ஜூன் 10, 2012

அனைவரும் நலமா ?

எல்லோரும் நல்லா இருப்பீங்கன்னு நினைக்கிறேன். சமீப காலமா அதிகம் எழுதறதும் இல்லை. ப்ளாக் பக்கம் வருவதும் இல்லை. அதனால்தான் எந்த பதிவு பக்கமும் தலை காட்டறது இல்லை.

கூகிள் ப்ளஸ்ல கொஞ்சம் காலம் இருந்தாலும், இப்ப அங்க கூட அதிகம் போறதில்லை. ஆபிஸ்ல அவ்ளோ ஆணி. புடுங்க புடுங்க வந்துகிட்டே இருக்கு.

திவ்யாகூடவும் அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கே . மேடம் வர வியாலன்ல இருந்து ஸ்கூல் போகப் போறாங்க. இப்பவே ரெடி ஆகிட்டாங்க . புது இடம். புதிய நண்பர்கள் . நமக்குத்தான் படபடப்பா இருக்கு. இவ்ளோ நாள் வீட்ல சுதந்திரமா சுத்திகிட்டு இருந்தவங்க, அங்க போய்  எப்படி இருக்க போறாங்களோன்னு. இவங்ககிட்ட மாத்திகிட்டு டீச்சர் என்ன பாடுபடப் போறாங்கன்னு தெரியலை .

சமீபத்தில் திவ்யா சொன்னக் கதை ஒன்று உங்களுக்காக....

http://soundcloud.com/karthik-lakshmi-narasimman/story-telling-by-divya


அன்புடன் எல்கே

14 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பள்ளியில் சேரப் போகும் திவ்யாவிற்கு வாழ்த்துகள்....

நல்லாவே கதை சொல்லி இருக்காங்க... :)

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய எல்.கே! வாங்க வாங்க!வலைக்கு வர்ரோம்கிறதை விட இருக்கோங்கிறது தான் முக்கியம் ! நானுமே ஒரு 'போவான் வருவான் திம்மப்பன் தானே?'

திவ்யா ஸ்கூலுக்கா? சபாஷ்! இனிமே உங்களுக்கு நிறைய கேரக்டர்களை அறிமுகம் செய்யப் போகிறாள். அதையெல்லாம் எங்களுக்கும் சொல்லுங்கப்பு! குழந்தைக்கு ஆசிகள்!

ஸ்ரீராம். சொன்னது…

திவ்யாவுக்கு எங்கள் வாழ்த்துகள்.

சே. குமார் சொன்னது…

திவ்யாவிற்கு வாழ்த்துக்களைச் சொல்லுங்க... நம்ம வீட்டு சூப்பர் ஸ்டாரும் பள்ளிக்கூடம் போகப் போறாரு...

ஹேமா சொன்னது…

திவ்யாக்க்குட்டி அடுத்தமுறை இன்னும் எங்களுக்குப் புரியிற மாதிரிச் சொல்லித் தரணும் கதை.சரியா.இந்தக் கதைக்கும் ஸ்கூலுக்குப் போறதுக்கும் வாழ்த்துகள் !

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

வாங்க... வாங்க. திவயா குட்டிக்கு வாழ்த்துகள்.

அன்புடன்
பவளா

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி சொன்னது…

இன்னொரு கதை சொல்லு பாப்பா....

அப்பாதுரை சொன்னது…

முடிஞ்சப்ப வாங்க. அது ஒரு வசதி.

நீச்சல்காரன் சொன்னது…

குழல் இனிது யாழ் இனிது திவ்யா சொல்லும் இனிது

எல் கே சொன்னது…

@வெங்கட்

நன்றி

@மோகன்ஜி
நான் உங்களை விட ரொம்ப கம்மி . மாசம் ஒண்ணுதான். திவ்யா கதைகளை சொல்லவே இனி எழுதணும். முக்கியமா இதையெல்லாம், ஆவணப்படுத்தி பின்னொருநாளில் அவளுக்கு பரிசா தரணும். அதுதான் மறுபடி தூசு தட்டறேன்.

@ஸ்ரீராம்
நன்றி அண்ணா

@குமார்

அப்படியா அவருக்கும் வாழ்த்துகள்

@ஹேமா
நன்றி . அவளுக்கு இன்னும் மழலை போகலை. கொஞ்ச நாளில் சரியாகும்

@பவளா
நன்றிங்க

@ஸ்ரீவிஜி

நன்றி

@அப்பாதுரை

:)

@நீச்சல்காரன்
உண்மைதான்

Thanai thalaivi சொன்னது…

I have shared an award with you !, pls visit my site in your free time.

Congrats ! (me the first) :))

Regards.

Thanai thalaivi சொன்னது…

My best wishes to your little angel.

geethasmbsvm6 சொன்னது…

திவ்யாவுக்கு வாழ்த்துகளும், ஆசிகளும். நல்லாப் படிப்பா. தைரியமாவும் இருப்பா. கவலையே படாதீங்க. :))))))

geethasmbsvm6 சொன்னது…

தொடர