன் said...

நல்ல பதிவு நண்பரே! நிறைய பேர் பாதிக்கப்படுவதை அவ்வப்பொழுது பத்திரிக்கைகளில் காணமுடிகிறது .... !!! நன்றி!//

உண்மைதான் .. நன்றி நண்பரே

Jaleela Kamal சொன்னது…

மிகவும் நல்ல பகிர்வு

எல் கே சொன்னது…

//Jaleela said...

மிகவும் நல்ல பகிர்வு//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா

இனியன் பாலாஜி சொன்னது…

நல்ல பதிவு எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று
நன்றி
இனியன் பாலாஜி

எல் கே சொன்னது…

நன்றி இனியன் பாலாஜி

Prabhavathi சொன்னது…

nice article