ஏப்ரல் 07, 2011

வியாபாரம்-1

 இன்னும் சூரியன் உதிக்காத மார்கழி மாதக் காலையில், காற்றிலேக் கலந்து வந்த பனிக்காற்று உடலை ஊடுருவிக் கொண்டிருந்தது. கடைகள் திறக்க இன்னும் சில மணி நேரம் இருந்ததால் சாலை முழுவதும் ஆள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்க, வெளியூரில் இருந்து வந்த லாரிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்றுக் கொண்டிருந்தன. 

வழக்கமான இந்தக் காட்சிகளைக் கண்டவாறே டீக்கடையை நோக்கி நடந்துக் கொண்டிருந்தான் ராமு. காலைப் பனியில் இப்படி நடப்பது அவனுக்கு ரொம்பப் பிடித்தமான ஒன்று. வாழ்வின் செயற்கைத் தனங்கள் இன்றி அந்த நேரம் இயற்கையின் ஆதிக்கம் முழுவதுமாய் இருப்பது போல் அவனுக்குத் தோன்றும். லேசாக நடுக்கம் இருந்தாலும் அந்தக் குளிர் அவனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.


 கடையில் நுழைந்தவன் ,"மாஸ்டர் ஸ்ட்ராங்கா ஒரு பில்டர் காபி" என்று மாஸ்டரிடம் சொல்லியவாறே அன்றைய நாளிதளைக் கையில் எடுத்தான்.

கடைப் பய்யன் கொண்டு வந்து வைத்த காபி டம்ப்ளரை ஒருக் கையில் எடுத்தவன் ,கல்லாவில் இருந்தவரை நோக்கி "என்ன முதலாளி ! என்ன விசேஷம். ஏதாவது ஸ்பெசல் நியுஸ் இருக்கா ?" என்றுக் கேட்டான். 


"ஒன்னும் பெருசா சொல்லிக்கற மாதிரி இல்லை அண்ணாச்சி" என்று சத்தமாகக் கூறிய கல்லாவில் இருந்த நபர் பின் தன் குரலைத் தாழ்த்தி "செட்டியாரைக் காணோமாம் . விஷயம் தெரியுமா ?"


அவர் குரலில் தெரிந்த மாற்றத்தைக் கண்ட ராமு ,இன்னும்  கல்லாவை நெருங்கினான். கடையில் அப்பொழுது யாரும் இல்லாமல் இருந்தது வசதியாக இருந்தது. 


 "எந்த செட்டியாரை சொல்றீங்க ? இங்க பாதி பேரு செட்டியார்தானே?"


"நம்ம மொட்டை செட்டியார்தான். "


"அவரா ? எப்ப இருந்துக் காணோம் ?"


 "நேத்து நைட்ல இருந்துக் காணோம்னு சொல்றாங்க. "

"என்னக் காரணம்னு தெரியுமா ?"

"எனக்கு என்ன அண்ணாச்சித்  தெரியும்? எதோ இது காதுல விழுந்துச்சு . உங்கக்கிட்டேன் சொன்னேன். அவ்ளோதான்"
"சரி சரி. விடுங்க"

அதற்கு மேல் அவனுக்கு கையில் வைத்திருந்த பேப்பரில் கவனம் செல்லவில்லை. காப்பியைக் குடித்து முடித்தவன் காசைக் கொடுத்து விட்டு அங்கிருந்துக் கிளம்பினான். 
அங்கிருந்துக் கிளம்பியவன், சாலையின் வலதுபுறத்தில் திரும்பி , மெயின் ரோட்டில் திரும்பி நடக்கத் துவங்கினான். ரோட்டில் எதிர்பட்டவர்களைப் புன்னகையுடன் பார்த்தாலும், அவன் மனது கடத்தப்பட்டவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. 

நேராக நடந்து ,மாரியம்மன் கோவிலை அடைந்தவன் , வெளியில் இருந்தவாறே ,அம்மனை வணங்கி விட்டு, நேராக வீடு நோக்கி நடக்கத் துவங்கினான். 

முதல் நாள் இரவு அவன் கடையை மூடும் முன் நடந்தது  அவனுக்கு நினைவிற்கு வந்தது. அவன் வழக்கமாக கடையை அடைக்கும் ஒன்பது மணி அளவில், அவன் கடை வாசலில் அந்த பைக் வந்து நின்றது. கடை அடைக்கும் சமயத்தில் யார் என்று எண்ணியவாறே அந்த பைக்கில் இறங்கியவரைப் பார்த்தான். 
-வியாபரம் தொடர்ந்து நடக்கும்

பி.கு : நான் பிறந்து வளர்ந்த செவ்வாய்ப் பேட்டையையும், செவ்வாய் பேட்டை பஜாரையும் மையமாக கொண்டக் கதை. வழக்கம் போல் உங்கள் ஆதரவு இருக்கும் என்று எண்ணுகிறேன்.

 அன்புடன் எல்கே

41 கருத்துகள்:

அப்பாவி தங்கமணி சொன்னது…

First vadai..appuram reading...:)

அப்பாவி தங்கமணி சொன்னது…

ஆஹா...இதான் அந்த கொலை கொலையா முந்திரிக்காவா... ஹும்... ஒகே ஒகே ஸ்டார்ட் மீசிக்... ;)))

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மார்கழி மாத விடியற்கால குளிரில், ஸ்ட்ராங் ஃபில்டர் காபி சாப்பிட்டாச்சு.
அந்த மொட்டைச்செட்டியாரைக்காணோம் என்ற செய்தியும் கிடைத்து விட்டது.
அப்புறம் என்னாச்சு? படிக்க ஆவலுடன் vgk

raji சொன்னது…

கதை மார்கழி மாதக் காலை நேரம் போல் நல்லா சிலுசிலுன்னு இருக்கு.
தொடருங்க.படிக்கறோம்.

***********************************

ஜகத்குரு?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ம்ம்ம் அசத்துங்க அசத்துங்க மக்கா..

ஹேமா சொன்னது…

ஒரு கிராமத்துக் கதை களை கட்டத் தொடங்குகிறதா!

asiya omar சொன்னது…

அடுத்த தொடர்,ஆரம்பித்தாயிற்றா? ஆரம்பமே அமர்க்களமாக பில்டர் காஃபியுடன்,சூப்பர்.தொடருங்கள்.சகோ.எல்.கே. வள வளன்னு இல்லாமல் எழுதும் ஒவ்வொரு பகுதியும் படிப்பதற்கு இலகுவாக இருக்கு.

சுசி சொன்னது…

உங்க ஊரு கதையா.. வாழ்த்துகள் தொடருங்க.

Chitra சொன்னது…

Good start!!!!

அன்னு சொன்னது…

//பி.கு : நான் பிறந்து வளர்ந்த செவ்வாய்ப் பேட்டையையும், செவ்வாய் பேட்டை பஜாரையும் மையமாக கொண்டக் கதை. வழக்கம் போல் உங்கள் ஆதரவு இருக்கும் என்று எண்ணுகிறேன்.//
naan velila irunthu aatharavu hi hi hi :)

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல வர்ணனைகளுடன் நல்ல ஆரம்பம்.

காணோமாம்...காணோம்...இப்படி சொல்லி விட்டு அவன் மனம் 'கடத்தப்பட்டவரை' நினைத்தது என்று எப்படி சொல்லலாம்..! காணோம் என அறியப் பட்டவரை எப்படி கடத்தப் பட்டதாக உடனே சொல்ல முடியும்?!

anitaraj சொன்னது…

thodakamai amarkalam karthik.very nice.

எல் கே சொன்னது…

@அப்பாவி

வடை உனக்கு. இதுதான் அது. நீ ஜில்லுனு காதல் முடிக்கறதுக்கு முன்னாடி இதை முடிக்கணும்

எல் கே சொன்னது…

@கோபாலக்ருஷ்ணன்

நன்றி சார். விரைவில் வரும்

எல் கே சொன்னது…

@ராஜி

நன்றிங்க.


@மனோ

நன்றி மக்கா


@ஹேமா
கிராமம்னு சொல்ல முடியாது. வளரும் நகரின் ஒரு பகுதி

எல் கே சொன்னது…

@ஆசியா

ரொம்ப வளவளன்னு எழுத மாட்டேன்,. நறுக்குன்னு சின்னதா கச்சிதமா சீக்கிரமா முடிச்சிடுவேன் நன்றி

எல் கே சொன்னது…

@சுசி

களம் மட்டும் அது. அங்கிருக்கும் சில நபர்கள் (நான் கூட) கதையில் வரலாம். ஆனால் கதை கற்பனை தான்

எல் கே சொன்னது…

@சித்ரா

நன்றிங்க

எல் கே சொன்னது…

@அன்னு

ஒத்துக்கொள்ள மாட்டேன்.

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

நீங்க மட்டும்தான் அதை சொல்லி இருக்கீங்க. கொஞ்சம் பொறுமையா இருந்தா அடுத்த பகுதில விடைக் கிடைக்கலாம்

எல் கே சொன்னது…

@அனிதா ராஜ்

நன்றிங்க

நிரூபன் சொன்னது…

இன்னும் சூரியன் உதிக்காத மார்கழி மாதக் காலையில், காற்றிலேக் கலந்து வந்த பனிக்காற்று உடலை ஊடுருவிக் கொண்டிருந்தது. கடைகள் திறக்க இன்னும் சில மணி நேரம் இருந்ததால் சாலை முழுவதும் ஆள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்க, வெளியூரில் இருந்து வந்த லாரிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்றுக் கொண்டிருந்தன.//

கதையின் எண்ணவோட்டத்தை அழகாக்கும் வண்ணம், இயற்கை வரணணையுடன் கதையினைத் தொடங்கியிருக்கிறிர்கள்.

நிரூபன் சொன்னது…

"ஒன்னும் பெருசா சொல்லிக்கற மாதிரி இல்லை அண்ணாச்சி" என்று சத்தமாகக் கூறிய கல்லாவில் இருந்த நபர் பின் தன் குரலைத் தாழ்த்தி "செட்டியாரைக் காணோமாம் . விஷயம் தெரியுமா ?"//

கதையின் முதற் பாகத்திலே விழிகளை நிமிர்த்தும் அளவிற்கு சஸ்பென்ஸ் வைத்துள்ளீர்கள்.

நிரூபன் சொன்னது…

அடுத்த அங்கத்தினை ஆவலோடு எதிர் பார்த்துக் காத்திருக்கும் வண்ணம், கதையினை நகர்த்தியிருக்கிறீர்கள்.

நிரூபன் சொன்னது…

கொஞ்சம் சஸ்பெஸ்ன் ஆகவும், கொஞ்சம் திரிலிங் ஆகவும் கதை நகர்கிறது. கடையைப் பூட்டும் நேரம் மோட்டார் சைக்கிள் வந்து நிற்பதுடன் கதையின் போக்கில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அதனைப் படிப்பதற்காய் வெயிட்டிங்.

நிரூபன் சொன்னது…

உங்கள் ஊர் மொழி நடையுடன் கலந்து, இலகுவான உரை நடையினூடாக கதையினை நகர்த்திச் செல்வது கதைக்கு மேலும் சிறப்பினைத் தருகிறது.

சுந்தர்ஜி சொன்னது…

தொடங்கியவுடன் முடித்துவிட்டீர்களே கார்த்திக். நல்ல சுவாரஸ்யமான நடையுடன் ஆரம்பமான வியாபாரம்.

RVS சொன்னது…

என்னால முத போணி பண்ண முடியலை. அத அப்பாவி பண்ணிட்டாங்க...
யார் காணமப் போனா... சுனா பானா-வா? ;-))

அருண் பிரசாத் சொன்னது…

ரைட்டு.... நடத்துங்க்....தொடர்ந்து வரேன்....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

காணாமல் போனவர் பற்றிய அறிவுப்பு.... அடுத்த தொடர் தொடர வாழ்த்துகள் கார்த்திக்.

கோவை2தில்லி சொன்னது…

கதை சுவாரசியமா ஆரம்பிச்சிருக்கு. அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்!

Priya சொன்னது…

அழகாக தொடங்கியிருக்கு கதை... தொடர்ந்திட வாழ்த்துக்கள்!

கோவை ஆவி சொன்னது…

அருமையான தொடக்கம்... எனக்கும் "கடத்தப்பட்ட" இடத்தில் கொஞ்சம் நெருடலாக பட்டது. அதற்கு விளக்கம் இருக்கிறது என்று கூறி விட்டீர்கள். பொறுத்திருந்து பார்க்கிறேன்...

( புதிய பதிவுகளுக்காய் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் கொஞ்சம் வசதியாக இருக்கும்.. சின்ன சஜெஷன்)

வித்யா சொன்னது…

சென்ற தடவை காதல். இந்த தடவை சஸ்பென்ஸா?

நைஸ்.

vanathy சொன்னது…

நல்லா இருக்கு. கொலை, த்ரில்லர் கதையா?? தொடருங்கோ.

சாகம்பரி சொன்னது…

தொடர் கதையா? நான் ரெடி. // காலை வர்ணனை ரசனையுடன் இருந்தது//

thirumathi bs sridhar சொன்னது…

@நானும் தொடர்கிறேன்

Lakshmi சொன்னது…

காலைப்பனியின் சில்லிப்பையும் பில்டர்காபியின் சுவையும் உங்க வர்ணனையில் உனர முடிந்தது கார்த்தி.
நல்ல சுகமான ஆரம்பம்.

komu சொன்னது…

ஓ, புது தொடர் ஆரம்பமாச்சா?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சித்திரை பிறக்கப் போகும் வெய்யில் வேளையில் மார்கழிக் குளிராய் இதமாய் ஆரம்பித்த கதைக்குப் பாராட்டுக்கள்.

Jaleela Kamal சொன்னது…

சொந்த ஊர் வியாபார தொடக்கமா