திருமதி ராஜி அவர்கள் "பெண் எழுத்து " என்றத் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறார்கள். அநேகமாய் பெண் எழுத்தை பற்றி சிறிது நாட்களாய் சென...
திருமதி ராஜி அவர்கள் "பெண் எழுத்து " என்றத் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறார்கள். அநேகமாய் பெண் எழுத்தை பற்றி சிறிது நாட்களாய் சென்றுக் கொண்டிருக்கும் இந்த தொடர் பதிவில் எழுதப் போகும் முதல் ஆண் பதிவர் நான்தான் என்று எண்ணுகிறேன்.
இன்று எழுத்துலகில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்களும் எழுதிக் கொண்டுதான் உள்ளனர். எல்லாவிதக் கருத்துகளையும் ,அனைத்து தலைப்புகளிலும் எழுதுகின்றனர். மாறுதல் என்பது ஒரே இரவில் வந்துவிடாது. சொல்லப்போனால் இந்த நிலை நடுவில் ஏற்ப்பட்ட சில மாற்றங்களால் வந்தது என்றே சொல்லலாம். சங்கக் காலத்தில் பெண் புலவர்கள் பலர் இருந்ததற்கு சான்றுகள் பல உள்ளன. இடைக்கலாதில் ஏற்ப்பட்ட அயலார் படையெடுப்பே பெண்கள் வீட்டிற்குள் முடங்குவதற்கு முதல் மற்றும் முக்கியக் காரணமாய் அமைந்தது.
இன்று அந்நிலை மாறி பல பெண்கள் எழுத்துலகில் தங்களுக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துள்ளனர். அவ்வளவு ஏன் நமது தமிழ் பதிவுலகிலேயே பல பெண் பதிவர்கள் தங்கள் எழுத்துக்களால் தனி இடத்தைப் பிடித்துள்ளனர். துளசி டீச்சர், கீதா மாமி , வல்லியம்மா, புதுகைத் தென்றல், விதூஷ், சித்ரா இன்னும் இப்படி பலரை சொல்லிக் கொண்டேப் போகலாம்.
பெரும்பாலானோர் வைத்துள்ள குற்றச்சாட்டு அல்லது பெரும்பாலானோரின் கருத்து ஒரு சில விஷயங்களை பெண்கள் எழுத முடிவதில்லை என்பதே. ஒரு சில தலைப்பில் பெண்கள் எழுதும்பொழுது அதற்கு எழும் கருத்துக்கள் எழுதுபவர்களை குற்றம் சாட்டுகின்றன இல்லை காயப் படுத்துகின்றன என்று சொல்கிறார்கள். இதற்க்கு முதல் காரணம், தமிழ் எழுத்துலகில் குறைந்தபட்சம் இந்தப் பதிவுலகில் எழுதப் படும் கருத்துக்களை யார் எழுதுகிறார்கள் என்பதை வைத்தே மதிப்பீடு செய்கின்றனர். எழுதியவரைக் கருத்தில் கொள்ளாமால் எழுதப் படும் எழுத்தை மட்டும் ஆராய்வது என்பது இங்கு வெகு அரிதாக உள்ளது. எனவே அதை பெரிதாக யாரும் கருத வேண்டிய அவசியம் இல்லை. அந்த மாதிரி கருத்துக்களைப் புறம்தள்ள வேண்டும்.
எந்த மாற்றம் நிகழ்வதற்கும் சிறிது காலம் தேவைப் படும். அது நமது சூழலில் கொஞ்சம் அதிகம் தேவைப் படுகிறது, அவ்வளவே.
எனக்குத் தெரிந்த வரையில் பெண் எழுத்தைப் பற்றி எழுதி உள்ளேன். இதைத் தொடர நான் அழைப்பது
பி. கு : சொல்ல மறந்தது. இது எனது முன்னூறாவது பதிவு
59 கருத்துகள்
எனக்கு தெரிந்த வரையில் மூன்று நான்கு ஆண் பதிவர்கள், ஏற்கனவே "பெண் எழுத்து" என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார்கள். உங்கள் கருத்தும் நன்றாக உள்ளது.
நீங்கள் கூறி இருக்கிற காயப்படுத்தும் கருத்துக்களை, பல பெண் எழுத்தாளர்கள் (எல்லோரும் அல்ல) ஒதுக்கி தள்ளி விட்டு வர முடியாததற்கு காரணம் உண்டு. நமது சமூதாய அமைப்பு ஒரு பெண்ணை சமூதாயத்துக்கு அடங்கியே இருக்க பழக்கி விடுகிறது. மேலும், சமூதாயத்தில் அவளுக்கு உண்டாகும் பழி பாவ சொற்களுக்கு அஞ்சியே இருக்கும் படியான சூழ்நிலையிலும் இருக்க வைத்து இருக்கிறது. அதனால், பல பெண் எழுத்தாளர்களுக்கு சில விஷயங்களை துணிந்து எழுத தயக்கமும் பயமும் - அப்படியே எழுதினாலும் வரக்கூடிய சில வேண்டாத personal கமென்ட்ஸ் கண்டு வருத்தப்படுவதும் தவிர்க்க முடியாதது ஆகி விடுகிறது. இன்று நிலைமை மாறி வராமல் இல்லை. சமூதாய சூழ்நிலை மாற மாற, மாற்றங்கள் விரைவில் வரும்.
பெண் எழுத்து பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.
முன்னூறாவது பதிவா?
மேலும் பல பதிவுகளுக்கு வாழ்த்துகள்.
பெரியப்பா 300 அடிச்சும் ஸ்டடியா நிக்கறதுக்கு வாழ்த்துக்கள்.. ஹி ஹி
பெரியப்பா , ரொம்ப சுருக்கமா முடிச்சுட்டீங்களே...
300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சார்
பெண் எழுத்து பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி சார்.
வாழ்த்துக்கள்!
எழுத்தை பொறுத்த வரை ஆண் பெண் வித்தியாசம் பார்க்க வேண்டியதில்லை... அப்படி அடையாளம் கொடுத்து பார்த்தால் சிவசங்கரியும் வாசந்தியும் தான் நினைவுக்கு வருகிறார்கள்( உ-ம் சின்ன நூல்க்கண்டா சிறைப் படுத்துவது , இந்தியா டுடே கட்டுரை கள் ) ... கதை தாண்டி பல விஷயங்களை எழுத முன் வந்தவர்கள் ..எழுதியவர்கள் . பொதுவாகவே இப்பொழுது கதையிலும் நாவலிலும் மக்களுக்கு நாட்டம் குறைந்து விட்டது .
வலைப்பூக்களை ஆண்களைவிட பெண்கள் தான் சரியாக பயன் படுத்துவதாக தெரிகிறது ... ஒரு கன்சிஸ்டன்சி இருக்கிறது ..தொடர அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
மூன்னுறாம் பதிவிற்கு வாழ்த்துக்கள் ...பல நூறு ...பல ஆயிரங்களாக தொடர வாழ்த்துக்கள் ....
கலக்குறிங்க...அதற்குள் 300வது பதிவு..வாழ்த்துகள்..இன்னும் தொடர்ந்து எழுதுங்க...
முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். உங்க கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளீர்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கு. எல்லாரோடபதிவும் படிச்சா, எல்லாருமே நன்றாகத்தான் சொல்லி இருக்கிரார்கள்.
முன்னூராவது பதிவுக்கு
என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
இது ஆயிரம் ஆயிரமாய் தொடர வாழ்த்துக்கள்
300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..
முந்நூறு கண்டதற்கு வாழ்த்துக்கள் ஆயிரம்.
ஆரம்பிச்ச உடனேயே முடிச்சுட்டீங்க கார்த்தி.ஒரு கச்சேரிக்காகக் காத்திருந்த எங்களை ஏமாத்திட்டீங்களே?நியாயமா?
சி.பி.செந்தில்குமார்
//பெரியப்பா 300 அடிச்சும் ஸ்டடியா நிக்கறதுக்கு வாழ்த்துக்கள்.. ஹி ஹி//
ஆஹா, மிகவும் ரசித்தேன்.
மூன்று சென்சுரி அடித்து முடித்ததற்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
பெண் எழுத்து என்ற பெரும் சுழலின் ஆழத்தில் போய் மாட்டாமல் தலை தப்பித்து வந்துள்ள தங்களின் சாமர்த்தியத்திற்கு என் பாராட்டுக்கள்.
முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் எல்கே.
முந்நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். திரு பத்மநாபனின் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்.
தொடர
300 வது பதிவா அசத்துங்க அசத்துங்க மக்கா வாழ்த்துகள்....
இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம். இருந்தாலும் சூப்பர் மக்கா. நல்ல பதிவு....
எந்த நாடு போர்கள் இன்றி அமைதியனசுல்நிலையில் இருந்தனவோ அந்த நாட்டில் கலையும் கலைங்கர்களும் நன்றாக வளர்ச்சி பெற்று வாழ்ந்து இருகிறார்கள் அதே காலகட்டத்தில் பெண்களும் போற்றபட்ருக்கியரகள்.அந்நிய மற்றும் அணிய யங்களின் தலையிட்டு வந்தபின் பெண்களை பாத்து காப்பின்பொருட்டு வீட்டில் முடங்கி இருக்கலாம்,அது நாளடைவில் பென்னடிமையாக மாறிவிட்டிருக்கலாம். இப்போ அப்படி இல்லை பெண்கள் எல்லதுரையுலும்முன்னேரிவருகிரகள். ஒருசில ஆண்களை தவிர பெண்கள் முநேற்றத்திர்க்கு தடைசெய்வதில்லை என்றே நினைக்கிறேன்.எப்பைடியனாலும் பெண்கள் முனேற வேண்டும். உங்கள் பதிவும் நன்று வாழ்க வளமுடன்
subburajpiramu@gmail.com
பெண் எழுத்து பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.
நல்ல பதிவு எல்.கே! அடடே! முன்னூறா? வாழ்த்துக்கள். நற்பணி மென்மேலும் தொடரட்டும்.
உள்ளதை உள்ளபடி அப்படியே சொல்லியிருக்கிறீர்கள் கார்த்திக்.
300 ஆவது பதிவுக்கும் வாழ்த்துகள் !
பெண் எழுத்து பற்றிய உங்களின் பார்வை நன்று...
300 வது பதிவை எட்டியதுக்கு என் வாழ்த்துக்கள் கார்த்திக்.
நல்ல பகிர்வு!! 300க்கு வாழ்த்துக்கள்...
எல்.கே. பெண்னேழுத்துப் பற்றி நல்ல பகிர்வு. என்னையும் எழுதக் கூப்பிட்டிருக்கிறார்கள். நன்றாக எழுத முயற்சி செய்கிறேன். ;-))
நல்ல பகிர்வு கார்த்திக். முன்னூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்.
நல்ல கருத்து கார்த்திக்.
300 க்கு வாழ்த்துகள்.
முன்னூறு... முன்னூறு முன்னூறாய் வளரட்டும். ;-))
300வது பதிவிற்கு வாழ்த்துக்கள். பெண் எழுத்து பற்றிய தாங்கள் கூறுவதும் சரிதான்.
சுருக்கமா அழகா எழுதியிருக்கீங்கண்ணா. முன்னூறாவது பதிவுக்கும் வாழ்த்துக்கள்.
முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
நல்ல அலசல்.. முன்னூறுக்கு வாழ்த்துகள்.
இந்த தொடர் பதிவில் எழுதப் போகும் முதல் ஆண் பதிவர் நான்தான் என்று எண்ணுகிறேன்.//
ஆஹா... ஆஹா.. மாட்டிக்கிட்டீங்களா.
இந்த தொடர் பதிவில் எழுதப் போகும் முதல் ஆண் பதிவர் நான்தான் என்று எண்ணுகிறேன்.//
ஆஹா... ஆஹா.. மாட்டிக்கிட்டீங்களா.
சங்கக் காலத்தில் பெண் புலவர்கள் பலர் இருந்ததற்கு சான்றுகள் பல உள்ளன. இடைக்கலாதில் ஏற்ப்பட்ட அயலார் படையெடுப்பே பெண்கள் வீட்டிற்குள் முடங்குவதற்கு முதல் மற்றும் முக்கியக் காரணமாய் அமைந்தது.//
ஆமாம்.. நிச்சயமாய் இவை உண்மை, ஆனால் பிற்காலத்தில் காரைக்கால் அம்மையார், ஆண்டாள் போன்றோர் தான் இத் தடைகளையெல்லாம் தாண்டி எழுதத் தொடங்கினார்கள்.
பெரும்பாலானோர் வைத்துள்ள குற்றச்சாட்டு அல்லது பெரும்பாலானோரின் கருத்து ஒரு சில விஷயங்களை பெண்கள் எழுத முடிவதில்லை என்பதே. ஒரு சில தலைப்பில் பெண்கள் எழுதும்பொழுது அதற்கு எழும் கருத்துக்கள் எழுதுபவர்களை குற்றம் சாட்டுகின்றன இல்லை காயப் படுத்துகின்றன என்று சொல்கிறார்கள்.//
இது எங்கள் சமூகத்தின் மீதுள்ள குறை என்று தான் நான் நினைக்கிறேன் சகோ. ஒரு எழுத்தை விமர்சிப்பதை விடுத்து, அப் படைப்பாளியின் எண்ணங்களை விமர்சிப்பதை விடுத்து,
எமது தமிழ்ச் சமூகத்தில் உள்ளவர்கள் படைப்பாளியை விமர்சித்து
அவரது தனிப்பட்ட குண நலங்களை அலசி ஆராய்ந்து அவ் எழுத்துக்களை முடக்க நினைக்கிறார்கள். இந்த நிலமை மாற வேண்டும். அப்போது தான் பெண் எழுத்துக்கள் இன்னும் இன்னும் வலிமையுடன் பிறந்து கொள்ளும்!
பி. கு : சொல்ல மறந்தது. இது எனது முன்னூறாவது பதிவு//
வாழ்த்துக்கள் சகோ!
இன்னும் இன்னும் பல பதிவுகளை நீங்கள் தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
Thanks Karthik.
yOU HAVE HONOURED all of us by writzing this post.
As Chithra says we of the Feminine gender are still subdued and dare not write abt non written things:P.
Indhumathi(writer)ventured somewhat into this fields.
Thanks for invitinhg me. Give me sometimes:)
my brain and heart are totally at the merci of our grand children.
//எழுதியவரைக் கருத்தில் கொள்ளாமால் எழுதப்படும் எழுத்தை மட்டும் ஆராய்வது என்பது இங்கு வெகு அரிதாக உள்ளது//
அதே அதே... Hope this will change...:((
//அந்த மாதிரி கருத்துக்களைப் புறம்தள்ள வேண்டும்.//
Well said ...டேக் இட் ஈஸி பாலிசில தான் ஓடுது ப்ளாக் பயணம்...:)
//இது எனது முன்னூறாவது பதிவு //
வாவ்... கங்க்ராட்ஸ்....சீக்கரம் 3000 வது பதிவு போட வாழ்த்துக்கள்... :))
vazththukkaL!!
@சித்ரா
திரட்டிகள் பக்கம் அதிகம் வருவதில்லை. அதனால் தெரியவில்லை
உண்மைதான். ஆனால் நிலை மாறிக் கொண்டுள்ளது
@ஆச்சி
நன்றி ஆச்சி
@சித்தப்பு
இதுக்கு மேல எழுதினா நல்லா இருக்காது
@பிரஷா
நன்றிங்க
@மாதவி
நன்றி
@பத்மநாபன்
நன்றி அண்ணா. எனக்கும் வித்தியாசப்படுத்த விருப்பம் இல்லை. கேட்டதால் எழுதினேன்
@கீதா அச்சல்
நன்றி கீதா
@லக்ஷ்மி
ஆமாம் . அவரவர் கருத்து அவரவருக்கு
@ரமணி
நன்றி சார்
@ஆசியா
நன்றி சகோ
@சுந்தர்ஜி
பொதுவாவே பெருசா எழுதற வழக்கம் எனக்கில்லை. அது ஏனோ முடிய மாட்டேங்குது
நன்றி
@வைகோ
மாட்டினா தலை காலி . நன்றி அய்யா
@ஸ்ரீராம்
நன்றி அண்ணா
@கீதா சாம்பசிவம்
நன்றி
@மனோ
நன்றி மக்கா
@இன்பம் துன்பம்
வித்யாசமான பெயர்.. நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி
@போளூர் தயாநிதி
நன்றி சார்
@மோகன் ஜி
நன்றி ஜி
@ஹேமா
நன்றிங்க
@கௌசல்யா
:))
@மேனகா
நன்றி
@ஆர்வீஎச்ஸ்
உமக்கு என்ன ஒய் . கலகுவீர். நன்றி
@வெங்கட்
நன்றி
@சுசி
நன்றி
@ரத்னவேல்
நன்றி
@ஆர்வீஎஸ்
நன்றி
@சாகம்பரி
நன்றிங்க
@அன்னு
என்னிக்கும் சுருக்கமாதன் சொல்லுவோம்
@ராஜராஜேஸ்வரி
நன்றிங்க
@நிரூபன்
சரியாக சொல்லி உள்ளீர்கள். நன்றி
@சாரல்
நன்றிங்க
@வல்லிமா
தமிழில் நான் படித முதல் வலைப்பூ உங்களுடையது . உங்கள் பெயரை போடுவதால் எனக்குதான் பெருமை . நன்றிமா
@அப்பாவி
இங்கயும் அப்படிதான்.. வாழ்த்துக்கு நன்றி
@சுகந்தி
நன்றி
படைப்பை விட்டு படைப்பாளியை விமர்சனம் செய்யும் மனிதர்கள் இருக்கும்வரை பெண் எழுத்து என்றொரு தனிப்பதிவு தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். நல்ல கருத்துகள் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
வாழ்த்துக்கள் ப்ரோ . கண்டிப்பா கூடிய விரைவில் எழுதறேன்..நன்றி
ஆஹா 300 வது பதிவு அதுவும் பெண் எழுத்து பற்றின பதிவு வாழ்த்துக்கள்,
வாழ்த்த்துகக்ள் வாழ்த்துகக்ள்.வாழ்த்துக்கள்.
வேலை பளு உடனுக்குடன் கருத்து தெரிவிக்க முடியல
WOW!! 300th post! Superb! congrats, sir!
கருத்துரையிடுக