நம் இந்திய நாடு மனித நேயம் மிக்கது. அடுத்தவர்களுக்கு உதவி புரிவதற்கு அதுவும் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி புரிவதில் தயங்கமாட்டார்கள் . இந்...
சம்பவம் 1:
நேரம் : வியாழன் மாலை 6 .30
இடம் : வள்ளுவர்கோட்டத்தில் இருந்து சுருதி மியூசிக் சிக்னல் வரை
வள்ளுவர் கோட்டத்தில் சிக்னலுக்கு நின்றிருந்த பொழுது அவசரமாக ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. பலமுறை ஹாரன் அடித்தும் முன் உள்ளோர் கொஞ்சம் கூட நகருவதாய் இல்லை. இத்தனைக்கும் அவர்கள் சுழல் விளக்கை போட்டிருந்தனர். அதுவும் கத்திக் கொண்டிருந்தது. குறிப்பாக சொந்தமாக கார் வைத்திருக்கும் மக்கள். கொஞ்சம் இடது புறம் நகர்ந்து வழி விட்டு இருக்கலாம். ஒரு வழியாக ஊர்ந்து ஊர்ந்து சுருதி மியூசிக் சிக்னல் அருகே வந்த சேர்ந்தது அந்த ஆம்புலன்ஸ் . அங்கு சிகப்பு விளக்கு போட்டிருந்தது . பலமுறை ஹாரன் அடித்தும் போலீசார் தற்காலிகமாக போக்குவரத்தை நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்த முயலக் கூட வில்லை.
அதில் இருந்த நோயாளிக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டு,இந்த போக்குவரத்து நெரிசல்களினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால்அதற்கு யார் பொறுப்பு ??
சம்பவம் 2:
நேரம் : வெள்ளி காலை 8 .15
இடம் : கோடம்பாக்கம் பாலம் முடியும் இடம்
கோடம்பாக்கம் பாலத்தில் இருந்து இறங்கும் இடம் . ஆறாவது இல்லை ஏழாவது படிக்கும் மாணவி சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டாள். ஒரு பைக் தட்டி விட்டு சென்று விட்டது. நல்லவேளை அந்த சிறுமிக்கு எந்த வித அடியும் படவில்லை. அந்த சிறுமியின் பின் வந்து கொண்டிருந்த கார்கார ஒருவர். வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு, அந்த சிறுமியை சமாதனப் படுத்தி ,கீழே விழுந்த அவளது பொருட்களை எடுத்து கொடுப்பதற்குள், நமது மக்களுக்கு பொறுக்கவில்லை, ஹாரன் அடித்துக் கொண்டும், கத்திக் கொண்டும். ஏன் ஒரு நாள் ஐந்த நிமிடம் தாமதம் ஆனால் என்ன ?
எத்தனையோ அரசியல் தலைவர்கள் செல்லும் பொழுது பொறுமையாக நிற்கும் மக்களுக்கு ஒரு விபத்தின் சமயத்தில் ஏன் அந்த பொறுமை காணமல் போகிறது ???
இப்பொழுது சொல்லுங்கள் நான் எண்ணியது சரிதானே ??
அன்புடன் எல்கே
43 கருத்துகள்
//எத்தனையோ அரசியல் தலைவர்கள் செல்லும் பொழுது பொறுமையாக நிற்கும் மக்களுக்கு ஒரு விபத்தின் சமயத்தில் ஏன் அந்த பொறுமை காணமல் போகிறது ???
இப்பொழுது சொல்லுங்கள் நான் எண்ணியது சரிதானே ??//
ரொம்ப சரிதான்ங்க.இப்போ மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிட்டு வருது.சுயநலம்தான் அதிகமாகுது.
எண்ணியது சரிதான்.
எனக்குத் தெரிஞ்சு என்னோட அநுபவத்தில் நமக்கென்ன வந்தது? என்று போறவங்க தான் 99 சதவீத மக்கள். ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாய் உதவலாம். மொத்தத்தில் உதவும் மனப்பான்மை, தமிழ்நாட்டில், குறிப்பாய்ச் சென்னையில் கிடையவே கிடையாது. இது என் சொந்த அநுபவமே!
உங்களைப் போன்ற இளைய சமுதாயம் இதை எல்லாம் எண்ணிப் பார்ப்பதும், அதற்காக முயல்வதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. நம்பிக்கையும் பிறக்கிறது. வாழ்த்துகள்.
சரியென்று சொல்லாமல் இருக்க முடியலை.மனிதாபிமானத்தை பார்ப்பது அரிது தான்.
சட்டங்களையும் கடுமையாக்கணும் கார்த்தி.
அமெரிக்காவுல எமர்ஜென்சி வெஹிக்கிள் வந்தா விலகி இடம் கொடுக்கணும்னு சட்டமே இருக்கு. மீறுறவங்களுக்குத் தண்டனை கொடுக்க முடியும்.
அதிகம் சட்டம் மீறுவது நம்ம ஊர்லதான் தல ..
, ஹாரன் அடித்துக் கொண்டும், கத்திக் கொண்டும். ஏன் ஒரு நாள் ஐந்த நிமிடம் தாமதம் ஆனால் என்ன ?///
ஐந்து நிமிடம் தாமதமா போனா தான் என்ன இவர்களுக்கு
எல்லாருக்கும் அவசரம்னு ஒரு நினைப்பு தான். அவனுக்கு முன்னாலே என் வண்டி போகணும், வூட்டுக்கு போய் நல்லாத் தூங்கணும்.
நாளைக்கு நமக்கும் ஆம்புலன்சில் செல்ல வேண்டிய நிலை நேரும் அப்படின்னு யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
வருத்தத்துக்கு உரிய விஷயம். கொஞ்சம் கொஞ்சமாக நம் நண்பர்கள், நமக்குத் தெரிந்தவர்களிடம் மெதுவாக போகச் சொல்லலாம், அவசர வண்டி வந்தால் வழி விடுங்கள் எனச் சொல்லலாம்.
சரியாகச் சொன்னீர்கள் எல்.கே. மனித நேயம் என்பது பல நேரங்களில் அர்த்தமற்றதாகத்தான் உள்ளது.
//நம் இந்திய நாடு மனித நேயம் மிக்கது//
இந்த நமபிக்கை அற்றுப் போய் நாளாகி விட்டது. ஒரு காலத்தில் இருந்து இருக்கலாம்... இப்போது இந்திய தேசம் சுய நல அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் ஒரு சுய நல சுடுகாடாக மாறிக் கொண்டு வருகிறது.
அரசியல் தலைவர்கள் இப்படி என்றால்.. இவர்களை குறை கூறிக் கொண்டு மக்கள் கூட்டம் காட்டும் செய்யும் அட்டூழியங்கள் அதிகம்....
என் சப்தங்கள்....
சரியாய் இருக்கும் போதிலும்
கூட்டத்தில், குழப்பத்தில்
இரைச்சலில் சிக்கி
எதார்த்த உண்மைகள்
செத்துதானே போகின்றன?
ஆம்புலன்ஸ் விஷியம் ரொம்ப கஷ்டமா இருக்கு ஏன் இபப்டி இருக்கிறார்கள்.
இங்கு ஆம்புலன்ஸ்க்கு முதலிடம்.
சிறுமி விஷியம், அவசரம் என்னத்த வெட்டி முறிக்க போகிறார்களோ?
5 நிமிடம் பொறுமை கூட மக்களிடம் இல்லையே?
அவசரயுகத்தில் இப்பல்லாம், மனிதநேயம்,பொறுமை இதெல்லாம் காணக்கிடைக்கிறது அரிதாகிடுச்சு..
வெட்க்கப்பட வைக்கிறது.... நாமாவது மனித நேயத்தோடு இருப்போம்...
மனசுக்கு ரொம்ப வேதனைய கொடுத்தது நீங்க சொன்ன ரெண்டு சம்பவங்களும், என்ன செய்றது மக்களுக்கு மத்தவங்கள பத்தின கவலையே இல்ல வர வர..
நாமாவது நமது சந்ததினருக்கு மனிதநேயத்தை சொல்லி கொடுப்போம்
வேதனைப்பட வைத்த நிகழ்வுகள். இந்தியாவில் கூட ஆம்புலன்ஸ் வந்தால் வழி விட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது – ஆனாலும், “சட்டத்தை நாம் எப்போது மதித்திருக்கிறோம்? அதுதான் நமக்குப் பிடிக்காதே” என்ற எண்ணம் கொண்டவர்களே அதிகம் இருக்கிறார்கள் என்பது வருந்த வேண்டிய விஷயம்.
Well written. People are becoming very selfish what else to say!!!
ungal sinthanayum ezhuththum sari thaan. aanaal avarkalathu (makkal) avasaraththaiyo/alatchiyaththaiyo ennaal "sari"/"thavaru" endru ottrai vaarthaigalaal nirnayikka mudiyavillai.
yosikka vendum.
@ஜிஜி
உண்மை
@கலா நேசன்
நன்றிங்க
@கீதா
மாமி நானும் கண்டிருக்கிறேன் இந்த மாதிரி
@கீதா
அதற்க்குத்தான் முயன்றுக் கொண்டிருக்கிறேன்
@ஆசியா
ரொம்ப அரிது சகோ
@தினேஷ்
சட்டங்கள் கடமை ஆகி பயனில்லை. அதை பிரயோகிக்க வேண்டியவர்கள் ஒழுங்காக வேண்டும்
@புதிய மனிதா
ஆமாம்
@சௌந்தர்
நன்றி
@இளங்கோ
என்னதான் விளிபுனர்வ் செய்திகள் ஒளிபரப்ப பட்டாலும், அந்த கணத்தில் யாரும் பின்பற்றுவது இல்லை
@நித்திலம்
உண்மை
@தேவா
நீங்களே இப்படி சொன்னா எப்படி ?? முயற்சிப்போம், மாற்றுவோம்
@ஜலீலா
அங்கு மட்டும் அல்ல, இங்கும் அதுதான். ஆனால் மக்கள் ????
@சாரல்
உண்மை
@வெறும்பய
கண்டிப்பா
@காயத்ரி
அதைதான் செய்ய முடியும்
@வெங்கட்
சரியா நான் என்ன நினைத்தேனோ அதை சொல்லி இருக்கிறீர்கள்
@வாணி
:)
@மாதங்கி
வித்யாசமானா கோணம்
உண்மை தான் நண்பரே!
நல்ல கேள்விகள்ண்ணா, 2 நிமிடத்தில் வெந்து விடும் காலை சிற்றுண்டி, 3 நிமிடத்தில் மைக்ரோவேவ் பிரியாணி என்று நிமிடங்கள் மட்டும் நொடிக்கணக்கில் வாழ்க்கை சக்கரம் கட்டிக் கொண்டதால் உணர்வுகளுக்கு நேரம் ஒதுக்க மனிதனால் முடிவதில்லை. அது சொந்தப் பெண்ணாய் இருந்திருந்தாலுமே சில அப்பாக்கள், உன்னால எனக்கு மீட்டிங்குக்கு நேரமாகிடும்னு அர்ச்சனை பண்ணமல் இருப்பதே அதிசயம்தான்!!
ஆம்புலன்ஸ் விஷயம் சற்றே கவலையளிக்கக் கூடியதுதான். அதென்ன சற்றே என்கிறீர்களா? சென்னையின் மிகப் பிரபல மருத்துவமனைகள் பீக் ஹவர்ஸில் விளம்பரத்துக்காக சைரனுடன் ரவுண்ட் விடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அதுமட்டுமின்றி, இப்போதெல்லாம் ஆம்புலன்ஸ்களில் வெளிப்புறம் தெரியாது. உண்மையில் அவசரம் என்னும்போது வேறு சமிக்ஞை இருக்கிறது. உடனே போலீஸ் உதவும். மற்ற நேரங்களில் ஹெ ஹெ..சீப் மெண்டாலிட்டி.. ஒரு வேளை வெளியூரிலிருந்து வரும் ஆம்புலன்ஸ்களுக்கு இந்த சிஸ்டம் தெரியாவிடில் கோவிந்தாதான்.
@பாலா சார்
நானும் அதை பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன். அனால், இந்த ஆம்புலன்ஸ் பின் நான் சென்று கொண்டு இருந்தேன். உள்ளே கண்ணாடி வழியாகப் பார்க்க முடிந்தது. அதனால்தான் இந்த ஆதங்கம்
நல்ல இடுகை............. நாம் பின்பற்ற முயல்வோம்....
இங்கேயும், "திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"கதை தான். மனித நேயத்தை, மனிதர்களாக வளர்ந்து கொண்டால் தான் உண்டு.
ஓடமு ஒருநாள் வண்டியில்; வண்டியும் ஒருநாள் ஓடத்தில் எனப்தை மறப்பதால் வரும் நிலைமை!! :-(((
//சென்னையின் மிகப் பிரபல மருத்துவமனைகள் பீக் ஹவர்ஸில் விளம்பரத்துக்காக சைரனுடன் ரவுண்ட் விடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? //
இப்படியும் ஒரு கொடுமை நடக்குதா? ஆண்டவா!!
கருத்துரையிடுக