Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin
Wednesday, December 4

Pages

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

வியாபாரம் 2

வியாபாரம் 1 இரவு மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் கமிஷனர் அலுவலகத்தில் இருந்துக் கிளம்பி அஸ்தம்பட்டியை நோக்கிச் சென்றுக்...

வியாபாரம் 1


இரவு மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் கமிஷனர் அலுவலகத்தில் இருந்துக் கிளம்பி அஸ்தம்பட்டியை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த சேகரின் அலைபேசி அலறத் துவங்கியது.  வண்டியை சாலை ஓரம் நிறுத்தி அலைபேசியில் காண்பித்த பெயரைப் பார்த்த சேகர் அதை உடனடியாக உயிர்ப்பித்து "எஸ் சார். சொல்லுங்க " என்று விறைப்பாக பதில் சொன்னான் .

"எங்கயா இருக்க ?"

"இப்பதான் செவன் ஆர்ட்சை தாண்டி போயிட்டு இருக்கேன் சார்."

 "சரி சரி . அப்படியே வண்டியைத் திருப்பி செவ்வாய்ப்பேட்டைக்கு போ. அங்க ஸ்ரீனிவாசன்னு கொஞ்சம் பெரிய ஆளு. அவரை காணோம்னு புகார் வந்திருக்கு. கொஞ்சம் பெரிய இடம். அதனாலதான் உன்னை நேரடியா அனுப்பறேன். என்னனு விசாரிச்சு சீக்கிரம் ரிப்போர்ட் பண்ணு "

"ஓகே சார் ".

சலிப்புடன் அழைப்பைத் துண்டித்தவன் வண்டியை திருப்பினான். மீண்டும் கமிசனர் அலுவலகத்தைக் கடந்து வலது பக்கம் திரும்பி சென்ட்ரல் இறக்கத்தில் வண்டியைப் பறக்கவிட்டான்.


அதே நேரத்தில் , செவ்வாய்ப்பேட்டையில் ஸ்ரீனிவாசின் வீடு பரபரப்பாய் இருந்தது. ஸ்ரீனிவாஸ் , எப்பொழுதும் மொட்டைத் தலையுடன் இருப்பதால் செவ்வாய்ப் பேட்டையில் மொட்டை செட்டியார் என்று பேசப்படுபவர். அந்தப் பகுதியின் பணக்காரர்களுள் பணக்காரர். தெய்வ பக்தியும், கருணை குணமும் கொண்டவர். அந்தப் பகுதியின் பலக்கோவில்களும் அவர் அளித்த நன்கொடையில் கட்டப்பட்டவையே . மிக எளிமையாய் , பெரும்பாலான நேரத்தில் வெள்ளை பனியனும், வேஷ்டியும் மட்டுமே அவரது உடை.


பால் மார்க்கெட்டை நெருங்கியவன் அதன் பின் எப்படி செல்லலாம் என்று ஒரு கணம் யோசித்துப் பின் பின்பக்க வழியிலே நுழையலாம் என்று முடிவெடுத்து பாலத்தை ஒட்டிய வழியிலே வண்டியைத் திருப்பினான்.


அவர்கள் வீடு இருந்த வீதிக்குள் நுழைந்தவன், வண்டியை அவர்கள் வீட்டின் முன் நிறுத்தாமல் சற்றுத் தள்ளி அந்த வீதியின் எதிரில் இருந்த ஒருக் கடையின் வாசலில் நிறுத்தினான். அவன் வண்டியை நிறுத்தியவுடன்,அந்தக் கடையில் இருந்தவர் அவனைப் பார்த்தவாறே

"யாருப்பா அது வண்டியைக் கடை முன்னாடி நிறுத்தறது ?"

கேள்விக் காதில் விழுந்தவுடன் , சேகர் திரும்பிப் பார்த்தப் பார்வையில் அவன் யார் என்பதை ராமு புரிந்துக் கொண்டான். இந்த நேரத்தில் போலீசிற்கு இந்தத் தெருவில் என்ன வேலை. போக்குவரத்து போலிசாக இருந்தாலும் காசு வாங்க மெயின் ரோட்டில் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே, கடை வாசலில் வந்து நின்றுக் கொண்டு சேகர் எங்குப் போகிறான் என்று பார்த்தான்.

சீராக ஒரே வேகத்தில் நடந்துக் கொண்டிருந்த சேகர் , எங்கும் பார்க்காதது போல் தோன்றினாலும், அந்தத் தெருவின் அமைப்பை நன்கு தன் மூலையில் பதிய வைத்துக் கொண்டிருந்தான். எது எந்த சமயத்தில் உதவும் என்று சொல்ல முடியாது என்பது அவனுக்கு பால பாடம்.


ஸ்ரீனிவாசனின் வீட்டை அடைந்த சேகர், பூட்டாமல் இருந்த கேட்டைத் திறந்து பெல் அடித்தான். சில நொடித் தாமதத்திற்குப் பின் உள்கதவு திறக்கப்பட்டது.

"நீங்க ?"

"கமிஷனர் அனுப்பினார் ."

"உள்ள வாங்க"

வீட்டின் அமைப்பை ஆராய்ந்த வண்ணம் நுழைந்து அங்கிருந்த ஒரு சோபாவில் அமர்ந்தவன் "சொல்லுங்க சார் என்ன நடந்தது ?" அங்கிருந்தவர்களில் நடுத்தர வயதாக இருந்தவரைப் பார்த்துக் கேட்டான் .

"நான் அவர் மகன் கிருஷ்ணன். வழக்கம்போல மதியம் ஒரு மூணு மணிக்கு கடையில் இருந்து வீட்டுக்கு சாப்பிட வந்தார். வீட்டுக்கு வந்துட்டு வெளியில் போகிறேன் என்று சொல்லிக் கிளம்பியவர் இது வரைக்கும் வரலை சார் .'


"அவர் எங்க போறேன்னு சொன்னாரா ?"

"இல்லை சார். பொதுவா அவரே சொல்லிட்டு போவார். ஆனால் இன்னிக்கு அவர் எதுவும் சொல்லலை. "

"சரி அவர்கிட்ட செல்போன் இருக்கா ? அதுக்கு கால் பண்ணி பார்த்தீங்களா ?"

"இல்லை சார். அவர் செல்போன் யூஸ் பண்றது இல்லை. வெளியில் போறதா இருந்தா வண்டி டிரைவர் போனோ இல்லை கூட வர எங்க போனோ இருக்கும். "

"சரி அந்த டிரைவர் எங்க இப்ப ?"

"காரில் போனவரைத்தான் காணோம் சார். "

"டிரைவர் நம்பருக்கு ட்ரை பண்ணீங்களா ?"


"அதெல்லாம் பண்ணிப் பார்த்தாச்சு சார். மொபைல் ஆப் ஆகி இருக்கு ".


"உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா ?"

"ஏன் சார் இப்படிக் கேட்கறீங்க ?"

""எனக்கென்னவோ யாரோ உங்கப்பாவை கடத்தி இருக்கலாம் என்று தோணுது .உங்களுக்கு தொழில்ல போட்டி எதிரிகள் அப்படின்னு யாரும் இருக்காங்களா ?


"அப்படி யாரும் இல்லையே சார். இங்க கிட்டத்தட்ட  எல்லாருமே ஒரே ஜாதிதான் . இன்னும் சொல்லப்போனா நெறையப் பேரு சொந்தக்காரங்கக் கூட.யார் மேல சந்தேகப் படமுடியும் "


"அப்படி சொல்ல முடியாது . யார் வேண்டுமானாலும் செஞ்சிருக்கலாம் . பிரச்சனைன்னு வந்துட்டா எல்லாரையும் சந்தேகப் பட்டுதான் ஆகணும். வேற வழி இல்லை. "

"அவர் கார் நம்பர், ட்ரைவரோட செல் நம்பர் ரெண்டும் சொல்லுங்க. உங்களுக்கு எதாவது கால் வந்தா உடனடியா எனக்கு கால் பண்ணுங்க. உங்க போனுக்கு வர கால்ஸ் எல்லாம் ட்ரேஸ் பண்ண சொல்லிடறேன். "

தன் நம்பரைக் கொடுத்துவிட்டு அவர்களின் எண்ணை குறித்துக் கொண்டு அங்கிருந்து அவன் கிளம்பவும், அவர்கள் வீட்டு லேண்ட்லைன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

வாசல் வரை சென்றவன் மீண்டும் திரும்பினான். அதற்குள் போனை எடுத்த கிருஷ்ணன் அழைத்தவர் யார் என்று விசாரித்து , ஒரு கையால் ரீசிவரை மூடிக் கொண்டு "பஜார்ல இருந்து கூப்பிடறாங்க சார் ." என்று அவரிடம் சொல்லிவிட்டு போனில் தொடர்ந்தான்.


தான் எதிர்பார்த்த அழைப்பு இல்லை என்றுத் தெரிந்ததும், அங்கிருந்து கிளம்பினான் சேகர். மீண்டும் தான் பைக் நிறுத்தி இருந்த கடைக்கு வந்தவன் பைக்கில் கிளம்பும் முன் அந்தக் கடையில் இருந்தவரைப் பார்த்தான். அவர் பார்வையில் அவர் பதட்டமாய் இருந்தது போல் அவனுக்குத் தோன்றியது.



-வியாபரம் தொடர்ந்து நடக்கும்


அன்புடன் எல்கே

40 கருத்துகள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>
"எனக்கேனவோ யாரோ உங்கப்பாவை கடத்தி இருக்கலாம்


"எனக்கென்னவோ யாரோ உங்கப்பாவை கடத்தி இருக்கலாம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>"அவர் போன் கார் நம்பர், ட்ரைவரோட செல் நம்பர் ரெண்டும் சொல்லுங்க.

"அவர் கார் நம்பர், ட்ரைவரோட செல் நம்பர் ரெண்டும் சொல்லுங்க.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பெரியப்பா.. ஓப்பனிங்க் ஓக்கே..

சேலம் தேவா சொன்னது…

இந்த எழுத்தாளருங்களே இப்படிதான்..நல்லா போய்ட்டு இருக்கும் போது தொடரும்ன்னு போட்ருவாங்க.. :)

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வியாபாரம் அமர்க்களமாய் தொடர வாழ்த்துக்கள்.

raji சொன்னது…

வியாபாரம் நல்லா சூடு பிடிச்சு போயிட்டிருக்கு.
ஆனா பாருங்க 7ம் தேதிக்கப்பறம் 15ம் தேதிதான் வியாபாரம் பண்ண வந்துருக்கீங்க.
இப்படி நாள் தள்ளி வியாபாரம் பண்ணினா வாடிக்கையாளர்கள் நாங்க சும்மா
விட மாட்டோம் ஆமாம்

Yaathoramani.blogspot.com சொன்னது…

அமர்க்களமான ஆரம்பம்
தொடர்ந்து ஆவலுடன் வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

raji 7 Says:
Apr 15, 2011 8:06:00 AM

வியாபாரம் நல்லா சூடு பிடிச்சு போயிட்டிருக்கு.
ஆனா பாருங்க 7ம் தேதிக்கப்பறம் 15ம் தேதிதான் வியாபாரம் பண்ண வந்துருக்கீங்க.
இப்படி நாள் தள்ளி வியாபாரம் பண்ணினா வாடிக்கையாளர்கள் நாங்க சும்மா
விட மாட்டோம் ஆமாம்


...... :-))))))

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

வியாபாரம் நல்லா சூடு பிடிச்சு போயிட்டிருக்கு.தொடரவும். ஆவலுடன் vgk

Anisha Yunus சொன்னது…

happaaaaaaaaadaaa.... adutha paguthikku ivlolate pannaa, enga viyaabaarathai naanga gavanikka vendaamaa?? he he he... superaaga poguthunna. love storyai vida ithuthaan ungalukku nallaa varuthu. keep going...!!!

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

தொடருகிறேன்

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

தொடருகிறேன்

ஸ்ரீராம். சொன்னது…

இன்னும் விசாரணைகள் தொடரட்டும்....யாரை சந்தேகப் படலாம்னு பார்ப்போம்!

குறையொன்றுமில்லை. சொன்னது…

சேகர் தனக்கிடப்பட்ட வேலையை
நன்றாகவே தொடருகிரார்.

சுசி சொன்னது…

தொடருங்க கார்த்திக்.

சாகம்பரி சொன்னது…

ம்.... அப்புறம் என்னாச்சு?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நானும் வந்துட்டேன் அப்புறம்...

சக்தி கல்வி மையம் சொன்னது…

மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது... தொடருங்கள்....

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

விறுவிறுப்பு.

அடுத்த பகுதியை 22ம் தேதி எழுதாதீர்கள் கார்த்தி.

vanathy சொன்னது…

விறு விறுப்பா போகுது கதை. வெயிட்டிங்க்!!!!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விறுவிறுப்பாய் வியாபாரம் தொடரட்டும் கார்த்திக்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

// அந்தத் தெருவின் அமைப்பை நன்கு தன் மூலையில் பதிய வைத்துக் கொண்டிருந்தான்//
எந்த மூலை மிஸ்டர் கார்த்திக்... அக்னி மூலையா? ஈசானி மூலையா? நோ டென்ஷன்... didn't want to miss my chance...thats it...ha ha...;))

//அவர் பார்வையில் அவர் பதட்டமாய் இருந்தது போல் அவனுக்குத் தோன்றியது//
ஹ்ம்ம்... அந்த ஆள் எதுவும் செஞ்சிருக்க வாய்பில்லனு தோணுது... but you never know எந்த புத்துல எந்த பாம்போ... lets see...

GEETHA ACHAL சொன்னது…

நல்லா போகுது..அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க..

எல் கே சொன்னது…

@செந்தில்

நன்றி. சரி பண்ணிட்டேன்

எல் கே சொன்னது…

@தேவா

என்னய்யா பண்றது. அப்படிதானே தொடர்கத எழுத முடியும்

எல் கே சொன்னது…

@ராஜராஜேஸ்வரி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@ராஜி

என்ன விஷயம்னா , நடுவில , பண்டிகை அப்புறம் கல்யாணம் இப்படி லீவ் விட வேண்டியதா போச்சுங்க. இனி வியாபாரம் ஒழுங்கா நடக்கும்ங்க

எல் கே சொன்னது…

@வைகோ

நன்றி சார்

@ஆச்சி

நன்றி ஆச்சி

எல் கே சொன்னது…

@அன்னு

ஹ்ம்ம் நினைவுகள் கதை நல்லா இல்லைன்னு சொல்லாமல் சொல்ற. புரியுது

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

ஓகே ஆபிசர்


@லக்ஷ்மி

நன்றி மா

@சுசி

ஓகே

@சாகம்பரி

வெயிட் பண்ணுங்கோ

@மனோ

வா மக்கா

எல் கே சொன்னது…

@கருண்

நன்றி


@சுந்தர்ஜி

இப்ப இருக்கற நிலையில் அப்படிதான் ஆகும் போல இருக்கு

எல் கே சொன்னது…

@வாணி

நன்றிங்க

@வெங்கட்

நன்றி

எல் கே சொன்னது…

@அப்பாவி

பேசாம கதையில் ஒரு புது கேரக்டரை உருவாக்கி அதைப் போட்டு தள்ளிட்டா (எதை சொல்றேன்னு புரியும்னு நினைக்கிறேன் )

எல் கே சொன்னது…

@கீதா

நன்றிங்க

Asiya Omar சொன்னது…

கதை நல்லா போகுது.த்ரில்லாக இருக்கு.

RVS சொன்னது…

அடுத்தது எப்போ? ;-))

சாந்தி மாரியப்பன் சொன்னது…

விறுவிறுப்பா போகுது.

நிரூபன் சொன்னது…

இந்தப் பகுதியிலும் அவிழாத மர்மங்களுடன் கதையினை முடித்திருக்கிறீர்கள்...

அடுத்த பகுதியில் கொலை நடந்ததற்கான காரணம், யார் கொலை செய்தார்கள் என்பது பற்றி அறியும் ஆவலும், சஸ்பென்ஸ் நீங்கும் என்ற எண்ணத்தோடும் வெயிட்டிங்க்.

Jaleela Kamal சொன்னது…

அய்யோ பயமா இருக்கே

Chitra சொன்னது…

பாதியில வந்து ஆஜர் போடுறேன்.

ப்ரத்யுஷா

தென்னாப்பிரிக்க அணியின் இறங்கு முகம்

மீண்டும் தொடரலாமா...

இரண்டு வார்த்தைகள்

காவிரியின் மைந்தன்

கற்க வேண்டியது யார் ?

புது வீடு

மீண்டும் விருது

பள்ளித் துவக்கம்

அனைவரும் நலமா ?