வெகு நாட்கள் கழித்து மீண்டும் இந்தத் தொடர் தொடர்கிறது. இந்தியாவிற்கான கால் சென்டர்களுக்கும், வெளிநாட்டு மக்களுக்காக இயங்கும் கால் சென்டர்களு...
முதல் வேறுபாடு, சம்பளம். அங்கு ஐந்து இலக்கத்தில் தொடக்க சம்பளம் இருந்தால், இங்கு நான்கு இலக்க சம்பளமே தொடக்கத்தில் கிடைக்கும். அது போலவே , வருடம் தோறும் நடக்கும் அப்ரைசல்களும்.
அடுத்து, இங்கு உங்கள் வீட்டிற்கே வந்தெல்லாம் அழைத்து வர மாட்டார்கள். உங்கள் செலவில்தான் செல்லவேண்டும். ஏனென்றால், பெரும்பாலான நிறுவனங்கள் பகல் நேரத்தில் மட்டும் இயங்குவை.
மூன்றாவது, பணி சூழல். இங்கு அந்த நிறுவனங்களை போல் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் இருக்காது. தங்கள் வேலை டென்சனை குறைக்க வழிகள் கம்மி. அதேபோல், அங்கு ஒரு நாளுக்கு அதிகப் பட்சம் எடுக்க வேண்டிய அழைப்புகள் என்றும், சராசரியாக ஒருவர் எவ்வளவு அழைப்புகள் பேசவேண்டும் என்றும் அளவுகோல் உண்டு. பெரும்பாலான இந்திய கால் சென்டர்களில் அவை பின்பற்றப் படுவது இல்லை. இப்பொழுது நான் இருக்கும் நிறுவனத்தில், ஆரம்பத்தில் ஒரு நாளுக்கு 150 அழைப்புகளுக்கும் மேல் பேசி உள்ளேன்.
அடுத்தது, இந்திய கால் சென்டர்களில் பணிபுரிய ஆங்கிலம் மட்டும் போதாது. ஹிந்தி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நல்ல சம்பளம் கிடைக்கும். (என் நிறுவனத்தில் ஹிந்தி தெரியாவிட்டால் நேர்முகத் இன்டர்வியுவிர்க்கு அழைக்க மாட்டோம் ). காரணம், பொதுவாக வடஇந்திய அழைப்புகள் அதிகம். முதலில் நான் இங்கு சேர்ந்தபொழுது ஹிந்தி தெரியாது. வெளிநாட்டு கால் சென்டரில் வேலை செய்த அனுபவத்தில் இங்கு வேலை கிடைத்தது. இப்பொழுது வாடிக்கையாளர்களிடம் பேசி பேசி ஓரளவு கற்றுக் கொண்டு விட்டேன் .
அடுத்து அங்கு வாரம் ஐந்து நாட்கள் வேலை என்றால், இங்கு ஆறு நாட்கள் வேலை கட்டாயம். இரண்டாவது சனிக்கிழமை என்பது நீங்கள் எந்த நிறுவனத்திற்கு சப்போர்ட் கொடுக்கிறீர்களோ அவர்கள் விருப்பமே. பெரும்பாலும் அன்றும் வேலை உண்டு.
தொடரும்..
அன்புடன் எல்கே
34 கருத்துகள்
வணக்கம் LK. இந்திய கால் சென்டர்கள் பத்தி நல்ல தகவல்கள் சொன்னீங்க. இன்னும் விரிவா விவரமா நீங்க எழுதணும்கறது என் வேண்டுகோள்.
பகிர்வுக்கு நன்றி. இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கா?
தெரியாத தகவல்கள்.....நன்றி எல்.கே. மிக யதார்த்தமான பதிவுங்க....
//(என் நிறுவனத்தில் ஹிந்தி தெரியாவிட்டால் நேர்முகத் இன்டர்வியுவிர்க்கு அழைக்க மாட்டோம் ).//
நான் உங்க நிறுவனத்தில சேர முடியாததுக்கான ரெண்டாவது காரணம்.
நிறைய தகவல்கள்.
மற்ற பாகங்களையும் படித்துவிட்டு வருகிறேன்.
@கிரி
தொடர்ந்து எழுதுவேன் நண்பரே. இது முதல் பகுதி (இந்திய கால் சென்டர்கள்)மற்றவை பின்னால் வரும் .முதல் வருகைக்கு நன்றி
@சித்ரா
ஆமாம். சித்ரா
@சுசி
முதல் காரணம் எனக்குத் தெரியும்
@நித்திலம்
நன்றிங்க
@வித்யா
நன்றிங்க
பகிர்வுக்கு நன்றி.
பகிர்வுக்கு நன்றி.
நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் LK!
ஒரே நாளில் 150 அழைப்புகளா! ரொம்ப பொறுமையா இருக்கணும் போல.
அது சரி..
அப்போ இந்திய பிரிச்சு மேய்வீங்கன்னு சொல்லுங்க....
நெக்ஸ்ட்...வெயிட்டிங்....!
தெரியாத தகவல்கள்....
மீண்டும் ஆரம்பித்ததற்கு நன்றி... தொடருங்கள்...
நல்ல பகிர்வு சார்
கால் சென்டர்கள் பத்தி நல்ல தகவல்கள்.
கால் சென்டர்கள் பத்தி நல்ல தகவல்கள்.
thanks for sharing the experiences. i like the blogs, posts where they share IT, Call Centre, Abroad, Corporate, Work etc experiences.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கால் சென்டர் பதிவு. தொடருங்கள். :)
@ஆசியா
நன்றி
@பாலாஜி
நன்றி
@சை.கொ.ப
உண்மைதான் . அதிகம் பொறுமை வேண்டும்
@தேவா
ஆமாமா
@வெறும்பய
நன்றி
@அருண்
நன்றி பாஸ்
@மங்குனி
நன்றி
@குமார்
நன்றி
@செந்தில்
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
@வெங்கட்
நன்றி நண்பரே
//அடுத்தது, இந்திய கால் சென்டர்களில் பணிபுரிய ஆங்கிலம் மட்டும் போதாது. ஹிந்தி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நல்ல சம்பளம் கிடைக்கும்.//
அப்படின்னா இங்கிலீசு படிச்சாலும் இந்தியும் தெரிஞ்சு வச்சிக்கிறது நல்லதுன்னு சொல்லுறீங்க ..!! தொடர்ந்து எழுதுங்க அண்ணா ..
அழைப்புகளின் எண்ணிக்கை எதை வைத்து... நூற்று ஐம்பது என்பது அதிகமா..?
பயனுள்ள பதிவு..
கருத்துரையிடுக