லோக்பால் மசோதா எப்பொழுதும் ஆளும் கட்சிக்கு எதிரான ஒரு சட்டத்திற்கு மக்கள் ஆதரவு அதிகம் இருந்தால் , அந்த சட்டத்தை ஆதரிப்பது போல் ஆதரித்து...
லோக்பால் மசோதா
எனக்குமே இந்த லோக்பால் சட்டத்தில் சில சந்தேகங்கள் இருந்தாலும், இவ்வலைப் பெரியப் போராட்டத்தை கையில் எடுத்ததற்காக அன்னா ஹசாரேயை பாராட்டத்தான் செய்வேன். இன்னும் இந்த மசோதா உருபெற்று பாராளுமன்றத்தில் வெற்றிப் பெற்று சட்டமாக மாற என்ன என்ன சோதனைகளை சந்திக்கவேண்டுமோ தெரியவில்லை.
தேர்தல்
எப்பொழுதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. அது யாருக்கு சாதகம் என்பதை அரசியல் கட்சியினர் கணித்துக் கொள்ளட்டும். இத்தனைப் பேர் வந்து ஓட்டுப் போட்டதே பெரிய சாதனைதான். அதற்காக தேர்தல் கமிஷனைப் பாராட்ட வேண்டும். அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்தி உள்ளது.
மறுபடியும் கூட்டு பகுதி எழுத ஆரம்பித்தபொழுது நான் எழுதிய முதல் விஷயம் பிரச்சாரத்தால் ற்படும் போக்குவரத்து பாதிப்பு. எனக்குத் தெரிந்து சென்னையில் எங்குமே தேர்தலினால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இதுபோன்றுதான் இனி தேர்தல்கள் நடக்கவேண்டும்.
டவுட்டு
மே மாதம் பத்தாம் தேதி வரை கருத்துக் கணிப்பு எதுவும் வெளியிடக் கூடாது என்று தேர்தல் கமிஷன் தடை செய்துள்ளது. இது நமது வலைப்பதிவர்களுக்கும் , கூகிள் பஸ் ஓட்டுபவர்களுக்கும் பொருந்துமா ?
இந்தவாரப் பதிவர்
கீதமஞ்சரி என்றப் பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் திருமதி கீதா (ஆஸ்ட்ரேலியா) அவர்கள்தான் இந்தவாரப் பதிவர். பெரும்பாலும் காதல் கவிதைகள்தான் எழுதுகிறார். அவர் எழுதியதில் எனக்குப் பிடித்தது
மெய் தீண்டோம்...
அன்புடன் எல்கே
49 கருத்துகள்
முத பந்திலயே... உக்காந்துடனும்.. ஹி ஹி
>>>
மே மாதம் பத்தாம் தேதி வரை கருத்துக் கணிப்பு எதுவும் வெளியிடக் கூடாது என்று தேர்தல் கமிஷன் தடை செய்துள்ளது. இது நமது வலைப்பதிவர்களுக்கும் , கூகிள் பஸ் ஓட்டுபவர்களுக்கும் பொருந்துமா ?
கண்டிப்பா பொருந்தாது.. அப்புறம் நாங்க எப்படி மொக்கை போடரது>ஹா ஹா
பெரியப்பா... கீத மஞ்சரியின் அறிமுகம் அருமை.. அவங்க எழுதுன நல்ல கதையான ஓட்டாத்தா பற்றியும் சொல்லி இருக்கலாம்..
என்ன வர வர கரண்டி சைஸ் சின்னதாயிட்டே இருக்கு? :P லோக்பால் கருத்து சேம் பின்ச்.
சீரியஸா மீட்டிங்க்ல்லாம் போட்டு நல்லவங்க மாதிரி நடிக்க ஆரம்பிக்கறத பார்த்த மகளீர் மசோதா மாதிரி டீல்ல விடுவாங்க போலிருக்கு ....
லோக்பால் மசோதா - கானல் நீர் ஆகாமல் இருக்கவேண்டும்.
பார்ப்போம் நண்பரே!
ஷார்ட் அண்ட் குட்:)
லோக்பல் - என்ன சொல்வது :( எப்படியாவது தடுக்க/நீர்த்துப் போகச் செய்வது தான் இந்த அரசியல்வாதிகளின் நோக்கம். பார்க்கலாம் - போகப் போகத் தெரியும் இவர்களின் ஆட்டம் என்னவென்று.
மினி மீல்ஸ் மாதிரி மினி கூட்டா!!.. இது எங்களுக்கு பத்தாதே :-)))))
//என்ன வர வர கரண்டி சைஸ் சின்னதாயிட்டே இருக்கு? ://
போர்க்கொடி சொன்னது கரெக்க்டு.
நாங்கெல்லாம் பகாசுரர்கள் பகாசுரிகள். ;-)))
//டவுட்டு
மே மாதம் பத்தாம் தேதி வரை கருத்துக் கணிப்பு எதுவும் வெளியிடக் கூடாது என்று தேர்தல் கமிஷன் தடை செய்துள்ளது. இது நமது வலைப்பதிவர்களுக்கும் , கூகிள் பஸ் ஓட்டுபவர்களுக்கும் பொருந்துமா ? //
உங்க பிலாகுல/கூகிள் பஸ், நீங்க உங்க கருத்த, கணிப்பா எழுதுங்க.. அப்புறம் வில(ளங்)கிடும் உங்கள் டவுட்டு..
அசத்தல்..
லோக்பால் மசோதா வெத்துவேட்டு ஆகாமல் இருக்கவேண்டும்.
//அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்தி உள்ளது//
முடிவு தெரியும்வரை ஓட்டு இயந்திரம் பாதுகாப்பாக இருந்தால் மகிழ்ச்சி.
//ஒருபுறம் சோனியா , அன்னா ஹசாரேக்கு ஆதரவுத் தெரிவிக்கிறார். மறுபுறம், திக்விஜய்சிங்க் போன்ற காங்கிரஸ் கட்சியினர் அவரின் போராட்டத்தைப் பற்றி அவதூறு கிளப்பிக் கொண்டிருக்கின்றனர். //
'பிள்ளைய கிள்ளு..தொட்டிலை ஆட்டு' பார்முலா..
//லோக்பால் மசோதா //
ஆம். இது ஒரு மிகப்பெரிய சித்திரைத் தேர் போன்றதே. புறப்பாட்டு திரும்ப நிலைக்குக்கொண்டுவருவதற்குள் நடுவில் என்னென தடங்கல்கள் நிகழுமோ. மக்களின் ஒன்றுபட்ட சக்தியினால் மட்டுமே, தேரை ஒருவாறு நகர்த்திக்கொண்டுவர முடியும்.
//தேர்தல்//
ஆம். இந்தத்தேர்தல் அருமையான ஒரு முன்னுதாரணம். தேர்தல் கமிஷனை அவசியம் பாராட்டுவோம்.
// டவுட்டு //
தெரியவில்லை. டவுட்டு, டவுட்டு தான்.
//இந்தவாரப் பதிவர்//
பதிவர் அறிமுகம் உங்களின் புதுமை.
பாராட்டுக்கள்.
இந்தத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது உண்மையிலேயே ரொம்ப ஆச்சரியமான விசயம்தான்.. கண்டிப்பாக தேர்தல் கமிஷனை பாராட்டனும்..
தேர்தலின்போது டிராஃபிக் ஜாம்கள் இல்லை என்ற செய்தி தேனாக இனிக்கிறது. நிஜமாவே!!
கருத்து கணிப்பு வெளி இடகூடது வந்த பிறகுதான் எல்லா பத்திரிக்கைகளிலும் சர்வே முடிவுகள் என்ற தலைப்பில் கருத்து கணிப்புகள் வந்தன.அது தன எனக்கு புரியவில்லை. எப்படியோ உங்கள் நல்ல இருந்தது வாழ்க வளமுடன் மென் மேலும் சிறப்பாக வளர்ச்சி யடைய வாழ்த்துக்கள்
கூட்டில் காய்கள் கம்மி.
தொடர
nice. :-)
தேர்தல் :)
பதிவர் அறிமுகத்துக்கு நன்றி.
//"வலைப்பதிவர்களுக்கும் , கூகிள் பஸ் ஓட்டுபவர்களுக்கும் பொருந்துமா ? "//
கேட்டா ஆமாம்னுடுவாங்க...கேக்கக் கூடாது!
நானும் வந்துட்டேன் மக்கா...
கருத்துக் கணிப்பிற்கு வலைப்திவுகளுக்கு தடை என்றால் நிறைய காதல் கவிதைகள் வர ஆரம்பித்துவிடும். Readers attraction ...? கீதமஞ்சரியை எனக்கும் தெரியும் repeatttu. எங்கள் பகுதி வேட்பாளர்கள் நிறைய பேரை எனக்குத் தெரியவேயில்லை long live election commission. கூட்டு மினியிலிருந்து துளி ஆகிவிட வேண்டாம், a request sir.
//எப்பொழுதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன//
அதற்கு அண்ணா ஹசாரே அவர்களும் ஒரு காரணம்னு தோணுது... ஒட்டு போடுங்கனு அவர் நேரடியா சொல்லலைனாலும் மக்கள் மத்தில ஒரு விழிப்புணர்வு வந்திருக்கு... அது பெரிய மாற்றம்... நல்ல மாற்றம்... சந்தோஷம்...;)
//கீதமஞ்சரி//
வலைப்பூவின் பேரையே கவிதை போல இருக்கே... சூப்பர்...:)
நல்ல கூட்டு, எல்கே.
@செந்தில்
அதானே , பந்திக்கு முந்திக்கணும் . அது நான் இன்னும் படிக்கலை. இன்னிக்கு படிக்கிறேன்
@போர்கேடி
நான்தான் மினி கூட்டுன்னு போட்ருக்கேன் இல்ல அப்புறம் என்ன கேள்வி
@பத்மநாபன்
ஆமாம் அண்ணா அதான் நடக்குது :(
@பாலாஜி
பார்ப்போம் பாலாஜி . நம்பிக்கை இல்லை
@விக்கி உலகம்
பார்போம்
@வித்யா
நன்றி
@வெங்கட்
அதே அதே. நீர்த்து போக செய்ய வேண்டுமோ அதை செய்கிறார்கள் அரசியல்வாதிகள்
@சாரல்
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க
@ஆர்வீஎஸ்
சமைக்க நேரமில்லை அதான் காரணம்
@மாதவன்
எதுக்கு சொந்த செலவில சூனியம் வைக்க சொல்றீங்க ... ஆணியே புடுங்க வேண்டாம்
@கருண்
அதுதான் நான் வேண்டுவதும்
@சிவகுமார்
ஓஹோ அது வேற ஒன்னு இருக்கு . முற்றிலும் சரி
@வைகோ
உண்மைதான். திருவாரூர் தேர் மாதிரிதான் ...
@பாபு
தேர்தல் நடந்த அறிகுறியே இல்லை
@ஹுசைனம்மா
ஆமாம். எந்தப் பிரச்சனையும் இல்லை
@இன்பம் துன்பம்
:( தெரியலைங்க.
வாழ்த்துக்கு நன்றி
@கீதா
காய் விலை ஜாஸ்தி ஆய்டுச்சு .கட்டுபடி ஆகலை
@சித்ரா
நன்றி
@சுசி
நன்றி சுசி
@ஸ்ரீராம்
இல்லைனா. பஸ்ல தொந்தரவு தாங்கலை. உ பிக்கள் ரொம்ப தொந்தரவு பண்றாங்க
@சாகம்பரி
எனக்கு அவர்கள் புதியவர்தான். ஞாயிறு அன்றுதான் பார்த்தேன். இல்லை இல்லை அடுத்தவாரம் நார்மல் கூட்டு வரும்
@அப்பாவி
எனகென்னவோ அப்படி தோணலை.
@வாணி
நன்றி
இந்தவாரப் பதிவராக என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக மிக நன்றி. கூட்டு ரொம்ப நல்லா இருக்கு.
எனக்கென்னவோ அசாரேவுக்கு பின்னால் நிற்கும் ஆதரவைப் பார்த்தால், மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது கார்த்திக். லோக் பால் வரும்.. வந்தேதீரும் பாருங்க.
மினி கூட்டு நல்லாயிருக்கு.
உங்க டெம்ப்லேட்டை ஆனந்தி வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்காங்க.
my wishes too
தேர்தல்...:)
main-aa--- enakku intha 'koottu' idea-- romba pidichchirukku! :)
கருத்துரையிடுக