Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

ப்ரத்யுஷா

பல வருடங்களுக்குப் பிறகு  இன்று மீண்டும் கோடம்பாக்கம் இரயில் நிலையம். இதே போன்றதொரு நீண்ட கோடைகாலத்தின் மாலைப் பொழுதில்தான் அவளை இங்கே சந்தி...

பல வருடங்களுக்குப் பிறகு  இன்று மீண்டும் கோடம்பாக்கம் இரயில் நிலையம். இதே போன்றதொரு நீண்ட கோடைகாலத்தின் மாலைப் பொழுதில்தான் அவளை இங்கே சந்தித்தேன். அன்றைய நிகழ்வுகள் இன்றும் பசுமரத்தாணியாய் என் நினைவில்.

இந்நூற்றாண்டின் துவக்கம். இளைஞர்களை இன்டெர்நெட் வலை வீசாமல் தன் வலையினில் சிக்க வைத்துக் கொண்டிருந்த காலம். யாஹூ மெயில் ஐடியும் யாஹூ சாட் ரூம்களும் இளைஞர்களின் பேசுபொருளாய் ஆன தருணம்.இன்று போல் அன்றும் போலி ஐடிகளும் ஏராளம். வெப்கேம் சாட் பிரபலமாகிக் கொண்டு வந்த தருணமது.

வழக்கம் போல், நைட் ஷிப்ட் முடித்து வந்த வெங்கட் அருகிலிருந்த சிபி இன்டெர்நெட் மையத்தினுள் நுழைந்தான். மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த பல வாழ்க்கை கனவுகளை கொண்ட சராசரி தமிழக இளைஞன் அவன். ஏனோ அவன் அது வரைப் பார்த்த பெண்கள் அவனை ஈர்க்கவில்லை. வார இறுதிகள் ஸ்பென்ஸரிலும், மெரினாவிலும் சில சமயம் பெசன்ட் நகரிலும்.....

அன்றும் வழக்கம் போல் சிபி பிரௌவுசிங் சென்டரில் அவன் லாகின் செய்தான். ஏதோ ஒரு சாட் ரூமில் ஐடிகளை ஸ்க்ரால் செய்து கொண்டே வந்த பொழுது அந்த பெயர் வித்யாசமாய் தோன்றியது. ஏனோ அதை க்ளிக் செய்து பேசத் தூண்டியது.அந்தப் பெயர் ப்ரத்யுக்ஷா. வழக்கமான அப்போதைய இன்டர்நெட் உபய குசலோபரிகளான (A/S/L) க்குப் பிறகு வேறு பேசலாம் என நினைக்கையில் அவனுக்கு அழைப்பு வர மெயில் ஐடி கொடுத்துவிட்டு லாக் அவுட் ஆனான். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ப்ரௌசிங் சென்டர் அவள் ஆன்லைனில் இல்லை. சரி வழக்கமான பேக் ஐடி என நினைத்துக் கொண்டு மெயில் பாக்ஸை ஓபன் செய்ய, பல பார்வேர்ட் மெயில்களுக்கு நடுவே புதிதாய் ஓர் ஐடி. அவளுடைய சாட் ஐடி போலத் தோன்ற ஓபன் செய்ய அவள்தான் மெயில் செய்திருந்தாள். இவனும் அடுத்த கட்டம் போக , பதிலளிக்க சில நாட்கள் கடந்தன. இருவரின் புரிதலும், விருப்பங்களும் ஒன்ற அவளைத் தன்னையறியாமல் நேசிக்கத் துவங்கினான்.

அவளிடம் எப்படி சொல்ல, அவள் தவறாக நினைத்தால் நட்பு பாழாகுமேவெனத் தோன்ற, அவனுக்குக் கை கொடுத்தது பார்வேர்ட் மெயில்கள். அதிலிருந்த ஓர் அட்டகாசமான காதல் வாசகத்தை காப்பியடித்து மெயில் அனுப்பினான். அடுத்த இரு நாட்கள் பதிலில்லை அவளிடமிருந்து...

-தொடரும்

கருத்துகள் இல்லை