பிப்ரவரி 28, 2011

பெயர்க் காரணம்

ஸ்ரீஅகிலா அவர்கள் பெயர்க்காரணம் என்றத் தொடருக்கு அழைத்திருக்கிறார்கள். அதாவது நமக்கு வெச்ச பெயரால் நாம் சந்தித்த சுவாரசியங்களையும் ,கிண்டல்களையும் சொல்ல சொல்லி. 

நான் பிறந்த பொழுது என் பாட்டி (அம்மாவின் அம்மா ) எனக்கு வைத்தப் பெயர் வெங்கட்ராமன் (என் அப்பாவின் அப்பா பெயர் ). பிறப்பு சான்றிதழிலும்  இந்தப்  பெயர்தான் இருக்கும். ஆனால் என் தாத்தாவின் பெயரை சொல்லி எப்படிக் கூப்பிடுவது ? மரியாதையாக இருக்காது அல்லவா . சரி இன்னொரு பேரு வைக்கலாம் என்று வச்சதுதான் கார்த்திக். பெரிய காரணம் ஒன்றும் இல்லை, நான் பிறந்தது கார்த்திகை நட்சத்திரத்தில். எனவே கார்த்திக்னு வச்சிட்டாங்க. 

பள்ளியில் வருகைப் பதிவில் பெயர் நடுவில் வரும். ரொம்பப் பின்னாடியும் போகாது, முன்னாடியும் இருக்காது. கல்லூரி வரும் வரை எந்தப் பிரச்சனையும்  இல்லை . கல்லூரியில் இன்னொரு கார்த்திக் இருந்தான். சரி இனிசியல் வைத்து மாறுபடுத்திக் கொள்ளலாம் என்றால் அவனது இனிசியலும் எல் (L )  தான். அவன் வீரபாண்டி (சேலம் அருகே இருக்கும்) கிராமத்தில் இருந்து வருவான். எனவே அவன் வீரபாண்டி கார்த்திக் ஆகிட்டான். நான் எப்பவும் போல் கார்த்திக் தான் . 

வகுப்பில் லெக்சரர் என்னைக் கேள்வி கேட்டால், அவன் எழுந்து பதில் சொல்லுவான் ,அவனைக் கேட்டால் நான் எழுந்து சொல்லுவேன். பொதுவா கார்த்திக்னுதான் கூப்பிடுவாங்க,. மாத்தி எழுந்து நின்னு ஒரே காமெடியா இருக்கும். 


படிப்பு முடிஞ்சு வேலைக்கு வந்தப்புறம்தான் கார்த்திக் எல் கே வா மாறினது . இப்ப வேலை செய்யற ஆபிசில் ஏற்கனவே ஒரு கார்த்திக் இருந்ததால் நான் எல் கேவா மாறினேன் ,

என் மகளுக்கு பெயர் வைக்கும் பொழுது என் பாட்டியின் பெயர் அதில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன் . அவர்களது முழு பெயரையும் வைத்தால் ரொம்ப பழைய பெயரா இருக்கும்னு தோணியது. அதே சமயம் ரெண்டு மூணு பேர் வைக்க எனக்கு இஷ்டம் இல்லை. 

எங்களுடைய நெருங்கிய குடும்ப நண்பர், திவ்யா மக நட்சத்திரத்தில் பிறந்ததால் "த,தி " சொல்லில் துவங்கும் பெயரை வைக்க பரிந்துரை செய்தார். என் பாட்டியின் பெயரில் பின்பாதியும் சேர்த்து திவ்ய லக்ஷ்மி என்று வைத்தோம். 

இதுதாங்க என்னோட பெயர் புராணம். 

இதை தொடர சிலரைக் கூப்பிடனுமே , 

அன்புடன் எல்கே

பிப்ரவரி 27, 2011

பதிவர்கள் - இயக்குனர் கலந்துரையாடல்

கேபிள் சங்கரும், கே ஆர் பி செந்திலும் நேற்றைய பதிவர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். வழக்கமா கடற்கரையில் சந்திப்பு நிகழும். அதை மாற்றி கே கே நகர் டிஸ்கவரி புக் பேலசில் சந்திப்பை வைத்திருந்தார்கள்.

மாலை ஆறு மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப் பட்டதால், ஆறு மணிக்கு டிஸ்கவரி புக் பேலசில் நுழைந்தேன். எங்கள் ப்ளாக் கௌதமன், குகன்,மா.சிவக்குமார் ,தண்டோரா மணிஜி, காவேரி கணேஷ் போன்றோர் ஏற்கனவே வந்து காத்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திலேயே கே ஆர் பி செந்திலும், விந்தை மனிதன் ராஜாராமும் வந்தனர்.

அவர்கள் வந்தவுடன் சந்திப்பு இடம் மாறி, கீழே உள்ள டீக்கடைக்கு சென்றது. நாங்கள் அங்கு சென்றபொழுது, மயில் ராவணன், சங்கர நாராயணன் மற்றும் உண்மைத் தமிழன் அண்ணாச்சியும் வந்து சேர்ந்தனர். டீ ,பஜ்ஜி போன்றவற்றை முடித்து மீண்டும் புக் பேலசில் நுழைந்தபொழுது கேபிள் சங்கர் வந்து சேர்ந்து கொண்டார்.

இதன் பின் அண்ணன் ஆதி, அப்துல்லா அண்ணாச்சி, எறும்பு ராஜகோபால்,வலைமனை சுகுமார், ஆயிரத்தில் ஒருவன் மணி, பிலாசபி பிரபாகரன் ஆகியோரும், சென்னைப் பெண் பதிவர்களின் சார்பாக மதாரும் வந்து கலந்துக் கொண்டனர்.

இந்தமுறை பதிவர்கள் சந்திப்பை சுரேகா அவர்கள் ஒருங்கிணைத்து அருமையாக நடத்தினார். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் சீனு ராமசாமி அவர்களும், சிங்கப் பதிவர் ஜோசப் அவர்களும் கலந்துக் கொண்டனர்.

அனைவரது அறிமுகங்களும் முடிந்தப் பின் இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள்  தென்மேற்கு பருவக்காற்று என்ற தனது படத்தை வெளிக் கொண்டு வருவதில் இருந்த சிக்கல்களை பற்றி பேசினார். முக்கியமாக எந்தப் பத்திரிகையும் இதைப் பற்றி எழுதாத நிலையில் பதிவர்கள் மட்டுமே அந்தப் படத்தைப் பற்றி எழுதியதாகக் கூறி பதிவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பின், லோ பட்ஜெட் படங்கள் இயக்கி வெளிக்கொண்டு வருவதில் இருக்கும் சிக்கல்களை பற்றியும் கூறினார். பின்பு ,பதிவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்க அதற்கு விளக்கம் அளித்தார்.

அவருக்குப் பின் சிங்கைப் பதிவர் ஜோசப் ,சிங்கை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தை பற்றியும், அவர்கள் செயல்படும் விதத்தை பற்றியும் சுருக்கமாக பேசி முடித்துக் கொண்டார்.

அதன் பின், வழக்கமான பதிவர் சந்திப்புகள் போல், புக் பேலசில் இருந்து கீழே வந்து டீக்கடையில் சந்திப்பு தொடர்ந்தது. சிலர் விடைபெற சிலர் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

மொத்தத்தில் பதிவர் சந்திப்பாக இல்லாமல் இயக்குனர்-பதிவர் கலந்துரையாடலாக இருந்தது.

அன்புடன் எல்கே

பிப்ரவரி 26, 2011

பதிவர் சந்திப்பு

bloggers-meet-2

அன்பான பதிவர் பெருமக்களே.. நாமெல்லாம் ஆங்காங்கே புத்தக கண்காட்சியிலும், புத்தக வெளியீட்டிலுமாய் தொடர்ந்து டிசம்பர், ஜனவரி மாதங்களில் சந்தித்துக் கொண்டாலும், எல்லோரும் ஒட்டு மொத்தமாய் சந்தித்து பல காலமாகிவிட்டது என்பதால், ஏன் ஒரு பதிவர் சந்திப்பை நடத்தக் கூடாது? என்று பல புதிய பதிவர்கள் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். மேற்ச்சொன்ன காரணத்தினாலும், சிங்கையிலிருந்து பதிவர் ஜோசப் பால்ராஜ் அவர்கள் வந்திருப்பதாலும், இவ்வளவு காலம் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்த நமது  சந்திப்பு இன்று சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.

இன்று சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸில் நம் பதிவர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. நம் சந்திப்பினூடே நம்முடன் வந்திருந்து கலந்துரையாட தென்மேற்கு பருவக்காற்று இயக்குனர் திரு. சீனு ராமசாமி வருகிறார். புதிய, பழைய,வாசக பெருமக்கள் அனைவரும் வந்திருந்து சந்திப்பை சிறப்பிக்க வேண்டுமாய் எல்லா பதிவர்கள் சார்பாய் வேண்டுகிறோம்.

இந்தப் பதிவர் சந்திப்பில் ’சென்னை வலைப்பதிவாளர் குழுமம்’ துவங்குவது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற இருப்பதால் சென்னைப் பதிவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவேண்டுகிறோம்.


இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6, முனுசாமி சாலை,
முதல் மாடி, கே.கே.நகர் (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்)
நேரம் : மாலை 6 மணி
தேதி   : 26/02/11
கிழமை: சனிக்கிழமை

சிறப்பு விருந்தினர் : இயக்குனர் திரு. சீனு ராமசாமி.
பதிவர்கள் அனைவரும் தங்களது பதிவில் இந்நிகழ்வை தெரிவித்து ஒரு பதிவிட்டு சக பதிவுலக அன்பர்களுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். 

அனைவரும் வருக..வருக.. வருக..

நன்றி..

பிப்ரவரி 24, 2011

பஸ் டே

பஸ் டே தொடர்பாக நேற்றும் மாணவர்கள் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கல்லூரி சென்று இறங்கியப் பின் கலாட்டாவில் இறங்கிய மாணவர்கள் போலீசாரை தாக்கியுள்ளனர். இதில் பல போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பஸ் டே கொண்டாட்டங்களின் பொழுது நடக்கும் பிரச்சனைகளை பார்க்கும் பொழுது எங்கள் கல்லூரியில் நாங்கள் கொண்டாடிய பஸ் டே நினைவுக்கு வரும். ஆனால் இத்தனை கலாட்டாக்கள், பிரச்சனைகள் இருந்தது இல்லை. 

நான் படித்து திருச்செங்கோட்டில் உள்ள செங்குந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில். சேலத்தில் இருந்து தினமும் தனியார் பேருந்தில்தான் பயணம். சேலத்தில் இருந்து திருச்செங்கோடு வழியாக ஈரோடு செல்லும் ஏ ஆர் பீ என்னும் தனியார் பேருந்துதான் எங்கள் வாகனம். நான் முதல் ஆண்டில் படித்தப் பொழுது திருசெங்கோட்டுக்கு பஸ் டிக்கெட் கட்டணம் 8 ரூபாய் .  எங்கள் கல்லூரி மாணவர்களுக்கும், தினமும் அந்தப் பேருந்தில் செல்லும் இன்னும் சிலருக்கும் மட்டும் 7 ரூபாய்தான் கட்டணம். இதையும் பல நாள் எடுக்கமாட்டோம் அது வேற விஷயம். 

அந்தப் பேருந்து எங்கள் சொந்த வாகனம் மாதிரிதான். கடைசியா இருக்கும் நான்கு சீட்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது (ரிசர்வேர்சன்). வேறு யாரும் அதில் உட்கார முடியாது. அதே சமயத்தில் ரொம்பக் கூட்டம் இருந்த, பொதுமக்களுக்கு விட்டுக் கொடுத்துவிடுவோம். இது எங்களின் வழக்கம். அதே சமயம், மற்றக் கல்லூரி மாணவர்களுக்கு இந்தச் சலுகைக் கட்டணம் இல்லை. அந்தப் பேருந்து கிட்டத் தட்ட எங்கள் கல்லூரியின் அதிகாரப்பூர்வமற்ற கல்லூரிப் பேருந்து என்றே சொல்லலாம். 

பிப்ரவரி 14 தான் எங்கள் பேருந்து தினம்.(காரணம் என்கிட்டக் கேட்கக்கூடாது .எங்களுக்கு முன்னாடி இருந்து அந்த நாள்தான்).  ரெகுலரா அந்தப் பேருந்தில் வரவங்க எல்லோரும் செலவைப் பகிர்ந்துப்போம். அன்னிக்கு எங்களுக்கு டிக்கெட்டும் கிடையாது . 

காலையில் பஸ்சின் முதல் ட்ரிப் எங்கள் காலேஜ் டைமுக்குதான். காலை ஆறு மணிக்கே பஸ்ஸை அலங்காரம் பண்ண ஸ்டார்ட் பண்ணிடுவோம். பஸ்சின் முன்பக்கம் இரண்டு ஆளுயர மாலைகள் தொங்கும். உள்பக்கம் சைட்ல முழுக்க ரோஜா ஒட்டப் படும். முன்பக்கக் கண்ணாடியின் ஒரு சைட்ல ரோஜாவால் இதயச் சின்னம் உருவாக்கிடுவாங்க.(காதலர் தினம் அன்னிக்குதானே). 

பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் ஆளுக்கு ஒரு  டிரஸ் ,கூடவே எதோ ஒரு பரிசு கண்டிப்பா உண்டு. அவங்களுக்கு பயன்படற மாதிரிதான் அந்த பரிசு இருக்கும். ரெகுலர் மக்களுக்கு ஸ்வீட் கண்டிப்பா உண்டு.  எங்களோட ஆட்டம் பாட்டம் எல்லாம் பேருந்துக்கு உள்ள தான் இருக்கும் . பொதுமக்களுக்கு பிரச்சனை வர மாதிரி எதுவும் பண்ணமாட்டோம். மத்தவங்களுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாதுங்கற காரணத்தினால் யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க. 

ஆனால் இன்னிக்கு சென்னைல நடக்கற பிரச்சனைகளினால் பஸ் டே அப்படிங்கற வார்த்தை காதில் விழுந்தாலே எல்லோரும் முகம் சுளிக்கற மாதிரி ஆகுது. மத்தவங்களுக்கு பிரச்சனை தராமல் தங்கள் கொண்டாட்டங்களை நடத்த எப்ப கற்றுக் கொள்வார்களோ ???


பிப்ரவரி 21, 2011

நினைவுகள் 13

காதலிப்பவர்களுக்கு எல்லாம் இன்பமாகத் தோன்றும். காதல் தோற்றால் வரும் சோகத்தை ஈடுகட்டுவது போல் காதலிக்கும் சமயத்தில் எதிலும் மகிழ்ச்சியையும் ,இன்பத்தையும் மட்டுமே காண்பர். இந்தக் கூற்றை மெய்பிப்பது போல் சாருவின் கண்களுக்கும் எல்லாம் நன்றாகவேத் தோன்றியது .

ஜூலை மாதத்திலும் சூரியன் தன் ஆட்சியைக் குறைக்க விரும்பாமல் தொடர்ந்து சர்வாதிகாரம் செய்துக் கொண்டிருக்க , மதிய நேரம் மைதானத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தவளுக்கு வெய்யில் ஒரு பொருட்டாய் தோன்றவில்லை. அவளது மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருக்க அதன் விளைவாய் நடையில் ஒரு வேகம் இருந்தாலும், அவனிடம் அதிகம் பேச முடியவில்லையே என்ற எண்ணம் அவளது வேகத்தை குறைக்க , நிதானமாய் நடக்கத் துவங்கினாள். அவள் கேண்டீனை அடைவதற்கும், அவள் தோழிகள் வகுப்பிலிருந்து அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

லைப்ரரி பக்கம் இருந்து இவள் வந்ததை கவனித்த இவள் தோழி , 

"எங்க போன ? கிளாஸ்ல ரொம்ப நேரமா இல்லை நீ ?"

"தலை வலிச்சது சரி கொஞ்சம் நேரம் ப்ரீயா இருக்கலாம்னு லைப்ரரி போயிட்டு வந்தேன் ".

"சரி வா சாப்பிடலாம் " என்று சாதரணமாய் சொன்னாலும், சரஸ்வதி கவனிக்காத பொழுது தன் மற்றத் தோழிகளைப் பார்த்து கண் சிமிட்ட, அவர்கள் அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டனர். அவர்கள் நினைத்தது சரிதான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் தொலைவில் வெங்கட் வந்துக் கொண்டிருந்தான். வந்தவன் கேண்டீன் பக்கம் வராமல், வெளியே செல்லும் பாதை நோக்கி சென்றான். 

கேண்டீனின் உள்ளே சென்றுவிட்டாலும், அவள் பார்வையும் மனமும் வெளியேதான் இருந்தது. மதிய உணவைக் கொறித்துக் கொண்டே வெளியேப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் அவன் வெளியில் செல்லுவது தென்பட்டது. அவன் எங்கு எதற்கு செல்கிறான் என்று அவளுக்கு ஏற்கனவேத் தெரியும். முதலில் இதை நிறுத்த வைக்கணும் என்று மனதில் சொல்லிக் கொண்டாள்.

பெண்கள் காதல் கொண்டாலே உடனடியாய் செய்வது காதலனின் பழக்கவழக்கங்களை மாற்றுவதுதான். சரஸ்வதியும் விதிவிலக்கில்லை அதற்கு. மாலையில் பேருந்தில் , அவன் பேசுவதைக் கேட்டு கொண்டு மௌனமாய் நின்றுக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்தால் கோபம் போய் விடுமென வேறு பக்கம் பார்த்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தாள். 

அவள் கோபத்துடன் இருப்பதுத் தெரியாமல், பேருந்தில் இருப்பதால், வேறு பக்கம் பார்க்கிறாளோ என்று நினைத்த வெங்கட், கொஞ்சம் நகர்ந்து அவள் பார்க்கும் வண்ணம் நின்றான். அவன் அங்கு சென்றவுடன் இவள் பார்வை வேறு பக்கம் திரும்ப, அப்பொழுதான் அவனுக்கு உரைத்தது எதோ தவறு என்று ஆனால் என்னத் தவறு என்றுப் புரியவில்லை அவனுக்கு. 

"என்ன ஆச்சு ? எதுக்கு இப்ப இந்தக் கோபம் ?"

"ஒன்னும் ஆகலை. "

"இல்லை எதோ விஷயம் இருக்கு . சொல்லு "

"உதட்டை பாரு . கறுத்துப் போய் கன்றாவியா இருக்கு . பாக்கவே சகிக்கலை ."

"இதுதான் விஷயமா ? " மெலிதாய் விஷமப் புன்னகைப் பூத்தது அவன் உதடுகளில் . புன்னகை அவள் கோபத்தை இன்னும் அதிகரிக்கவே செய்தது. 

இம்முறை அவள் பார்த்த பார்வைக்கு சக்தி இருந்தால் வெங்கட் அங்கேயே பஸ்மம் ஆகி இருப்பான். சுட்டெரிப்பது போல் பார்த்தாலும், அந்த விழிகளின் அழகு அவனை மயக்கியது. அவனது மயக்கம் அவனது விழிகளில் வெளிப்படத் தெரிந்தது .

"இனி நீ சிகரெட்டைத் தொடக் கூடாது "

"இப்ப அது என்ன பண்ணது உன்னை ? உன்னை ஒரு வாரமாத் தான் தெரியும். ஆனா இதை ஒரு வருசமாத்தான் தெரியும் ."

"புத்திசாலித்தனமா பேசறதா நினைப்பா ? பதினேழு பதினெட்டு வருஷம் அது இல்லாமதான வளர்ந்த . அது இல்லாமல் இருக்க முடியாதுன்னு வழக்கமா விடற டயலாக்லாம் விடாத. இனி உன்னை சிகரெட்டோட பார்த்தேன் ..."

"என்ன என் கிட்ட பேச மாட்டியா ?"

"இல்லை உன் விரலை வெட்டிடுவேன் ."

ஒரு கணம் அவளது பதிலால் அதிர்ந்தான். ஒரு வேளை வேடிக்கையாய் சொல்கிறாளோ என்று அவள் முகத்தைப் பார்த்தான். அதில் தெரிந்த உறுதியும் இன்னும் குறையாத கோபமும் அவள் செய்தாலும் செய்வாள் என்று சொல்லாமல் சொல்லியது .

"சரி சரி விடறேன். ஆனால் உடனே முடியாது. கொஞ்சம் கொஞ்சமாய் விட்டுடுவேன். "

"பாக்கறேன். நான் விளையாட்டுக்கு சொல்லலை . நெஜமா செஞ்சிடுவேன். மறந்திராத . சரி பஸ் ஸ்டேன்ட் வரப் போது நான் முன்னாடி போறேன். "

போகும் முன், காதல் துவங்கிய அன்றே அவனிடம் அதிகமாய் கோபித்துக் கொண்டோமோ என்றுத் தோன்ற, அவன் கைவிரல்களுடன் தன் விரல்களைக் கோர்த்து அவன் கையை ஒரு முறை அழுத்தமாய் பிடித்து விட்டு, கண்களால் விடை பெற்று சென்றாள். 


அவள் முன்பக்கமாய் இறங்க , பேருந்தின் பின் பக்கம் இறங்கியவன், அவள் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றான். மனதினுள் எல்லாப் பெண்களும் இப்படிதானா , காலையில் காதலை சொன்னவள் மாலையில் உரிமை எடுத்துக் கொண்டு சண்டை இடுகிறாளே? என்று வியந்தான். 

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் நடையினில் ஒரு கணம் தன்னை மறந்தான். அவள் பஸ் ஸ்டேண்டை விட்டு வெளியில் சென்றவுடன், இவன் கால்கள் அனிச்சையாய் டீக்கடையை நோக்கி சென்றன. 

வழக்கம்போல ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தவன் , அவள் சொல்லிய விஷயத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். உள்ளே இழுத்த நிகோடின் அவன் நுரையீரலை நிரப்பி வெளியே வர அவன் தீவிர யோசனையில் இருந்தான். பின் எதோ முடிவுக்கு வந்தவனாய் கீழே போட்டு அதன் ஆயுளை முடித்தவன் , தன் அறை நோக்கி நடக்கத் துவங்கினான். நினைவுகள் தொடரும் 


பிப்ரவரி 20, 2011

ஜகத்குரு 14-சனந்தர்


"காசில மாற்றுக் கொள்கை உடையவர்கள் கிட்ட விவாதம் பண்ணத் துவங்கினார். விவாதத்தில் தோற்று அத்வைத சித்தாந்தாமே சரின்னு நெறயப் பேரு ஆதிசங்கரர் கிட்டே சீடரா சேர்ந்தா."

"அது எப்படி மாமா? தோல்வியை எப்படி ஒத்துப்பா ? அந்த மாதிரி நான் எங்கயும் பார்த்தது இல்லையே ?"

"நீ இந்த காலத்தை மனசுல வச்சிண்டு பேசற. அந்தக் காலத்தில் யாராவது இந்த மாதிரி விவாதம் பண்ணினா, விவாதத்தில் தோற்பவர்கள் , ஜெயிச்சவாளோட கொள்கையை ஒத்துக்கிட்டு அவங்கக் கூட சேர்ந்துப்பா. அதே சமயத்தில் இன்னிக்கு விவாதம் பண்றவங்க மாதிரி விதண்டாவாதம் இருக்காது. கொள்கைகள் மட்டும்தான் பெரும்பாலும் மோதும். ஒரு சில விதிவிலக்கு இருக்கு. இருந்தாலும் பொதுவா விவாதம் நேர்மையா இருக்கும். "


"இந்த மாதிரி நெறையப் பேர் அவர்கிட்ட விவாதம் பண்ணி தோற்று அத்வைத மார்க்கத்தை பின்பற்றத் துவங்கினர். காசியில் இருக்கறப்ப நெறைய சீடர்களும் அவரிடம் வந்து சேரத் துவங்கினர்.

அவருடைய சீடர்களில் முக்கியமானவர் சனந்தர்.எல்லோரையும் சோதித்தப் பிறகே சேர்த்துக் கொண்ட சங்கரர் , இவரை எந்த வித சோதனையும் செய்யவில்லை. உடனே சேர்த்துக் கொண்டார். அதுவும் இல்லாமல் அதிக முக்கியத்துவமும் தர ஆரம்பித்தார்.

என்னதான் குரு உத்தமராய் இருந்தாலும், சீடர்களில் ஒருவர் இருவர் , கொஞ்சம் முன்ன பின்னதான் இருப்பா. அதுமாதிரி புதுசா வந்த சனந்தருக்கு முக்கியத்துவம் தராது ,ஏற்கனவே இருந்தவாளுக்கு பிடிக்கலை.


ஞான மார்க்கம் தெரிந்துகொள்ள சீடர்களாய் சேர்ந்து இருந்தாலும், அ வர்கள் மனதிலும் இத்தகைய பொறாமை என்னும் விஷம் இருந்தது.சங்கரரும் இதைப் பற்றி அறிந்தார். கோபத்திற்கு பதில், மக்கள் இன்னும் இத்தகைய மூட நிலையிலேயே இருக்கின்றனரே என்று வருத்தம்தான் அவருக்கு.


அவர்களுக்கு சனந்தரின் மகிமையையும் குரு பக்தியையும் காண்பிக்க எண்ணினார்.

ஒருநாள், கங்கையின் ஒரு கரையில் அமர்ந்து ஜபம் செய்துக் கொண்டிருந்தார் சங்கரர். சனந்தர் மறுக்கரையில் எதோ வேலையாக இருந்தார். ஜபத்தை முடித்து எழுந்தவருக்கு ஈர வேட்டி உறுத்தியது. எதிர்க்கரையில் இருந்த சனந்தரை நோக்கி மடிவேட்டி எடுத்து வர சைகை செய்தார்.

சனந்தரும் வேட்டியை எடுத்துக்கொண்டு கங்கைக் கரைக்கு வந்து நிற்கிறார். கங்கையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. எப்படி அங்கு போவது என்று ஒரு கணம் தயங்குகிறார். எதிர் கரையில் இருந்து சங்கரர் மீண்டும் சைகை செய்கிறார். அவ்வளவுதான் சனந்தருக்கு தயக்கம் போய்விட்டது. குருவுக்கு மாற்று வேட்டி கொடுக்கவேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் மனதில்.

கங்கையின் நீர் பிரவாகத்தில் கால் வைக்கிறார். அவர் கால் வைக்கும் இடம் எல்லாம் தாமரை பூத்து அவரை தாங்கிக் கொள்கிறது. அவருக்கு இது எதுவும் தெரியாது, அவரது எண்ணம் பார்வை எல்லாம் எதிர் கரையில் இருக்கும் குரு மேலேதான் இருக்கு.

எதிர்க்கரையை அடைந்தவுடன் சங்கரர் கேட்கிறார் "எப்படி நீர் பிரவாகத்தை தாண்டி வந்த ,சனந்தா ?"

சனந்தர் அதற்கு "குருவின் துணை இருப்பின், சம்சார சாகரத்தையே தாண்ட முடியும், இதில் இந்த கங்கை எம்மாத்திரம் ?

இல்லை சனந்தா , கொஞ்சம் திரும்பிப் பார் என்று சொன்னார் சங்கரர்.

திரும்பிப் பார்த்த சனந்தருக்கு அப்பொழுதுதான் தாமரைகள் புலனாகின்றன.

உடனடியாக சங்கரரை நமஸ்கரித்து "இதுவும் குருவாகிய உமது அருள்தான்.என்னுடைய திறன் எதுவும் இல்லை " என்றார் அடக்கமாய்.

இதைப் பார்த்த மற்ற சீடர்கள் சனந்தரின் அருமையை உணர்ந்தனர். பத்மம் தாங்கியப் பாதங்களை உடையவர் ஆதலால் "பத்மபாதர்" என்று அழைக்கத் துவங்கினர்.

- தொடரும்
அன்புடன் எல்கே

பிப்ரவரி 17, 2011

நினைவுகள் 12

சாருவை அங்குக் கண்ட வெங்கட் , வெகு நாள் தேடிக் கிடைக்காத பொருள் கிடைத்தது போல் மகிழ்ந்தான். அது அவன் முகத்தில் வெளிப்படையாய் தெரிந்தது. சில நொடிகளே இருந்த அந்தப் புன்னகையை விடுத்து முகத்தை சாதாரணமாய் மாற்றிக் கொண்டான். அவள் எதாவது நினைப்பாளோ என்ற எண்ணமே அதற்குக் காரணம்.

"சொல்லு சாரு . எதாவது புத்தகம் எடுக்க வந்தியா ?"

தான் எதற்கு வந்திருக்கிறோம் என்று தெரிந்து விளையாடுகிறானா இல்லை உண்மையிலேயே எதுவும் தெரியாமல் கேட்கிறானா என்று சில நொடிகள் குழம்பினாள் .

அவளிடம் கேள்வியைக் கேட்டுவிட்டு அவளை உற்றுப் பார்த்தான். அப்படிப் பார்ப்பது சரியில்லை எனத் தெரிந்தாலும் ,அவனால் பார்வையை விலக்க இயலவில்லை. அவள் முகத்தில் காதலின் அடையாளம் தெரிகின்றதா என்றுப் பார்த்தான். மையிட்டு கருத்த விழிகளில் குழப்பமே இருந்ததுக் கண்டு சோர்வுற்றான்.

"இல்லை ...." அவள் குரலில் சிறிய நடுக்கம் தோன்ற, வாக்கியத்தை முடிக்காமல் இழுத்தாள்.

"அப்ப, வேற என்ன விஷயம் ?"

"உங்கக் கிட்ட கொஞ்சம் பேசணும்."

"என்ன பேசணும் ?". கேட்டவன் , திடீரென்று எதோ நினைத்தவன் போல் ,

" சரி .வா . கேண்டீன் இல்லாட்டி பேஸ்கட்பால் கோர்ட்டுக்கு போய்டலாம். "

"கேண்டீன் வேண்டாம் ."

"ஏன் ?"

"அங்க உங்க பிரெண்ட்ஸ் இருக்காங்க. அங்க போய்ட்டுதான் இங்க வந்தேன்".

"ஓ ! சரி வா பேஸ்கட் பால் கோர்ட்டுக்கு போகலாம்."


கல்லூரிக் கட்டிடங்களில் இருந்து விலகி இடது புறம் தனியாய் இருந்தது பேஸ்கட்பால் கோர்ட். ஒருபக்கம் , ஆட்டத்தைப் பார்ப்பவர்கள் அமர வசதியாய் படிக்கட்டுகள் போல் சிமெண்டில் போடப்பட்டிருந்த இடத்தை நோக்கி நடந்துக் கொண்டிருந்தனர்.

வெங்கட் முன்னே வேகமாய் நடந்து சென்றுவிட, அவன் பின்னே , நிதானமாய் நடந்து சென்றாள் அவள். அவளின் நடை வேகத்திற்கு ,அவளது சிந்தனை இடையூறாய் இருந்தது. அவனிடம் பேசவேண்டும் என்று சொல்லிவிட்டாளேத் தவிர , எப்படி பேசுவது என்று சிந்திக்கவில்லை. எதுவும் பேசாமல் திரும்பி விடுவோமா என்று ஒரு கணம் நினைத்தாள். பின் அப்படி செய்வது நன்றாக இராது என்று நினைத்து வேகமாய் நடக்கத் துவங்கினாள்.

அவன் அமர்ந்து இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகே சாரு அங்கு வந்தாள். வந்தவள் அங்கு உட்காராமல் , நின்று கொண்டே இருக்க,

"ஏன் நிக்கற ? உட்காரு " அருகில் இருந்த இடத்தைக் காண்பித்த வெங்கட் தன் வலப்புறம் விலகி அமர்ந்தான்.

அவன் காண்பித்த இடத்தில் அமர்ந்தவள் , எதுவும் பேசாமல் கையில் இருந்த கைகுட்டையில் முடி போட்டுக் கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் அமைதியாய் இருந்த வெங்கட், பின் பொறுமை இழந்தவனாய்

"பேசணும்னு சொல்லிட்டு இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?"

எப்படி பேசுவது என்ற சிந்தனையில் மூழ்கி இருந்த சாருவை அவன் குரல் இவ்வுலகுக்கு இழுத்தது.

"பேசணும் ஆனால் எப்படி ஆரம்பிக்கறது என்றுதான் தெரியலை."

"அப்படி என்ன விஷயம் ?"

"இல்லை... அன்னிக்கு பஸ் ஸ்டாப்ல உங்களைப் பார்த்தப்ப இருந்து மனசு சரி இல்லை . "

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்றுப் புரிந்தாலும் , வேண்டும் என்றே அவளை சீண்ட எண்ணி

"அப்ப சீக்கிரம் ஒரு டாக்டரை பார்க்க வேண்டித்தானே ?. என்கிட்டே ஏன் அதுக்கு பேசணும் ?"

என்று சிரிக்காமல் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு சொல்ல , தான் சீரியசாய் ஒரு விஷயம் பேசவந்தால் அதைப் பற்றி பேசாமல், ஜோக் அடிக்கும் வெங்கட்டின் மேல் சினம் கொண்டவளாய் , அவனை எரிப்பது போல் முறைக்க

"சரி சரி . ரிலாக்ஸ் ரிலாக்ஸ் . டென்சன் ஆகாத. நீ என்ன சொல்ல வரேன்னு எனக்குப் புரியுது ."

கொஞ்சம் வேடிக்கையை விட்டுட்டு சீரியஸா பேசறேன். நீ நினைக்கற அந்த உணர்வுகள் எனக்கும் இருக்கு . ஆனால் நாம பார்த்துப் பேசி ஒரு நாலு நாள் கூட ஆகலை. அதுக்குள்ள காதல் என்பது கொஞ்சம் ஓவரா இருக்கு . இருந்தாலும் இது வரைக்கும் நான் பார்த்தப் பழகின எந்த பெண் கிட்டயும் வராத உணர்வு இது.

நமக்குன்னு சில கடமைகள் இருக்கு. ஒழுங்கா படிக்கணும். பிறகு ஒரு வேலை வேணும். இதெல்லாம் நடக்கற வரைக்கும் பொறுமையாதான் இருக்கணும்.

அவன் பேச பேச , சாருவின் கண்களின் ஓரங்களில் கண்ணீர்க் கரைத் தட்டியது போல் சேரத் துவங்கியது.

அவளின் முகம் பார்க்காமல் பேசிக் கொண்டிருந்தவன் , அவள் பக்கம் திரும்பியபொழுது அவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீரைப் பார்த்தவன், தன்னிச்சையாய் கை நீட்டி அவற்றை துடைத்து விட்டான்.

அவனின் அந்த செயல், அவன் மனதை சொல்லாமல் சொல்லியது போல் உணர்ந்தாள். அதன் பிறகும் பேசாமல் அமர்ந்திருந்தவளிடம் "ஏன் இப்ப என்னாச்சு ? இப்ப எதுக்கு வாய்க்கு பூட்டு போட்ட மாதிரி உட்கார்ந்திருக்க ??"

"என்னாதான் இருந்தாலும், உங்கள் வாயால் சொல்வது போல இல்லை ."

அவன் வார்த்தைகளில் அவன் மனம் வர வேண்டும் என்று உணர்த்தினாள். பல சமயங்களில் ஆண்களுக்கு அது புரிவதில்லை . வெளிப்படையாய் சில நேரங்களில் இருக்க அவர்களுக்குத் தெரிவதில்லை.

"இப்படி ஒரு ஆசையா ? நானும் உன்னை விரும்பறேன். போதுமா ? கொஞ்சம் சிரிச்சாதான் என்னவாம் ?"

அவன் வார்த்தைகளைத் தொடர்ந்து , அவள் முகத்தில் புன்னகை பூக்கத் துவங்கியது.

"சரி. நீ முதலில் கிளம்பு. வேற யாராவது பார்த்தால் பிரச்சனை. காலேஜ் முடிஞ்சப் பிறகு பஸ்ல பார்க்கலாம் "

அவனுடன் இன்னும் சிறிது நேரம் இருக்க விரும்பினாலும், அவன் சொல்வது சரியெனப் பட்டதால் , மெதுவாகக் கிளம்பினாள்.


-நினைவுகள் தொடரும்

அன்புடன் எல்கே

விளம்பரம்


 இன்று பலவித துணிகளில் விதம் விதமாய் பெண்களுக்கான ஆடைகள் வந்துவிட்டன. என்னதான் வித விதமான துணிகளில் நெய்யப்பட்டாலும் , காதிக்கு இன்னும் செல்வாக்கு உண்டு. 

எனக்கு ஆர்க்குட் மூலம் பழக்கமான பல நபர்களில் பூஷாவளியும்  ஒருவர். இரண்டுவருடப் பழக்கம். இவர் தனது வலைப்பூ மூலம், தான் வடிவமைத்த சுடிதார் டாப்ஸ், சல்வார் ,ஸ்கர்ட் போன்றவைகளை விற்கிறார். இவர் இயற்கை சாயங்களை மட்டுமே உபயோகிக்கிறார் என்பது மற்றொரு சிறப்பு. 

இந்தியாவில் இருப்பவர்களுக்கு கூரியரில் அனுப்பும் செலவு இலவசம். நீங்கள் வாங்க விரும்பினால் செல்ல வேண்டிய தளம் பூஷாவளி.


 


பிப்ரவரி 15, 2011

பொது புத்தி

சமீபத்தில் இரண்டு மாணவிகளின் தற்கொலை, மீடியாவிலும் பதிவுலகத்திலும் அதிகம் விமர்சிக்கப் பட்ட ஒன்று. அதில் இரண்டாவது நிகழ்வை மட்டும் கொஞ்சம் அலசுவோம்.

தேர்வில் காப்பி அடிக்கிறார் மாணவி. அதைக் கண்டித்தார் ஆசிரியர். உடனே மாணவி தற்கொலை செய்துக் கொள்கிறார். உடனே பரபரப்புக்கு அலையும் மீடியாக்கள் ஆசிரியரை கண்டிக்க தொடங்கி விட்டன. நம் பதிவர்களும் ஆசிரியர் செய்தது மாபெரும் தவறு என்ற ரீதியில் பதிவெழுதி தள்ளி விட்டனர்.

இதையெல்லாம் படிக்கும் பொழுது சமீபத்தில் படித்த கேபிள் சங்கரின் "பொது புத்தி " சிறுகதைதான் நினைவிற்கு வருகிறது. அதில் அழகாய் விவரித்து இருப்பர். ஒரு விபத்து நடக்கிறது . வண்டியை ஒட்டியவன் எந்தத் தவறும் செய்யவில்லை ,வண்டியை ஒட்டியதை தவிர. ஆனால் அங்கிருக்கும் அனைவரும் அவனை அடித்து உதைப்பர், அந்த விபத்தில் சிக்கியப் பெண் நடந்ததை சொல்லும் வரை.

அதுதானே இங்கும் நடக்கிறது. என்ன இங்கு அந்தப் பெண் வந்து விளக்கம் சொல்ல இயலாது. அந்தப் பெண்ணின் தாயார் ஆசிரியரை தண்டிக்க வேண்டும் என்கிறார்.

அவருடைய மகள் செய்த தவறை யாரவது கண்டிக்கிறார்களா ? தேர்வில் காப்பி அடிப்பது சரி என்ற மனநிலைக்கு நாம் மாறி விட்டோமா ?? குறைந்த பட்ச ஒழுக்கங்கள் நம் குழந்தைகளுக்கு சொல்லி தருகிறோமா ?? எப்படியாவது முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் நம் பிள்ளைகள் , அதைதானே நாம் விரும்புகிறோம்.

நம் பிள்ளைகளிடம் அன்றாடம் பேசுகிறோமா ? பள்ளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்கிறோமா ? அம்மா,அப்பா இருவரும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறோம் . பிள்ளைகளின் வளமான எதிர்காலத்திற்குதான் இதை செய்கிறோம் என்றாலும், நிகழ்காலத்திலும் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

இப்பொழுது அழுது புலம்பும் தாய், அந்தப் பெண்ணிடம் அன்றாடம் பேசி இருந்தால், பள்ளியில் நடந்ததை தெரிந்து கொண்டிருந்தால் இந்தத் தற்கொலை நிகழ்ந்து இருக்காது. பெரிய பள்ளியில் சேர்ப்பதும், காலாண்டுக்கு ஒருமுறை பெற்றோர் மீட்டிங்கில் சென்றுக் கலந்து கொள்வது மட்டுமே உங்கள் பணி அல்ல .


தினமும் மாலையில் உங்கள் பிள்ளைகளுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். அன்றுப் பள்ளியில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள். இது பல விதங்களில் பின் உதவும். இதை பழக்கி விட்டால் உங்களை நண்பராகத்தான் அவர்கள் பார்ப்பார்கள், பெற்றோர்களாக அல்ல. இப்படி செய்தால் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் எதையும் மறைக்கவும் மாட்டார்கள் .

அந்த ஆசிரியர் இப்பொழுது மாற்றப்பட்டு இருக்கிறார் . இதன் மூலம் மற்ற ஆசரியர்களுக்கு சொல்லப்படும் செய்தி என்ன ?? யார் காப்பி அடித்தாலும் கண்டுகொள்ளாதே . உன் கடமையை செய்தால் நீ தண்டிக்கப் படுவாய் என்பது தானே . இனி ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை சரியாக செய்வார்களா ??

அன்புடன் எல்கே

பிப்ரவரி 14, 2011

நினைவுகள் 11

தன்னைப் பின்தொடர்ந்து அவன் வருகிறான் என்பதை அறிந்துக் கொண்டு தன் நடையின் வேகத்தைக் குறைத்து ,பாதங்கள் நோகுமோ இல்லை செருப்புதான் நோகுமோ என்று அன்ன நடை நடக்கலானாள். அவள் வேகத்தை குறைத்தவுடன், தனது வேகத்தை அதிகரித்து அவளை எட்டிப் பிடித்தவன், "அன்னிக்கு பசங்க அப்படி பண்ணி இருக்கக் கூடாது . அதுக்கு அவங்க சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் . இதை பெருசு பண்ண வேண்டாம் அப்படியே விட்டுடு" என்று அன்று நடந்த சம்பவத்தை துணைக்குக் கொண்டுவந்து பேச்சைத் துவங்கினான்,

ஒரு கணம் தனது நடையை நிறுத்தியவள் , அவனிடம் துடுக்காய் " அப்படி சொல்லாம இருந்தால் என்ன தருவீங்க ?" என்று வினவ,

"உன் இஷ்டம் எதுவேண்டுமானாலும். கேளு."

"சரி நான் எனக்குத் தோணும் பொழுது கேட்டு வாங்கிக்கறேன். "

" இது வரைக்கும் உங்க பேர் தெரியாது ? உங்க பேர் என்ன ? "

"வெங்கட் ராம். சுருக்கமா வெங்கட் ."

"ஹ்ம்ம் சரி. ஈவ்னிங் பார்க்கலாம்ங்க. "

புன்னகையோடு அவனிடம் இருந்து விடை பெற்று சென்றாள். அவனிடம் இன்னும் சிறிது நேரம் பேச வேண்டும் என்று விரும்பினாலும், பார்ப்பவர்கள் தப்பாக எண்ணுவார்களோ என்ற எண்ணம் அவளை சீக்கிரம் செல்லத் தூண்டியது. அவனிடம் பேசியது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்க , அவள் முகம் புன்னகையில் மின்ன வகுப்பறையை அடைந்தாள்.

வகுப்பில் பாடங்களில் ஒன்ற மனம் மறுக்க, தன்னையே நொந்துக் கொண்டிருந்தாள். அவன் உதவியது சாதாரண நிகழ்ச்சிதானே அதற்கு ஏன் நான் இப்படி நினைக்கிறேன் என்று அவளின் மனதின் ஒரு புறம் அவளிடம் சண்டைப் போட, அவள் வயதோ அதற்கு வேறு விடை அளித்தது. பலரும் ராகிங் செய்யப் பட்டாலும் தன்னை மட்டும் அவன் ஏன் காப்பாற்ற வேண்டும். தன் மேல் எதோ விருப்பம் இருப்பதனால்தானே அவன் அவ்வாறு செய்தான் என்று நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தது.

இவள் இங்கே தன் மனதுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருந்த அந்நேரம், அங்கே, வெங்கட்டின் நண்பர்கள் அவனை கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.

"என்னடா! ஒரே நாளில் இப்படி ஆய்ட்ட? " காலையில் இருந்து மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி சுத்திகிட்டு இருக்க?

"இல்லடா மச்சி. அவ பார்வையில் எதோ இருக்குடா . அந்தக் கண்ணை பார்த்தியா ? ஆளை ஊடுருவிப் பார்க்குது அது . கண்ணாடா அது ??"

ஏற்கனவே அவனை கிண்டலடித்துக் கொண்டிருந்தவர்கள் , அவனை மேலும்
வெறுப்பேற்ற அவர்களிடம் இருந்து தப்பினால் போதும் என்று அங்கிருந்து ஓட்டம் எடுத்தான் வெங்கட்.

லைப்ரரி சென்று தனிமையில் அமர்ந்தவன் அவளைப் பற்றி சிந்திக்கத் துவங்கினான். கடந்த ஒரு வருடத்தில் பலப் பெண்களை அவன் கல்லூரியில் கண்டுப் பழகியிருந்தாலும் தன் மனம் ஏன் சாருவை வட்டமிடுகிறது என்று அவனுக்குப் புரியவில்லை. பார்த்தவுடன் காதல் கொள்ளும் தன் நண்பர்களைக் கிண்டலடிக்கும் அவனுக்கு இது புதிதாய் இருந்தது. ஒருவேளை இதுதான் காதலோ என்றுக் குழம்ப ஆரம்பித்தான்.

ஒருவேளைக் காதல் என்றாலே குழப்பம்தானோ என்று நினைத்துக் கொண்டு கையில் இருந்த புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த பொழுது ,

"வெங்கட் .." என்று யாரோ அழைக்கும் சப்தம் உலகிற்கு இழுத்தது. புத்தகத்தில் இருந்து அசுவாரசியமாய் தன் பார்வையைத் திருப்பியவன் சாரு நிற்பதுக் கண்டு நொடியில் முகம் மலர்ந்தான்.

இதுநாள் வரை இப்படி குழப்பம் எதுவும் சந்தித்திராத சாரு , நேரடியாய் அவனிடம் பேசுவது என்றும், தேவை இல்லாமல் குழப்பங்கள் பிரச்சனையில்தான் சென்று விடும் என்று முடிவெடுத்து அவனை தேடிக் கொண்டு கேண்டீன் சென்றவள் , அவன் லைப்ரரி பக்கம் செல்வதைப் பார்த்தாள். உடனடியாக பின் தொடர்வது சரியல்ல என்று எண்ணியவள் ,சிறிது நேரம் கழித்து லைப்ரரி வந்தாள்.


- நினைவுகள் தொடரும்

அன்புடன் எல்கே

பிப்ரவரி 13, 2011

ஜகத்குரு 13 - காசி

அந்த வியாஹரணத்தின் விரிவுரையை கற்றுக் கொள்ள சங்கரர் வந்து சேர்ந்தார் அவரிடம். சீடனாக செய்யவேண்டியவற்றை செய்து கோவிந்த பகவத் பாதரிடம் இருந்து கற்க வேண்டிய அனைத்தையும் கற்றுத் தெளிந்தார் சங்கரர்.

இனி அவர் கற்கவேண்டியது எதுவும் இல்லை என்ற நிலையில், அவருக்கு சந்நியாச தீட்சை அளித்தார் . மழிக்கப்பட்ட தலையுடன், கையில் தண்டம் ஏந்தி ,காவி உடைப் பூண்டு சிறுவயதில் சந்நியாசம் ஏற்றார் சங்கரர்.

"மாமா !அவர்தான் அம்மாக்கிட்ட இருந்து வரப்பவே துறவறம் வாங்கிட்டாரே !"

"சந்நியாச தீட்சை முறைப்படி ஒரு குருவால் வழங்கப்பட வேண்டும் . அவர் அவ்வாறு சந்நியாசம் வழங்கும் முன் , தனது சீடன் அதற்கு ஏற்றவனா என்பதை சோதிட்டுவிட்டுதான் சந்நியாச தீட்சை வழங்குவார் . எல்லோருக்கும் அது கிடைக்காது ."

துறவறம் வாங்கியப் பிறகு, சங்கரர் அங்கிருப்பதை கோவிந்தர் விரும்பவில்லை. அவர் வந்தக் காரியம் நடக்க வேண்டுமே. எனவே தனது அத்யந்த சீடரை வடக்கு நோக்கி காசி நகருக்கு செல்லப் பணிக்கிறார். குருவை வலம் வந்து வணங்கி காசி நோக்கிப் பயணிக்கிறார்.

குருவின் மேல் அளவற்ற மரியாதையும் பாசமும் கொண்டவர் சங்கரர். குருவின் மகிமையையும் ,குருவின் அவசியத்தையும் குறித்து அவர் எழுதியது குரு அஷ்டகம். அந்த குரு அஷ்டகம் இங்கே கீழே.

Sareeram suroopam thadha va kalathram,
Yasacharu chithram dhanam meru thulyam,
Gurorangri padme manaschenna lagnam,
Thatha kim Thatha Kim, Thatha kim Thatha kim. 1

Even if you have a pretty mien, a beautiful wife,
Great fame and mountain like money,
If your mind does not bow at the Teacher’s feet,
What is the use? What is the use? And What is the use?

Kalathram Dhanam puthrapothradhi sarvam,
Gruham Bandhavam Sarvamethadhi jatham,
Gurorangri padme manaschenna lagnam,
Thatha kim Thatha Kim, Thatha kim Thatha kim. 2

Even if you have a wife, wealth, children grand children.
House , relations and are born in a great family,
If your mind does not bow at the Teacher’s feet,
What is the use? What is the use? And What is the use?

Shadangadhi vedo Mukhe sasra vidhya ,
Kavithwadhi gadhyam , supadhyam karothi,
Gurorangri padme manaschenna lagnam,
Thatha kim Thatha Kim, Thatha kim Thatha kim. 3

Even if you are an expert in six angas and the four Vedas,
And an expert in writing good prose and poems,
If your mind does not bow at the Teacher’s feet,
What is the use? What is the use? And What is the use?

Videseshu manya, swadeseshu danya,
Sadachara vrutheshu matho na cha anya,
Gurorangri padme manaschenna lagnam,
Thatha kim Thatha Kim, Thatha kim Thatha kim. 4

Even if you are considered great abroad, rich in your own place,
And greatly regarded in virtues and life,
If your mind does not bow at the Teacher’s feet,
What is the use? What is the use? And What is the use?

Kshma mandale bhoopa bhoopala vrundai,
Sada sevitham yasya padaravindam,
Gurorangri padme manaschenna lagnam,
Thatha kim Thatha Kim, Thatha kim Thatha kim. 5

Even if you are a king of a great region,
And is served by kings and great kings,
If your mind does not bow at the Teacher’s feet,
What is the use? What is the use? And What is the use?

Yaso me gatham bikshu dana prathapa,
Jagadwathu sarvam kare yah prasdath,
Gurorangri padme manaschenna lagnam,
Thatha kim Thatha Kim, Thatha kim Thatha kim. 6

Even if your fame has spread all over,
And the entire world is with you because of charity and fame,
If your mind does not bow at the Teacher’s feet,
What is the use? What is the use? And What is the use?

Na Bhoge, na yoge, Na vaa vajirajou,
Na kantha sukhe naiva vitheshu chitham,
Gurorangri padme manaschenna lagnam,
Thatha kim Thatha Kim, Thatha kim Thatha kim. 7

Even if you do not concentrate your mind,
On passion, Yoga, fire sacrifice,
Or in the pleasure from the wife 
Or in the affairs of wealth,
If your mind does not bow at the Teacher’s feet,
What is the use? What is the use? And What is the use?

Anarghani rathnani mukthani samyak,
Samalingitha kamini yamineeshu,
Gurorangri padme manaschenna lagnam,
Thatha kim Thatha Kim, Thatha kim Thatha kim. 8

Even if you have priceless jewel collection,
Even if you have an embracing passionate wife,
If your mind does not bow at the Teacher’s feet,
What is the use? What is the use? And What is the use?

(Another version of Sloka no.8 :-
Aranye na vaa swasya gehe na karye,
Na dehe mano varthathemath vanarghye,
Gurorangri padme manaschenna lagnam,
Thatha kim Thatha Kim, Thatha kim Thatha kim. 8

Even if your mind stays away in the forest, 
Or in the house, Or In duties or in great thoughts
If your mind does not bow at the Teacher’s feet,
What is the use? What is the use? And What is the use? )

Phalasruthi:
Guror ashtakam ya padeth punya dehi,
Yathir bhoopathir , brahmacharee cha gehi,
Labeth vanchithartham padam brahma samgnam,
Guruor uktha vakye,mano yasya lagnam

Result of reading:
That blessed one who reads this octet to the teacher,
Be he a saint, king, bachelor or householder
If his mind gets attached to the words of the teacher,
He would get the great gift of attainment of Brahman.

(நன்றி http://www.celextel.org)

இதை ஒலிவடிவமாக கேட்கஅதே போன்றுதான் கோவிந்தனை குறித்து அவர் பாடிய "பஜ கோவிந்தந்திற்க்குக் கூட அவரது குருவின் நினைவாகத்தான் "பஜ கோவிந்தம் " என்று பெயரிட்டதாக சொல்வார்கள் .


குருவின் கட்டளைப் படி காசி வந்து சேர்ந்தார் சங்கரர். இன்று ஒரு சிறிய நகரமாய் இருக்கும் காசி பண்டைய நாளில் இந்தியாவின் மிக முக்கிய நகரை விளங்கியது . ஹிந்து மதத்தின் பல பிரிவினரும் வருகை புரிந்த இடம் அது. ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க விரும்பும் நகரம்.

தனது அத்வைத உபதேசங்களை காசியில் இருந்தே துவங்கினார் சங்கரர்.

-தொடரும்
அன்புடன் எல்கே

பிப்ரவரி 10, 2011

முடிவு

அன்றுக் காலையில் இருந்தே அவளது மனம் குழம்பிக் கொண்டிருந்தது. தான் செய்வது சரியா , தான் எடுத்த முடிவு சரியா என்றுப் புரியாமல் சில காலமாய் குழம்பிக் கொண்டிருந்தாலும், அன்று அவளின் குழப்பம் உச்ச கட்டத்தை எட்டியிருந்தது. அதைப் பற்றி யாரிடம் பேசுவது என்றும் புரியவில்லை அவளுக்கு. தான் எடுத்த முடிவு தன் அக்கம்பக்கத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகும் என்று தெரிந்தாலும் அதன் விளைவுகள் எத்தனை தூரம் இருக்கும் என்று அவளால் ஊகிக்க முடியவில்லை.

முதலில் எதோ ஒரு துணிச்சலுடன் ஒத்துக் கொண்டவள் , பின் அது சம்பந்தமான விஷயங்களைப் படித்தப் பின் குழப்பம் அடையத் துவங்கினாள். தான் செய்யவிருக்கும் செயலின் விளைவுகள் எத்தகையதாய் இருக்கும் ? யோசிக்க யோசிக்க அவளுக்கு குழப்பமே மிஞ்சியது .

குழப்பத்தில் என்ன சமைத்தோம்,என்ன சாபிட்டோம் என்றுக் கூடத் தெரியாமல் அமர்ந்து இருந்தவளை வாசலில் கதவு திறக்கும் ஓசை உலகுக்குத் திருப்பியது . அவளின் அடுத்த வீட்டுத் தோழி கமலா வீட்டிற்குள் அழுது வீங்கியக் கண்களுடன் நுழைந்தாள்.

"என்னக்கா ஆச்சு? "

"புதுசா என்ன ஆகப் போது? பொழுது விடிஞ்சு பொழுது போனா , வழக்கம்போல ஆரம்பிச்சுடுவாங்க எங்க வீட்ல . அதே பிரச்சனைதான் ."

"என்ன குழந்தை இல்லைன்னு மறுபடியும் பிரச்சனையா ? "

"அதேதான் கலா. நான் என்னடி பண்ண? குழந்தை பிறக்காதுன்னு சொல்லிட்டாங்க . தத்து எடுக்க நாங்க ரெடியா இருந்தாலும் என் மாமியாரும், மாமனாரும் தயாராய் இல்லை . வேறு ஏதாவது வழி இருக்கானும் எனக்குத் தெரியலை . தினம் தினம் நரகமாய் போகுது . ஏன்டா பிறந்தோம்னு தோணுது எனக்கு ."

கலா அங்கு குடிவந்தப் புதிதில் இருந்து அவளுக்கு பேச்சுத் துணைக்கும், உதவி செய்வதற்கும் தோழியாய் இருப்பது கமலாதான். கமலாவிற்கும் கலாவை விட்டால் வெறும் யாரும் இல்லை தன் வேதனைகளை சொல்ல. கலாவிடம் மனவிட்டு சிறிது நேரம் பேசினால் கமலாவிற்கு மனம் லேசாகும். எனவே வீட்டில் பிரச்சனைகள் வரும் பொழுது அவள் வீட்டிற்கு வந்து புலம்புவது வழக்கம்.

இன்றும் அதே போன்றுதான். கமலாவிற்கு கர்ப்பப் பையில் பிரச்சனை இருப்பதால் குழந்தை பிறக்க வாய்ப்பு மிகக் குறைவு என்றும், குழந்தை பெறுவது அவள் உடலுக்கு நல்லது அல்ல என்றும் டாக்டர் கூறி விட, பழமையில் ஊறிய அவளது மாமியாரும் மாமனாரும் தத்து எடுக்கவோ மற்ற முறைகளை உபயோகிக்கவோ விரும்பவில்லை.

அவளுக்கு ஆறுதலாய் வார்த்தைகள் கூறி அனுப்பியப் பின் கலாவின் மனது தெளிவடைந்து இருந்தது. குழந்தை இல்லாத தம்பதியருக்கு தன்னால் ஆன உதவியாய் அவர்கள் கருவை சுமக்க இருக்கும் வாடகைத் தாயாய் செல்வதை நினைத்து மகிழ்ச்சியே இருந்தது அவளிடம். தன்னால் கமலாவிற்கு உதவ இயலவில்லையே என்ற சிறு வருத்தம் மட்டும் உறுத்தியது .

சமூகம் என்ன சொல்லும் என்ற பயம் விலகி விட்டது அவளுக்கு . குழந்தை இல்லா ஒரு பெண்ணுக்கு தான் செய்யும் உதவிக்கு யார் என்ன சொன்னாலும் கவலைப் படத் தேவை இல்லை என்று முடிவு செய்தாள்.

இந்தக் கதை வல்லமை தளத்தில் வந்துள்ளது.


அன்புடன் எல்கே

பிப்ரவரி 09, 2011

விண்டோஸ் 7 தமிழில்

 வலைப்பூக்களில் தமிழில் எழுதும் படிக்கும் நமக்கு விண்டோஸ் இயங்குத் தளத்திலும் தமிழ் வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருப்போம். இப்பொழுது விண்டோஸ் 7 ,விஸ்டா மற்றும் எக்ஸ்பியில் அந்த வசதி வந்து விட்டது.


இதற்காக சிறிய தமிழ் இடைமுக தயாரிப்பு ஒன்றை மைக்ரோசாப்ட் இணையத் தளத்தில் இருந்து நீங்கள் தரவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவினால் போதும். 


விண்டோஸ் 7 உபயோகிப்பதாக இருந்தால் இங்கே சொடுக்கவும் 
விண்டோஸ் எக்ஸ்பி  உபயோகிப்பதாக இருந்தால் இங்கே சொடுக்கவும்.


வீட்டில் விண்டோஸ் 7 உபயோகிப்பதால் அதில் நிறுவும் ஸ்க்ரீன் ஷாட் மற்றும் அதை நிறுவியப் பின் எப்படி வருகிறது என்பதற்கான ஸ்க்ரீன்ஷாட் இணைத்துள்ளேன்.
இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் இரண்டு ஆப்ஷன்களையும் தேர்வு செய்தப் பின் உங்கள் கணினி ரீஸ்டார்ட் ஆகும். ரீஸ்டார்ட் ஆகி வந்தப் பின் வழக்கமான வெல்கம் ஸ்க்ரீனில் நல்வரவு என்று உங்களை தமிழன்னை வரவேற்பாள்.


சில ஸ்க்ரீன் ஷாட்கள்
தமிழில் இருந்து மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற விரும்பினால் , ஸ்டார்ட் மெனுவில் இருந்து கட்டுப்பாட்டு பலகம் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும். பின் வட்டாரம் மற்றும் மொழி என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள் . பின் கீழே உள்ள ஸ்க்ரீன் ஷாட்டில் உள்ளது போல் ஆப்ஷன்களை தேர்வு செய்யவும். 


மேலும் சில ஸ்க்ரீன் ஷாட்கள் 

உங்கள் மொழியை தமிழில் மாற்றியப் பிறகு நீங்கள் க்ரோம் உபயோகிப்பவராக இருந்தால், ஜி மெயில் , முகப் புத்தகம் போன்றவை ஓபன் செய்யும்பொழுது தமிழில் வருகிறது. 

விண்டோஸ் எக்ஸ்பியில் இதை நிறுவுவதற்கு முன் உங்கள் விண்டோஸ் ஒரிஜினலா போலியா என்று செக் செய்கிறார்கள். எனவே பைரேட்டேட் காப்பி வைத்து இருப்பவர்கள் இதை நிறுவ வேண்டாம். 

பி.கு : படங்களை பெரியதாகப் பார்க்க அவற்றை கிளிக் செய்யவும் 


அன்புடன் எல்கே

நினைவுகள் 10

பேருந்து நின்ற அந்த கணத்தில், ஓடிப் போய் ஏறிவிடலாமா என்று எண்ணிய வெங்கட், பின் தன் நண்பர்கள் செய்யும் கிண்டலைத் தாங்க முடியாது என்று அதைக் கை விட்டான். சிறிது நேரம் மனம் தேன் அருந்திய வண்டாய் அவளையே சுற்றிக் கொண்டிருந்தது. பின் நண்பர்களின் அரட்டையில் கலந்து அவளை மறந்தான்.

பேருந்தில் சென்ற சாருவோ அவனின் பார்வை அவளைத் தொடர்வதாய் எண்ணிக் கொண்டாள். பள்ளி செல்லும் பொழுதும் ஆண்களின் பார்வைக் கணைக்கு இலக்காகி இருந்தாலும் , இவனின் அந்த சில நொடிப் பார்வை அவளை ஊடுருவி இருந்தது. அவளின் வயதும் பருவமும் அவளை ஆட்டுவிக்க , அந்தப் பார்வையின் பொருளென்ன என்றெண்ணிக் குழம்பினாள்.

அதுநாள் வரை நிற்காமல் செல்லும் தெளிந்த ஆற்று நீராய் இருந்த அவள் மனது, கல் பட்டுக் குழம்பும் குட்டையாய் ஆனது. ஒரு புறம் மனம் குழம்பினாலும், மறுபுறமோ, அவள் வளர்ந்த சூழல் அவளைக் கட்டுப்படுத்த முயன்றது. ஆண்களிடம் இருந்து விலகி இருக்க சொல்லி வளர்க்கப்பட்ட விதம் எச்சரிக்கை மணி எழுப்ப, இரண்டின் மத்தியில் சிக்கி எப்புறமும் செல்ல இயலாமல் குழம்பினாள்.

குழம்பிய மனதுடன் வீட்டிற்கு வந்தவள் ,மாலை வீட்டில் விளக்கேற்றி இறைவனை வழிப்பட்ட பின் அதை மெள்ள மறந்து இயல்புக்கு வந்தாள். சிறுவயதில் இருந்து இறைபக்தி இயல்பிலேயே இருந்ததால் , தன் மனதை மாற்ற இறைவனையே நாடினாள்.

அடுத்த நாள் சனிக்கிழமை என்பது அவளுக்கு வசதியாய் இருந்தது. அந்த நிகழ்வை மறக்க உதவியது. இல்லை ,மறந்துவிட்டதாய் நினைத்துக் கொண்டாள். அன்று மதியம் தொலைகாட்சியில் எதோ ஒரு தமிழ்ப் படம் ஓட, அதில் ஒரு பேருந்துக் காட்சி, பார்த்தவுடன் இவள் மனது முதல் நாளுக்கு பின்னோக்கி ஓடியது. என்னதான் கடிவாளம் போட்டு நிறுத்த நினைத்தாலும், அவளது வயதும் மனதிற்கு உதவியாய் இருந்தது .

கல்லூரி செல்லும் அந்தப் பருவம் , கடிவாளம் இல்லாமல் ஓடும் முரட்டுக் குதிரை போன்றது. வயதும் பருவமும் ஆட்டி வைக்க, குரங்காட்டியின் கோலுக்கு ஆடும் குரங்கை போல் ஆடியது அவள் மனம். கட்டிலில் படுத்தவாறு , செயினை கடித்து தின்னுவிடுபவள் போல் கடித்துக் கொண்டு மாற்றுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளை அவள் தாயின் குரல் இவ்வுலகுக்கு இழுத்து வந்தது.

இங்கு இவள் மனம் பேதலித்து இருக்க , அங்கு வெங்கட் வாரவிடுமுறைக்கு ஊருக்கு வந்தவன் தன் நண்பர்களுடன் சுற்றிக் கொண்டிருந்தான். முதல் நாள் நிகழ்வுகள் அவன் மனதில் இருப்பதாகத் தெரியவில்லை. பெண்களை விட ஆண்களுக்கு கவன ஈர்ப்புகள் அதிகமாய் இருந்ததாலோ என்னமோ, அவனது மனம் பின்னோக்கி செல்லவில்லை. ஊருக்கு வரும் வரையில் அவளை சுற்றிய மனது ஊரில் இறங்கியவுடன் தன் நண்பர்களையும் அன்றைய நிகழ்வுகளையும் மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தது. ஊரில் இருந்த இரு தினங்களும் அவன் சாருவை பற்றி அதிகம் எண்ணவில்லை.

ஆனால், பேருந்தில் ஏறி திரும்பி வரத் துவங்கியவுடன் கல்லூரி நினைவுகளும் அதனுடன் இலவச இணைப்பை சாருவின் உருவமும் அவனை ஆட்கொள்ள துவங்கின. மையிட்ட அப்பெரியக் கருவிழிகள் அவன் கண் முன் தெரிய ,அதில் அவள் பார்த்தப் பார்வையில் இருந்த கோபம் ஒருகணமும் பின் கோபம் கனிவாய் மாறிக் காதலும் தோன்றியது அவனுக்கு.

முதல் சந்திப்பிலேயே காதல் வரும் என்று நம்பாத அவனுக்கு அவனது எண்ணங்கள் சிரிப்பாய் வரவழைக்க , தன் கற்பனையை எண்ணி ஒரு கணம் வாய்விட்டு சிரித்துவிட்டான். அதிகாலையில் ஊர் வந்து சேர்ந்தவன், பரபரப்பாய் கல்லூரிக் கிளம்பத் துவங்கினான். என்றும் இல்லாத அதிசயமாய் அவனது வேகம், அவனது அறை நண்பர்களுக்கு வியப்பளித்தது. வழக்கத்தை விட முன்னரே கல்லூரி வந்து சேர்ந்தவன், வழக்கமான டீக் கடையில் மங்கையவள் வருகைக்காய் காத்திருந்தான்.


வழக்கமாய் தன் ஒப்பனையில் அதிகம் கவனம் செலுத்தாத சாரு அன்று ஒன்றுக்கு பலமுறை கண்ணாடியில் தன் ஒப்பனையை சரிசெய்துக் கிளம்பினாள். மனதில் ஏதோப் படபடக்க , கல்லூரி சென்றவள் தன்னிச்சையாய் டீக் கடை பக்கம் ஒருகணம் பார்த்துவிட்டு பின் கவனிக்காதவள் போல் கல்லூரி நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அவள் நோக்கியது ஒரு கணமே என்றாலும், அரைமனியாய் அங்குக் காத்திருந்தவன் கண்களில் சரியாக அது புலப் பட, தன் கையில் இருந்த சிகரெட்டை போட்டுவிட்டு அவளைப் பின்பற்றத் துவங்கினான்.

-நினைவுகள் தொடரும்


அன்புடன் எல்கே

பிப்ரவரி 08, 2011

நினைவுகள் 9

அவர்களும் பேருந்தில் ஏறியவுடன் சாருவின் இதயத் துடிப்பு எகிறியது. பேருந்தில் ஓரளவு கூட்டம் இருந்தது அவளுக்கு வசதியாகப் போனது. தன் தோழிகளை இழுத்துக் கொண்டு கூட்டத்தில் மறைந்து கொண்டாள்.
பேருந்து வழக்கத்தை விட மெதுவாக செல்வது போல் இருந்தது அவளுக்கு.

"எங்கடா போனாளுங்க? "

"ஏறின உடனே உள்ளார போய் நிக்கறாளுங்க மாப்ளே!"

"இறங்கினவுடனே மடக்கிடலாமா மச்சி ?"

"வேண்டாம். பிரச்சனை பிடிச்ச வேலை. நாளைக்கு காலேஜ்க்கு வந்துதானே ஆகணும். அங்கப் பார்த்துக்கலாம் விடு. எங்க போய்டப் போறாங்க "

"அப்ப இங்கயே இறங்கிடலாம். சொல்லியவாறே , பஸ் உள்ளே நுழையும் முன் திருப்பத்திலேயே இருவரும் இறங்கி விட்டனர் ."

இவர்கள் இறங்கியதைக் கண்ட சாரு நிம்மதிப் பெருமூச்சு விட்டவளாய் தன் வீட்டிற்கு செல்லும் வழியில் நடக்க ஆரம்பித்தாள். அவளின் நிம்மதி நெடு நேரம் நீடிக்கவில்லை. அவள் வீட்டிற்கு முன்பே அவளது தோழிகளின் வீடு இருப்பதால் அவர்கள் பிரிந்து என்றுவிட, தான் எப்பொழுதும் செல்லும் வழி என்பதாலோ என்னமோ வழக்கம்போல் சென்றவள் , தன் வீடு இருக்கும் தெருவிற்குள் நுழைந்து வீட்டிற்கு சென்றவுடன்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

இரவுத் தூக்கத்தில் அவர்கள் தன்னை ராக்கிங் செய்வது போன்றக் கனவுகள் வர காலையில் அந்தக் கலக்கத்துடனேயே தான் எழுந்து கல்லூரி சென்றாள்.அவள் பயந்தது போல் எந்த சம்பவங்களும் நடக்கவில்லை. யாரும் இவளைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அந்த வாரம் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் சென்றுக் கொண்டிருந்தது.

வாரக் கடைசி நாள் இவள் கல்லூரி லைப்ரரியில் எதோ புத்தகம் படித்துவிட்டு கொஞ்சம் லேட்டாக வர ,இவளது தோழிகள் அவளுக்காகக் காத்திராமல் சென்று விட்டனர். பயந்து கொண்டேத் தனியாக பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க , அந்த இருவரும் இவளை நோக்கி வந்தனர்.

தப்பிக்க வழியே இல்லை, வசமாக மாட்டிக் கொண்டோம் என்று நடுங்கியவாறு நின்றுக் கொண்டிருந்த இவள் அருகில் வந்த இருவரும், வழக்கமான ராக்கிங் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். நடுங்கும் மெல்லியக் குரலில் பதில் அளித்த அவளிடம் அடுத்த கட்டமாக பாட சொல்ல , கிட்டத் தட்ட அழுகை வரும் நிலைக்கு சென்று விட்டாள் சாரு.

அவர்கள் சொன்னதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் குனிந்தப் படி நின்றிருக்க , அவள் விழிகளின் ஓரத்தில் , எந்த நிமிடமும் கீழே சிந்திவிடுவேன் என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது கண்ணீர் துளிகள். அவர்களது அதட்டலான குரலுக்குக் கட்டுப்பட்டு தலை நிமிர்த்த , அவளது கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர் தவறி கீழே விழ , அணை உடைந்து வரும் வெள்ளமாய், சிறு கண்ணீர் அழுகையாய் மாறும் அபாயம் தெரிந்தது.

அந்த சீனியர்களோ இதைக் கண்டும் மனம் இறங்கியதாய் தெரியவில்லை . அவர்கள் மேலும் அதட்ட , அணை உடையும் நிலையில் இவர்களது ராக்கிங்கை சில அடிகள் தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வெங்கட் அங்கு வந்தான்.

"டேய் . .உங்க அலும்புக்கு அளவே இல்லாம போச்சுடா. விடுங்கடா அந்தப் பொண்ணு போகட்டும். "

"மாப்ள ! நீ இதில் தலையிடாத ..ஓரங்கட்டிகோ ... நீ ராகிங் பண்றப்ப நாங்க ஏதாவது சொல்லி இருக்கமா?"

"கம்முனு இரு மச்சி . நீ போம்மா " ,என்று சாருவை அனுப்பியவன் ,

"ஏன்டா அறிவு இருக்கா ? அது பாட்டுக்கு போய் ப்ரின்சி கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிச்சுன்னா என்ன ஆகும்னு தெரியும்தான? என்று நண்பர்களைத் திட்டிக் கொண்டிருந்தான்.

"இதெல்லாம் போய் சொல்ற மூஞ்சியாத் தெரியலை மாப்ள "

"ஆமாம். பெரிய இவரு கண்டுபிடிச்சிட்டார். பார்த்தாலே பழம்னு தெரியுது . நேரா போய் சொன்னா எல்லாரும் காலி "

அவர்கள் இருந்த இடத்தை விட்டு சிறிது தள்ளி நின்றாலும் , அவர்கள் சத்தமாய் பேசியதால் அவனுடைய வார்த்தைகள் இவள் காதில் விழ, அவன் அப்பொழுதுதான் உதவி செய்திருந்தாலும் ,அவனை நோக்கி முறைத்தாள்.

அதே சமயத்தில் அங்கிருந்து கிளம்ப எண்ணி அவனும் திரும்ப, அவளது முறைப்பைக் கண்டான். அதை பெரிதாக சட்டை செய்யாதவன் அவளை சிறிது நேரம் உற்றுப் பார்த்தான். விழிகளுக்கு இட்ட மை, கண்ணீரால் சிறிது அழிந்திருக்க , கைக்குட்டையினால் அவள் சரி செய்ய முயன்று தோற்றது தெரிந்தது. ராகிங் செய்யப் பட்டதன் விளைவாய் முகம் சற்று சிவந்திருக்க , கோவைப் பழமாய் சிவந்திருந்த இதழ்களுக்கு செயற்கை உதவி தேவைப் படவில்லை.


அவன் உற்றுப் பார்த்தது அவளை எதோ செய்ய ,தனதுப் பார்வையைத் திருப்பி கொண்டாள். அங்கிருந்து நண்பர்களுடன் சென்ற வெங்கட் ,டீக்கடையில் நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரியில் அமர்ந்தாலும் , நின்றுக் கொண்டிருந்தவளை அவவப்பொழுது பார்க்கத் தவறவில்லை.

அப்படிப் பார்த்த ஒருமுறை அவளது கண்களும் இவனை நோக்க, அவளது கண்களில் தெரிந்தது என்ன என்று ஆராய முற்பட்ட சமயத்தில் பேருந்து வந்து நிற்க , அவனது கண் வீச்சு அத்துடன் முறிந்தது.

-நினைவுகள் தொடரும்

அன்புடன் எல்கே

பிப்ரவரி 07, 2011

காலம் கடந்த ஞானம்

வழக்கம்போல் அன்றும் நடந்த சண்டை சுரேஷிற்கு எரிச்சலையே தந்தது. அவன் வயது சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதையே சொர்க்கமாக என்ன அவனோ வீட்டிற்கு வெளியில் இருப்பதையே வரமாக எண்ணினான்.

ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அவன் வீடும் சொர்க்கமாகதான் இருந்தது. எதோ ஒரு சிறுப் பிரச்சனையில் துவங்கிய அவனது பெற்றோரின் சண்டை நீடித்துக் கொண்டே செல்ல பலியாகியது சுரேஷ்தான். அவனளவில் எதோ சண்டை என்று மட்டுமே புரிந்தது. அவனின் பதிமூன்று வயதிற்கு அதற்கு மேல் எட்டவில்லை.

வீட்டிற்கு வந்தால்  இருவரும் இவனிடம் பேசாமல் இருப்பதும் , வெளியில் எங்கும் அவனை அவன் தந்தை அழைத்து செல்லாமல் இருப்பதும் அவனுக்கு சோகத்தை உண்டுபண்ணியது.

அன்று அப்படிதான் , அவன் அம்மாவிடம் "அம்மா ! வெளில போலாமா ? நாம எல்லாரும் சேர்ந்து வெளில போய் எவ்ளோ நாளாச்சு ?" கேட்டவனுக்கு கோபம் தெறிக்க பதில் வந்தது ராணியிடம் இருந்து, ,"அது ஒண்ணுதான் குறைச்சல் . போடா போய் படிக்கற வழியப்  பாரு. படிச்சு முடிச்சா கம்ப்யூட்டர்ல கேம் விளையாடு. நேரம் காலம் தெரியாம வந்து தொந்தரவு பண்ணிக்கிட்டு" .

முகத்தை தொங்கப் போட்டுக்கிட்டு வெளியில் வந்த சுரேஷ் , தினேஷிடம் மீண்டும்  அதேக் கேள்வியை கேட்க அட்சரம் மாறாமல் ராணி சொன்ன அதே பதில் வந்தது.

வாடிய முகத்துடன் வந்தவன் டிவியை ஆன் செய்து கார்ட்டூன் சேனல்களை மாற்றிக் கொண்டு வந்தான். எதுவும் பிடிக்காமல் எதோ ஒரு அழுகை மெகாத் தொடரை பார்க்கத் துவங்கினான். அதில் வந்தக் காட்சி அவன் மனதில் திரும்ப திரும்ப ஓடிக் கொண்டே இருந்தது, அன்று ஒரு முடிவுடன் படுக்க சென்றான்.

மறுநாள் உடல்நிலை சரியில்லை என்று சொல்லி பள்ளிக்கு செல்லவில்லை . ராணி கொடுத்த மாத்திரையை போட்டுக் கொண்டு தூங்குபவன் போல் நடித்தான்இருவரும் அலுவலகம் செல்லும் வரைக் காத்திருந்தவன் , பின் எழுந்தான். தன் பள்ளி பையில் இருந்து நோட்டை எடுத்தவன் எதையோ எழுதினான். அவன் மனதில் முதல்நாள் பார்த்த சீரியல் நினைவிற்கு வர எழுதிய நோட்டை ஹாலில் வைத்துவிட்டு அபார்ட்மென்ட்டின் மாடியை நோக்கி செல்லத் துவங்கினான்.

ஒரு வாரம் கழித்துபுகைப்படமாய் காட்சி அளித்துக் கொண்டிருந்த சுரேஷின் முன் தினேஷும் ராணியும் இனி சண்டைப் போட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

டிஸ்கி 1 :  இது வல்லமையில் வெளிவந்துள்ளது.
டிஸ்கி 2 : உரிமையில்லை..கவிதை  வார்ப்பு இணையத் தளத்தில் வெளியாகி உள்ளது
அன்புடன் எல்கே

பிப்ரவரி 06, 2011

அப்பா

" தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். "

இந்தக் குறளுக்கு ஏற்ப நான் வாழ்வில் முன்னேற அடித்தளம் அமைத்து தந்த எனது தந்தைக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் . 

நம் அனைவருடைய வாழ்விலும்  தந்தை ஆற்றும் பங்கு அளவிட முடியாது. ஆனால் நம்மில் எத்தனை பேர் அதை வெளிப்படையாக சொல்லுகிறோம் அல்லது காட்டுகிறோம் ? தாய் பாசத்தைப் பற்றி எழுதாத கவிஞர்கள் இல்லை. தந்தை பாசத்தை எத்தனை பேர் எழுதி உள்ளனர் ??

பொதுவாக , குழந்தைப் பிறந்தப் பின் குடும்பத்தின் செலவுகள் அதிகரிக்கும். அதை சமாளிக்கவும், தன் குழந்தைக்கு ஒரு வளமான எதிர்காலத்தை அமைக்கவும் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டிய ஒரு கட்டாயம் தகப்பனுக்கு உள்ளது. இருவரும் வேலைக்கு சென்றாலும் , பொருளாதாரம் சரி இல்லையென்றால் தகப்பனை (குடும்பத் தலைவனை ) குறை சொல்லுவோர் இன்றும் அதிகம் உள்ளனர். இதன் காரணமாகவே அவன் தன் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடியாத நிலையில் இருப்பான்.
அதனால் பாசம் இல்லை என்று சொல்ல முடியுமா ?? தன் மகள் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்லும் பொழுது கண்கலங்கும் எத்தனையோ தந்தைகளைப் பார்த்திருக்கிறேன்.பாசத்தை நெஞ்சுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு குடும்பத்தின் வளமான எதிர்காலத்திற்காக உழைக்கிறான் அவன். 

இது போன்ற தந்தைதான் எனக்கும் . அவர்  பி யூ சி, முடித்தப் பின் , மேற்கொண்டு படிக்க ஆசை . ஆனால் குடும்பத்தின் நிலை மேல் கொண்டு படிக்க இயலவில்லை. அப்பொழுது அரசாங்க அலுவலகங்களில் தற்காலிக பணியாளர்கள் நெறையப் பேர் இருந்தனர். அப்படி பத்திரப் பதிவு அலுவலகத்தில் கொஞ்ச நாள் வேலை செய்து கொண்டே வேறு வேலை தேடி வந்தார்.

இடையில் குடும்பத்திலும் பிரச்சனைகள். வங்கியில் வேலைக்கு அப்ளை செய்துவிட்டு காத்திருந்த நேரம் , எனது தாத்தாவின் எதிர்பாராத திடீர் மரணம். அப்பொழுது எனது தந்தைக்கு நிரந்தர வேலையும் இல்லை அதிக உலக அனுபவமும் இல்லை. விதி எனது தந்தை வாழ்வில் நன்றாக விளையாடிய நேரம் அது. எந்த வங்கி வேலைக்கு அப்ளை பண்ணியிருந்தாரோ அந்த வேலையில்  உடனடியாக சேர ஆர்டர் வந்தது ஆனால் இங்கோ அவரது தந்தை மறந்து முழுதாக இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. அந்த வேலையும் கை நழுவிப் போக, குடும்பத் தொழிலுக்கு வந்தார்.

சேலம் செவ்வாய்பேட்டையில்  சிறிய மெஸ். இதுதான் எங்கள் குடும்பத் தொழில். எதோ கல்லாப்பெட்டியில் அமர்ந்து காசு வாங்கிப் போடுவது இல்லை, விறகு அடுப்பின் சூட்டில் காலை மூன்று  மணி ,மாலை மூன்று மணி நேரம்  நின்றாக வேண்டும். கடைக்கு செல்லும்முன் வீட்டில் அதற்கு தேவையான பொருட்களை (சட்னி, சாம்பார் ,மாவு ) வீட்டில் தயார் செய்தாக வேண்டும். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தால்தான் , காலை ஏழு மணிக்கு கடை ரெடி ஆகும் .அவருடன் கடையில் ஒருவர் மட்டுமே ,இன்றுவரை.


அடுப்பின் சூட்டில் வந்துதான் எங்களை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார் எனது தந்தை. தன்னால் படிக்க முடியாமல் போனதை, என்னையும் எனது அக்காவையும் படிக்கவைத்து சாதித்துக் கொண்டார்.

என் தந்தையிடம் நான் கற்றுக் கொண்டது நெறைய. கிரிக்கெட், அரசியல், ஆன்மிகம் ,புத்தகம் வாசிக்கும் பழக்கம் அனைத்துக்கும் அவர்தான் எனது முதல் குரு. அவரிடம் இருந்து இன்னும் என்னால் கற்றுக் கொள்ளமுடியாத ஒன்று கோபத்தை தவிர்ப்பது.  பொது இடங்களில் அவர் அதிகம் கோபப்பட்டு பார்த்தது இல்லை. அவர் கோபத்தை தூண்ட பலர் முயன்றும் நிதானம் இழந்தது இல்லை.

ஒரு விஷயத்தை எப்படி திட்டமிட்டு செய்துமுடிப்பது என்வதை அவர் கோவிலை எடுத்துக் கட்டியபொழுது கற்றுக் கொண்டேன். இடிந்து பாழடைந்து கிடந்தக் கோவிலை திரும்ப புனர் நிர்மாணம் செய்து இன்று செவ்வாய்பேட்டையில் அதுவும் ஒரு முக்கியக் கோவிலாய் விளங்க இவரும் ஒரு காரணம். ஆனால் அதை நிர்வகித்தப் பொழுது எத்தனை அவதூறுக்கு ஆளானார் ? எத்தனை அவச் சொற்கள் வந்தன ? நாங்கள் கோபப் பட்டாலும் அவர் சொல்லும் ஒரே சொல் " அந்த ஆண்டவனுக்கு உண்மைத் தெரியும் . அவன் பார்த்துப்பான்" .

எங்களை எந்த விஷயங்களிலும் கட்டாயப் படுத்தியது இல்லை. நான் மேல்நிலைப் பள்ளியில் சேரும் பொழுதே சொல்லிவிட்டேன் , பொறியியல் படிக்கப் போவது இல்லை என்று. உன்னுடைய இஷ்டம் , எதை வேணுமானாலும் படி ஆனால், ஒழுங்காப் படி , இது மட்டும்தான் அவர் சொன்னது.

வள்ளுவர் சொன்னது போல் அவர் தன்னுடையக் கடமையை செய்துவிட்டார். திருப்பி நான் செய்ய வேண்டியக் கடமைதான் அப்படியே இருக்கு.

அப்பா ! மீண்டும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்  

அன்புடன் எல்கே

பிப்ரவரி 03, 2011

நினைவுகள் 8

ஒவ்வொரு தினமும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. காதலர்களாய் இருந்தாலும், தம்பதிகளாய் இருந்தாலும், சிற்சில மாற்றங்கள் அன்றையப் பொழுதில் இருக்கத்தான் செய்யும். விதிவிலக்காய் அன்று மூவருக்கும் ஒரே மாதிரியாய் அமைந்தது விசித்திரமே .

கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மனநிலையில் இருந்த மூவரில் வெங்கட் ஓரளவு மன நிம்மதியுடன் தூங்கினான் என்று சொல்லலாம். சாரு வேண்டாம் என்று சொன்னப் பிறகு அதை நினைத்து உபயோகம் இல்லை என்ற எண்ணம் அதற்கு காரணமாய் அமைந்தது.

ரமேஷோ ஏன் இவர்கள் பிரச்சனையில் தான் வந்து மாட்டினேன் என்று நினைத்து நொந்துக் கொண்டிருந்தான். எதற்காக சென்னை வந்தோம் என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டிருந்தான். வந்து சந்தித்ததோடு நிறுத்திக் கொண்டிருந்தால் எந்தப் பிரச்சனையுமில்லையே என்று ஒரு பக்கம் வேதனைப் பட்டாலும், தனது நண்பர்களுக்கு இடையேயானப் பிரச்சனையைத் தனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி ஒரு பக்கம் அவனுக்கு திருப்தியே .

மூவரில் அதிகம் பாதிக்கப்பட்டது சாருதான். பழையதை கொஞ்சம் கொஞ்சமாக மறந்துக் கொண்டிருந்தவள் ,பழைய நினைவுகளும் அதில் சம்பந்தப் பட்டவர்களும் திடுமென மீண்டும் தாக்க நடுக் கடலில் புயலில் சிக்கிய படகாய் திணறினாள்.

யாரை திரும்பவும் பார்க்கக் கூடாது என்று நினைத்தாளோ அவனே மீண்டும் அவளை பெண் கேட்டு வந்தது ஒரு புறம் என்றால், பழைய நண்பனுடன் பேசும் பொழுது அவன் பங்குக்கு பழைய நினைவுகளைக் கிளறி விட்டு சென்றது மறுபுறம்.

தூக்கம் வராமல் புரண்டவளின் மனம் காலவெளியில் பின்னோக்கி ஓட கல்லூரிக் கால நினைவுகள் இன்றும் பசுமையாய் நினைவுக்கு வந்தன. கல்லூரிக் காலத்தில் சாரு, ஒப்பனைகள் அதிகம் இன்றி , மிகக் குறைவான தேவையான ஒப்பனையை மட்டுமே செய்வாள். கூடிய வரையில் மற்றவரின் கவனத்தை ஈர்க்காத வண்ணமே உடையும் இருக்கும். தன்னுடைய மாற்றத்தை நினைத்துப் பார்த்தாள். காலமும் , இருக்கும் இடமும் ஒருவரை எப்படி மாற்றுகிறது என்று சிறிது வியக்கவும் செய்தாள்.

பள்ளியில் இருந்து கல்லூரிக்கு மாறிய வருடம். மனதில் பயமும் மகிழ்ச்சியும் கலவையாய் இருக்க கல்லூரிக்கு அவளின் முதல் பயணம். கல்லூரி பேருந்துகள் அவளதுக் கல்லூரியில் துவங்கப் படாதக் காலம் அது. தனியார் பேருந்திலோ இல்லை அரசுப் பேருந்திலோதான் பயணிக்க வேண்டும்.

பள்ளிச் சீருடைகளில் இருந்து விடுதலையாகி பல தரப்பட்ட உடைகளில் கல்லூரி செல்வதே முதலில் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியாய் இருக்கும். சாருவும் விதிவிலக்கில்லை. அவள் புதிதாய் வாங்கிய சிகப்பு நிற சுடியில் தன் தோழிகளுடன் கல்லூரி சென்று இறங்கினாள்.

பேருந்தில் இருந்து இறங்கியவுடனேயே அவளின் பார்வையில் பட்டது புளிய மரத்தின் பக்கத்தில் இருந்த டீக் கடையும் அதன் அருகே அமர்ந்து இருந்தவர்களும்தான். அவர்களைக் கண்டவுடன் மனம் படபடக்கத் துவங்கியது .அவர்கள் முதல் வருட ராக்கிங் பற்றிக் பல விஷயங்களைக் கேள்விப் பட்டிருந்ததால் , மனதில் பயம் சூழ, கைகள் அனிச்சையாய் இருந்த ஒரு நோட்டை இறுகப் பற்றியது.

அங்கு அமர்ந்து இருந்தவர்களை கண்டும் காணாமல் தவிர்த்து , எதிர்புறம் இருந்தக் கல்லூரியை நோக்கி நடக்கத் துவங்கினர். அமர்ந்து இருந்தவர்களின் கிண்டல்கள் இவர்களின் செவியைத் தாக்க கூச்சம் ஒருபுறமும், கோபம் ஒருபுறமுமாய் நடை மெது ஓட்டமாய் மாறி கல்லூரிக்குள் நுழைந்தவுடன் நிம்மதிப் பெருமூச்சு வந்தது அவர்களுக்கு.


கேண்டீனுக்கு போகலாமா என்றுத் துவங்கிய தோழியை கண்ணால் எரித்த சாரு , "ஒழுங்கா கிளாசுக்குப் போற வழியைப் பார்ப்போம். அப்புறம் பேசிக்கலாம் கேண்டீன் போறதைப் பற்றி " என்று சொல்லிவிட்டு வேகமாய் தகவல் பலகை அருகே சென்று தங்கள் வகுப்பு எங்கிருக்கிறது என்று பார்த்து இரண்டாம் மாடிக்கு செல்ல படிக்கட்டுகளில் நடக்கத் துவங்கினாள். வேறு வழி இல்லாமல் அவள் தோழிகள் இருவரும் அவளைப் பின்பற்றத் தொடங்கினர்.

முதல் நாள் வகுப்புகள் புதியவர்களை அறிவதிலே கழிந்தப் பின், மாலையில் வீடு செல்லும் நேரம், மீண்டும் மனதில் பயம் எட்டிப் பார்க்கத் துவங்கியது. பேருந்து நிறுத்தத்தில் நடுங்கும் மனதுடன் பேருந்திற்கு காத்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி இரண்டு மாணவர்கள் வர, சாருவின் கைகளும் நடுங்கத் துவங்கின.

வந்தவர்கள் இவர்களைக் கடந்து போய்விடமாட்டர்களா என்று மனதில் நினைத்துக் கொண்டே அந்த திசையை பார்ப்பதை தவிர்த்தாள். அவர்கள் ரோடைக் கடந்து வரவும் பேருந்து வந்து சேரவும் சரியாக இருக்க, அவசர அவசரமாய் பேருந்தில் ஏறினாள். இவர்களின் பின்னே அவர்களும் ஏற , சாருவின் இதயத் துடிப்பு எகிறியது.

-நினைவுகள் தொடரும்

அன்புடன் எல்கே

பிப்ரவரி 01, 2011

நினைவுகள் 7

அவர்கள் இருவரும் செல்வதைக் கண்டும் காணாதவன் போல் இருந்த வெங்கட் , பின் தன் கவனத்தை வேறு திசைகளில் செலுத்தத் துவங்கினான். பல தரப்பட்ட மக்கள் அவர்களின் ஊடே தங்கள் பொருட்களை விற்க முனையும் சிறு வியாபாரிகள் என்றுக் கலவையாய் மணல்வெளி நிறைந்திருந்தது .

வார இறுதி மக்கள் கூட்டம் தங்கள் ஒரு வாரக் களைப்பை நீக்கவும், அடுத்த வாரத்திற்குத் தேவையான புத்துணர்வுத் தேடியும் அங்கு வர, தங்கள் அடுத்த வேளை வயிற்றுத் தேவையை பொருட்கள் விற்றோ இல்லை தின்பண்டங்கள் விற்றோ நிறைவு செய்யும் அடித்தட்டு வியாபாரிகள்.

இந்தக் கூட்டத்தின் நடுவே அவன் கண்கள் ஒரு பெரியவரிடம் நிலை குத்தி நின்றது. அவரது கையில் கயிற்றால் இழுத்தால் ஆடும் பொம்மைகள் இருந்தன. அதைக் கண்டதும் மனிதர்களின் வாழ்வுதான் அவனுக்குத் தோன்றியது. யாரோ ஒருவன் எங்கோ இருந்து கயிற்றை ஆட்ட ,அதற்கேற்ப இங்கு அனைவரும் ஆடிக் கொண்டிருப்பது போல் இருந்தது.

அதன் ஊடாக , எதோ ஒரு புத்தகத்தில் படித்த வாசகங்களும் நினைவுக்கு வந்தது. வாழ்வில் துன்பங்கள் வரும் பொழுதுதான் மனிதன் தத்துவங்களை பற்றியும் இறைவனைப் பற்றியும் நினைக்கிறான் என்று யாரோ எதோ ஒரு புத்தகத்தில் எழுதி இருந்தது இப்பொழுது இவன் நினைவில் இடற மெல்லிதாய் புன்னகைத்தான்.

பின் சாருவும் ,ரமேஷும் சென்றப் பாதையில் பார்க்க, மனித அலைகளில் இவனுடையப் பார்வையில் இருந்து விலகி இருந்தனர் அவர்கள். அவன் வாழ்வில் இருந்து மறைந்தவள் ,மீண்டும் வராமலே இருந்திருந்தால் அவன் வாழ்வும் தெளிந்த நீரோடையாய் இருந்திருக்கும். ஆனால் இவன் ஒன்று நினைக்க , விதி ஒன்று நினைக்க இன்று ஆர்பரிக்கும் கடலலைகளில் சிக்கியவனாய் செய்வதறியாமல் விழிக்கின்றான்.

************************************************************************************
வெங்கட்டின் பார்வையில் இருந்து விலகியப் பின் , கடலைகள் நிலத்தில் மோதும் இடத்தில் சிறிது நேரத்தை கொன்றப்பின் , மணல்வெளியில் அமர்ந்த சாருவை ஆழ்ந்து நோக்கினான் ரமேஷ்.

அவள் கடல் அலையில் தன் கால்களை நனைத்துக் கொண்டிருந்த பொழுது அவன் சிந்தனை , சில வருடங்கள் பின்னோக்கி சென்றுத் திரும்பியது. அன்று அத்துணை நெருக்கமாய் இருந்தவளின் இன்றைய வெறுப்புக்குக் காரணம் என்னவென்றுப் புரியாமல் அவன் குழம்பினான்.


ஆனால் மற்றொன்று தெளிவாகப் புரிந்தது அவனுக்கு, அவள் தன் கரம் கோர்த்தது வெங்கட்டை வெறுப்பேத்த மட்டுமே என்று. அவன் பார்வை அவர்களிடம் இருந்து விலகியப் பின் அவள் தன் கரத்தை விடுவித்துக் கொண்டது அவனுக்கு இதை உணர்த்தியது.

என்னதான் பிரச்சனை அவர்களின் நடுவே என்று யோசிக்க யோசிக்க குழப்பம் மட்டுமே மிஞ்சியது. இறுதியில் அவளிடமே அதைப் பற்றி பேசி விடுவது என்று முடிவெடுத்தான்.

அப்பொழுது எடுத்த முடிவின் விளைவாக, அவளை ஆழ்ந்து நோக்கியவன் அந்தக் கேள்வியைக் கேட்டான் .

"என்னப் பிரச்சனை உனக்கும் வெங்கட்டுக்கும் ?"

"அதை பத்தி பேசவேண்டாம்னு அப்பவே சொன்னேன். ஞாபகமில்லையா ?"

"எல்லாம் இருக்கு. ஆனால் இப்படி அவரை தவிர்க்கும் அளவுக்கு என்ன பிரச்சனை ?"

மௌனமே பதிலாக அளித்த சாரு, பார்வையை கடலின் பக்கம் திருப்பி கடலை வெறித்துப் பார்க்க ஆரம்பித்தாள். கால்களில் தலையை முட்டுக் கொடுத்து அமர்ந்திருந்தவளின் உடல் சிறிது குலுங்க ஆரம்பித்தது.

அவள் அழத் துவங்கியதின் அடையாளமாய் உடல் குலுங்கியதைக் கண்டவன் , செய்வதறியாமல் திகைத்தான். தானொன்று நினைத்து கேட்க, மற்றொன்று நடக்க என்ன செய்வது என்றுப் புரியாமல் , அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்காமல் அவளை அழைத்துப் பார்த்தான் .

சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டவள், தன் முகம் நிமிர்த்தி இவனைப் பார்க்க, கண்களில் இட்டிருந்த மை கண்ணீரில் அழிந்து , வழிந்த கண்ணீர் போக இன்னும் சிறிது கண்களில் குளம் கட்டி இருக்க , தன் கைக்குட்டையை எடுத்து அதை துடைத்துக் கொண்டாள்.

பின் அவனிடம் மன்னிப்புக் கேட்ட சாரு "நாளைக்கு எப்ப கிளம்பற ?" சம்பந்தம் இல்லாமல் கேள்விக் கேட்டாள்.

எதற்கு அந்த கேள்வி அப்பொழுது என்றுப் புரியாவிட்டாலும் மறுநாள் இரவுதான் கிளம்புவதாய் சொன்னான்.

"சரி. இப்ப நாம கிளம்பலாம். நாளைக்கு மதியம் மறுபடியும் உன்னைப் பார்க்க வரேன். அப்ப இதுபத்தி நான் சொல்றேன். "

அவள் வார்த்தைக்கு என்ன பதில் சொல்வது என்று மனம் யோசித்தாலும், அவன் தலை அனிச்சையாய் அவள் சொன்னதை ஒத்துக் கொண்டது.

************************************************************************************
ரமேஷை அவன் தங்கியிருந்த இடத்தில் விட்டுவிட்டு வந்த சாரு சோர்வாய் படுக்கையில் விழுந்தாள். அன்றைய நிகழ்வுகள் அவளை மிக சோர்வாக்கி இருந்தன. மகிழ்ச்சியுடன் ஆரம்பித்த தினம் பின் அழுகையில் முடிந்தது. வாழ்வில் யாரை மறக்கவேண்டும் என்று இருந்தாளோ அவனை சுற்றியே அவளின் கடந்த சில தினங்கள் செல்வது அவளுக்கு ஒரு வகையில் எரிச்சலையே தந்தது.

தூக்கமும் வராமல் புரண்ட அவளின் மனம் பின்னோக்கி ஓட ஆரம்பித்தது. எந்தக் கடிவாளமும் இல்லாமல் மனக் குதிரை அவளது கல்லூரிப் பருவத்தில் சென்று நின்றது.

- நினைவுகள் தொடரும்
அன்புடன் எல்கே