Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin
Wednesday, November 27

Pages

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

பஸ் டே

பஸ் டே தொடர்பாக நேற்றும் மாணவர்கள் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கல்லூரி சென்று இறங்கியப் பின் கலாட்டாவில் இறங்கிய மாணவர்கள் போலீசாரை ...

பஸ் டே தொடர்பாக நேற்றும் மாணவர்கள் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கல்லூரி சென்று இறங்கியப் பின் கலாட்டாவில் இறங்கிய மாணவர்கள் போலீசாரை தாக்கியுள்ளனர். இதில் பல போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பஸ் டே கொண்டாட்டங்களின் பொழுது நடக்கும் பிரச்சனைகளை பார்க்கும் பொழுது எங்கள் கல்லூரியில் நாங்கள் கொண்டாடிய பஸ் டே நினைவுக்கு வரும். ஆனால் இத்தனை கலாட்டாக்கள், பிரச்சனைகள் இருந்தது இல்லை. 

நான் படித்து திருச்செங்கோட்டில் உள்ள செங்குந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில். சேலத்தில் இருந்து தினமும் தனியார் பேருந்தில்தான் பயணம். சேலத்தில் இருந்து திருச்செங்கோடு வழியாக ஈரோடு செல்லும் ஏ ஆர் பீ என்னும் தனியார் பேருந்துதான் எங்கள் வாகனம். நான் முதல் ஆண்டில் படித்தப் பொழுது திருசெங்கோட்டுக்கு பஸ் டிக்கெட் கட்டணம் 8 ரூபாய் .  எங்கள் கல்லூரி மாணவர்களுக்கும், தினமும் அந்தப் பேருந்தில் செல்லும் இன்னும் சிலருக்கும் மட்டும் 7 ரூபாய்தான் கட்டணம். இதையும் பல நாள் எடுக்கமாட்டோம் அது வேற விஷயம். 

அந்தப் பேருந்து எங்கள் சொந்த வாகனம் மாதிரிதான். கடைசியா இருக்கும் நான்கு சீட்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது (ரிசர்வேர்சன்). வேறு யாரும் அதில் உட்கார முடியாது. அதே சமயத்தில் ரொம்பக் கூட்டம் இருந்த, பொதுமக்களுக்கு விட்டுக் கொடுத்துவிடுவோம். இது எங்களின் வழக்கம். அதே சமயம், மற்றக் கல்லூரி மாணவர்களுக்கு இந்தச் சலுகைக் கட்டணம் இல்லை. அந்தப் பேருந்து கிட்டத் தட்ட எங்கள் கல்லூரியின் அதிகாரப்பூர்வமற்ற கல்லூரிப் பேருந்து என்றே சொல்லலாம். 

பிப்ரவரி 14 தான் எங்கள் பேருந்து தினம்.(காரணம் என்கிட்டக் கேட்கக்கூடாது .எங்களுக்கு முன்னாடி இருந்து அந்த நாள்தான்).  ரெகுலரா அந்தப் பேருந்தில் வரவங்க எல்லோரும் செலவைப் பகிர்ந்துப்போம். அன்னிக்கு எங்களுக்கு டிக்கெட்டும் கிடையாது . 

காலையில் பஸ்சின் முதல் ட்ரிப் எங்கள் காலேஜ் டைமுக்குதான். காலை ஆறு மணிக்கே பஸ்ஸை அலங்காரம் பண்ண ஸ்டார்ட் பண்ணிடுவோம். பஸ்சின் முன்பக்கம் இரண்டு ஆளுயர மாலைகள் தொங்கும். உள்பக்கம் சைட்ல முழுக்க ரோஜா ஒட்டப் படும். முன்பக்கக் கண்ணாடியின் ஒரு சைட்ல ரோஜாவால் இதயச் சின்னம் உருவாக்கிடுவாங்க.(காதலர் தினம் அன்னிக்குதானே). 

பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் ஆளுக்கு ஒரு  டிரஸ் ,கூடவே எதோ ஒரு பரிசு கண்டிப்பா உண்டு. அவங்களுக்கு பயன்படற மாதிரிதான் அந்த பரிசு இருக்கும். ரெகுலர் மக்களுக்கு ஸ்வீட் கண்டிப்பா உண்டு.  எங்களோட ஆட்டம் பாட்டம் எல்லாம் பேருந்துக்கு உள்ள தான் இருக்கும் . பொதுமக்களுக்கு பிரச்சனை வர மாதிரி எதுவும் பண்ணமாட்டோம். மத்தவங்களுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாதுங்கற காரணத்தினால் யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க. 

ஆனால் இன்னிக்கு சென்னைல நடக்கற பிரச்சனைகளினால் பஸ் டே அப்படிங்கற வார்த்தை காதில் விழுந்தாலே எல்லோரும் முகம் சுளிக்கற மாதிரி ஆகுது. மத்தவங்களுக்கு பிரச்சனை தராமல் தங்கள் கொண்டாட்டங்களை நடத்த எப்ப கற்றுக் கொள்வார்களோ ???






62 கருத்துகள்

RVS சொன்னது…

பஸ் டே! நாங்களும் இதுபோல கொண்டாடியிருக்கோம். களம் கொடுத்துட்டீங்க.. விளையாடலாம்.. ;-)
பதினாலு ஏன் கொண்டாடினீங்கன்னு நாங்க கேட்கவேயில்லை எல்.கே ;-

Asiya Omar சொன்னது…

நானும் நேற்று நியுஸ் பார்த்தேன்,அமைதியாக கொண்டாடினால் o.k.இப்ப பெரிய அட்டகாசம்.

ஹுஸைனம்மா சொன்னது…

எல்லாமே மாறிப்போச்சு இப்போ. காலம் கலிகாலம்னு புலம்பத்தான் தோணுது.

பத்மநாபன் சொன்னது…

பஸ் டே கலாச்சாரம் சென்னையில் மிக மோசமாக போய்க் கொண்டிருக்கிறது.. பஸ்ஸின் கூரையின் மீது ஏறி நின்றுகொண்டு ஆட்டம் போடுவது , போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்வது போன்றவை தடுத்து நிறுத்தவேண்டும் ... மத்தபடி ஒரு நாள் கல்லூரி அருகிலேயே ஒரு மணி நேரம் நிறுத்தி ஓட்டுனர் நடத்துனர்க்கு மரியாதை செய்து அமைதியாக கொண்டாடி மகிழலாம்..

Madhavan Srinivasagopalan சொன்னது…

நீங்கலாம் சமத்துப் பசங்களா ? ஓகே. .ஓகே.

raji சொன்னது…

இப்ப நடக்கற 'பஸ் டே' வால விபத்துக்கள்
ஏற்படற வாய்ப்புகளும் அதிகம்

எந்த கொண்டாட்டமுமே பிறருக்கு இடையூறா
இல்லாதவரைதான் சரி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நடத்துங்க மக்கா நடத்துங்க...

settaikkaran சொன்னது…

மாணவர்களில் பலர் இதுகுறித்த எதிர்மறையான விமர்சனங்களை அறிந்து தர்மசங்கடப்படுவது உண்மை. ஆனால், சென்னை போன்ற நகரத்தில், போக்குவரத்தை ஸ்தம்பிக்கச்செய்து, லத்தி சார்ஜ் வரை போகிற அளவுக்கு கட்டுப்பாட்டை இழப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய செய்கை!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

போலீஸ் வர்ற அளவுக்கு வெச்சுக்கிட்டது ரொம்பவே ஓவர்தான்..

சக்தி கல்வி மையம் சொன்னது…

இது கண்டிக்கப் படவேண்டிய விடயம்..

Geetha Sambasivam சொன்னது…

இப்படிக் கொண்டாடும்படி தான் நானும் எழுதிட்டு வந்தேன். பார்த்தா நீங்களும் அதுவே! ஹிஹிஹி, GREAT PEOPLE THINK ALIKE

Geetha Sambasivam சொன்னது…

to continue

middleclassmadhavi சொன்னது…

நான் படிக்கும் காலத்தில் லேடிஸ் ஸ்பெஷல் பஸ்சிலேயும் பஸ் டே கொண்டாடுவோம், யாருக்கும் தொந்தரவு இல்லாமல்!!

மனோ சாமிநாதன் சொன்னது…

கல்லூரி நாட்களில் இந்த 'பஸ்' அனுபவங்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். உங்களின் அனுபவம் சுவாரசியமாக இருந்ததுடன் பழைய நினைவுகளையும் கிளப்பி விட்டு வ்ட்டது. அருமையான ப‌திவு!!

GEETHA ACHAL சொன்னது…

இவங்களுக்கு வேற வேலையே கிடையாது...

ஸ்ரீராம். சொன்னது…

பஸ் டேக்கு என்னுடைய எதிர்ப்புகள். சில வருடங்களாகவே இந்த கூத்து சகிக்க முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. பார்க்கவே எரிச்சலை ஊட்டும் காட்சியாக இருக்கிறது பஸ் டே கொண்டாட்டங்கள். இதை தடை செய்ய வேண்டும் என்ற கட்சியில் நான்.

ஜெய்லானி சொன்னது…

//பொதுமக்களுக்கு பிரச்சனை வர மாதிரி எதுவும் பண்ணமாட்டோம். மத்தவங்களுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாதுங்கற காரணத்தினால் யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க. //

இப்ப அதெல்லாம் தலைகீழா நடக்குதே..!! :-)

VELU.G சொன்னது…

ஆமாங்க எல்.கே

எனக்கும் எங்க காலேஜ் பஸ் டே தான் ஞாபகத்துக்கு வருது

Chitra சொன்னது…

நேர்த்தியான கொண்டாட்டமாக கொண்டாடி இருந்து இருக்கீங்களே!

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்

கலக்குங்க... வேற ஒன்னும் சொல்ல முடியாது

எல் கே சொன்னது…

@ஆசியா

சகோ இன்னிக்கும் கொண்டாடி இருக்காங்க . என்ன சொல்றதுன்னு புரியலை எனக்கு

எல் கே சொன்னது…

@ஹுசைனம்மா

அதேதான். இப்ப எல்லாம் காலேஜ் ஸ்டூடன்ட் அப்படின்னு சொன்னா கேவலமா பாக்கற மாதிரி நடந்துக்கறாங்க

எல் கே சொன்னது…

@பத்மநாபன்
அதேதான் அண்ணா. மத்தவங்களுக்கு ஹிம்சை தராமல் பண்ணனும்

எல் கே சொன்னது…

@மாதவன்

ஆமாம் . நம்பனும்

எல் கே சொன்னது…

@ராஜி

நெறைய நெறைய பிரச்சனைகள்

எல் கே சொன்னது…

@மனோ
முடிச்சாச்சு மக்கா

எல் கே சொன்னது…

@சேட்டை

ஒரு சிலக் கல்லூரி மாணவர்களால், ஒட்டுமஅத்த கலைக் கல்லூரி மாணவர்களும் பாதிக்கப் படுகிறார்கள் என்பதே உண்மை

எல் கே சொன்னது…

@சாரல்

அவங்க வெறும் பார்வையாளர்கள் தான்


@கருண்

ஆமாங்க

எல் கே சொன்னது…

@கீதா

படித்தேன். உண்மைதான். gr8 ppl always think alike

எல் கே சொன்னது…

@மாதவி

அந்த மாதிரி இப்ப யாரும் கொண்டதறது இல்லை :(

எல் கே சொன்னது…

@மனோ

ஆமாம். எதோ ஒரு வகையில் பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைத்தது

எல் கே சொன்னது…

@கீதா அச்சில்

:( என்ன பண்ண ?

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்
அண்ணா இவர்கள் கொண்டாடும் முறையில் கொண்டாட எனக்கும் விருப்பம் இல்லை

எல் கே சொன்னது…

@ஜெய்

ஆகா தல பதிவுல பின்னூட்டம் எல்லாம் போடறீங்க ? என்ன ஆச்சு ?

எல் கே சொன்னது…

@வேலு

நன்றி

@சித்ரா

ஆமாங்க

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நாங்கள் படிக்கும்போது நெய்வேலியில் எல்லா மாணவ/மாணவிகளிடமும் சைக்கிள் தான். பஸ்ஸில் வருபவர்கள் மிகவும் குறைவு. அதனால் பஸ் டே எல்லாம் கொண்டாடியது இல்லை! சென்னை பஸ் டேக்களில் நடப்பதை பார்த்தால் வேதனை தான் மிஞ்சுகிறது

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//இதையும் பல நாள் எடுக்கமாட்டோம் அது வேற விஷயம்.//
"நானும் ரவுடி தான்"னு சொல்ற...ஒகே ஒகே...ஹா ஹா...:)

//பிப்ரவரி 14 தான் எங்கள் பேருந்து தினம்//
இதை ஆரம்பிச்சு வெச்சவர் செம புத்திசாலினு மட்டும் சொல்லுவேன்... அது நீ இல்லையா? ஒகே ஒகே...:)))

//பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் ஆளுக்கு ஒரு டிரஸ் ,கூடவே எதோ ஒரு பரிசு கண்டிப்பா உண்டு//
Wow...thats very thoughtful...

//மத்தவங்களுக்கு பிரச்சனை தராமல் தங்கள் கொண்டாட்டங்களை நடத்த எப்ப கற்றுக் கொள்வார்களோ //
good one... :)

குறையொன்றுமில்லை. சொன்னது…

இது எல்லாமே எனக்கு புதுசு.

தெய்வசுகந்தி சொன்னது…

//போலீஸ் வர்ற அளவுக்கு வெச்சுக்கிட்டது ரொம்பவே ஓவர்தான்..//
ரிப்பீட்டு!!

மோகன்ஜி சொன்னது…

மாணவர்களுக்கும் பேருந்து ஊழியர்களுக்கும் கொஞ்சம் ஏழாம் பொ ருத்தமாய்த்தான் இருக்கும். அதை சமன் செய்ய கொண்டாடப்பட்ட பஸ்டே
பலகாலமாயே பொதுமக்களுக்கு தொல்லைதரும் நிகழ்ச்சியாய் மாறி விட்டது.
மாணவர்கள் மனது வைத்தால் அந்த நாளை இனிமையாய்,நீங்கள் கொண்டாடினமாதிரி கொண்டாடலாம்.

Anisha Yunus சொன்னது…

இப்பதான் புதுசா இந்த மாதிரி டே கேள்விப்படறேன்... என்ன சொல்ல, பொறுமையின்மை எல்லா இடத்திலும் அதிகமாகிக்கொண்டுதேன் வருது!!

Dubukku சொன்னது…

ஆமா நாங்க படிக்கும் பொதும் பஸ் டேன்னா ட்ரைவர் கண்டக்டருக்கெல்லாம் கொண்டாட்டம் பரிசுகளும் குவாட்டரும் கிடைக்கும்ன்னு அவ்வளவு இணக்கம்..ஹூம்ம்ம்ம்

vanathy சொன்னது…

பஸ் டேயா?? எதுக்கு டே கொண்டாடுறதுன்னு இல்லாம போச்சு. நான் கல்லூரியில் படிச்ச போது இருந்திச்சா என்று தெரியவில்லை. போயிருந்தாலும் என் அப்பா காலை உடைச்சிருப்பார்.

Geetha Sambasivam சொன்னது…

@லக்ஷ்மி, உங்க பதிவிலே கமெண்ட் பெட்டியே திறக்கலையே? முதல்லே திறந்தது, அப்புறம் வரவே இல்லை. :( இங்கே சொல்வதற்கு மன்னிக்கவும்.

ADHI VENKAT சொன்னது…

இதை படித்ததும் நாங்கள் கொண்டாடிய பஸ் டே ஞாபகங்கள் நினைவுக்கு வருகிறது. ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் பரிசுகள் கொடுப்போம். அமைதியாய் தான் நடக்கும். இப்போது தான் அக்கிரமமாய் இருக்கிறது.

கோமதி அரசு சொன்னது…

மாணவர்கள் நீங்கள் சொன்ன மாதிரி ஆட்டம் பாட்டத்தை தங்கள் பஸ்ஸில் வைத்துக் கொண்டு ஓட்டுனர், நடத்துனருக்கு பரிசுகள் கொடுத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியாய் கொண்டாடி இருக்கலாம்.

மாணவர்களுடன் ,மாணவர்கள் போர்வையில் சில காலி பசங்களும், சமுதாய விரோதிகளும் கலந்து கொண்டு இருப்பார்கள் என்று சொல்கிறார்கள்.

இனியாவது இது மாதிரி நடக்காமல் விழிப்புணர்வுடன் மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

கோலா பூரி. சொன்னது…

பஸ் டே அமைதியான முறையில் நடந்தால் நல்லதே.

எல் கே சொன்னது…

@வெங்கட்

வயசானவர்னு ஒத்துக்கரீங்க. சரி சரி

எல் கே சொன்னது…

//இதை ஆரம்பிச்சு வெச்சவர் செம புத்திசாலினு மட்டும் சொல்லுவேன்... அது நீ இல்லையா? ஒகே ஒகே...:)))//

உன் தம்பி உன்னை மாதிரிதான் இருப்பேன் :)))

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

இதெல்லாம் இந்த கால கூத்துக்கள்

எல் கே சொன்னது…

@தெய்வ சுகந்தி

நன்றி

எல் கே சொன்னது…

@மோகன் ஜி

உண்மை. அதற்குதான் ஆரம்பித்தார்கள். ஆனால் அதுவே அவர்களை வெறுக்க காரணம் ஆகி விட்டது இன்று

எல் கே சொன்னது…

@அன்னு
அப்ப நீங்களும் ரொம்ப நாள் முன்னாடி படிச்சீங்களா ??

எல் கே சொன்னது…

@டுபுக்கு

தலைவரே , அப்ப சைட்ல நீங்களும் ஒரு சிலது தள்ளி இருப்பீங்களே ??

எல் கே சொன்னது…

@ஆசியா

நீங்க எல்லாம் ரொம்ப ரொம்ப முன்னாடி படிச்சு இருப்பீங்க. இதெல்லாம் ஒரு பத்து -பதினைந்து வருடங்களுக்கு உள்ளே நடந்த விஷயங்கள்

எல் கே சொன்னது…

@aathi

ஹ்ம்ம் என்ன பண்ண

எல் கே சொன்னது…

@கோமதி அரசு

என்னங்க பண்ண ? கேக்கற மாதிரி தெரியலை. நேத்துக் கூட கலாட்டா நடந்து இருக்கு

எல் கே சொன்னது…

கோமு

நன்றிங்க

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

மற்றவருக்கு தொந்தரவு இல்லாமல் கொண்டாடினால் நல்ல அனுபவம்தான்.

Sriakila சொன்னது…

பஸ்டே தேவையில்லை என்பதை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

Philosophy Prabhakaran சொன்னது…

வலைச்சர ஆசிரியர் பணி காரணமாக தொடர்ச்சியாக வரமுடியவில்லை... பஸ் டே எனக்கும் செம எரிச்சலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விஷயம்...

எல் கே சொன்னது…

@திருமதி ஸ்ரீதர்
உண்மைதான்


@ஸ்ரீஅகிலா
ஹ்ம்ம்


@பிரபாகரன்

பரவாயில்லை