டிசம்பர் 16, 2010

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்...

பெண் குரலில் ஒலித்த பத்துப் பாடல்களில் எனக்குப் பிடித்தப் பத்து பாடல்களை வரிசைப் படுத்துமாறு  "அருண் பிரசாத் " அழைத்திருந்தார்.  இதோ எனது பத்து 

"எவனோ ஒருவன் வாசிக்கிறான் " 

அலைப்பாயுதே படத்தில் வைரமுத்துவின் வரிகளுக்கு உயிர் ஊட்டியவர் மறைந்த பாடகி சுவர்ணலதா. என்ன ஒரு குரல். அவரது பாடலை அருகில் இருந்து கேட்கத்தான் இறைவன் அவரை சீக்கிரம் அழைத்துக் கொண்டானோ ?? காதலனை பிரிந்த காதலியின் மனநிலையை பிரதிபலிக்கும் அருமையான பாடல் . இதில் எனக்குப் பிடித்த வரிகள்

"புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்"

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

"அக்னி நட்சத்திரம்", மணிரத்தினத்தின் இந்தப் படத்தில், இந்தப் பாடலை பாடி இருப்பவர் சின்னக் குயில் சித்ரா. தன் காதலை காதலனிடம் சொல்வதாக அமைந்திருக்கும் இந்தப் பாடல். எனக்குப் பிடித்த வரிகள் ,

"உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப் பார் கட்டிப் பார் தேகம் வேர்க்க"

யமுனை ஆற்றிலே
"தளபதி" இன்னுமொரு மணிரத்தினத்தின் படம். இதில் வரும் அனைத்துப் பாடல்களுமே அருமை என்றாலும். மிதாளி பாடிய "யமுனை ஆற்றிலே " என்றுத் துவங்கும் இந்தப் பாடல் மனதை வருடி செல்லும் தென்றலாய் இருக்கும். எனக்குப் பிடித்த வரிகள் 

"ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்பு தெல்லையோ..."

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

"பட்டணத்தில் பூதம்" என்றப் படத்தில் கவியரசரின் வரிகளுக்கு உயிர் குடுத்து இருப்பவர் சுசிலா அம்மா. தன்னை திருமண செய்ய சீக்கிரம் நாள் குறிக்க காதலனை வேண்டுகிறாள் காதலி. நான் ரசித்த வரிகள் 

"நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ
மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணை"

இந்தப் பாடலுக்கு வேறு ஒரு சிறப்பு உண்டு. அதை யாரவது சரியாக சொல்கிறார்களா என்று பார்ப்போம். 
காற்றில் எந்தன் கீதம்

 ஜானகி அம்மாவின் மிக சிறந்தப் பாடல்களில் ஒன்று. ஜானி படத்திற்காக இவர் படிய இந்தப் பாடலில் எனக்குப் பிடித்தது என்று எந்த ஒரு குறிப்பிட்ட வரிகளையும் சொல்வது மிகக் கடினம். பாட்டு முழுவதுமே பிடிக்கும்.

கண்ணா... கருமை நிறக் கண்ணா

கவியரசரின் மற்றொரு முத்தான படைப்பு. நிறத்தால் தன்னை ஒதுக்குவர்களை என்னை எத்தனையில் கடவுளிடம் முறையிடுவதாய் அமைந்த பாடல் .சுசிலா அம்மாவை தவிர வேறு  யார் இந்தப் பாடலை இவ்வளவு பொருத்தமாகப் பாட இயலும் ??

"மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா"

 வாராய் என் தோழி வாராயோ

 அண்ணன் தங்கை பாசத்திற்கு திரை உலகில் இன்றும் உதாரணமாய் சொல்லப்படும் பாசமலர் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல். திருமணத்தின் பொழுது பாடப் படுவதாய்.

"மலராத பெண்மை மலரும் முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும் முன்பு விளங்காத கேள்வி விளங்கும்" . ஆழமான அர்த்தம் உள்ள வரிகளுக்கு சொந்தக்காரார் நமது கவியரசர். 

யாருக்கு மாப்பிள்ளை யாரோ

 இந்தப் பாடல் இடம் பெற்றப் படம் "பார்த்தாலே பசி தீரும் " சுசிலா அம்மாவின் தேன் குரலில், கவியரசரின் பாடல் .

 "கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
அதில் கைகலந்து காதல் புரிவாரோ"

காதோடு தான் நான் பாடுவேன்

எல்.ஆர் ஈஸ்வரி அவர்களின் குரலில் இந்தப் பாடல் இடம் பெற்றப் படம் வெள்ளி விழா. அந்தக் குரலில் உள்ள காதலை கவனியுங்கள். இனி இந்த மாதிரி பாடகிகள் யாரும் கிடைப்பார்களா ??

"காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன்"

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி

தன் குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடும் தாயின் வரிகளாக அமைந்தப் பாடல். சிப்பிக்குள் முத்து படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை பாடியிருப்பவர் சுசிலா அம்மா. எனக்கு இதன் மலையாள பதிப்பை ரொம்பப் பிடிக்கும். தமிழ் வரிகளை விட  மலையாள  வரிகள் நன்றாக இருக்கும் 

இதை தொடர நான் அழைப்பது அமைதி சாரல், ஆர்வீ எஸ் மற்றும் நம்ம தக்குடு  
 
அன்புடன் எல்கே

48 கருத்துகள்:

asiya omar சொன்னது…

அருமையான தேர்வு.

Balaji saravana சொன்னது…

கலவையான தொகுப்பு LK!
உங்க பட்டியல்ல உள்ள ஓல்ட் சாங்ஸ் கேட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சு..

Madhavan Srinivasagopalan சொன்னது…

சூப்பர் செலெக்ஷன்.. எல்லாம நல்லா பாடல்கள்தான்..

வெறும்பய சொன்னது…

நல்ல தேர்வுகள்... அனைத்துமே அருமையான பாடல்கள்..

Nithu Bala சொன்னது…

The songs selection are so good..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பெரியப்பா எல்லாமே நல்ல செலக்‌ஷன் + கலெக்‌ஷன்

தமிழ்மணத்துல இணைக்க ட்ரை பண்ணுனேன்,முடியல்

Chitra சொன்னது…

Good. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

நல்ல பாடல்கள்.. thanks

vanathy சொன்னது…

super selections.

nis சொன்னது…

நல்ல தேர்வுகள் ,,அனால் சில பாடல்களை நான் கேட்ட நினைவு இல்லை

பெயரில்லா சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு LK ....
எல்லோரும் ரசிக்குற பாட்டுகள்...
அருமையான தொகுப்பு

வித்யா சொன்னது…

நின்னுக்கோரி வர்ணம் எப்போதும் என் ஃபேவரைட். காலேஜ் நாட்களில் க்ளாசில் உட்கார்ந்து பாடிக்கொண்டிருப்போம்:)

நல்ல தேர்வு..

siva சொன்னது…

present sir..

good selection..

karthikkumar சொன்னது…

தொகுப்பு அருமை.

அருண் பிரசாத் சொன்னது…

இதுவரை யாரும் சொல்லாத பாடல் தேர்வுகள்... சூப்பர் எல் கே....


அது சரி,,, சைட்ல என்ன கீதை?

komu சொன்னது…

அருமையான பாடல் தொகுப்புகள்.

சே.குமார் சொன்னது…

நல்ல தேர்வுகள்... அனைத்துமே அருமையான பாடல்கள்..

அமைதிச்சாரல் சொன்னது…

ஆஹா .. எல்லாமே எனக்கும் பிடிச்ச பாடல்கள். சீக்கிரமே தொடர்கிறேன்.

ஹுஸைனம்மா சொன்னது…

/சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி//

கண்ணதாசன், காங்கிரஸில் சேர வேண்டும் என்ற விருப்பத்தை, சிவகாமியின் மகனான காமராஜரிடம் மறைமுகமாகத் தெரிவிக்க எழுதிய பாட்டு இது!!

சரியாச் சொல்லிருக்கேனா?

RVS சொன்னது…

தொடர் பதிவா ஜமாய்ச்சுடுவோம்!!! எல்.கே. நீங்க கூப்ட்டதால கொஞ்சம் டயம் குடுங்க.. உழைச்சு நல்லதா போடறேன்..

எங்க.. நீங்களே நிறைய சூப்பர் பாடல்கள் போட்டுட்டீங்க.. கொஞ்சம் கஷ்டம்தான்.. முயற்சி பண்றேன்..
சினிமாப் பாட்டுதான் போடணும்ன்னு இல்லையே?
நன்றி. ;-)

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

அனைத்துப் பாடல்களும் அருமை.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கார்த்திக், அத்தனைப் பாடல்களுமே நல்ல பாடல்கள். பகிர்வுக்கு நன்றி.

R.Gopi சொன்னது…

ஜி....

அனைத்து பாடல்களுமே தேன் ரகம்...

Jaleela Kamal சொன்னது…

மிக அருமையான் பாடல் தேர்வு.
http://samaiyalattakaasam.blogspot.com

S பாரதி வைதேகி சொன்னது…

நல்ல தேர்வு. வாழ்த்துக்கள்.

கோவை2தில்லி சொன்னது…

அனைத்து பாடல்களுமே எனக்கு பிடித்த பாடல்கள். நல்ல தேர்வு. நன்றி.

ஆமினா சொன்னது…

வடபத்ர ஷாஹிக்கி வரஹால லாலி
ராஜீவ நேத்ருநிகி ரத்னால லாலி///

கேக்க கேக்க இனிமையா இருக்கும். எனக்கும் தெலுங்கு பாட்டு தான் பிடிக்கும். அதுல தான் பாட்டுக்கு உயிர் இருக்கும்....

நல்ல பாடல் தேர்வுகள்

Harini Sree சொன்னது…

உங்களுக்கு பிடித்த பாடல்களில் நான்கு, ஐந்து எனக்கும் மிக பிடித்தவை.

philosophy prabhakaran சொன்னது…

நல்ல தேர்வுகள்... காப்பி அடிப்பதை தடுக்க எதோ கோடிங் போட்டிருக்கிறீர்கள் போல... அதனால் உங்களது வரிகளை மேற்கோள் காட்டி பாராட்ட முடியவில்லை...

ஹேமா சொன்னது…

எல்லாமே நல்ல பாடல்கள் தந்திட்டு லிங்க் தராம விட்டா எப்பிடி கார்த்திக்.உடனே கேக்கணும்போல இருக்கு !

சுசி சொன்னது…

நல்ல தெரிவு கார்த்திக்.

LK சொன்னது…

@ஆசியா
நன்றி சகோ

@பாலாஜி

ஹ்ம்ம் நன்றி

@மாதவன்
நன்றி

@ஜெயந்த்
நன்றி

@நிது
நன்றி

@செந்தில்
சித்தப்பு , எதோ பிரச்சனை இப்ப சரி ஆய்டுச்சு

@சித்ரா
நன்றி

@ஆனந்தி

நன்றி
@வாணி
நன்றி

@நிஸ்
எல்லாம் ரொம்பப் பழைய பாடல்

ராமலக்ஷ்மி சொன்னது…

எல்லாமே அருமையான பாடல்கள். பல எனக்கும் பிடித்தமானவை.

ஹுஸைனம்மா பதில் சரிதானா சொல்லுங்க:)! தெரிஞ்சுக்கறோம் நாங்களும்.

அப்பாவி தங்கமணி சொன்னது…

Nice songs... I like all of them listed here as well... adhukku link sethu kuduthu irundhaa appadiye sowkariyamaa kettu iruppom... summa sonnen...okay thanks

மாணவன் சொன்னது…

அனைத்துப் பாடல்களுமே சிறந்த பாடல்கள் தான் அருமையான தொகுப்பு சார்...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

பதிவுலகில் பாபு சொன்னது…

அருமையான பாடல்கள்.. நல்ல தேர்வு..

பத்மநாபன் சொன்னது…

அருமையான தேர்வு ..கிட்ட தட்ட ஒரே ரசனை ..இதில் காற்றில் ... எந்தன் கீதம் ஜானகியம்மா ..ஜானி ஸ்ரீதேவி.. காம்பினேஷன் அட்டகாசம் சரியான தேர்வு என் பட்டியலில் முதல் பாட்டு..

தக்குடுபாண்டி சொன்னது…

பத்து இல்லாட்டியும் அஞ்சாவது போடறேன் சரியா!!..:)

(கீதை பில்டப்பு எல்லாம் பலமா இருக்கு சைடுல)..:P

ஸ்ரீராம். சொன்னது…

முதல் பாடல் கேட்டதில்லை. மற்ற எல்லாப் பாடல்களும் அருமையான பாடல்கள். குறிப்பாய் சுசீலா பாடல்கள்.

பார்வையாளன் சொன்னது…

நல்ல தேர்வு

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

பத்தும் இனிமை.

செந்தில்குமார் சொன்னது…

நல்ல தொகுப்பு கார்த்திக்....

ஒருமாத கால பிரிவிற்க்கு பின் மிண்டும் வலைதலத்தில் இன்றுமுதல் இனைகிரேன்

LK சொன்னது…

@கல்பனா
நன்றி

@வித்யா
ஆமாம், படம் வந்த காலத்தில் அனைவரையும் முனுமுனுக்க வைத்த பாடல்

@சிவா
நன்றி

@கார்த்திக்
நன்றி

@அருண்
நன்றி தல

@கோமதி
நன்றிங்க

@குமார்
நன்றி

@சாரல்
நன்றி

@ஹுசைனம்மா
ஹ்ம்ம் தப்பு..காமராஜருக்கு தூது சென்ற பாடல் இது. ஆனால் நீங்கள் சொன்ன சந்தர்ப்பம் தவறு

LK சொன்னது…

@ஆர்வீஎஸ்

நன்றி


@புவனேஸ்வரி

நன்றி

@வெங்கட்
நன்றி

@கோபி
நன்றி

@ஜலீலா

நன்றி

@பாரதி
நன்றிங்க

@கோவை

நன்றி

@ஆமீனா
ஹா. சரியாய் சொல்லிட்டீங்க

@ஹரிணி

ஹ்ம்ம் சரி

@பிரபாகரன்

ஆமாம்


@ஹேமா
இதுவே பெரிய பதிவா போய்டுச்சி ..இன்னும் பாடலும் இணைத்தால்


@சுசி
நன்றி

@ராமலக்ஷ்மி
நன்றிங்க

@அப்பாவி
நன்றி.

@மாணவன்
நன்றி

@பாபு
நன்றி

@பத்மநாபன்
அண்ணா, புது பாடல்கள் இந்த அளவிற்கு மனதில் ஒட்டவில்லை

@தக்குடு
சும்மா கதை விடாத .. நீ இருவது பாட்டு போடலாம்


@ஸ்ரீராம்
நன்றி அண்ணா

தெய்வசுகந்தி சொன்னது…

நல்ல தொகுப்பு!

ஹுஸைனம்மா சொன்னது…

//@ஹுசைனம்மா
ஹ்ம்ம் தப்பு..காமராஜருக்கு தூது சென்ற பாடல் இது. ஆனால் நீங்கள் சொன்ன சந்தர்ப்பம் தவறு//

சரியான பதிலைச் சொல்லுங்களேன்!

எல் கே சொன்னது…

@ஹுசைனம்மா
இருவரும் மனக் கசப்பால் பிரிந்த காலம் அது. திரும்பி எப்படி நேரடியாக சென்று பேசவது என்று தயக்கம்.இந்தப் பாடல் தான் தூது,.

ஹுஸைனம்மா சொன்னது…

தகவலுக்கு நன்றி எல்.கே.