அன்றுதான் சேலம் கிளையின் மேலாளர் இடத்திற்கான நேர்முகத் தேர்வு. வந்த
விண்ணப்பங்களில் வடிக்கட்டப்படப் பின் எஞ்சிய மூன்று பேரை இறுதி கட்ட
தேர்வுக்கு சென்னைக்கு அழைத்திருந்தனர். வந்திருந்த மூன்று பேரில் அவள்
ஒருவளே பெண். அந்த நிறுவனத்தைப் பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டிருந்ததால்
நம்பிக்கை இன்றியே அவள் விண்ணப்பம் செய்திருந்தாள். பொதுவாய் அந்த
நிறுவனத்தில் மேலாளர் பதவிக்கு பெண்களை எடுப்பதில்லை என்றுக் கேள்விப்
பட்டதால் அவ நம்பிக்கை கொஞ்சம் இருந்தது.
சாரசரி தமிழ் பெண்ணின் உயரம், கடந்து செல்பவர்களை திரும்பி
பார்க்க
சொல்லும் முகம்.அவள் முகத்திற்கு அவளது கண்கள் கொஞ்சம் பெரிதுதான். மெலிதான
மையினால் அதற்கு கரை கட்டியிருந்தாள். அவள் மிக மெல்லிய லிப்ஸ்டிக்
பூச்சு கண்ணுக்கு உறுத்தாமல் ரசிக்க
வைப்பதாய் இருந்தது. அவள் அணிந்திருந்த காட்டன் புடவை அவள் நிறத்திற்கு
மெருகூட்டுவதாக இருந்தது. கூந்தலைப் பின்னாமல் லூசாக விட்டிருந்ததிலும் ஒரு
அழகும் ஒழுங்கும் இருந்தது .
கல்லூரிப் படிப்பை முடித்து இரண்டு வருடங்களில் இரண்டு சிறிய நிறுவனங்களில்
பணி புரிந்திருந்தாலும் , ஒரு விதப் பதற்றம் அவளிடையே இருந்தது.
விண்ணப்பம் அனுப்பியதில் இருந்தே ஒரு விதமான சஞ்சலம் அவள் மனதில்
இருந்துகொண்டே இருந்தது. மனதில் பதற்றம் இருந்தாலும் அவள் முகம் அதைப்
பிரதிபலிக்கவில்லை.
மூன்று பேரில் இவளைக் கடைசியாகத்தான் அழைத்தனர். உள்ளே நுழையும் முன்
ஒருமுறை புடவையை சரிபார்த்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். நாற்பது வயதுக்கு
மேற்ப்பட்ட ஒருவரை அங்கே எதிர்பார்த்த ஷ்யாமளா, சரவணனை கண்டு சிறிது
ஆச்சர்யமே அடைந்தாள். இருப்பினும் அதை வெளிக்காட்டாமல் அவனுக்கு வணக்கம்
சொல்லிவிட்டு , அவன் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தாள். நேரம் ஓட , அந்த
நேர்முகத் தேர்வும் அரைமணி நேரம் கழித்து முடிந்தது. அவளை அறைக்கு வெளியே
காத்திருக்க சொன்ன சரவணன் , மீண்டும் ஒருமுறை அவளைப் பற்றி எடுத்தக்
குறிப்புகளில் கண்ணை ஓட்டினான் .
பொதுவாய் பெண்களிடம் அதிகம்
கவனம் செலுத்தாத சரவணனுக்கு ஷ்யாமளா , நேர்முகத் தேர்வில் நடந்துக் கொண்ட
விதம் பிடித்திருந்தது. அதிகப்படியான அலட்டல் இல்லாமல், தேவைக்கதிகமாய்
பேசாமல் இருந்ததும், அவள் நேர்த்தியாய் உடை அணிந்திருந்ததும் அவளது மதிப்பை
அவனிடம் உயர்த்தி இருந்தது. சிறிது நேரம், அவளைப் பற்றியக் குறிப்புகளை
மீண்டும் ஒருமுறைப் படித்துவிட்டு, அவளை அந்த வேலைக்குத் தேர்வு செய்ய
முடிவெடுத்தான். பின் அவளை மீண்டும் அழைத்து அதை தெரிவித்துவிட்டு, அடுத்த
நாள் முதல் வேளையில் சேர சொன்னான்.
அடுத்த சில நாட்கள்,
அவளுக்கு வேலையைப் பற்றிய பயிற்சி தருவதில் கழிந்தது. பொதுவாய் , இந்த
மாதிரி பயிற்சிகளை மற்றவர்களிடம் தள்ளி விடும் சரவணன், ஷ்யாமளாவிற்கு அவனே
பயிற்சி அளித்தது மற்றவர்களுக்கு சிறிது ஆச்சர்யத்தை அளிக்க செய்தது.
அவர்கள் கற்பனை செய்தப் படி எதுவும் நடக்கவில்லை என்றாலும் , சரவணனின் மனம்
ஷ்யாமளாவின் பக்கம் கொஞ்சம் நகர ஆரம்பித்திருந்தது . பல தரப்பட்ட பெண்களை
சந்த்திருந்தாலும் , ஷ்யாமளாவின் கண்கள் அவன் மனதை ஊடுருவி இருந்தது.
ஒரு வார பயிற்சிக்குப் பின் , அவளை சேலம் கிளம்ப சொன்ன சரவணன், தான் இரண்டு
நாட்களில் வருவதாய் சொல்லி இருந்தான். அவன் சென்னையில் இருந்து கிளம்ப
வேண்டிய தினத்தின் மாலையில் வீட்டிற்கு கிளம்புமுன் வந்த அந்த இ மெயில்
அவனை பெரிதும் சஞ்சலப்படுதியது.
-தொடரும்
அன்புடன் எல்கே