Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin
Tuesday, December 3

Pages

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

கூட்டு 22.03.2011

போன வருடம் இந்தத் தலைப்பில் கலவையான பல விஷயங்களை வைத்து சில பதிவுகள் எழுதினேன். பிறகு நின்றுப் போய்விட்டது. தேர்தல் முடியும் வரை இனி இது வ...

போன வருடம் இந்தத் தலைப்பில் கலவையான பல விஷயங்களை வைத்து சில பதிவுகள் எழுதினேன். பிறகு நின்றுப் போய்விட்டது. தேர்தல் முடியும் வரை இனி இது வரும்.

தேர்தல்

இனி ஒரு மூணு வாரத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் இருக்கும். ஒழுங்கா யார் யாரு எந்தப் பகுதியில் பிரச்சாரம் பண்றாங்கன்னு பேப்பர்ல பார்த்து வச்சிக்கணும். அப்பத்தான் சரியான நேரத்துக்கு ஆபிசுக்கும், திரும்பி வீட்டுக்கும் வந்து சேர முடியும். இல்லையெனில் திருப்பிவிடப்பட்டு பல இடங்களில் சுற்ற வேண்டி இருக்கும். எனவே தினமும் கட்சிக்காரங்களை விட உன்னிப்பா பிரச்சார இடங்களை பார்த்து வைத்துக் கொள்ளவும்.


சந்தேகம் 

மத்திய அரசு ஊழியருக்கு மீண்டும் அகவிலைப் படி அதிகரிக்கப் போறாங்களாம். ஆறு மாநிலத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் ஆகாதா ???


வலைப்பூக்களுக்குக் கட்டுப்பாடு

மத்திய அரசு , வலைப்பூக்களைக் கண்காணிக்க முடிவு செய்துள்ளது. இதுத் தொடர்பாக  ஏற்கனவே இருக்கும் சைபர் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி , நாட்டின் இறையாண்மைக்கு எதிராக எழுதும் தளங்கள் தடை செய்யப்படலாம். இதைப்பற்றி திரு காஷ்யபன் எழுதியுள்ளப் பதிவைப் பார்க்கவும் . பதிவர்களில் சட்ட வல்லுனர்கள் யாரவது இருந்தால் இதைப் பற்றிய விளக்கம் அளிக்கவும் .

ஜுரம்

தேர்தல் சுரமும், கிரிக்கெட் சுரமும் ஒரே நேரத்தில் தமிழகத்தைப் பிடித்திருக்கிறது. நாளை மறுநாள் காலிறுதியில் ஆஸ்த்ரேலியாவை எதிர்த்து இந்தியா ஆடுகிறது. இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றால் அறை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் ஆட வேண்டி வரலாம். இன்னும் இரு வாரத்துக்கு கிரிக்கெட் சுரம்தான் உச்சத்தில் இருக்கும் என்றெண்ணுகிறேன். அதற்குப் பிறகே தேர்தலின் தாக்கம் தெரியும்.

இந்த வாரப் பதிவர்

 முடிந்த வரை ஒரு புதுப் பதிவரை இந்தப் பகுதியில் அறிமுகப் படுத்த எண்ணுகிறேன் . அந்தவகையில் இந்த வாரப் பதிவர் சாகம்பரி. மகிழம்பூச்சரம் என்ற வலைப்பூவில் இவர் பல நல்ல ஆக்கப்பூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார். குறிப்பாக குடும்பம் ,பெண்கள் பற்றி எழுதி வருகிறார்.

இவருடைய வலைப்பூவிற்கான சுட்டி http://mahizhampoosaram.blogspot.com

உபுண்டு 

வீட்டில் விண்டோசில் இருந்து இலவச இயங்குத் தளமான உபுண்டுவிற்கு மாறிவிட்டேன். தமிழ் எழுத்துருப் பிரச்சனை இருந்ததால், இரண்டு நாட்களாக அதிகம் இணையம் பக்கம் வரவில்லை. விண்டோசை விட எளிதாக உள்ளது உபுண்டு . 

அன்புடன் எல்கே

49 கருத்துகள்

Vidhya Chandrasekaran சொன்னது…

கூட்டு சுவையாகத்தானிருக்கிறது.

காஷ்யபன் அவர்களின் பதிவிற்கு லிங்க் தரவும்.

Unknown சொன்னது…

ஒகே..ஒகே..

settaikkaran சொன்னது…

கார்த்தி! கூட்டுன்னதும் நீங்க யாரோடயோ கூட்டு வச்சிட்டீங்களோன்னு நினைச்சேன்.

கூட்டு நல்லாயிருக்கு! கொஞ்சம் காரம் சேர்த்திருக்கலாமோ? :-)

எல் கே சொன்னது…

@வித்யா http://kashyapan.blogspot.com/2011/03/blog-post_4365.html

பதிவிலியே இருக்கே.

எல் கே சொன்னது…

@செந்தில்
சரி சரி

எல் கே சொன்னது…

@சேட்டை
நான் என்னிக்கும் தனித்துதான் போட்டியிடுவேன் சேட்டை. நோ கூட்டு. போகப்போக உறைப்பு அதிகமாகும்

Asiya Omar சொன்னது…

நினைவுகள் முடியப்போகுதேன்னு நினைச்சேன்,இனி கூட்டு செய்திகள் தொடரும்.இதுவும் சரி தான்..

Sriakila சொன்னது…

கூட்டு நல்லாருக்கு..

பெயரில்லா சொன்னது…

ம்.. நைஸ்! தொடர்ந்து இது மாதிரி எழுதுங்க எல்.கே..

raji சொன்னது…

ஏதோ திருவாதிரைக் கூட்டு பத்தி பதிவு போலனு நினைச்சேன்.
ஆனா அதை விட இது சுவையா இருக்கு.ஏன் நடுவில விட்டுட்டீங்க.இனி
தொடருங்க

RVS சொன்னது…

//ஏதோ திருவாதிரைக் கூட்டு பத்தி பதிவு போலனு நினைச்சேன்.
ஆனா அதை விட இது சுவையா இருக்கு.//

ராஜி அண்ட் வித்யா - நீங்க பண்றதை விட சுவையா இருக்குன்னு சொல்றீங்களா? ;-))))

எல்.கே - கூட்டு ருசியா இருக்கு. ;-)

middleclassmadhavi சொன்னது…

கூட்டு பிரமாதம்!

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

தகவல்களின் கூட்டு புதுமையாகவே உள்ளது.பல தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

பத்மநாபன் சொன்னது…

விட்ட இடை வெளியை `கூட்டி`ல் பிடித்துவிடுகிறேன்...

தேர்தல்... அலுவலகத்தில் காலை மாலை ஒரு மணி நேரம் அனுமதி கிடைக்குமா...

சந்தேகம்...அகவிலைப்படி உயர்வு..வழக்கமான நடவடிக்கை தான்

வ.பூக்களுக்கு கட்டுப்பாடு .... சில சமயத்தில் இது தேவையென்று தோணுகிறது.. பதிவர்களே உணர்ந்து பதிவிட ஆரம்பித்துவிட்டால் கட்டுபாடு தேவையிருக்காது..கட்டுப்பாடு எனும் பெயரில் அரசியல் நுழையாமல் இருந்தால் சரி...

ஜுரம்...பசங்களுக்கு தேர்வும் சேர்த்து நமக்கு ஜுரம்...

மகிழம்பூ ..மகிழவைக்கும் பதிவு..

உபுண்டு...லினக்ஸா..எளிது என்கிறார்கள்..அதுபற்றி நேரம் கிடைக்கும் பொழுது தனிப்பதிவிடுங்கள்...

எல் கே சொன்னது…

@ஆசியா
அது வேற இது வேற

எல் கே சொன்னது…

@அகிலா
நன்றிங்க

@பாலாஜி
தங்கள் விருப்பம் என் பாக்கியம்

எல் கே சொன்னது…

@ராஜி
அதைப் பத்தி திவ்யாம்மா ப்ளாகில் எழுதுவாங்க. எனக்கு அதை சாப்பிடமட்டும்தான் தெரியும்

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்
கோத்து விட்டாச்சா ?? நன்றி சாரே

@மாதவி
நன்றி

@ஆச்சி
நன்றி ஆச்சி

எல் கே சொன்னது…

@பத்மநாபன்
எங்க காணாம போய்டீங்க ? ஆணி ஜாஸ்தியா ?
கண்டிப்பாக் கட்டுப்பாடு வேணும். உபுண்டு லினக்ஸ்தான். விண்டோஸ் மாதிரியே இன்டர்பேஸ் இருக்கு. இன்ஸ்டால் பண்றது ஈஸியா இருக்கு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

கூட்டு நல்லாருக்கு.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சுவையான கூட்டுதான்.

Gayathri சொன்னது…

தேர்தல் : ஹாஹா உங்களுக்கு அரசியல் ஆர்வம நிறைய இருக்கோன்னு நம்பிட்டேன் அப்புறம் பார்த்த டிராபிக்ப்ரோப்லம் இருக்காம இருக்கத்தானா..ஹா ஹா ஹா

வலைபூல அரசியல் ம்ம்ம்ம் பாப்போம்

இங்க வேர்ல்ட் கப் பார்க்குற வாய்ப்பே இல்லை சதா சர்வகாலமும் சுட்டி டிவி தான்

கண்டிப்பா அந்த பதிவரின் வலைப்பூவை பார்கிறேன்..

உபுண்டு எப்டி இருக்கு ????
வொர்த் இட் ?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இது கூட்டணி காலம் அல்லவா?தொடரட்டும் கூட்டு!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ருசியான கூட்டு..

நர்மதன் சொன்னது…

இதையும் பாருங்க

கவுண்டமணியின் சில மணியோசைகள்

ADHI VENKAT சொன்னது…

கூட்டின் சுவை நன்று.

சாகம்பரி சொன்னது…

அட, வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி!. நன்றி எல்.கே. உள்ளது உள்ளபடி சொல்லும் உங்கள் கருத்துரைகள் எனக்கு ஒரு கவனத்தை தந்திருக்கின்றன இது அறிவும் சமுதாய அக்கறையும் உள்ள உலகம். அந்த வகையில் என் கருத்துக்களுக்கு ஒரு சங்கப்பலகை இந்த "பாகீரதி". இன்றைய அறிமுகத்திற்கு மீண்டும் நன்றி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

கூட்டு நல்லா இருக்கு... ரெசிபி அனுப்புன்னு கேக்க முடியாத கூட்டா போச்சு... ஜஸ்ட் கிட்டிங்... nice போஸ்ட்..:)))

//வலைப்பூக்களுக்குக் கட்டுப்பாடு//
வெச்சுட்டான்யா ஆப்பு...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//எல் கே said...நான் என்னிக்கும் தனித்துதான் போட்டியிடுவேன்//

உன் வழி(லி) தனி வழி(லி)யா பிரதர்...:))

ஸ்ரீராம். சொன்னது…

டிராஃபிக் பயன்களுக்காக நாம்தான் எந்தப் பகுதியில் யார் பிரச்சாரம் என்று கட்சிக் காரர்களை விட நாம் பார்த்துக் வைத்துக் கொள்வது நல்ல பாய்ன்ட். நம் கஷ்டம் அரசியல்வாதிகளுக்குப் புரியாது என்பது மட்டுமல்லாமல் அபபடி தொந்தரவு செய்தால்தான் நல்ல விளம்பரம் கிடைக்கும் என்ற மன நிலை உடையவர்கள் அவர்கள்!

raji சொன்னது…

@ஆர் வி எஸ்

எங்க வீட்டுல திருவாதிரை கூட்டு செய்யும் வழக்கமே இல்லை.அதனால எனக்கு அதை
செய்யவே தெரியாது.(நாங்க திருவாதிரை கொண்டாடுறவங்க இல்லை.கம்யூனிட்டியை ப்ளாக்ல
மென்ஷன் பண்ண கூடாதுன்னு இங்க நான் சொல்லலை)

ஆனா எனக்கு அந்த கூட்டு ரொம்ப பிடிக்கும்.என் ஃபிரண்டு எனக்காக கொண்டு வந்து குடுப்பா.
நான் நல்லா சாப்பிடுவேன்.ஸோ, எனக்கு அந்த கூட்டு செய்ய தெரியாது :-)))

அப்பாதுரை சொன்னது…

அம்மா பெரீ நெம்பரை கூட்டச் சொலிற்யாங்காட்டும்னு பயந்துகினே பட்சேன்.

Matangi Mawley சொன்னது…

Romba nalla highlights! :)

'sakambari' avangaloda blog-- romba arumaiyaana arimukam.. thanks a ton for that...

good work!

ஹுஸைனம்மா சொன்னது…

//கட்சிக்காரங்களை விட உன்னிப்பா பிரச்சார இடங்களை பார்த்து வைத்துக் கொள்ளவும்.//
சிரிப்பு வந்தாலும், எதார்த்த நிலை புரிகிறது.

Menaga Sathia சொன்னது…

கூட்டு ரொம்ப சுவையாக இருக்கு...

ஹேமா சொன்னது…

ம்...கூட்டு வாசனைதான் எல்.கே !

Pranavam Ravikumar சொன்னது…

பதிவு அழகு!

நிரூபன் சொன்னது…

மத்திய அரசு , வலைப்பூக்களைக் கண்காணிக்க முடிவு செய்துள்ளது. இதுத் தொடர்பாக ஏற்கனவே இருக்கும் சைபர் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி , நாட்டின் இறையாண்மைக்கு எதிராக எழுதும் தளங்கள் தடை செய்யப்படலாம். இதைப்பற்றி திரு காஷ்யபன் எழுதியுள்ளப் பதிவைப் பார்க்கவும் . பதிவர்களில் சட்ட வல்லுனர்கள் யாரவது இருந்தால் இதைப் பற்றிய விளக்கம் அளிக்கவும் .//

என்ன சகோ பயமுறுத்துறீங்க... கூட்டுக் கலவை செம ரேஸ்ரு...
கூட்டு நடை முறை விடயங்களை அழகாகச் சொல்லுகிறது,

எல் கே சொன்னது…

@குமார்
நன்றிங்க

@ராஜராஜேஸ்வரி
நன்றிங்க

எல் கே சொன்னது…

@காயத்ரி
அரசியல் ஆர்வம் உண்டு , ஆனால் இல்லை. சுட்டி டிவி எங்க வீட்ல வராது . உபுண்டு நல்லாவே இருக்கு. சீக்கிரம் ஒரு பதிவா போடறேன்

எல் கே சொன்னது…

@வெங்கட்
ஆமாம்

@சாரல்
நன்றி

@நர்மதன்
பார்த்தேன் நன்றாக இருக்கு

@ஆதி
நன்றிங்க

எல் கே சொன்னது…

@சாகம்பரி
நல்லக் கருத்துகள் சொல்றீங்க,. தொடர்ந்து அப்படியே எழுதுங்க

எல் கே சொன்னது…

@அப்பாவி
செய்முறை சொன்னா மட்டும் ???

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்
ஆமாம் அண்ணா. கே கே நகர்ல இவங்க எப்ப மீட்டிங் நடத்தினாலும் பிரச்சனைதான். பார்ப்போம்

எல் கே சொன்னது…

@ராஜி
ப்ரீயா விடுங்க

@அப்பாதுரை
நான் கணக்கில் வீக்

@மாதங்கி
நன்றிங்க

எல் கே சொன்னது…

@ஹுசைனம்மா
என்ன பண்ண :( ஏற்கனவே ஏழரை ஆகுது வீட்டுக்கு போக. இனி இன்னும் லேட் ஆகும்

எல் கே சொன்னது…

@மேனகா
நன்றி

@ஹேமா
நன்றிங்க

@ரவி
நன்றி

எல் கே சொன்னது…

@நிரூபன்
நீங்க இதுல வர மாட்டீங்க. நீங்க இங்க இல்லையே

சுசி சொன்னது…

நல்லா இருக்கு கூட்டு.