டிசம்பர் 24, 2010

ஜகத்குரு -5- விளக்கம்


தோடகாஷ்டகம்

பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கெளதுகிதா
மம வாரய மோஹமஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

தாங்களே அந்த சாட்சாத் பரமேச்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே! ஹே சங்கர குருவே சரணம்!
*********************************************************************************************
"இந்த ஸ்தோத்திரத்தை பாடி விட்டு அவர் நிக்கக் கூட இல்லை. அங்கிருந்து அவர் கிளம்பி விட்டார் ."

"மாமா எனக்கு ஒரு சந்தேகம் . இதை சொன்னால் ஸ்வர்ண மழை பெய்யும் என்றால் எல்லோரும் சொல்லி எல்லோரும் பணக்காரர் ஆகிடலாமே ?"

"நல்ல கேள்விதான். இதில நீ ஒண்ணு கவனிச்சியோ, சங்கரர் அவருக்காக இதைப் பாடலை. வேற ஒரு கஷ்டப்படற குடும்பத்துக்காக பாடினார். அதே மாதிரி அந்தக் குடும்பத் தலைவியும் இவர்கிட்ட நாங்க கஷ்டப்படறோம் நீங்க உதவி பண்ணுங்கோன்னு இவர்கிட்ட கேட்கலை.  ஏற்கனவே நான் சொன்னமாதிரி அந்தக் காலத்தில் பிராமணன் இன்னொருத்தர்கிட்ட போய் கையேந்த மாட்டா. அடுத்தவா அவாளுக்கு தட்சணையா எண்ணத் தராலோ  அதை மட்டும்தான் வாங்கிப்பா .

பொதுவா சுயநலத்தோட செய்யற எந்த வேண்டுகோளும் நடக்காது. தான் மட்டும் பணக்காரன் ஆகணும்னு நினைத்தால் அது எப்படி சரியாகும் ??

இவர் மட்டும் இல்லை, இன்னொருத்தரும் இதே மாதிரி ஸ்வர்ண மழை பொழிய வச்சிருக்கார். விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவ ஹரிஹரன் என்பவருக்கு உதவியா இருந்த வித்யாரண்யர் கேள்விப்ப்பட்டு இருப்ப தான? அவரும் இதே மாதிரி ஸ்வர்ண மழை பொழிய வைத்தார்னு ஒரு கதை இருக்கு ."

இப்பவும் ஆத்மார்த்த பக்தியோட, இந்த ஸ்தோத்திரத்தை தொடர்ந்து படித்து(உச்சரிப்பு பிழை இன்றி ) வந்தால் கண்டிப்பா அதற்குண்டான பலன் உண்டு. அது சர்வ நிச்சயம். "

"இதற்குப் பிறகு நேராக வீட்டுக்கு வரார். அவருடைய தாய்க்கு மகனை கண்டவுடன் அளவில்லா மகிழ்ச்சி. ஒரு வருஷத்திற்குப் பிறகு இப்பதான் மகனை பார்க்கிறாள். அவரை தூக்கிவச்சி ஆடாத குறைதான். "ஊருக்கே ராஜாவானாலும் தாய்க்கு மகன் தான?"


தாய்க்கு தேவையான உதவிகளை செய்துகொண்டு , வேதப் பாராயணத்தையும் செய்து வந்தார் சங்கரர்.  தன் மகன் படித்து சிறந்து இருப்பதை காண தன் கணவன் இல்லையே என்று தாய் வருந்தும் பொழுதெல்லாம், தேவையான ஆறுதல் மட்டுமல்லாமல் சில தத்துவங்களையும் சொல்லி கொடுக்கிறார். அவருக்கு புரியற மாதிரியான தத்துவங்கள் எளிமையா சொல்றார்."

அப்ப ஒரு நாள்...

-தொடரும்

அன்புடன் எல்கே

33 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

முதல் முதல் கமெண்ட் அடிக்கும் வாய்ப்பு என்று நினைக்கிறேன் முதல்ல அதை பயன் படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்...

ஸ்ரீராம். சொன்னது…

முதலில் ஸ்லோகங்கள் பற்றி...
நித்ய பாராயண ஸ்லோகங்கள் என்ற கேசெட்டில் இந்த ஸ்லோகங்களை சிறு பகுதிகளாக எஸ் பி பி குரலில் கேட்டிருக்கிறேன். முழுசா எங்கே கிடைக்கும் என்று சொல்லவும்
அடுத்து, எல்லோரும் சொன்னால் எல்லாருக்கும் கிடைச்சுடுமே ஏன் கிடைக்கலை என்ற கேள்விக்கு விளக்கம் அருமை.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அடடா வட போச்சே

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நீங்க கவிதை நல்லா எழுதுவீங்கன்னு தெரியும்,ஆன்மீக விஷயங்களும் அத்துபடியா? ம் ம் நடக்கட்டும்

பத்மநாபன் சொன்னது…

சுய நலமின்றி, பேராசையின்றி, வைக்கும் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும்-- நல்ல விளக்கம்.

சுருக்கமான இனிமையான இந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்.

ஜிஜி சொன்னது…

மன்னிக்கவும் கொஞ்ச நாளா உங்க வலைப்பக்கங்களை படிக்கவில்லை.ஆதிசங்கரரைப் பற்றிய உங்களது ஆன்மீகத் தொடர் மிக அருமையாக உள்ளது.தொடர்ந்து எழுதவாழ்த்துக்கள்!

Balaji saravana சொன்னது…

சுயநலமில்லாம செய்யுற எந்தக் காரியமும் அதற்குண்டானப் பலனைப் பெற்றுத்தரும்! இந்தத் தொடரும் அது போலவே LK!
வாழ்த்துக்கள் :)

siva சொன்னது…

அமைதியான
ஆன்மீக பதிவின்
விளக்கங்கள் அருமை
வாழ்த்த வயது இல்லை அண்ணா.

vanathy சொன்னது…

present, Sir.

komu சொன்னது…

காலைல கம்ப்யூட்டர் ஓபன் பண்ணினதும் உங்க புது பதிவு ஏதும் வந்திருக்கான்னுதான் பார்ப்பேன். இப்ப ஜகத்குரு படிக்கும்போது மனசே லேசான மாதிரி இருக்கு. நல்ல முயற்சி.

Lakshmi சொன்னது…

கார்த்திக் ரொம்ப அருமையான விஷயங்களைப்பகிர்ந்து கொள்கிரீர்கள்.
நம் ஆச்சாரியாளைப்பற்றி இன்னும் தெரிந்து கொள்ளணும் என்று எதிர்பார்க்கவைக்கும் தொடர்.

வித்யா சொன்னது…

விளக்கம் சூப்பர்..

அமைதிச்சாரல் சொன்னது…

விளக்கம் அருமை..

அருண் பிரசாத் சொன்னது…

:)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு கார்த்திக். நன்றி.

RVS சொன்னது…

டிட் பிட்ஸ் மாதிரி.. தொடரை... எளிமையா.. அழகா நகர்த்துறீங்க.. க்ரிஸ்ப்-ஆ எழுதறது எப்படி உங்ககிட்ட நான் பாடம் படிக்கணும் போலருக்கு... ;-)

பிழை இல்லாமா சுலோகம் சொல்லணும் அதுதான் முக்கியம்.. ரொம்பச் சரி.. நல்லா இருக்கு வாழ்த்துக்கள்...

கோவை2தில்லி சொன்னது…

ஸ்லோகம் விளக்கங்களுடன் அருமை. சுருங்கச் சொன்னாலும் எளிதாக புரிகிற மாதிரி சொல்லியிருக்கீங்க.

geetha santhanam சொன்னது…

நல்லா இருக்கு. தொடர்ந்து படித்து வருகிறேன்.
ஸ்ரீராம், இந்த தோடகாஷ்டக ஸ்லோகங்களை ரஹ்மான் (நிஜம்தான்!!) அவர்கள் இசையில் நெட்டில் தேடினால் கிடைக்கும். cooltoad என்ற சைட்டிலிருந்து நான் download பண்ணியிருக்கிறேன்.

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்
அண்ணா , எனக்கும் இதன் ஆடியோ எங்கே கிடைக்கும் என்றுத் தெரியவில்லை. கிடைத்தால் லிங்க் தருகிறேன்

எல் கே சொன்னது…

@செந்தில்
அத்துபடின்னு சொல்ல முடியாது. தெரிஞ்ச ஒரு சில விஷயங்களை பகிர்கிறேன் அவ்வளவுதான் நன்றி

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

ரொம்ப நன்றி அண்ணா .

எல் கே சொன்னது…

@ஜிஜி
நேரம் கிடைக்கும் பொழுது படியுங்கள். நன்றி

எல் கே சொன்னது…

@பாலாஜி
இதில் சுயநலம் உண்டு. இதற்காக படித்த பொழுது நெறைய புதிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி

எல் கே சொன்னது…

@சிவா
நன்றி

@வாணி
நன்றி


@

எல் கே சொன்னது…

@கோமதி
நன்றிங்க

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி
ரொம்ப நன்றிமா

@வித்யா
நன்றிங்க

@சாரல்

நன்றி


@அருண்
:)

எல் கே சொன்னது…

@வெங்கட்

நன்றி

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்

இதுக்கு மேல பெருசா எழுதின படிக்கறது கஷ்டம். மத்தபடி எனக்கு சுருக்கமா எழுதலாம் தெரியாது

எல் கே சொன்னது…

@கோவை
நன்றிங்க

@கீதா சந்தானம்
முடிந்தால் லிங்க் கொடுங்கள். நானும் தேடுகிறேன்

geetha santhanam சொன்னது…

subrabatham remix by ar rahman என்று கூகிளில் தேடினால் கிடைக்கும். இந்த youtube link-ல் கேட்கக் கிடைக்கும்.
http://www.youtube.com/watch?v=d966LvEk1dc

philosophy prabhakaran சொன்னது…

Present...

எல் கே சொன்னது…

நன்றி கீதா மற்றும் பிரபாகரன்

சே.குமார் சொன்னது…

ஆதிசங்கரரைப் பற்றிய உங்களது ஆன்மீகத் தொடர் மிக அருமையாக உள்ளது.தொடர்ந்து எழுதவாழ்த்துக்கள்!