Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin
Tuesday, November 26

Pages

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

ஜகத்குரு -3-குருகுலம்

கருணா வருணாலய பாலய மாம் பவஸாகர துக்க விதூன ஹ்ருதம் ரசயாகிலதர்சன தத்வவிதம் பவ சங்கர தேசிக மே சரணம்!! பொருள் (நன்றி கீதா சாம்பசிவம் ) க...

கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்
ரசயாகிலதர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

பொருள் (நன்றி கீதா சாம்பசிவம் )

குருவே, எனக்கு எதுவுமே தெரியாதே! நான் நிர்மூடன்! எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்!
கருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள். என்னை ஞாநவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி! தங்களைச் சரணடைகின்றேன்.

************************************************************************************************

"குருகுலம் பத்தி சொல்றேள்னு சொன்னீங்க . குருகுலம்னா இப்ப இருக்கற ரெசிடென்சியல் பள்ளிக்கூடம் மாதிரியா ?"

"அங்கேயே தங்கி படிக்கணும் என்பதைத் தவிர இரண்டுக்கும் வேற எந்த ஒற்றுமையும் இல்லை . குருகுலத்தில் வெறும் படிப்பு மட்டும் சொல்லித் தரலை. வாழ்க்கைக்கு வேணும்கற விஷயங்கள் எல்லாம் சொல்லப்பட்டு இருக்கு.

படிக்கற நேரம் தவிர மத்த நேரத்தில் சில வேலைகளும் செஞ்சாகனும். எனவே குருகுலத்தை முடிச்சிட்டு வர ஒரு மாணவன், வாழ்க்கையில் போராட தேவையான தகுதி பெற்று இருப்பான் . சொகுசான படுக்கைகள் போன்ற விஷயங்கள் இருக்காது. அது ராஜகுமாரனா இருந்தாலும் சரி, சாதாரண குடும்பத்தை சேர்ந்தவனா இருந்தாலும் சரி எல்லோரும் ஒரே மாதிரித்தான் இருந்தாகணும். இப்ப புரிஞ்சதா ரெண்டுக்கும் வித்யாசம் ?"

"ஓரளவு புரிஞ்சது . நீங்க மேலே சொல்லுங்க "

"என்னதான் மகன் குருகுலம் போய்தான் ஆகனும்னு இருந்தாலும் ,ஒரே மகனா இருந்ததால் தாய்க்கு மனசில்லை அனுப்ப. தாயை சமாதானப் படுத்தி பிறகு குருகுலம் போனார் சங்கரர் "

"குருகுலத்திற்கு சென்ற சங்கரர், முறைப்படி கற்க வேண்டிய பாடங்களையும், வேதங்களையும் கற்றார் ."

"குருகுலம் முடிஞ்சு தன் வீட்டிற்கு திரும்பும் நாளும் வந்ததது .இப்ப இருக்கற மாதிரி வாகன வசதிகள் எல்லாம் இல்லை. கால்நடையாக
திரும்பி வந்தார். பிரம்மச்சாரிகள் பிக்ஷை எடுத்தே உண்ண வேண்டும் என்ற நியதிக்கு ஏற்ப எப்ப தேவையோ அப்ப பிக்ஷை எடுக்கிறார்.

இதுல ஒரு விஷயம் . அந்த வேளைக்கு என்னத்தேவையோ அதை மட்டுமே பிக்ஷை எடுக்க வேண்டும். தேவைக்கு அதிகமா எதையும் வாங்கக் கூடாது ."

அந்த மாதிரி ஒரு சமயத்தில்....


அன்புடன் எல்கே

31 கருத்துகள்

Praveenkumar சொன்னது…

சுவாரஸ்யமான தகவல்கள்.

Chitra சொன்னது…

அருமை.... பகிர்வுக்கு நன்றிங்க... தொடருங்கள்.

Praveenkumar சொன்னது…

கல்பனா, இங்கு எல்கே.அண்ணன் பிலாக்ல.. முதல் வடை எடுத்துவிட்டேன்னு நினைக்குறேன்.

குருகுலம் பற்றிய தகவல் அருமை.

பெயரில்லா சொன்னது…

அருமை.... பகிர்வுக்கு நன்றி... தொடருங்கள்

அருண் பிரசாத் சொன்னது…

நல்லா போகுது எல் கே....

தமிழ் மணத்துல சப்மிட் பண்ணிட்டேன்...

Madhavan Srinivasagopalan சொன்னது…

நல்லா விஷயங்கள்.. நடத்துங்க.. நடத்துங்க..

குறையொன்றுமில்லை. சொன்னது…

கார்த்திக் ரொம்ப நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ரீங்க. அதுவும் ஸ்லோகத்துக்கு அர்த்தமும் சொல்லும்போது ரொம்ப நல்லா ரசிக்க முடிகிரது. வாழ்த்துக்கள்.

கோலா பூரி. சொன்னது…

ஜகத்குரு படிக்கவே மிகவும் சுவாரஸ்யமா இருக்கு. நன்றி

ADHI VENKAT சொன்னது…

சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருக்கிறது. தொடருங்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு. தொடரட்டும் இந்த பகிர்வு.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

தொடருங்கள்..

RVS சொன்னது…

அருமையான பதிவு. நல்லா போகுது.
சங்கரரின் குருகுலவாசத்தில் கோவிந்த பகவத்பாதாள் கௌடபாதர் போன்றோர் பற்றியும் எழுதியிருக்கலாம். பதிவின் நீளம் கருதி எழுதவில்லை என நினைக்கிறேன். குருவான கோவிந்த பகவத்பாதாளை நினைத்து தான் சங்கரர் "பஜ கோவிந்தம்" என்று எழுதியதாக படித்திருக்கிறேன். ;-)

virutcham சொன்னது…

குருகுல பாடமா ? சொல்லுங்க சொல்லுங்க.

ஸ்ரீராம். சொன்னது…

ரொம்ப நீளமாக இல்லாமல் அழகாகப் போகிறது. தொடருங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் படிப்பதுதான் ஈசியும், மனதில் பதியவும் உதவுகிறது.

பத்மநாபன் சொன்னது…

ஸ்லோக விளக்கம் சிறப்பாக இருந்தது கீதா மேடத்துக்கு நன்றி...

தேவைக்கு மிகும் பொழுது தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது...குருகுலம் பற்றிய செய்திகள் அருமை..

எல் கே சொன்னது…

@பிரவீன்குமார்

முதல் வருகைக்கு நன்றி .வடை உங்களுக்குத் தான்

எல் கே சொன்னது…

@கல்பனா

நன்றி

@அருண்
நன்றி தல


@மாதவன்
நன்றிங்க

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி
ரொம்ப நன்றிமா. ஸ்லோகத்துக்கு அர்த்தம் கீதா மாமி தந்தது

எல் கே சொன்னது…

@கோமதி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@கோவை

நன்றி

எல் கே சொன்னது…

@வெங்கட்

நன்றி

@சாரல்

நன்றிங்க

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்

அது எல்லாம் அவர் துறவறம் வாங்கினப் பிறகு நடந்தது. பின்னால வரும்

எல் கே சொன்னது…

@விருட்சம்

ஹ்ம்ம் உங்களுக்குத் தெரியாத விஷயமா ... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

அண்ணா, பெருசா கொடுத்த படிக்கமாட்டங்க நெறையப் பேரு. அதான் கொஞ்சம் அதிகப் பதிவுகள் வந்தாலும் சிறு சிறு பகுதியாப் போடறேன்

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

நன்றி

Gayathri சொன்னது…

niraya therindhukolla mudikirathu
thodarungal

THOPPITHOPPI சொன்னது…

அண்ணே அருமை

தொடருங்கள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை.... பகிர்வுக்கு நன்றிங்க... தொடருங்கள்.

Vaitheki சொன்னது…

மிக உயர்ந்த கருத்துக்கள்! தொடரவும் பகிர்வுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

சிறப்பா சொல்லிட்டு வர்றீங்க LK!

Harini Nagarajan சொன்னது…

இந்த போஸ்டை பாக்கும் பொது மைலாபூர்ல ஒரு மாமா இருக்கார் அவர் ஞாபகம் தான் வரர்து. அவர பத்தி ஒரு போஸ்ட் போடறேன். ரொம்ப விஷியங்கள் தெரியாது ஆனா நீங்க சொன்ன விஷயம் நேக்கு சட்டுன்னு அவர தான் ஞாபக படுத்தறது.