காலை அலுவலகம் செல்லும்பொழுது டாட்டாவுடன் "பார்த்து பத்திரமா போயிட்டு வாப்பா " என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறாள். அதே போல் வீடு தி...
குழந்தைகள் இருக்கும் வீட்டில் கொலு வைக்க யோசிப்பார், குழந்தைகள் பொம்மைகளை எடுத்து விடுமோ என்று. ஆனால் எனக்கு அந்த கவலை இல்லை, அந்தப் பக்கமே இவள் செல்ல மாட்டாள். உம்மாச்சி இருக்குனு வணங்கி விட்டு வந்து விடுவாள்.
அவளுக்கு எல்லாமே பிடித்திருக்கிறது, இரண்டு விஷயங்களைத் தவிர. ஒன்று சாப்பிடுவது, இரண்டு தூங்குவது. இந்த இரண்டும் அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இரவு பதினொன்று ஆகாமல் தூங்குவது இல்லை, அதேபோல் காலையில் ஏழு மணிக்கு எழுந்துவிடுவாள் .
திவ்யா பயப்படற ஒரே ஒரு விஷயம் குக்கர் விசில். மற்ற எதற்கும் யாருக்கும் பயப் படாத அவள், குக்கர் விசில் வந்தாள் அழ ஆரம்பித்துவிடுவாள். எப்படி மாற்றுவது என்றுத் தெரியவில்லை ???
கடந்த ஞாயிறு அன்று முறைப்படி அவளுக்கு எழுதக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். நெல்லில் எழுத வேண்டும் என்றார்கள். நெல் கிடைக்கவில்லை அதனால் அரிசியில் அவள் கைப்பிடித்து எழுத கற்றுக் கொடுத்தேன். ஏற்கனவே ,அவளுக்கு ரைம்ஸ் ,எழுத்துக்கள் போன்றவை சொல்லிக் கொடுத்து இருந்தாலும், முறையாக ஆரம்பித்தது இப்பொழுதுதான்.
ஒரு வழியா, ஒன்றுக்குப் பிறகு இரண்டு பின்தான் மூன்று என்று ஒத்துக் கொண்டிருக்கிறாள். பத்து வரை சரியாக சொல்ல ஆரம்பித்து இருக்கிறாள்.
நெறைய பேர் பள்ளியில் இப்பொழுதே சேர்க்க சொன்னாலும், எங்களுக்கு விருப்பம் இல்லை. பள்ளி செல்ல ஆரம்பித்தாள், பின் கல்லூரி முடிக்கும்வரை பாடங்கள்தான் திரும்பத் திரும்ப. எனவே இன்னும் ஒரு ஆறு மாதம் சுதந்திரமாய், சுற்றித் திரியட்டும். இந்த வயதில், பள்ளியில் என்ன சொல்லித் தருவார்களோ அதை வீட்டிலேயே சொல்லித் தர நாங்கள் இருக்கிறோம். மகளுக்கு சொல்லித் தருவதை விட தாய்க்கு ஆனந்தம் தருவது வேறு எது ???
அன்புடன் எல்கே
74 கருத்துகள்
//எனவே இன்னும் ஒரு ஆறு மாதம் சுதந்திரமாய், சுற்றித் திரியட்டும். இந்த வயதில், பள்ளியில் என்ன சொல்லித் தருவார்களோ அதை வீட்டிலேயே சொல்லித் தர நாங்கள் இருக்கிறோம். மகளுக்கு சொல்லித் தருவதை விட தாய்க்கு ஆனந்தம் தருவது வேறு எது ???//
100% உண்மை.. பள்ளியில் சேர்த்தால் குழந்தைத்தன்மை போய்விடும்.
//ஒரு வழியா, ஒன்றுக்குப் பிறகு இரண்டு பின்தான் மூன்று என்று ஒத்துக் கொண்டிருக்கிறாள்.//
ஒரே வரியில் உங்கள் சில வார உழைப்பை ஒளித்து வைத்துவிட்டீர்கள் LK :)
நெறைய பேர் பள்ளியில் இப்பொழுதே சேர்க்க சொன்னாலும், எங்களுக்கு விருப்பம் இல்லை. பள்ளி செல்ல ஆரம்பித்தாள், பின் கல்லூரி முடிக்கும்வரை பாடங்கள்தான் திரும்பத் திரும்ப. எனவே இன்னும் ஒரு ஆறு மாதம் சுதந்திரமாய், சுற்றித் திரியட்டும்.
...... Thats a good decision too. She is smart!
ஒரு வகையில் இப்போதே பள்ளிக்கு அனுப்புவதும் நல்லது தான்.. இல்லையென்றால் திடீரென்று நான்கு மணி நேரம் பிரிவு என்பது வருத்தமளிக்கவே செய்யும் குழந்தைக்கும் தாய்க்கும்..
//அதை வீட்டிலேயே சொல்லித் தர நாங்கள் இருக்கிறோம். மகளுக்கு சொல்லித் தருவதை விட தாய்க்கு ஆனந்தம் தருவது வேறு எது ???//
அது உங்கள மாதிரி பொறுமைசாலிகளுக்குத் தான் LK :)
ஒருமுறை எல்.கே.ஜி படித்துக் கொண்டிருந்த என் அக்கா பொண்ணுக்கு ஒரு ரைம்ஸ் சொல்லி தர்றதுக்குள்ள தாவு தீந்துடுச்சு..
அதுக்கப்புறம் புக்ஸ் அப்படின்னாலே ஆளை விடு சாமின்னு அவ இல்ல, நான் ஓட வேண்டியதாயிடுச்சு :))
சரியான முடிவு. மூன்று-நான்கு வயது வரை பென்சில் பிடிக்கும் அளவு கைகளில் பலம் வருவதில்லை. குழந்தையும் நீங்களும் இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியில் திளைத்திருங்கள். :)
குழந்தையைக் குழந்தையா வளரவிட்டு ரசிக்கணும்.
இப்பவே பள்ளிக்கூடமுன்னா சுமை தூக்க வேணும். அவ்வளவு புத்தக மூட்டை:(
//ஒரு வழியா, ஒன்றுக்குப் பிறகு இரண்டு பின்தான் மூன்று என்று ஒத்துக் கொண்டிருக்கிறாள்//
பசங்களுடைய அகராதியே தனிதான். என் தம்பிபெண் எட்டு,ஒன்பது, தத்து என்று முடிப்பாள் :-)))))
என் மகளும் குக்கர் விசிலுக்கு பயந்தால், பின் நான் அவளை தூக்கி கொண்டு விசில் வரும்போது அதன் அருகில் சென்று அதன் கைபிடியை தொட்டு காண்பித்தேன், பிறகு அவளையும் தொடச்சொன்னேன். முதலில் தயங்கியவள் பயந்தவள் இப்பொழுது பழகிவிட்டால்
பள்ளிக்கு இந்த வயதில் அனுப்புவது அவர் விளையாட, புத்தக சுமையை சுமக்க அல்ல, மொரிசியஸ்ல் அவள் வேறு குழந்தைகளை பார்க்கமுடிவதில்லை, அதனால் பள்ளிக்கு 2 மணி நேரம் அனுப்பி மற்ற குழந்தைகளுடன் பழக வைக்கிறோம். உங்கள் நிலை எப்படியோ அங்கு தெரியவில்லை...
திவ்யா க்யூட்:)
எப்போதும் குக்கர் வைத்ததும் அவளிடம் சொல்லுங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் விசில் அடிக்கப் போகிறது, தயாராக இரு என்று. அப்படியே பழகிவிடும்.
மேடம் பெரிய மனசுபண்ணி, 1-2-3 தான் கரெக்ட்னு உங்க வழிக்கு வந்துட்டாங்களா!!
// அதை வீட்டிலேயே சொல்லித் தர நாங்கள் இருக்கிறோம். மகளுக்கு சொல்லித் தருவதை விட தாய்க்கு ஆனந்தம் தருவது வேறு எது ???
:)
குக்கரில் விசில் சத்தம் வரும்பொழுது, குழந்தையின் கவனத்தை திசை திருப்பும் வகையில் ஏதாவது
பேச்சு கொடுத்து பாருங்களேன்.
//மகளுக்கு சொல்லித் தருவதை விட தாய்க்கு ஆனந்தம் தருவது வேறு எது//
ஆமாங்க.. வாழ்த்துக்கள்
திவ்யா பயப்படற ஒரே ஒரு விஷயம் குக்கர் விசில்.////
நானும் சின்ன வயதில் அப்படிதான் இருந்தேன் :)
@தினேஷ்
அதேதான் காரணம்
@பாலாஜி
வாரமா ? மாதக் கணக்கில் போராடி இருக்கேன்
@சித்ரா
நன்றி
@வெறும்பய
நாங்கள் இல்லாமல் அவள் தனியாக இருப்பாள் ஜெயந்த்
@பாலாஜி
இதெல்லாம் தங்கமணி பார்துபாங்க
@வெங்கட்
சரிதான். இதை பற்றி வேறொரு விஷயம் இருக்கு அதை ஒரு பதிவாக எழுதுகிறேன்
@துளசி
டீச்சர் அதுதான் காரணம். எனக்கு அதில் விருப்பம் இல்லை
@சாரல்
ஆஹா , இன்னும் நெறைய இருக்கு சொல்றேன் அப்புறம்
@அருண்
சென்னையில் நிலைமை வேறு. அவள் அனைத்து குழந்தைகளுடனும் நன்கு விளையாடுவாள்
@வித்யா
நன்றி
@ஹுசைனம்மா
முயற்சிக்கிறேன். ஆமாம். இப்பதான் ஒரு நாலு நாளா ..
@குந்தவை
:)
@சை.கொ.ப
முயற்சிப்போம்
@இளங்கோ
நன்றி
@சௌந்தர்
ஓஹோ
//எனவே இன்னும் ஒரு ஆறு மாதம் சுதந்திரமாய், சுற்றித் திரியட்டும். இந்த வயதில், பள்ளியில் என்ன சொல்லித் தருவார்களோ அதை வீட்டிலேயே சொல்லித் தர நாங்கள் இருக்கிறோம். //
இதுதாங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு . ரொம்ப சின்ன வயசுல எதுக்குத்தான் பள்ளிக்கூடம் அனுப்பரான்களோ ..!! கண்டிப்பா உங்களை பாராட்டியே ஆகணும் .. வாழ்த்துக்கள் அண்ணா ..
'குக்கர் விசில்' -- பால் குக்கர் என்றால்.. விசிலை தனியே எடுத்து அவளிடம் ஊத சொல்லிக் கொடுங்கள்.... பிறகு அவளுக்கு ஒரு ஊதல் வாங்கி கொடுங்கள்.... பால் குக்கர் ஊதும் பொது அவளும் அவளுடைய ஊதலை ஊதுமாறு சொல்லுங்கள்.. -- It worked in my case.
unmai... innum sila mathangal kazhththu school anuppalam... athuvarai sittena sirakatikkattum.
namum rasikka intha vayathai vittal veru yeathu?
ஹிஹி சுவர்நாவும் இப்படிதான் இருந்த குக்கர் சத்தத்திற்கு பாயபடுவ அதனால குக்கர் வைகர்த்தே இதுக்குன்னு ரைஸ் குக்கர் வாங்கிட்டோம்..வேற வழி ???
உங்க முடிவு சரி தன மெதுவா ஸ்கூல் போகட்டும்...
அட திவ்யா பற்றிய பதிவா?வெரி இண்ட்ரெஸ்டிங்.
nice
//திவ்யா பயப்படற ஒரே ஒரு விஷயம் குக்கர் விசில். மற்ற எதற்கும் யாருக்கும் பயப் படாத அவள், குக்கர் விசில் வந்தாள் அழ ஆரம்பித்துவிடுவாள்.// என் பொண்ணும் தான்...அதனல் குக்கரை அதிகம் பயன்படுத்துவதில்லை...சோ ஸ்வீட் பாப்பா...
ஜுஜ்ஜூவும் ஆரம்பத்தில் குக்கர் விசிலுக்கு பயந்துதான் இருந்தான். அதனுடன் சேர்த்து கார்பேஜ் டிஸ்போசர் சத்தத்திற்கும். பின் குக்கரை வைத்து நாங்கள் 'START, STOP' விளையாட ஆரம்பித்தோம்...குக்கர் விசில் வரும் நேரம் பார்த்து 'start' சொல்லி விளையாடுவோம். மூன்று விசில் முடிந்தவுடன் ஓகே...ஓகே done.. என்று சொல்லி ஸ்டவ் ஆஃப் செய்து விடுவோம். முதல் நாளில் ப்ளான் பண்ணி மூன்று வேளையுமே குக்கர் வைத்து சமைப்பது போன்று பார்த்துக்கொண்டேன்...மடியில் உட்கார வைத்து காட்டியதால் அதன் பின் குக்கர் சப்தம் வந்தால் வந்து நின்று எட்டிப்பார்ப்பான். பின்னர் விளையாட சென்று விடுவான்..ஒரு வாரம் கழிந்து ஒரு தடவை சப்தம் கேட்டால் அவனே 'start/stop' சொல்வான். அதன் பின் அதுவும் வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பது போல மறந்தே விட்டான். குக்கர் விசில் அடிக்கப்போகும் நேரம் நீங்களும் திவ்யா அம்மாவும் கிச்சனிலேயெ சகஜமாக பேசுவது போலவோ சிர்ப்பது போலவோ இருந்து காட்டுங்கள்...அந்த விசில் உங்களை எதுவும் செய்யவில்லை என்பது போல. பின் சிறிது நாளில் திவ்யாவே புரிந்து கொள்வாள், இன்ஷா அல்லாஹ.
திவ்யாவின் பக்கம் இப்போதுதான் படிக்கிறேன்..
குழந்தைகளைப் பற்றி பேச ஆரம்பித்தாலே அவர்களுடைய குதூகலம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.
நீங்கள் எடுத்த முடிவு சரிதான். குழந்தை இப்போதைக்கு சுதந்திரமாய் வளருவதே நல்லது.
//காலை அலுவலகம் செல்லும்பொழுது டாட்டாவுடன் "பார்த்து பத்திரமா போயிட்டு வாப்பா " என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறாள். அதே போல் வீடு திரும்பியவுடன், "பத்திரமா வந்துடியானு " விசாரிப்பும்//
Divya joo sweet baby!!
அப்பா வண்டி ஒட்டுறது பொண்ணுக்கே பயமா இருக்கு!:)
//@வெறும்பய
நாங்கள் இல்லாமல் அவள் தனியாக இருப்பாள் ஜெயந்த்//
சுவீட் குட்டியை எங்க வீட்டுக்கு அனுப்பிடுங்களேன்:)
ஸ்கீயிங் போயிட்டு வந்த அவ அப்பாவை! என் பொண்ணு அப்பா கையை உடைக்காம வந்தியான்னு கேட்டா:))))
cute!!
@செல்வக்குமார்
நன்றி
@மாதவன்
பால் குக்கர் இல்லை. பிரசர் குக்கர் ...
@குமார்
சரியாக சொன்னீர்கள்..
@காயத்ரி
இது என்ன ? எல்லாக் குழந்தைகளும் பயப் படுமா விசிலுக்கு
@ஆசியா
நன்றி
@சசி
நன்றி
@மேனகா
ஹ்ம்ம் நன்றி
@அனு
இது நல்ல ஐடியா .. முயற்சி பண்றேன்
@ஸ்ரீ அகிலா
நன்றி
@பார்க்
ஹ்ம்ம் கொஞ்சம் வேகமாகதான் ஓட்டுவேன்
@தெய்வசுகந்தி
நன்றி
//ஒருமுறை எல்.கே.ஜி படித்துக் கொண்டிருந்த என் அக்கா பொண்ணுக்கு ஒரு ரைம்ஸ் சொல்லி தர்றதுக்குள்ள தாவு தீந்துடுச்சு..அதுக்கப்புறம் புக்ஸ் அப்படின்னாலே ஆளை விடு சாமின்னு அவ இல்ல, நான் ஓட வேண்டியதாயிடுச்சு :))//
ஹா ஹா.
எனக்கு இப்பவுமே குக்கர் விசில் அலர்ஜி. நெஞ்சு தட தடன்னு அடிக்கும். அதனாலேயே பிரஷர் குக்கர் பாவிக்கறதே இல்லை.
நெல்லில் எழுத வேண்டும் என்றார்கள். நெல் கிடைக்கவில்லை////
உண்மை சார் , நெல் இப்பொழுது சிடியில் பார்க்க கூட கிடைப்பதில்லை
மகளுக்கு சொல்லித் தருவதை விட தாய்க்கு ஆனந்தம் தருவது வேறு எது ???
/////
VERY NICE
அவ குழந்தையா இருக்கிறச்சே குக்கர் விசிலில் பயந்திருப்பா, ஏற்கெனவே பஸ்ஸிட்ட்டேன், இருந்தாலும் இங்கேயும் வந்தேன்.
நெல் வேணுமானா நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். எங்க வீட்டிலே நவதானியமும் எப்போவும் ஸ்டாக்! :)))))))))
//மகளுக்கு சொல்லித் தருவதை விட தாய்க்கு ஆனந்தம் தருவது வேறு எது //
:))))
எங்களுக்கும் திவ்யாக்குட்டி பற்றி படிப்பது ஆனந்தமே.
//திவ்யா பயப்படற ஒரே ஒரு விஷயம் குக்கர் விசில். மற்ற எதற்கும் யாருக்கும் பயப் படாத அவள், குக்கர் விசில் வந்தாள் அழ ஆரம்பித்துவிடுவாள். எப்படி மாற்றுவது என்றுத் தெரியவில்லை ???//
என் பையனும் இப்படித்தான் இரண்டு மாதம் முன்பு வரை பயந்துகிட்டு இருந்தான். அவனுக்கு நான் கொஞ்சம் ட்ரைனிங் குடுத்து இப்போ அழுகையை நிறுத்திட்டேன்.குக்கர் விசில் திடீர்னு வர்றதால பயந்து அழுதுடறாங்க. அதுக்கு குக்கர் விசில் வரப்போரதுக்கு முன்னாடியே இப்போ ஸ்.. ஸ்...ஸ்.. ன்னு வரப்போகுது அப்படின்னு சொல்லுவேன். இந்த சவுண்ட் குடுத்த கொஞ்ச நேரத்துலையே விசில் வந்துடும்.அப்போ அதையே பாத்துட்டு இருந்துட்டு பயப்பட மாட்டான்.மூன்று,நான்கு நாட்களில் பயம் போயிடுச்சு.இப்போ விசில் வந்தா,அவன் பாட்டுக்கு விளையாடிட்டு இருப்பான். முடிஞ்சா நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்க.
நானும் என்னோட குழந்தைய பற்றி எழுத நினைத்துக்கொண்டிருந்தேன்.
நல்லா அருமையா உங்க குட்டி திவ்யாவை ரசிச்சு, கவனிச்சு எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
So sweet!I sent my son to school when he was 4 yrs old. I did not want to send him before 4. Now he is six and I have a feeling he is growing up very fast.
Enjoy your sweet girl.
Cute Dhivya asusual...
குக்கர் விசில் கண்டால் , மிக்சி ச்த்தம்ம் , எல்லா குழந்தைகளும் இப்படி தன் அந்த நேரம் . சிரித்து விளையாட்டு காண்பிக்கனும் ,
எழுத பழக் ஆரம்பிச்சா ,,, வாழ்த்துக்கள்.குழ்ந்தை வளர்பு டிப்ஸில் எழுத பழகும் போது என்ன செய்யனும் டிப்ஸ் போட்டு இருக்கேன் பாருங்கள்
Good decision. We sent our daughter to play school when she was 2.5 years. It worried us a lot because she became bit dull at home after that. Also when someone, even her grandparents approaches her, she doesn't respond properly. She always hold mine or my wife's hand. We saw this change all of a sudden once when she came back from school crying. When checked with the school teacher, they said, she had a fight with another girl (not sure if that was true). After this incident she doesn't even look at her teacher, and doesn't want to go to school. That worried us a lot, because till then she play like anything, jump, run etc, and after this, she was very calm at home. We then discontinued the play school. Now she is becoming ok. She is in 1st std now.
We worried a lot that we put her in school very early.
@அனாமிகா
இதனால், உன்னை குழந்தைன்னு சொல்ல முடியாது
@அமைச்சரே
கிடைக்கும். கொஞ்சம் தேடனும்
@பிரபு
நன்றி
@ஜிஜி
இங்க சொன்ன எல்லா வழிகளையும் முயற்சி பண்றேன்
@வானதி
ஓஹோ .. இங்க அவ்வளவு காத்திருப்பு வேலைக்கு ஆகாது
@அப்பாவி
நன்றி
@ஜல்லேல
கண்டிப்பா பார்க்கிறேன்
@சமீர்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//@அனாமிகா
இதனால், உன்னை குழந்தைன்னு சொல்ல முடியாது //
Karthi Sir,
I will get you soon.
-Ana
கருத்துரையிடுக