மார்ச் 15, 2012

மனம் போன போக்கில் - 03


கடந்த வார செய்தித் தாளில் வந்திருந்த ஒரு செய்தி என்னை யோசிக்க வைத்தது. நமது நாட்டில் சட்டம் என்பது ஒருவரது பொருளாதார , சமூக நிலையை வைத்து மாறுபடுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இப்பொழுது அந்த விதி விலக்குகளில் இன்னொரு குழுவினரையும் சேர்த்த வேண்டும். அரசுப் பேருந்து ஓட்டுனர்கள்தான் அவர்கள்.

அரசுப் பேருந்துகளுக்கும் எனக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தம்தான். ஒருமுறை சிக்னலில் சிகப்பு விளக்கு ஒளிர்ந்துக் கொண்டிருந்ததால் , நான் காத்துக் கொண்டிருந்தேன். பின்னால் இருந்த அரசுப் பேருந்து ஓட்டுனர் சென்னை செந்தமிழில் என்னை அர்ச்சித்தார். அன்று எனக்கு நேரம் நன்றாக இருந்திருக்கிறது. ஏனென்றால் , நேற்று இதே போல் சிக்னலில் நிற்காமல் முன்னால் இருந்த ஒரு வண்டியை இடித்து விட்டு சென்று இருக்கிறார் ஒரு அரசுப் பேருந்து ஓட்டுனர். கடமை உணர்வு மிக்க ஒரு காவல்துறை நண்பர், பேருந்தை விரட்டி சென்று குரோம்பேட்டை அருகே பிடித்து விட்டார். ஓட்டுனர் மேல் புகார் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த மற்றொரு அரசுப் பேருந்து ஓட்டுனர் , போலீசைத் தள்ளியுள்ளார். இதைத் தொடர்ந்து பிரச்சனைகள் நடந்து கடைசியில் சமாதானமாக சென்றுள்ளனர்.

சென்னைப் போக்குவரத்துக் காவலர்களுக்கு சிலக் கேள்விகள்

அரசுப் பேருந்து ஓட்டுனர்களும் இந்த நாட்டு மக்கள்தான். அவர்களும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இன்றைய நிலையில் சென்னையில் அதிகப் பட்ச போக்குவரத்து விதி மீறல்கள் செய்வது அரசுப் பேருந்து ஓட்டுனர்கள்தான். ஆனால் அவர்கள் மேல் நீங்கள் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை. ?

சங்கம் என்ற ஒன்றுக்கு பயப்படுகிறீர்களா இல்லை ஓட்டு வங்கிக்காக ஆலம் கட்சியே அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ளதா ?

நாளை இதே போன்று பொதுமக்களும் கூட்டம் சேர்ந்து எதிர்த்தால் என்ன நடக்கும் ?

இன்னும் இப்படி பலக் கேள்விகள் உள்ளன. முதலில் இவற்றிற்கு விடைக் கிடைக்கட்டும். பிறகு மற்றவையை பார்ப்போம்...

அன்புடன் எல்கே

மார்ச் 11, 2012

மனம் போன போக்கில் - 2

 திருமணத்திற்கு முன் வரும் காதலைக் கொண்டாடும் நாம், திருமணத்திற்குப் பிறகு அந்தக் காதலை கொண்டாடுகிறோமா ?  இன்றைய இயந்திர வாழ்க்கையில் , ஏறும் விலைவாசியில் , கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய ஒருக் கட்டாயத்தில் உள்ளனர். அலுவலக வேலைகளுக்கும், வீட்டின் கடமைகளுக்கும் இடையில் அகப்பட்டு அன்பு என்ற ஒன்றை மறந்து விடுகின்றனர்.

ஒரு சில தம்பதிகள் பார்ப்பதே வாரத்திற்கு ஒரு முறை என்ற நிலையில் உள்ளனர். ஒரு கட்டம் வரை காசு காசு என்று ஓடும் மனது, பின் காணாமல்  சென்ற அன்பைத் தேட துவங்குகிறது. அந்த அன்பு எங்குக் கிடைக்கிறதோ அந்த இடத்தைத் தேடி ஓடுகிறது மனது. இது நெறைய பேருக்குப் பொருந்தும். ஒரு சிலர் விவகாரங்கள் உடல் பசியினால் ஏற்படுகிறது. அங்குமே அடிப்படைக் காரணம் என்ன என்றுப் பார்த்தால் இருவருக்கும் இடையேயான அன்புக் குறைதலே.எந்த அளவுக்கு ரகசியமாய் காப்பாற்றினாலும் இது ஒரு கட்டத்தில் வெளியே தெரியும் பொழுது ஏற்படும் விளைவுகள்தான் நாம் இன்று தினசரிகளில் படிக்கும் கள்ளக் காதலன்/காதலி கொலைகள்.

அடிப்படைத் தவறு கணவன் மனைவி இருவரிடமும் தான். என்னதான் பணம் நம் வாழ்விற்கு தேவை என்றாலும், அன்பு செலுத்த யாரும் இல்லையெனில் பணத்தை வைத்துக் கொண்டு என்ன உபயோகம் வாழ்வில் ?

அன்புடன் எல்கே

மார்ச் 10, 2012

Windows 8 Beta

 மைக்ரோசாப்ட் தனது அடுத்த ஆபரேடிங் சிஸ்டம் விண்டோஸ் 8 ஐ இந்த வருடம் வெளியட உள்ளது. அதற்கான பீட்டா வெர்ஷன் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று நண்பர் தமிழ்வாசியின் பதிவில் இந்த செய்தியைப் பார்த்துவிட்டு மைக்ரோசாப்ட் தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்தேன். இரண்டு விதமாக தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இப்பொழுது இருக்கும் ஆபரேடிங் சிஸ்டம் அப்க்ரேட் செய்து கொள்ளலாம். இந்த முறையில் நீங்கள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்திருக்கும் மென்பொருள்களில் விண்டோஸ் 8 இல் வேலை செய்யும் என்றால் அவற்றை மீண்டும் இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை.


இல்லையெனில்  ஐ எஸ் ஓ பைலாக தரவிறக்கம் செய்துக் கொண்டு டி வி டி அல்லது பென் டிரைவ் கொண்டு வேறுக் கணிணியிலோ அல்லது இதேக் கணிணியின் இன்னொரு டிரைவிலோ இன்ஸ்டால் செய்துக் கொள்ளலாம்.

இன்ஸ்டால் செய்ய மிகக் குறைந்த நேரமே ஆகிறது.  எனக்கு அரைமணி நேரமே ஆகியது. இந்த விஷயத்தில் விண்டோஸ் எக்ஸ்பி தான் மோசம். காலையில் இருந்து இதுவரை உபயோகித்ததில் விண்டோஸ் 8 பிடித்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

கொஞ்சம் ஆண்ட்ராய்ட் கொஞ்சம் ஆப்பிள் இவற்றில் இருந்து காப்பி அடித்து செய்துள்ளது நன்றாகவே தெரிகிறது.

தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் 

சில ஸ்க்ரீன் ஷாட்
அன்புடன் எல்கே

மார்ச் 06, 2012

விருது(கள்)

சமீபத்தில் கீதா மாமி விருது அளித்திருந்தார். மீண்டும் இப்பொழுது மீண்டும் திருமதி  பவளா அவர்களும் எனக்கு அந்த விருதை அளித்திருக்கிறார். கடந்த ஒரு வருடத்தில் நான் பதிவில் எழுதியது மிகக் குறைவு. இப்ப எழுதத் துவங்கிய கதையைக் கூட தொடர முடியவில்லை.

அலுவலகத்தில் அந்த அளவு ஆணி அதிகம் ஆகி விட்டது. எனக்குப் பிடித்த ஐந்து விஷயங்களை பகிர்ந்துவிட்டு விருதையும் பகிர வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள்.

பிடித்த ஐந்து

"பாடும் நிலா" பாலு பாடியப் பாடல்கள் , பஜன் பாடல்கள் கேட்கப் பிடிக்கும்


என் மகள், மனைவியுடன் நேரம் செலவழிக்கப் பிடிக்கும்


 முன்பும் இப்பொழுதும் எப்பொழுதும் கிரிக்கெட்


புத்தகம் படிக்கப் பிடிக்கும் என்றாலும் படிப்பது இப்பொழுது குறைந்துவிட்டது.


தனிமையில் மணிக்கணக்கில் இருக்கப் பிடிக்கும்

சமீபத்தில் அதிகம் ப்ளாக் பக்கம் வருவதில்லை. எனவே புதியவப் பதிவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. எனக்கு அறிமுகமான சிலருடன் இந்த விருதைப் பகிர்ந்துக் கொள்கிறேன்.

மதுரகவி என்ற பதிவில் எழுதி வரும் ரமாரவி

குட்டி சுவர்க்கம் பதிவை எழுதி வரும் ஆமினா

மனசு என்றப் பதிவில் எழுதி வரும் நண்பர் குமார்

நான் பேச நினைப்பதெல்லாம் என்ற பதிவில் எழுதிவரும் சென்னைப் பித்தன்

எப்பொழுதும் நான் பிரமிப்புடன் பார்க்கும் ரிஷபன் சார்


அன்புடன் எல்கே