இன்று நாம் ஏற்காட்டை சுற்றிப் பார்ப்போம். "ஏழைகளின் ஊட்டி " என்றும் இது அழைக்கப் படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1515 மீட்டர...
கடல் மட்டத்தில் இருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சேலத்தில் இருந்து கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சேலம் புதியப் பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்துகள் ஒரு மணி நேரத்துக்கு ஒன்று என்ற அளவில் இயக்கப் படுகின்றன. எனக்குத் தெரிந்து அதிக அளவில் தனியார் பேருந்துகள் இயக்கப் படுவது இல்லை. இப்பொழுது எவ்வாறு உள்ளது என்று தெரியாது .
ஏரியை சுற்றி அமைந்த காடு என்ற பொருள்வரும் ஏரிகாடு என்பதே பின்பு திரிந்து ஏற்காடு என்று ஆகி விட்டது . சேர்வராயன் மலைத்தொடரின் மத்தியில் ஏற்காடு அமைந்துள்ளது. இங்கு சேர்வராயன் கோவில் ஒன்று , மலைவாழ் மக்கள் வழிபாடும் இடம் உள்ளது. அதுதான் இங்கு மிக உயரமான இடம் என்று சொல்கிறார்கள்.
காப்பிக் கொட்டைகள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் பயிரிடுதல்தான் இங்கு முக்கியத் தொழில், சுற்றுலாவைத் தவிர்த்து. ஏராளமான காபித் தோட்டங்கள் இங்கு உள்ளன. இங்கு உள்ள கிளைமேட் , அதிக குளிரும் இல்லாமல், வெப்பமும் இல்லாமல் இருப்பதால், பெரும்பாலானோரால் விரும்பப் படுகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் ஏற்காடு செல்ல தகுந்த நேரம்.
சேலத்தில் இருந்து வாரம் ஒருமுறை வந்து செல்லும் நபர்கள் உண்டு. அதிகபட்சம் ஒரு மணி நேரம் எடுக்கும் அடிவாரத்தில் இருந்து மலை மேல் செல்ல.
ஏற்காடு ஏரி :
ஏற்காட்டில் நீங்கள் நுழைந்துடன் உங்களை வரவேற்பது ஏற்காடு ஏரி தான். மிகப் பெரிய ஏரி இல்லை என்றாலும், ஆபத்தான ஒன்றாகும். படர் தாமரை செடிகள் கரையோரம் அதிகம் இருப்பதால், தவறி நீரில் விழுந்தால் அந்த செடிகளில் சிக்குண்டு மரணிக்க நேரலாம். சில வருடங்களுக்கு முன்பு மிக மோசமான நிலையில், படகுகளே செல்ல இயலாத வண்ணம் இருந்த ஏரியை, திரு ராதாக்ருஷ்ணன் அவர்கள் மாவட்ட ஆட்சியராக இருந்தப் பொழுது சீர் செய்தார். இப்பொழுது வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் படகு ஓட்ட இயலும்.
சேலத்தில் நான் இருந்த வரை, நண்பர்களுடன் பைக்கில் மாதம் ஒரு முறை ஏற்காடு சென்று விடுவேன். மாலை வரை சுற்றிவிட்டு இருட்ட துவங்கும் நேரத்தில்தான் கிளம்புவோம். அந்த சமயத்தில் மலைப் பாதையில் பாதையில் வண்டி ஓட்டுவது ஒரு சுகம். லேசாக குளிர் தரும் காற்று, அந்தி மயங்கும் வேலை, ஹெட் போனில் இளையராஜா பாட்டு அந்த சுகமே தனிதான்.
ஏற்காடு தொடரும் .....
அன்புடன் எல்கே
55 கருத்துகள்
nice
ஜில்லுன்னு இருக்கு.
நல்லாயிருக்கு,இன்னும் ஏற்காடு பற்றி எழுத நிறைய இருக்கே.நானும் வந்திருக்கேன்,தங்கி இருக்கோம்.காலேஜ் டூர்.
ஆகா சூப்பர்........தொடருங்கள்......வாழ்த்துக்கள்.
சேலத்தில் நாங்கள் ஃபேர்லான்ஸில் இருந்தோம் .. ஏற்காடு நினைவுகளைத் தூண்டிவிட்டது கார்த்திக் உங்கள் இடுகை..:))
நானும் வந்திருக்கேன் கார்த்தி.
1 வாரம் தங்கியிருந்தோம் அப்பப்பா ரொம்ப பிடிச்சிருந்தது அந்த இயற்க்கை
குளுகுளு எல்லாம். அருமையாக எழுதியிருக்கீங்க..தொடரட்டும்..
ஏன் காணோம், முதல் ஆளா வருவீங்க.ஊக்கம் தருவீங்க. என்னாச்சி கார்த்தி..
ஏற்காடை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்பட்டதுண்டு. ஆனால் போகும் வாய்ப்புகள் எனக்கு அமையவேயில்லை.
உங்கள் பதிவைப் பார்த்தவுடன் மீண்டும் அந்த ஆசை வந்துவிட்டது. படங்கள் மிகவும் அருமை.
பதிவும் படங்களும் அருமை. கல்லூரியில் படித்தபோது சக மாணவ, மாணவிகளுடன் சுற்றுலாவாக ஏற்காடு வந்து இருக்கிறேன். பழைய நினைவுகளை [!] தூண்டியது உங்களது இப்பதிவு. :))
வெங்கட்.
இன்னும் அங்க போகலை.... போய் பார்கனும்
super ...
நல்லாயிருக்கு
பதிவும் படங்களும் அருமை
SUPERAA IRUKKUPPAA
GOOD POST
ஆசையா இருக்கு ஏற்காடு போக, போகணும் ஒருதரமாவது! பார்க்கலாம். அது சரி, ஏலகிரி பத்திக் கேட்டிருந்தேனே?? அதுவும் சேலம் மாவட்டமா??? வேலூரோனு நினைக்கிறேன். ஏலகிரி இங்கே இருந்து கிட்டேனு சொல்வாங்க.
சேலத்துக்காரங்க எல்லாருமே பெண்குழந்தைகளுக்கு ஏன் சங்கரினு பேர் வைக்கிறாங்க?? தனிக்காரணம் ஏதாவது உண்டா?
நல்லா எழுதியிருக்கீங்க..
ரெண்டு மூன்று முறை ஏற்காடு போயிருக்கேன்..
நானும் ஏற்காடுல இருக்கற கிள்ளியூர் ஃபால்ஸ் பத்தி ஒரு பதிவு எழுதியிருந்தேன் போன மாதம்..
தொடர்ந்து எழுதுங்க.. நன்றி..
அழகான படங்கள்.. படிக்கும்போதே போய் வந்த மாதிரி இருக்கு..
அந்த வானவில் படம் கலக்கலா இருக்கு அண்ணா .,
@ராம்ஜி
நன்றி
@சை.கொ. ப
நன்றி
@ஆசியா
இது தொடரும் சகோதரி..
@நித்திலம்
நன்றி
@தேனம்மை
நன்றி அக்கா. ஏற்கனவே சொல்லி இருக்கீங்க.
@மலிக்கா
நன்றி சகோதரி .
@ஸ்ரீஅகிலா
விரைவில் சென்று வாருங்கள்
@வெங்கட்
நன்றி
@அருண்
விரைவில் சென்று வாருங்கள்
@புதிய மனிதா
நன்றி
@சதீஷ்
நன்றி சார்
@மாமி
ஏலகிரி , வேலூர் பக்கம். ம்ம் வாங்க , நான் சேலம்ல இருக்கறப்ப வாங்க,
@மாமி
இது எனக்கே புதிய தகவல் . விசாரிக்கிறேன்
@பாபு
அடுத்த பதிவு அதை பத்திதான்
@சுசி
நன்றி சுசி
@செல்வா
அது கூகிளார் கொடுத்தது
இன்னும் அங்க போகலை...
உங்கள் பதிவைப் பார்த்தவுடன் போக ஆசை வந்துவிட்டது.
ஏற்காடுக்கு போகனும்னு ரொம்ப நாள் ஆசை,இன்னும் அதற்கான வாய்ப்பு வரலை...படங்கள் குளுகுளுன்னு இருக்கு...
நல்லாருக்கு. எனக்கும் ஏற்காடு பைக்ல போகணும்னு ரொம்ப நாள் ஆசை.
இங்க வெயில் கொளுதர்து..இந்த போட்டோ லம் பாத்து ஏற்காடு பத்தி தெரியறதே ஆசையா இருக்கு
ஏற்காடு நான் இன்னும் போனதில்லை. நீங்க சொல்ற குறிப்புகளைப் பார்த்தால் கூர்க் மலை மாதிரியே தொன்றுகிறது. கட்டாயம் ஒரு தடவை ஏற்காட்டை பார்க்கணும், பார்க்கலாம்....பகிர்விற்கு நன்றிண்ணா.
//ஏழைகளின் ஊட்டி " என்றும் இது அழைக்கப் படுகிறது.//
wow...
very nice photos & informations!
@குமார்
சீக்கிரம் போயிட்டு வாங்க
@காயத்ரி
இரு இரு அவசரப் படாத அடுத்தப் பதிவுல இதை பத்தி சொல்லறேன்
@மேனகா
இது என்ன எலலரும் ஏற்காடு போகாம இருக்கறது ? எல்லாம் சேர்ந்து ஒரு டூர் அரேஞ் பண்ணுங்க போலாம்
@அன்னு
நான் இன்னும் கூர்க் போனது இல்லையே
@அப்பாவி
என்ன ??
@நாகராஜா சோழன்
சீக்கிரம் போயிடு வாங்க
@வாணி
நன்றி வாணி
சும்மா சுத்திட்டு வாங்க
ஏற்காட்டைப்பத்தி ஒவ்வொரு தடவையும் கேள்விப்படறப்ப, போகணும்ன்னு ஆசை கூடுதலாகிட்டே இருக்கு :-))
இதுவரை பார்த்ததில்லை...இனி வரும்போது,கட்டாயம் பார்க்கணும் என்ற ஆசை எழுகிறது.
பயனுள்ள பகிர்வுகளுக்கு நன்றி கார்த்திக்!
"இருட்ட துவங்கும் நேரத்தில்தான் கிளம்புவோம். அந்த சமயத்தில் மலைப் பாதையில் பாதையில் வண்டி ஓட்டுவது ஒரு சுகம். லேசாக குளிர் தரும் காற்று, அந்தி மயங்கும் வேலை, ஹெட் போனில் இளையராஜா பாட்டு அந்த சுகமே தனிதான்."
பைக்க அனுபவிச்சு ஓட்டியிருக்கீங்க போல..!!
rompa arumaii
அழகு!! நன்றி.. ஒரு விசிட் அடிக்க தூண்டுகிறது.
Pattu
http://www.gardenerat60.wordpress.com
கருத்துரையிடுக