மார்ச் 14, 2011

அம்மா


சக்தி இல்லாமல் சிவன் இல்லை.இது மற்றவர்கள் வீட்டில் எந்த அளவிற்கு உண்மையோ தெரியாது. எங்கள் வீட்டில் நூறு சதவீதம் உண்மை. என் அப்பாவின் வெற்றிக்குப் பின் அல்ல , அப்பாவின் வெற்றியின் சரி பாதி என் அம்மாவால்தான். 1975 இல் பள்ளி இறுதி முடித்த உடன் திருமணம் ஆகிவிட்டது அம்மாவிற்கு. அதிகம் போனால் பதினேழு வயதிருக்கும் அப்பொழுது. 

திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு வந்தால் , ராட்சசதனமான வேலைகள் காத்திருந்தது . ஆமாம், அந்தக் காலத்தில் கிரைண்டர்கள் இல்லை எங்கள் வீட்டில். எனவே மாவு அரைப்பதில் இருந்து , பொட்டுக்கடலை உரலில் இடித்து பின் சட்னி அரைப்பது வரை எல்லாம் கையினால்தான் செய்தாகவேண்டும். என் பாட்டியும்(அப்பாவின் அம்மா ) உதவுவார்கள் . 

இப்ப மாதிரி சுவிட்ச் போட்டா தண்ணி கொட்டற வசதி இல்லை. வீட்டில் அடிபைப்பில் அடிக்கவேண்டும், இல்லையேல் தெருவில் பொதுக் குழாயில் தண்ணிப் பிடிக்கணும்.   எந்த நேரத்துக்கு தண்ணி வரும்னு சொல்ல இயலாது. சென்னை அல்லது பெரு நகர மக்களுக்கு இதுப் பத்தி தெரியாமல் இருக்கலாம். ஊர்ல எல்லாம் இன்னிக்கும் இதே மாதிரிதான் தண்ணீர் விநியோகம். இரண்டுநாளோ இல்லை சில சமயம் ஐந்து நாளோ கழித்துதான் தண்ணீர் வரும். அதுவும் இந்த நேரம்தான் வரும்னு சொல்ல இயலாது. சில சமயம் அர்த்த ராத்திரியிலும் வரும். எப்ப வருதோ அப்பப் பிடிச்சு வெச்சிக்கணும். இதுதான் இன்னிக்கு வரைக்கும் நிலைமை. இப்பவே இப்படி இருந்தால், தண்ணீர் சப்ளை அவ்வளவாக சீரடையாத நிலையில் எப்படி இருந்திருக்கும் ? வீட்டில் கிணறு இருந்தது. சுற்றி இருந்த இடங்களில் போர் போடப் போட , அந்த கங்கை சென்ற பாதாளம் வரைக்கும் வாளி சென்றால்தான் தண்ணீர் வரும் நிலை. 

கோடைக்காலத்தில் தண்ணீர் சப்ளை இன்னும் மோசமாக இருக்கும். கிணற்றிலும் தண்ணீர் இருக்காது. அந்த நேரங்களில் பஜார் ரோட்டைக் கடந்து சென்று கோவில் கிணற்றில் தண்ணீர் எடுத்து வரவேண்டும். மற்றவர்கள் வீட்டை விட எங்களுக்கு தண்ணீர் அதிக அளவில் செலவாகும். ஏனென்றால் கடைக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களும் தயாராவது வீட்டில்தான். எனவே அதிக அளவில் தண்ணீர் தேவை இருந்துக்கொண்டே இருக்கும். 

வீட்டில் சமையல் வேலை மட்டும் அம்மாவிற்கு குறைவுதான்.  மதியம் ஒரு வேளைக்கு மட்டும் சமைத்தால் போதும். காலை ,இரவு கடையில் இருந்து டிபன் வந்துவிடும். அந்த மட்டில் பிழைத்தார்கள். இல்லையென்றால் இன்னும் ரொம்ப கஷ்டமாகி இருக்கும் . 

எங்கள் வீட்டில் இருந்து என் பாட்டியின் வீடு (அம்மாவின் அம்மா வீடு ) மிஞ்சிப்போனால் அரைமணி நேரத்தில் சென்று விடும் தூரத்தில்தான் உள்ளது. இருந்தும் எனக்குத் தெரிந்து பண்டிகை ,விஷேசம் இல்லாத நாட்களில் அம்மா வீட்டிற்கு சென்ற நாட்கள் மிக மிகக் குறைவு. அப்படி எதாவது விசேஷம் என்று சென்றாலும், காலை பத்து மணிக்கு  சென்றுவிட்டு மதியம் இரண்டு மணிக்குள் வந்துவிடுவார்கள். ஒரு விஷயம் இங்க சொல்லணும் என் அம்மா அங்குப் போகக்கூடாது என்று என் அப்பா என்றும் சொன்னது இல்லை. எனக்குத் தெரிந்து தன் தாய் இறந்தப் பிறகு, என் பாட்டியை (அம்மாவின் அம்மாவை) தனது தாயாக மதித்தார் என் அப்பா. வீட்டில் எந்த முடிவெடுக்கும் முன்னரும் அவர்களிடம் கேட்காமல் செய்யமாட்டார். இதை சொல்லுவதற்கு காரணம் உண்டு. இதை சொல்லாவிட்டால் என் அப்பா , அம்மாவை அவர்கள் பிறந்தகம் அனுப்பாமல் தடை செய்துவிட்டார் என்று இன்றைய பெண்கள் நினைக்கலாம். அதற்குதான் இதை சொன்னேன். 

அன்றிலிருந்து இன்று வரை மாறாத ஒரே ஒரு விஷயம் மின்சாரப் பிரச்சனை. முன்பெல்லாம் மின்சாரம் இருக்கும் ஆனால் கிரைண்டர் போட இயலாது. லோ வோல்டேஜ் காரணமாக பல்ப் எரிந்தாலே பெரிய விஷயம் இதில் கிரைண்டர் போடுவது எப்படி ? இன்றைக்கும் சேலத்தில் பெரிய மாற்றமில்லை. அன்றைக்கு லோ வோல்டேஜ் இன்றைக்கு நோ வோல்டேஜ் . தினமும் இரண்டு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு. மாதம் ஒரு நாள் பாரமரிப்புக்காக நாள் முழுவதும் மின்வெட்டு. இதுப் போக அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் பல. அப்பவும் சரி இப்பவும் சரி மின்சாரம் இல்லாமல் போனால் ஆட்டுக்கல்லில் தான் அரைக்க வேண்டும். ரொம்ப முன்னாடியே அரைத்து வைத்தால் மாவு புளித்துவிடும் . தோசையில் ருசி இருக்காது. குளிர்சாதனப் பெட்டி உபயோகப்படுத்துவதில் எங்கள் வீட்டில் யாருக்கும் (என்னையும் சேர்த்து ) விருப்பம் இல்லை. அதில் மாவு வைத்து உபயோகித்தால் வழக்கமான ருசி இருப்பதில்லை. எங்களுக்கு திருப்தி இல்லாத ஒன்றை கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு எப்படித் தர இயலும் ? 

அம்மா பள்ளி இறுதி வரை மட்டுமே படித்திருந்தாலும், எங்கள் இருவரின் படிப்பில் அதிகம் அக்கறை செலுத்தினார்கள். அப்பா வீட்டிற்கு வர ஒன்பது மணி ஆகிவிடும். எனவே இவர்தான் எங்களை கவனித்தாக வேண்டும். நான் கல்லூரிக்கு சென்றப் பிறகும் , தினமும் அவர்களிடம் நான் அன்று என்ன நடந்தது , பரீட்சை விவகாரங்கள், மார்க் ,பிறகு அசைன்மென்ட் போன்றவற்றை சொல்லவேண்டும். இல்லையென்றால் விடமாட்டார்கள். பள்ளி இறுதிவரை நான் ட்யூசன் சென்றது இல்லை. 

என் அக்காவின் திருமணத்திற்கு ஒரு வருடம் முன்பு வீட்டை இடித்து கட்டினோம். அந்த சமயத்தில் ,வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, கட்டிடம் கட்டும் இடத்திற்கு சென்று அவர்களை மேற்பார்வை இட்டு அவர்களை வேலை வாங்கினார். அப்பாவிற்கு கடைவேலையே சரியாக இருக்கும். 

படித்து முடித்து சென்னையில் வேலைக்கு சேர்ந்தப் பிறகு , கஷ்டப் படுகிறார்களே என்று வாஷிங் மெஷின் வாங்கித் தருகிறேன் என்றேன். ஒரே வார்த்தை வேண்டாம். மீறி வாங்கினால் உபயோகிக்க மாட்டேன். அதுல போடற காசை ஏன் கையில் கொடுத்துவிடு  என்றுதான் சொல்வார்கள். இன்றுவரை கையில்தான் தோய்ப்பது என்று கொள்கை உள்ளவர்கள். கேட்டால் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள் அதனால் புதிதாய் எதாவது வாங்கித் தரவேண்டும் என்றால் அவர்களிடம் எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொடுத்துவிடுவேன். பிறகு உபயோகப்படுத்திதானே ஆக வேண்டும். 

எங்களைப் படிக்கவைத்து ஆளாக்கியதற்கு என்ன கைம்மாறு செய்ய இயலும்? எங்களால் ஆன கைமாறாய் 2006 இல் என் பெற்றோருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி செய்து பார்த்தோம். அடுத்து பீமரத சாந்தி செய்ய பேத்தி வந்தாகிவிட்டது. 

சிறுவயதில் நான் செய்த தொந்தரவுகள் அதிகம். அவர்களை விட்டு எங்கும் செல்லமாட்டேன். அவர்களும் எங்கும் செல்லக்கூடாது என்று அடம்பிடிப்பேன். ஒரு முறை வீட்டில் மின்சாரம் இல்லை. எனக்கும் எதோ கொஞ்சம் உடல் நலக்குறைவு என்று ஞாபகம். பசிக்கிறது ஏதாவது டிபன் பண்ணிக்கொடுக்குமாறு அடம்பிடித்தேன். கடையில் சென்று வாங்கிவர விடவில்லை. அரைகுறை வெளிச்சத்தில் ஏதோப் பொருளைத் தேடப் போக என் அம்மாவை தேள் கொட்டிவிட்டது. அப்பவும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் சுண்ணாம்பு வாங்கி கொட்டிய இடத்தில் வைத்துவிட்டு அதை வைத்துவிட்டு அந்த வலியிலும் எனக்கு டிபன் செய்துக் கொடுத்துவிட்டு பின்புதான் மருத்துவமனைக்கு சென்றார்கள். 


இத்துணை வருடம் கஷ்டப் பட்டுவிட்டீர்கள் இப்பொழுது சென்னைக்கு எங்களுடன் வந்து விடுங்கள் என்று என் மனைவி கல்யாணம் ஆன புதிதில் இருந்து அழைத்துக் கொண்டிருக்கிறாள். அவர்கள்தான் கேட்பதாகத் தெரியவில்லை. மாதம் ஒருமுறையோ இல்லை இருமாதத்திற்கு ஒருமுறையோ வந்து பேத்தியுடன் இருந்துவிட்டு செல்கிறார்கள். அவர்கள் எப்பொழுது இங்கு வந்து  எங்களுடன் இருக்கப் போகிறார்கள் என்றுத் தெரியவில்லை. 


என் அம்மாவை விட்டு விலகாமல் இருந்த நான் , அவர்களை விட்டு சென்னைக்கு வந்து   எட்டு வருடங்கள் ஆகி விட்டது. இங்கு வந்தப் பிறகு ஊர்ருக்கு போன் செய்தால் கூட அப்பாவிடம்தான் அதிகம் பேசுவேன். அம்மாவிடம் ஒரு சில வார்த்தைகள்தான் இன்றுவரை. அது ஏன் அப்படி என்று கேட்காதீர்கள். எனக்கே இதற்கு விடை தெரியவில்லை . பலமுறை என்னையே நான் கேள்விக் கேட்டும் இதற்கு பதில் தெரியவில்லை. 

உங்களுக்கு யாருக்காவது இதற்கு விடை தெரியுமா ??

48 கருத்துகள்:

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

வணக்கம் எல்.கே.
மிகவும் அருமையான பதிவு. அம்மாவிடம் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நம் உணர்வோடு கலந்து விட்ட தாய்மையை விட்டு வந்துவிட்டதாக எண்ணவே வேண்டியதில்லை.
சிலர் அருகாமையில் இருந்தாலும் அன்னியமாய்ப் படும். தாய்மை மட்டும் தூர இருந்தாலும்
மனசுக்குப் பக்கத்தில் இருக்கும் உணர்வுதான் வரும். பகிர்ந்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் சொன்னது…

சில வீடுகளில் பெண்கள் தானுண்டு குடும்பம் குட்டிகளுண்டுன்னு இருப்பாங்க. அதைப்பார்க்கறவங்களுக்கு பிறந்தகம் போக தடை விதிக்கப்பட்டிருக்கோன்னு தோணுவது இயல்பே.. அப்படியில்லாவிட்டாலும் :-))

komu சொன்னது…

அன்பும் பாசமும் அதிகமாக உள்ளவர்களிடம் நிறைய பேசலைன்னாக்கூட மனசும் மனசும் புரிஞ்சுக்க முடியும். அம்மாவைப்பற்றி அருமையான நினைவு பதிவு. பழைய கால மனுஷா எப்பவுமே அப்படித்தான்.
மனதளவில் அவங்க மிகவும் உயர்ந்த உன்னதமான மனுஷிதான்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பெரியப்பா.. நேத்து மானாட மயிலாட நிகழ்ச்சில அம்மா பாசத்தை பேஸ் பண்ணி கடைச்ல ஒரு சாங்க் போட்டாங்க .. பார்த்தீங்களா? அதுல உங்க கேள்விக்கான விடை

thirumathi bs sridhar சொன்னது…

இது பற்றி, உங்க அம்மா என்ன நினைக்கிறாங்கனு தெரியல,எப்படியோ தொலைவில் உள்ளவர்களுக்கு இந்த செல்போன்தான் அரவணைப்பாளர்,எல்லாம் பரஸ்பரம்தான் காரணம்.

சமுத்ரா சொன்னது…

nice one :)
உங்க பீலிங்க்ஸ் புரியுது !

சேட்டைக்காரன் சொன்னது…

அம்மாவின் பாசம் கிடைத்த பிள்ளைகள் புண்ணியம் செய்தவர்கள். நீங்களும் அப்படித்தான் கார்த்தி.

Lakshmi சொன்னது…

கார்த்தி, நெகிழ்வான பதிவு. நான் தனியே இருப்பதால் என் பசங்களும் இப்படித்தானே ஃபீல் பண்ணுவாங்க இல்லியா? சின்னப்பையன் எப்பவுமே சொல்வான் எங்க நிலமைல உங்க்ளை வச்சு யோசிச்சு பருங்கம்மா.என்று.
எல்லா அம்மா பிள்ளைகளுக்கு மத்திலயும் இந்த ஸாஃப்ட் கார்னரிருக்கத்தான் செய்யும்.

middleclassmadhavi சொன்னது…

என் அம்மாவைப் பற்றி நீங்கள் சொல்வது போலவே இருந்தது. என் அம்மாவும் நானும் சேர்ந்தே இருந்தாலும் அவரும் அதிகம் பேசுவதில்லை!! அவர் இயல்பே அது!

புதுகைத் தென்றல் சொன்னது…

அன்பும் பாசமும் அதிகமாக உள்ளவர்களிடம் நிறைய பேசலைன்னாக்கூட மனசும் மனசும் புரிஞ்சுக்க முடியும். அம்மாவைப்பற்றி அருமையான நினைவு பதிவு. //

வழிமொழிகிறேன்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையான பதிவு மக்கா...
அம்மான்னா சும்மா இல்ல....

சுசி சொன்னது…

:))

கோவை2தில்லி சொன்னது…

நெகிழ்வான பதிவு. எல்லோர் வீட்டிலும் இதே கதை தான்..
அம்மாவுக்கு என் நமஸ்காரங்களை தெரிவிக்கவும்.

கோவை ஆவி சொன்னது…

வாவ்.. எங்க அம்மா மாதிரியே இருந்திருக்காங்க உங்க அம்மாவும்!! அம்மாவை கேட்டதாக கூறவும்..

//இங்கு வந்தப் பிறகு ஊர்ருக்கு போன் செய்தால் கூட அப்பாவிடம்தான் அதிகம் பேசுவேன். //

இது மட்டும் கொஞ்சம் உல்டா!! வீட்டுக்கு போன் செய்தால் அப்பாவுடன் எப்போதும் ஓரிரு வார்த்தைகளே. அம்மாவிடம் தான் அளவளாவல் எல்லாம்..

GEETHA ACHAL சொன்னது…

ரொம்பவும் நெகிழ்ச்சியான பதிவு...அம்மா தான் எல்லாமே...கூடிய சீக்கிரத்தில் அனைத்தும் சரியாகிவிடும்..

அம்மாவிடம் பேசவில்லை என்று கவலைபடாதிங்க...மனசில் இருந்தால் போதும்...அது கண்டிப்பாக உங்க அம்மாவிற்கு தெரியும்...

வித்யா சொன்னது…

ரொம்ப நெகிழ்வா எழுதியிருக்கீங்க.

S.Menaga சொன்னது…

அம்மாவைப் பற்றி அருமையான பதிவு...சில உணர்வுகள் சொல்லமுடியாது..அப்படியே என் உணர்வுகளை சொன்னமாதிரி இருக்கு...

Balaji saravana சொன்னது…

வெரி நைஸ் எல்.கே!. ரொம்ப உணர்வு பூர்வமா எழுதியிருக்கீங்க! :)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நெகிழ்ச்சியான பகிர்வு. அம்மாவிடம் நாம் பேசவில்லையெனிலும் அம்மாவிற்குத் தெரியும்! எப்போதும் நம்மைப் பற்றித் தான் சிந்தனை ஓடிக்கொண்டு இருக்கும் கார்த்திக்.

எல் கே சொன்னது…

@புவனேஸ்வரி

வாங்க,. ரொம்ப நாள் ஆச்சு . உண்மைதான். ஆனால் சில நேரம் மனதில் எதோ குற்ற உணர்ச்சி

எல் கே சொன்னது…

@சாரல்
குறிப்பா அதுக்குத்தான் சொன்னேன் .

எல் கே சொன்னது…

@கோமு

ஹ்ம்ம் ஆமாம்

எல் கே சொன்னது…

@சித்தப்பு

நான் அந்த நிகழ்ச்சி பார்ப்பது இல்லை

எல் கே சொன்னது…

@ஆச்சி

தெரியலை. செல்போன் இருப்பதால் இது ஒரு நன்மை

எல் கே சொன்னது…

@சமுத்ரா

நன்றி


@சேட்டை

ஆமாம் நண்பா

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

ஆமாம்மா. உண்மைதான். என் தாய் தொலைவில் இருந்தாலும், உங்களை மாதிரி இருப்பவர்கள் மூலம் என் தாயை உணர்கிறேன்

எல் கே சொன்னது…

@மாதவி

ஓஹோ இப்படி வேற இருக்கா ?? இப்பலாம் ஊருக்கு போனாலும் அவங்கக்கிட்ட நான் பேசறது குறைவு

எல் கே சொன்னது…

@புதுகை

நன்றி மேடம்


@மனோ

ஆமாம் அக்கா

@சுசி
நன்றி

@ஆதி
நன்றி கண்டிப்பா சொல்றேன்

எல் கே சொன்னது…

@கோவை ஆவி

அது என்னமோ தெரியலை ஒரு கட்டத்திற்கு மேல் அப்பாமேல் அதிகம் பாசம் :))

எல் கே சொன்னது…

@கீதா

அவர்கள் விரைவில் இங்கு வரவேண்டும் என்றுதான் எங்கள் பிரார்த்தனை

எல் கே சொன்னது…

வித்யா

நன்றிங்க


@மேனகா
உண்மை ஒரு சிலவற்றை எழுத்துக்களில் சொல்வதுக் கடினம்

@பாலாஜி

நன்றி

@வெங்கட்
ஆமாம்

vanathy சொன்னது…

கார்த்திக், அருமையான அம்மா. அவர்கள் தனித்து இருந்து சமாளிக்க முடியும் வரை அப்படி இருப்பதே நல்லது. அன்பு பெருகும். உடம்புக்கு முடியாத நிலை வந்தால் கூட வைச்சு நல்லா கவனிச்சுக் கொள்ளுங்கள்.

பலே பிரபு சொன்னது…

பேசும் சில வார்த்தைகளிலேயே அனைத்தையும் கண்டுபிடித்து விடும் குணம்தான் தாய்மை.

நல்ல பதிவு. !!!

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
மனசு நெகிழ்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அம்மான்னா அம்மா தான். மற்றவரெல்லாம் சும்மா.
நல்லதொரு அழகான பதிவு.
பாராட்டுக்கள்.

raji சொன்னது…

உங்கள் அம்மா அப்பா உங்களுடன் வந்து இருக்க
இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.அவர்களுக்கு
என் நமஸ்காரங்கள்

எல் கே சொன்னது…

@வாணி

நீங்க வேற ஒரு கோணத்தில் சொன்னாலும், அவர்களை தனியே இருக்க விடுவதில் எனக்கு விருப்பம் இல்லை

எல் கே சொன்னது…

@பிரபு

உண்மைதான். பேசாமலேயே கூடக் கண்டுபிடித்துவிடுவார்கள்

எல் கே சொன்னது…

@ரத்னவேல்

ரத்னவேல் அய்யாவிற்கு வணக்கம்

எல் கே சொன்னது…

@வைகோ

ஆமாம் சார்

எல் கே சொன்னது…

@ராஜி

நன்றி ராஜி

சுந்தரா சொன்னது…

அம்மாக்களைப்பற்றிப் பேசினாலே மனசு ஈரமாகிவிடுகிறது.

அன்பான அம்மாவுக்கும் அருமைப் பிள்ளைக்கும் வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். சொன்னது…

நல்லதொரு பதிவு. கடைசியில் கேட்கப் பட்டுள்ள கேள்விக்கு பதில் : கலியுகக் கண்ணன் என்று ஒரு படம். அதில் வரும் பாடலில் தேங்காய் சீனிவாசன் நடிப்பில் டி எம் எஸ் பாடும் பாடல் ஒன்று. "ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே" என்று. அதில் கண்ணன் ஏன் இப்போது நேரில் வரவில்லை என்பதற்கு வரும் விடைதான் உங்கள் கேள்விக்கும் பதில்!

asiya omar சொன்னது…

புதிதாய் எதாவது வாங்கித் தரவேண்டும் என்றால் அவர்களிடம் எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொடுத்துவிடுவேன்.
-கரெக்ட் எல்.கே. உபயோகப்படுத்தி பார்த்த பின்பு பழகி விடுவார்கள்,அம்மாட்ட அதிகம் பேசமுடியாதமைக்கு காரணம் ஏதோ வெளிப்படுத்த இயலாமை..என்றும் சொல்லலாம்..பெரியவங்க பழகிய இடத்தை விட்டு லேசில் வரமாட்டாங்க,அவர்கள் இருக்கும் இடம் தான் அவர்களுக்கு சுதந்திரமாக இருக்கும்.

நல்ல பகிர்வு..

Priya சொன்னது…

ஒருசில வார்த்தைகள்தான் அம்மாவிடம் என்றாலும்.... உணர்வுகள் பேசிக்கொண்டேதானே இருக்கும்.நெகிழ்ச்சியான ஒரு பதிவு!

சாகம்பரி சொன்னது…

பிரியமானவர்களை விட்டு வெகுதொலைவில் இருக்கும் போது பேச ஒரு தயக்கம் ஏற்படும். மனம் நெகிழ்ந்து... குரல் உடைந்து... அந்த பக்கமும் பேச்சு வராது. நான் என் அன்னையிடம் தொலைபேசியில் பேசுவதை தவிர்த்தேன், இன்று என் மகன் தவிர்க்கிறான். மீறிப் பேசினால் குரலே மாறிவிடும்.

ஹுஸைனம்மா சொன்னது…

எல்லா வசதிகள் இருக்கும் இக்காலத்தில் நாம் சாதிப்பதொன்றும் பெரிதில்லை. எந்த வசதிகளும் இல்லாத அக்காலத்தில் அவர்கள் இதைவிட பெரிதாகவே மகிழ்வித்திருக்கிறார்கள் நம்மை.

ஓலை சொன்னது…

நல்ல பெற்றோர். அந்த தாய்க்கு எனது வணக்கங்கள்.