மார்ச் 28, 2011

கூட்டு 28.03.2011

தேர்தல் பிரச்சாரக் கெடுபிடி 

இந்த முறை உண்மையிலேயே தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் ரொம்ப அதிகமாக இருக்கு. ஆளுங்கட்சியினர் இந்த அளவுக்கு புலம்பி நான் பார்த்தது இல்லை. குறிப்பா சுவர் விளம்பரங்கள் செய்வது, பணம் பட்டுவாடா செய்வது இந்த விஷயங்களில் அதிகப் பட்ச கெடுபிடிகள் இருக்கு .இதற்காகவே அவர்களைப் பாராட்டனும். வாழ்க தேர்தல் கமிஷன். 

டவுட்டு 

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலவசங்கள் தரப்போறாங்க. அதை எந்தப் பணத்தில் இருந்து தருவார்கள் ? நம்மோட வரிப்பணத்தில் இருந்துதானே ? நம்மகிட்ட காசு வாங்கி அதையே இலவசமா திருப்பி எதுக்குத் தரனும் ? பேசாம அவங்களுக்கு தரவேண்டிய வரியை நாம் தராமல் அதில் அந்தப் பொருட்களை நாமே வாங்கிக் கொள்ளலாமே ??


புத்தக வெளியீடு

நேற்று கேபிள் அவர்களின் "கொத்து பரோட்டா ", கே ஆர் பி செந்தில் அவர்களின் "பணம்" மற்றும் உலகநாதன் அவர்களின் புத்தகம் ஆக மொத்தம் மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழா நடந்தது. வேறு சிலக் காரணங்களால் போக இயலவில்லை. புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகத்திற்கு வாழ்த்துக்கள்.


2012 AFC சேலேஞ் கப் 
இந்தியக் கால்பந்து அணி 2012 AFC சேலேஞ் கப் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. இந்தப் பற்றி பெரும்பாலான நாளிதழ்களில் எந்த செய்தியும் வரவில்லை. இந்தியக் கால்பந்து அணிக்கு என் வாழ்த்துக்கள்.

இந்த வாரப் பதிவர் 

இவர் மூன்று வலைப்பூக்கள் வைத்துள்ளார். ஒன்று இசைக்கென்றே ஒதுக்கி உள்ளார். மற்றொன்றில் கதைகள் எழுதுகிறார். இன்னொன்று படங்களுக்காய். இவரது வலைப்ப்பூக்களை காண 


அறிவிப்பு   
  
ஒருப் பதிவரை ரொம்ப நாளாக் காணோம். கொலையைப் பற்றி விஷாரிச்சிட்டு வரேன்னு போனார் இன்னும் வரவே இல்லை. அவருக்கு என்ன ஆச்சோன்னு  கவலையா இருக்கு.  பொற்கொடி காணாமல் போய் கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆச்சு . சீக்கிரம் இவரைக் கண்டுப் பிடிச்சிக் கொடுக்கவும்.


அன்புடன் எல்கே

39 கருத்துகள்:

நிரூபன் சொன்னது…

பணம் பட்டுவாடா செய்வது இந்த விஷயங்களில் அதிகப் பட்ச கெடுபிடிகள் இருக்கு .இதற்காகவே அவர்களைப் பாராட்டனும். வாழ்க தேர்தல் கமிஷன்.//

வணக்கம் சகோ, இந்த முறை அடிச்ச காசு அம்புட்டிலும் தேர்தலைக் கொண்டாடி காசு மழையா பொழியப் போறாங்களாம். தேர்தல் கமிசனுக்கும் கமிசன் தான்.

Chitra சொன்னது…

கடைசி வரை, அது என்ன கூட்டு என்று சொல்லவே இல்லையே.... ஹா,ஹா,ஹா,ஹா.... நல்ல தொகுப்பு!

நிரூபன் சொன்னது…

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலவசங்கள் தரப்போறாங்க. அதை எந்தப் பணத்தில் இருந்து தருவார்கள் ? நம்மோட வரிப்பணத்தில் இருந்துதானே ? நம்மகிட்ட காசு வாங்கி அதையே இலவசமா திருப்பி எதுக்குத் தரனும் ? பேசாம அவங்களுக்கு தரவேண்டிய வரியை நாம் தராமல் அதில் அந்தப் பொருட்களை நாமே வாங்கிக் கொள்ளலாமே ??//

சகோ இதுக்குப் பெயர் தான் கொடுத்து வாங்கிறது. புரியுதா. நம்ம மக்கள் அனைவரும் இதனைப் புரிந்து என்றால் இலவசமே இந்த நாட்டிலை இல்லாமல் போய் விடும்.

நிரூபன் சொன்னது…

புத்தக வெளியீடு//

நீங்கள் கூறிய மூன்று நண்பர்களின் புத்தகங்களையும் படிக்க ஆவல். தமிழகம் வந்தால் ஒரு பெரிய சாக்கு முட்ட புத்தகங்கள் வாங்கி சிலோனுக்கு கட்டிக் கொண்டு போக வேண்டும் என்று ஆசை இருக்கு. காலம் நேரம் தான் கை கூட வேண்டும்.

நிரூபன் சொன்னது…

2012 AFC சேலேஞ் கப்//

கால்பந்து கிறிக்கற் எனும் விளையாட்டின் தற்போதைய கள நிலவரங்களிற்குப் பின்னால் அமிழ்ந்து போய்(மறைந்து) விட்டது என்று நினைக்கிறேன்.

நிரூபன் சொன்னது…

இந்த வாரப் பதிவர்//

பதிவரைப் பற்றிக் கொஞ்சம் அறிமுகம் தந்திருக்கலாம், ஆனாலும் உங்களின் முயற்சிக்குப் பராட்டுக்கள்.

கொலை பற்றி விசாரிக்க போயி காணாமற் போன பதிவர்... ரொம்ப திரில்லா இருக்கு பாஸ். மர்மமான முடிச்சுப் போல..


உங்களின் கூட்டுக் கலவை சுவையாகத் தான் இருக்கிறது. நகைச்சுவை, இன்னும் பல சுவையான காரப் பொடிகளையும் கொஞ்சம் தூவியிருந்தால் செம டேஸ்ட்டாக இருக்கும்.

ஆனாலும் எல்லா விடயங்களையும் நச்சென மனதில் பதியும் வண்ணம் சுவையாகத் தந்துள்ளீர்கள்.

asiya omar சொன்னது…

கூட்டு செய்தி வழக்கம் போல்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>வேறு சிலக் காரணங்களால் போக இயலவில்லை.

பெரியப்பா.. அது என்ன காரணம்னு சொல்லும் வரை சாகும் வரை போராடுவேன்.. (யார் சாகும் வரை என்பது சஸ்பென்ஸ் ) ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பெரியப்பா .. நீங்க அம்மா கட்சிங்கறதை பதிவுல சொல்லவே இல்லையே.. என்ன்? ஹி ஹி

பத்மநாபன் சொன்னது…

இந்த தடவை தேர்தல் கமிஷன் சற்று காட்டமாகவே இருக்கு ..கட்சிகளும் ''திருடனுக்கு தேள்கொட்டிய''அமைதியில் இருக்கிறார்கள்....

கிரிக்கெட் மோகத்தில் கால்பந்து காணமல் போய்விட்டது.. வெற்றி தொடரவேண்டும்....

வெகுதிருப்பங்களோடு பொற்கொடி கதையை தயாரித்துக் கொண்டிருக்கிறார் என்று எதிர்பார்க்கலாம்..

சேட்டைக்காரன் சொன்னது…

//இதற்காகவே அவர்களைப் பாராட்டனும். வாழ்க தேர்தல் கமிஷன்.//

நிச்சயமாக- சில இடங்களைப் பார்த்தால் தேர்தல் நடப்பதற்கான அறிகுறிகளே இல்லை.

சேட்டைக்காரன் சொன்னது…

//பேசாம அவங்களுக்கு தரவேண்டிய வரியை நாம் தராமல் அதில் அந்தப் பொருட்களை நாமே வாங்கிக் கொள்ளலாமே ??//

ஹிஹி! மாநில அரசுகளுக்கு வருகிற நேரடி வரிவருமானம் மிகக்குறைவு கார்த்தி. இது போன்ற இலவசத்திட்டங்களுக்கு மத்திய அரசிலிருந்து வளர்ச்சிக்காக ஒதுக்கப்படுகிற நிதியைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பதே ஆதங்கம்.

கூட்டு ருசியா இருக்கு!

Sriakila சொன்னது…

இந்த மாதிரி 'கூட்டு'வில் எல்லாம் கலந்து கொடுக்கும்போது நிறைய விஷயங்களை தெரிஞ்சிக்க முடியுது. கூட்டு நல்லா வந்திருக்கு..

middleclassmadhavi சொன்னது…

//பேசாம அவங்களுக்கு தரவேண்டிய வரியை நாம் தராமல் அதில் அந்தப் பொருட்களை நாமே வாங்கிக் கொள்ளலாமே ??//
நல்ல ஐடியா! இதையும் தேர்தல் அறிக்கைல சேர்த்து வரி அலுவலகங்களை மூடி விடலாமே!!

சே.குமார் சொன்னது…

கூட்டு ருசியா இருக்கு!

RVS சொன்னது…

கூட்டு வழக்கம் போல் திருப்தியாக இருந்தது. பணப் பட்டுவாடாவை ஏன் தேர்தல் கமிஷன் நிறுத்தனும். கிடைச்ச வரைக்கும் வாங்கிகிட்டு யாரை புடிக்குதோ ஓட்டுப் போட வேண்டியதுதானே! அப்ப என்ன செய்வாங்க.. ;-))
நா கால்பந்து பத்தி ஒன்னு போட்ருக்கேன் எல்.கே. ;-)

Madhavan Srinivasagopalan சொன்னது…

//2012 AFC சேலேஞ் கப்
இந்தியக் கால்பந்து அணி 2012 AFC சேலேஞ் கப் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. இந்தப் பற்றி பெரும்பாலான நாளிதழ்களில் எந்த செய்தியும் வரவில்லை. இந்தியக் கால்பந்து அணிக்கு என் வாழ்த்துக்கள். //

எங்களுக்குலாம் பீஸ்.. பீஸ் ஆன பந்துலாம் பிடிக்காது..(கால் பந்து)
முழு பந்து (கிரிக்கெட்) தான் பிடிக்கும்.. அவ்வவ்வ்வ்வ்

Geetha6 சொன்னது…

nice post!

சுசி சொன்னது…

கூட்டு டேஸ்ட்டா இருக்குங்கோ கார்த்திக் :)

அப்பாவி தங்கமணி சொன்னது…

சூப்பர் கூட்டு...:)

நல்ல டவுட்டு ... நமக்கு நாமே திட்டமா...:))

//புத்தக வெளியீடு//
வாழ்த்துக்கள் மூவருக்கும்...

//இந்த வாரப் பதிவர்//
நல்ல அறிமுகம்.. நன்றி

//சீக்கிரம் இவரைக் கண்டுப் பிடிச்சிக் கொடுக்கவும்//
கண்டுபிடிச்சு குடுத்தா என்ன சன்மானம்...அத சொல்லு மொதல்ல...:)

S.Menaga சொன்னது…

சுவையான கூட்டு...

geethasmbsvm6 சொன்னது…

இந்தக் கூட்டு பரவாயில்லை. நல்லா இருக்கு.

geethasmbsvm6 சொன்னது…

தொடர

raji சொன்னது…

தேர்தல் கமிஷன் பாராட்டப் பட வேண்டியதுதான்
உங்க டவுட்டு கரெக்ட்தான்
புத்தக வெளியீட்டு விழாவா? படிக்கலாமே
இந்த வாரப் பதிவரை போய் பாத்துட்டு வரேன்
பொற்கொடி எங்க போயிட்டாங்க,இங்க வரலையே

எல் கே சொன்னது…

@நிரூபன்
ஓஹோ அப்படி வேற இருக்கா ? எனக்குத் தெரியலையே ??

எல் கே சொன்னது…

@சித்ரா

புடலங்காய் கூட்டு :)

எல் கே சொன்னது…

@நிரூபன்
உங்களுக்கு புத்தகம் வேண்டுமென்றால் அங்கிருந்தே வாங்கலாம். வாங்க ஆசை இருந்தால் மடல் அனுப்பவும்.

காரம் உடம்புக்கு நல்லதில்லை. நகைச்சுவை அடுத்த முறை சேர்த்து விடுகிறேன்

எல் கே சொன்னது…

@நிரூபன்
பணிச்சுமை காரணமா அதிகம் பதிவுகளை படிக்கவில்லை. அதான் சிறிய அறிமுகம் . நன்றி

எல் கே சொன்னது…

@ஆசியா
நன்றி சகோ

@செந்தில்குமார்

யாரு சித்தப்பு சொன்னா ? எனக்கு ரெண்டு போரையும் பிடிக்காது. ஆனால் இப்ப வேற வழி இல்லை :(. அன்னிக்கு என் அக்கா வீட்டுக்கு போய்டேன் செந்தில்.

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

தேர்தல் கமிஷன் இப்படியே இருந்தால் நல்லது. பார்ப்போம். பொற்கொடி தேடி தேடி களைத்து போச்சு

எல் கே சொன்னது…

@சேட்டை
ஆமாம். குறிப்பா சென்னையில் .. ஹ்ம்ம் நீங்கள் சொல்வது சரியா இருக்கலாம்


@அகிலா

ரைட்டு. இப்படியே தரலாம் இனி

எல் கே சொன்னது…

@மாதவி

காதில் விழுந்த செஞ்சிடுவாங்க.

எல் கே சொன்னது…

@குமார்
நன்றி

@ஆர்வீஎஸ்
இது நல்ல ஐடியா தான். படிச்சேன் . நல்லா இருந்தது

எல் கே சொன்னது…

@மாதவன்

ஏன் இந்தக் கொலை வெறி ??

எல் கே சொன்னது…

@geetha6

நன்றி

@சுசி
நன்றி


@அப்பாவி

சன்மானமா ?? யோசிக்கணும்

எல் கே சொன்னது…

@மேனகா

நன்றி

@கீதா சாம்பசிவம்
ஹ்ம்ம் நன்றி


@ராஜி
அவங்களைப் பார்த்த கொஞ்சம் சொல்லுங்க

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

மிக்க நன்றி தலைவரே..

vanathy சொன்னது…

good one.

Hema சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.