Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin
Sunday, November 24

Pages

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

மனம் போன போக்கில் - 03

கடந்த வார செய்தித் தாளில் வந்திருந்த ஒரு செய்தி என்னை யோசிக்க வைத்தது. நமது நாட்டில் சட்டம் என்பது ஒருவரது பொருளாதார , சமூக நிலையை வைத்...


கடந்த வார செய்தித் தாளில் வந்திருந்த ஒரு செய்தி என்னை யோசிக்க வைத்தது. நமது நாட்டில் சட்டம் என்பது ஒருவரது பொருளாதார , சமூக நிலையை வைத்து மாறுபடுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இப்பொழுது அந்த விதி விலக்குகளில் இன்னொரு குழுவினரையும் சேர்த்த வேண்டும். அரசுப் பேருந்து ஓட்டுனர்கள்தான் அவர்கள்.

அரசுப் பேருந்துகளுக்கும் எனக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தம்தான். ஒருமுறை சிக்னலில் சிகப்பு விளக்கு ஒளிர்ந்துக் கொண்டிருந்ததால் , நான் காத்துக் கொண்டிருந்தேன். பின்னால் இருந்த அரசுப் பேருந்து ஓட்டுனர் சென்னை செந்தமிழில் என்னை அர்ச்சித்தார். அன்று எனக்கு நேரம் நன்றாக இருந்திருக்கிறது. ஏனென்றால் , நேற்று இதே போல் சிக்னலில் நிற்காமல் முன்னால் இருந்த ஒரு வண்டியை இடித்து விட்டு சென்று இருக்கிறார் ஒரு அரசுப் பேருந்து ஓட்டுனர். கடமை உணர்வு மிக்க ஒரு காவல்துறை நண்பர், பேருந்தை விரட்டி சென்று குரோம்பேட்டை அருகே பிடித்து விட்டார். ஓட்டுனர் மேல் புகார் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த மற்றொரு அரசுப் பேருந்து ஓட்டுனர் , போலீசைத் தள்ளியுள்ளார். இதைத் தொடர்ந்து பிரச்சனைகள் நடந்து கடைசியில் சமாதானமாக சென்றுள்ளனர்.

சென்னைப் போக்குவரத்துக் காவலர்களுக்கு சிலக் கேள்விகள்

அரசுப் பேருந்து ஓட்டுனர்களும் இந்த நாட்டு மக்கள்தான். அவர்களும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இன்றைய நிலையில் சென்னையில் அதிகப் பட்ச போக்குவரத்து விதி மீறல்கள் செய்வது அரசுப் பேருந்து ஓட்டுனர்கள்தான். ஆனால் அவர்கள் மேல் நீங்கள் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை. ?

சங்கம் என்ற ஒன்றுக்கு பயப்படுகிறீர்களா இல்லை ஓட்டு வங்கிக்காக ஆலம் கட்சியே அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ளதா ?

நாளை இதே போன்று பொதுமக்களும் கூட்டம் சேர்ந்து எதிர்த்தால் என்ன நடக்கும் ?

இன்னும் இப்படி பலக் கேள்விகள் உள்ளன. முதலில் இவற்றிற்கு விடைக் கிடைக்கட்டும். பிறகு மற்றவையை பார்ப்போம்...

அன்புடன் எல்கே

12 கருத்துகள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Too bad...:(

ஸ்ரீராம். சொன்னது…

இவர்கள் மட்டுமல்ல, ஆட்டோ டிரைவர்கள், மாணவர்கள் கூட இப்படித்தான்!

திவாண்ணா சொன்னது…

வக்கீல்கள் மேலே யாரும் இது வரை மோசமான சர்வீஸ்ன்னு கன்ஸ்யூமர் கேஸ் போட்டு இருக்காங்களா?
சமூகத்தில் இப்படி சட்டத்துக்கு மதிப்பு கொடுக்காதவங்க ஏராளம். பொது மக்கள் எப்படி மதிப்பு கொடுப்பாங்க?

Asiya Omar சொன்னது…

என்ன செய்வது?நம் ஆதங்கத்தை இப்படி தான் காட்ட முடியும். சிலர் கன்னா பின்னான்னு திட்டுவதை காதால் கேட்க முடியாது.

அப்பாதுரை சொன்னது…

ஒதுங்கிப் போவது சிக்கல் தராது.

Vetirmagal சொன்னது…

ஒதுங்கி போயே , அவர்களுக்கு தைரியம் வந்து விட்டது, நம்மை நாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று.

பொது மக்கள் எடுத்து சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தவறு இல்லையே!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ஹைய்யோ.. ட்ராபிக்கில் இந்த பேருந்துகள் செய்யும் அட்டகாசம் இருக்கே.. ஒன்னும் சொல்றதுக்கில்லை. துஷ்டனைக் கண்டா மட்டுமல்ல தூரத்தில் பேருந்தைக் கண்டாலே நாங்கல்லாம் ஒதுங்கிருவோம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

இதுபோல் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்...

ADHI VENKAT சொன்னது…

அரசுப் பேருந்து ஓட்டுநர்களே இப்படி விதிமுறைகளை பின்பற்றலேன்னா.....என்ன சொல்வது?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நிறைய பிரச்சனைகள் நம் ஊரில்....

இங்கே தில்லியில் எல்லோருக்கும் “சல்தாகே.....” என்ற எண்ணம் தான்....

ரோட் ரேஜ் சர்வ சாதாரணமாக ஆகிக்கொண்டு இருக்கிறது... என்ன நடக்கிறது என்றே புரியவில்லை....

எல் கே சொன்னது…

நேற்று முன்தினம், என் அலுவலகம் அருகே , பைக்கில் சென்ற ஒருவர் மேல் அரசு பஸ் ஏறி இறந்தார் . நேரில் பார்க்க மிகக் கொடுமையாக இருந்தது

Guna சொன்னது…

உங்களின் இந்த பதிவை வலைசரத்தில் அறிமுகபடுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்..
http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_11.html
நன்றி
குணா

ப்ரத்யுஷா

தென்னாப்பிரிக்க அணியின் இறங்கு முகம்

மீண்டும் தொடரலாமா...

இரண்டு வார்த்தைகள்

காவிரியின் மைந்தன்

கற்க வேண்டியது யார் ?

புது வீடு

மீண்டும் விருது

பள்ளித் துவக்கம்

அனைவரும் நலமா ?