ரோட்டில் வேண்டாமே நேற்று மாலை கோடம்பாக்கம் அருகே நடந்த சம்பவம் இது. எனக்கு முன் வண்டியில் ஒரு ஜோடி சென்று கொண்டு இருந்தார்கள். சிக்னலுக்...
நேற்று மாலை கோடம்பாக்கம் அருகே நடந்த சம்பவம் இது. எனக்கு முன் வண்டியில் ஒரு ஜோடி சென்று கொண்டு இருந்தார்கள். சிக்னலுக்காக நின்றபொழுது அவர்களுக்குள் எதோ விவாதம் . திடீர் என்ற அந்தப் பெண் வண்டியில் இருந்து இறங்கி நடந்து சென்றுவிட்டார். யாராக இருந்தாலும் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம். அதில் தவறு இல்லை. ஆனால் அந்த சண்டை எங்கு நடக்கிறது என்பதுதான் பிரச்சனை. வீட்டிற்குள் நடந்தால் உங்களுக்குள் , இதுபோல் நடுரோட்டில் நடந்தால் உங்களுக்குத்தான் அவமானம்.
அதுமட்டும் அல்ல, வண்டி ஓட்டும் பொழுது இவ்வாறு காரசாரமாக விவாதிப்பது, ஆபத்தும் கூட. வண்டி ஓட்டுபவரின் கவனம் கலைந்து விபத்து ஏற்பட வழிவகுக்கும். உங்கள் சண்டைகளை வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள். பொது இடங்களில் வேண்டாம்.
சில்லரைப் பிரச்சனை
பொதுவாக மாநகரப் பேருந்துகளில் செல்வோர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை இது. எப்பொழுது பேருந்தில் ஏறினாலும் சில்லரை இல்லை என்றே ஒரு சில நடத்துனர்கள் சொல்வார்கள். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் நாங்கள் அனைவருக்கும் போதுமான சில்லரை தருகிறோம் என்றுதான் சொல்கிறார்கள். யார் சொல்வது உண்மை ? அப்படி அவர்கள் சில்லரை தருகிறார்கள் என்றால் அது எங்கு செல்கிறது ?
மங்களூர் விமான விபத்து
வழக்கம் போல் அடுத்தவரைக் கை காட்டும் வேலை துவங்கி விட்டது இதிலும். இந்த விபத்துக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை சொல்கிறார்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, விமானியின் பணி நேரம். ஏர் இந்தியாவில் வேலை செய்யும் விமானிகள், ஆள் பற்றாக்குறையால் அவர்கள் வேலை செய்ய வேண்டிய நேரத்தை விட அதிகமாக வேலை செய்கின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் அவர்கள் கவனக் குறைவால் தவறு ஏற்படுகிறது . தனியார் நிறுவனங்களில் அளிக்கப்படும் சம்பளத்தின் காரணமாக பல விமானிகள் அங்கு சென்று விடுகின்றனர். இதை அரசாங்கம் எவ்வாறு சரி செய்யப்போகிறது ???
கடைசியாக ஒரு புகைப்படம் எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒன்று
40 கருத்துகள்
Hmm,,road liye sandai poedra pazhakkam rombha thavaraanathu ethuvaaga irunthaalum poruthu avanga veetla panina nallathu, neenga sonna maathiri vaaganam oetum poedhu gavanak kuraivu etpatta vibhathu nerida vaaipu varum,,
Mangalore vimaana vibathu rombha manasa baadihcha onnu uyir setham evloe kudumbam baathippu adainjurukku intha baathippa evloe panam koduthaalum nashta idaa koduthaalum antha uyir ah thirumba kodukka mudiyuma illa kudumbathla pazhaya santhosham thaan thirumbi kodukka mudiyuma..
// வண்டி ஓட்டும் பொழுது இவ்வாறு காரசாரமாக விவாதிப்பது, ஆபத்தும் கூட. வண்டி ஓட்டுபவரின் கவனம் கலைந்து விபத்து ஏற்பட வழிவகுக்கும்// அதுமட்டுமல்ல, இந்த மாதிரி செய்கையினால் மற்ற வண்டி ஓட்டுனர்களின் கவனமும் சிதற வாய்ப்பிருக்கு. ஏதோ சிக்னல் சரியாப்போச்சு. இல்லாட்டி என்ன ஆகறது? ஏன் தான் இப்படி இருக்காங்களோ?
கூட்டு நல்லாயிருக்கு. மங்களூர்.. ஒண்ணும் சொல்றதுக்கில்லை :-((
பொதுவானக சில பிரச்சனைகளை எடுத்துரைத்தது பாராட்டிற்குரியது..
குறிப்பாக சில்லரைப் பிரச்சனை பெரும் பிரச்சனை நண்பரே..
தெருவில சண்ட போடுறது மகா தப்பு ! அதிலேயும் வண்டி ஓட்டிகிட்டு போகும் போது அத விட தப்பு...! எப்போதான் நம்ம சனம் திருந்த போகுதோ!
மொத்தத்தில் கூட்டு சூப்பர்...கார்த்திக்!
கார்த்தி இந்த மாதிரி ரோட்டில் வண்டி ஓட்டச்சே நிறையே பேர் சண்டை போடறது நான் பார்த்திருக்கேன்...என் வீடு சமையல் அறையின் ஜன்னல் வெளியில் ரோடு தெரியும் ஆள் நடமாட்டம் குறைவான தெரு தான் ..இங்கேயும் இதே கதை தான் வண்டி அங்கே நிறுத்தி சண்டை போடறவங்களே பார்த்திருக்கேன் ...ஏன் பொம்பிளைகளே அடிக்கற ஆண்களை பார்த்திருக்கேன் ...வாக்கு வாதம் எல்லோர்க்கும் வரலாம் அது வீட்ல போயி பேச வேண்டியது தான் நான் சொல்லறது சரி தானே ...
////////// வண்டி ஓட்டுபவரின் கவனம் கலைந்து விபத்து ஏற்பட வழிவகுக்கும். உங்கள் சண்டைகளை வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள். பொது இடங்களில் வேண்டாம்.
/////////
இது போன்று பல தவறுகளை நம்மை அறியாமலே போது இடங்களில் இன்னும் செய்து கொண்டுதான் இருக்கிறோம் . சிந்திக்கத் துண்டுகின்றன அனைத்தும் . பகிர்வுக்கு நன்றி !
கூட்டு நல்லா காராசமா இருக்கு....
கூட்டு நல்லாயிருக்கு,ஆனால் மெயில் வந்த படத்தை பார்த்து மனது பதறிவிட்டது.
பொது இடங்களில் இப்படி நடந்துக்கொள்வது அவமானம் என்பதைவிட மற்றவர்களுக்கும் இதனால் பாதிப்பு.. இதை புரிந்து கொண்டு எப்போதுதான் இப்படி பட்டவர்கள் திருந்துவார்களோ?
பயங்கரமான புகைப்படம்.. இதை ஏற்கனவே செல்ஃபோனின் பாதிப்பை பற்றிய கட்டுரையில் ஒரு முறை பார்த்து இருக்கிறேன்.
நல்ல பதிவு நண்பரே. ஒரு நாள் தில்லி நிஜாமுதீன் பாலத்தில் சென்று கொண்டு இருந்த போது பல்சர் பைக்கில் சென்று கொண்டு இருந்தது ஒரு ஜோடி. பின்னால் அமர்ந்திருந்த பெண் வாகன ஓட்டியை முதுகில் கும்மாங்குத்து குத்திக் கொண்டு இருந்தார். ஒட்டியவர் பாவம், தடுமாறி பிரேக் பிடித்து முடியாமல், மேம்பாலத்தில் முட்டிக்கொண்டு நின்றார். எவ்வளவு சங்கடம் பாருங்கள். எதாவது ஆகியிருந்தால் என்னாவது. :(
நல்லா இருக்கு
கடைசிப்படம் ஒரு மாசமா வந்துண்டிருக்கு எல்லார் கிட்டே இருந்தும். வண்டி ஓட்டும்போது பேசாதீங்கன்னா யாரு கேட்கிறாங்க! செல்போன் இருப்பது ஒரு வகையில் நல்லதுனா, வேறு வகையில் ஆபத்தாவும் இருக்கு. :(
தலைப்பைப் பார்த்துட்டுப் பயந்துட்டே வந்தேன். நல்லவேளை பிழைச்சேன், எங்கே கருணைக்கிழங்கு கூட்டுனு சொல்லி இருப்பீங்களோனு தான் பயம்! :P
வண்டி ஓட்டும்போதும் சரி, வாடகைக்கு எடுத்த வண்டியிலே போகும்போதும் சரி, நாங்க அந்நியர்கள் போலவே நடந்துப்போம். பேச்சே இருக்காது. ம், சரி, போகலாம், என்பது தவிர.
@சத்யா ஸ்ரீதர்
நிறைய பேருக்கு அது தெரிய மாட்டேங்குது . நான் சொன்னது ஒரு சாம்பிள்
@அனந்ஸ்
:((
@சாரல்
நன்றிங்க
@இந்திராவின் கிறுக்கல்கள்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
@தேவா
நன்றிங்க
@சந்தியா
சரிதான் . நன்றி
@ஷங்கர்
நன்றி ஷங்கர்
@மேனகா
அப்படியா . அடுத்த முறை கொஞ்சம் இனிப்பு போட்டுறலாம்
@பிரியா
இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது.
@ஆசியா
என்ன செய்ய? மக்களுக்கு ஒரு நல்ல கருத்தை சொல்ல என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு
@நாகராஜ்
அது செல்லமா அடிச்சிருப்பாங்க
@பாட்டி
அடுத்து அதான் போடப் போறேன்
@ஷச்ணி
நன்றி
That pic is too too too strong!!!
Standing in the junction on 3 rivers
Fashion Panache - The Stripey Dress
Roadla sandai podarathu romba thappaana vishiyam! aana sila nerangalla naama summaa ponaalum namma kooda varavanga summaa irukka maataanga. nammaloda porumayin ellai kadanthu poidum. ellaarum situation a purinchundu nadantha nannaa irukkum aana sometimes "saniyana thooki baniyan-la pota kathai" thaan! :P
Mangalore vimaana vibathula nejamaave antha maari odu thalam ellaam thavirkka vendiya onnu.
வீட்டுக்கு வெளியே எப்படி நடந்துகொள்வதென்றே இந்தக்காலத்தில் நிறையபேருக்குத் தெரியவில்லைதான்...
மங்களூர் விபத்து, :(
புகைப்படம்,திகில்.
மொத்தத்தில் கூட்டு அருமை.
நல்ல அறுசுவைக் கூட்டு.கொஞ்சம் சாப்பிட்டதில் வருத்தமும் வந்தது .நல்ல write up LK
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
கூட்டு அருமை அது உண்மையும் கூட, மெயில் படம் எனக்கும் வந்தது. அதில் உள்ள எழுத்து கொஞ்சம் பெரிசா போட்டிருந்தா இன்னும் நல்லது . சில பேர் அதை கவணிக்கிறதில்ல..
@தோழி
ஒரு சில சமயம் அவ்வாறு சொன்னால்தான் நம் மக்கள் கேட்கின்றனர்
நன்றி
@ஹரிணி
என்னதான் யாரும் சொன்னாலும் , நாம் அமைதியாக வந்தால் பிரச்சனை இல்லை
@சுந்தரா
சரியாக சொன்னீர்கள்
@பத்மா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ஜெய்
நான் முயற்சித்தேன். என்னிடம் உள்ள மென்பொருளில் சரியாக வரவில்லை
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ரோட்ல சண்டை போட்டு இறங்கிப் போனவர்கள் உணர்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்களா, கட்டுப் படுத்தி மேலும் ரசாபாசமாகாமல் இறங்கிச் சென்று விட்டார்களா?!! படம் பயமுறுத்துகிறது.
கூட்டு நல்லாவே இருக்கு... பொரியல் பின்னால வருமா... சரி சரி டென்ஷன் ஆகாதீங்க அண்ணா............
வீட்டுல சண்டை போடறது போதாதுன்னு ரோடுல வேறயா...கஷ்டம் தான். அவங்க situation என்னனு தெரியல... ஆனாலும் ஆபத்து தான் நீங்க சொன்ன மாதிரி
இந்த தனியார் Vs government சம்பள பிரச்சனை எப்போ தீரும்னு தெரியல... ஆனா அநியாயமா எத்தனை உயிர் போச்சு... அது தான் கொடுமை... பழி ஒரு இடம் பாவம் ஒரு இடம்..
Waiting for kootu, rasam, thayir
இப்படிக்கு,
LK வின் இளைய தங்கை
mmmm..:)
@ஸ்ரீராம் அண்ணா
இல்லை கொஞ்ச தூரம் சண்டை போட்டுகொண்டு வந்தார்கள். அதன் பின் விளைவே இது
@அப்பாவி
வெகு சீக்கிரம் பொரியல், மோர் வரும் அக்கா
@தக்குடு
ஹ்ம்ம்
//ஜெய்
நான் முயற்சித்தேன். என்னிடம் உள்ள மென்பொருளில் சரியாக வரவில்லை
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி //
நா உங்க ஆசைய நிறைவேத்தறேன் . இப்ப உங்க மெயில பாருங்க
நல்ல பதிவு.. அவசியமான பதிவு.. நன்றி..
எல்கே, நல்லா சொன்னீங்க. இப்பெல்லாம் வெளியே சண்டை போடுறவங்க தான் அதிகம்.
@ஜெய்
நன்றி
@ஆனந்தி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@வானதி
ஆமாங்க
இந்த தொகுப்பு நல்லா இருக்குதுங்க....
ஐயோ இவ்வளவு பேரு வருத்தபடுவீங்கன்னு எதிர்பார்க்கலை... சரி... சரி... நான் இனிமேல் ரோட்டில், வீதியில் சண்டை போடுவதை நிறுத்தி கொள்கிறேன்.
கூட்டு நல்லாயிருக்கு கார்த்திக்.
@chitra
thanks
@kundavai
neengathaana athu.. inime sandai podatheenga..
thanks for coming
சண்டைன்னு வந்துட்டா இடத்தை யாரும் பார்ப்பதில்லை. பஸ்ஸில் இதே போல் இரண்டு பேர் சண்டை போட்டுக்கொண்டே வந்தார்கள். வீட்டில் நேரம் பத்தாமல் இப்படி வெளியிலும் தொடருதோ?
கடைசி படம் மனதை தொட்டது. ஆனால் Taglineஐ இன்னமும் Strongஆக தந்திருக்கலாம். முதல் பாராவில் தந்துள்ள கருத்தும் மிக, உண்மை, எல்லோரும் யோசிக்க வேண்டியது.
கடைசி படம் மனதை தொட்டது. ஆனால் ஐ இன்னமும் ஆக தந்திருக்கலாம். முதல் பாராவில் தந்துள்ள கருத்தும் மிக, உண்மை, எல்லோரும் யோசிக்க வேண்டியது.
Superah Blog elutarenga.
My Hearty Congratulations to you.
By
S.Shriram
//அன்னு said...
கடைசி படம் மனதை தொட்டது. ஆனால் Taglineஐ இன்னமும் Strongஆக தந்திருக்கலாம். முதல் பாராவில் தந்துள்ள கருத்தும் மிக, உண்மை, எல்லோரும் யோசிக்க வேண்டியது. ///
நன்றிங்க.. அது எனக்கு மின்னஞ்சலி வந்தப் படம் அப்படியே இங்கே போட்டது மட்டுமே நான்
கருத்துரையிடுக