Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin
Thursday, December 26

Pages

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

பெண்ணுரிமைவாதிகளே ஒரு நிமிஷம்....

நேற்று இரவில் இருந்தே பதிவுலகில் பெண்ணுரிமை பதிவுகள்தான் அதிகமாக வந்துக் கொண்டிருந்தது. காலையில் நண்பர் கருணாகரசு அவர்களின் பதிவைப் படிக்க ...

நேற்று இரவில் இருந்தே பதிவுலகில் பெண்ணுரிமை பதிவுகள்தான் அதிகமாக வந்துக் கொண்டிருந்தது. காலையில் நண்பர் கருணாகரசு அவர்களின் பதிவைப் படிக்க நேர்ந்தது. இதில் அவர் எழுதி இருந்த முதல் பத்தியே தூக்கி வாரிப் போட்டது. அப்படி அவர் எழுதி இருந்தது என்ன ?

"சீதை 
ஆணாதிக்கத்தால்
அக்னியில் குளித்தெழுந்த
அனிச்சம். "


இதுதான் அவர் எழுதி இருந்த முதல் பத்தி. நடந்த சம்பவத்தை இன்றையத் தலைமுறையினரில் பெரும்பாலானோர் எப்படித் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நம்மில் பெரும்பாலானோர் ஏன் சில சமயம் நானே செய்யும் தவறு, கடந்த காலங்களில் நடந்த நிகழ்வை இன்றையக் கண்ணை வைத்து பார்த்தல். அன்றைய சமூகச் சூழல்கள், அன்றைய மக்களின் மனநிலை இப்படி எதையும் கணக்கில் கொள்ளாமல், அவன் செய்தது தவறு என்று பேசுவது எத்தகைய நியாயம் ?

ராமாயணம் படித்த பொழுது நான் மிகவும் யோசித்த இடங்கள் இரண்டு. இரண்டும் சீதை  சம்பந்தப் பட்டது. முதல் இடம், ராவண வதம் முடிந்து சீதை அசோகவனத்தில் இருந்து வரும் இடம் , இரண்டாவது , அயோத்தியில் இருந்து சீதை வெளியே செல்லும் இடம். 

முதலில் இலங்கையில் நடந்த சம்பவத்தை பற்றிப் பார்ப்போம். ராவணன் மாண்டுவிட்டான், விபீஷணன் ராஜாவாக பட்டம் சூட்டிக்கொண்டாயிற்று. அடுத்தக் கட்டளை என்ன என்று ஹனுமான் கேட்கிறான் ராமனிடம். "மன்னர் விபீஷணன் அனுமதி பெற்று சீதையை அழைத்துவா என்று சொல்லுகிறான் ராமன்.  ஹனுமனும் அதை சிரமேற்கொண்டு செய்கிறான்.

சீதை ராமனை காண வரும்பொழுது ராமனுக்கு உதவிய வானர சேனை , தாயாரை காணும் ஆவலில் முட்டித் தள்ளுகிறது. அவற்றி விலக்க முற்படும் சுக்ரீவன் போன்றோரை ராமன் தடுக்கிறான். இதன்பின் சீதையிடம் பேசும் ராமன் "தான் தன் கடமையை நிறைவேற்றி விட்டதாகக் கூறுகிறான் . சீதை மீண்டு வந்ததற்கு உண்டான மகிழ்ச்சியின் அறிகுறி முகத்தில் இல்லை என்பதாக பல ஆசிரியர்களும் எழுதி வைத்துள்ளனர். 

இதன் பின் சீதை தீக்குளிக்கிறாள் . அதை ராமன் தடுக்கவும் இல்லை ,ஆதரிக்கவும் இல்லை. இதனால் நம் சமகால பெண்ணுரிமைவாதிகள் ராமன் ஆணாதிக்கவாதி என்று கூறுகின்றனர்.  

அந்தக் காலத்தில் சமுதாய சூழல் எப்படி இருந்தது ? அந்தக் காலத்தில் பொதுவாக பெண்கள் மாற்றான் வீட்டுக்கு தனியாக  சென்று தங்க மாட்டார்கள் .  ராமர் எதிரில் யாரும் எதுவும் பேசாவிட்டாலும் ,அவரின் பின்னால் என்ன பேசுவார்கள் ? சீதையின் மேல் உள்ள மயக்கத்தால் இவ்வாறு செய்தார் ராமர் என்றே பேசுவார்கள் மக்கள். மக்களின் வார்த்தைக்கு அவ்வளவு மதிப்பு தர வேண்டுமா என்று நீங்கள் கேட்டால் , அன்றைய மன்னர்கள் மக்களுக்கு உதாரணமாய் வாழத் தான் விரும்பினார்கள். "மன்னா எவ்வழியோ மக்கள் அவ்வழி " என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இது ஒரு காரணம். 

இன்னொன்று , ராமன், சீதை போன்ற மனமொத்த தம்பதியினரை பார்ப்பது கடினம். திருமணம் முடிந்து வந்த சில காலத்தில் காடு செல்லவேண்டும். கணவன் நீ வர வேண்டாம் என்கிறான், மனைவியோ அதை ஏற்கவில்லை , அப்பொழுது சீதை ராமனை திட்டியது பன்று இன்றைய பெண்கள் கூட திட்டமாட்டார்கள். இவர்கள் சொல்வது போன்று ஆணாதிக்கவாதியாய் ராமன் இருந்திருந்தால் , அவ்வளவு சிரமேற்கொண்டு சீதையை அவர் காப்பாற்ற வேண்டிய அவசியமே இல்லை. வேறு ஒரு திருமணம் செய்து கொண்டிருக்கலாம். அப்படியா செய்தார் ராமர் ? அவருக்குத் தெரியாதா தன் மனைவியைப் பற்றி ? இன்றைக்கு வேண்டுமானால் நாம் சமூகத்தை பற்றி கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அன்று அப்படி இருக்க இயலாது. மற்றவர்களும் சீதையின் தூய்மையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றே இதை செய்தார். இதில் என்ன ஆணாதிக்கம் இருக்கிறது என்று புரியவில்லை எனக்கு . 

இதற்க்கு அடுத்த கட்டம், சீதை அயோத்தியில் இருந்தபொழுது , இரவில் ராமர் நகர்வலம் வரும் சமயம் யாரோ இருவர் பேசிக்கொள்வதை கேட்க நேருகிறது. அப்பொழுது அந்த இடத்தில், ராமர் என்ன நடக்கக்கூடாது என்று நினைத்தாரோ அதேதான் நடக்கிறது. சீதையை பற்றிய அவதூறு காதில் விழுகிறது. இந்த சமயத்தில் ராமன் மிகுந்த மனக் குழப்பங்களுக்குப் பிறகே சீதையை அயோத்தியில் இருந்து செல்லுமாறு கூறுகிறான். 

ராமனே இப்படி செய்யலாமா என்று கேட்பவர்களுக்கு ராமனால் மட்டும்தான் இப்படி செய்ய இயலும். அன்றையக்  கால கட்ட தர்மங்களை , அதன் வழியில் இருந்து பிறழாமல் காப்பவனாகவே ராமர் இருந்திருக்கிறார். இந்த முறை தன்னை சந்தேகப்பட்டதுக்கு சீதை வருந்தினாளா ?

இதற்கு உண்டான பதில் ரா. கணபதி அவர்கள் எழுதிய "ஹனுமான் " என்ற புத்தகத்தில் எனக்குக்  கிடைத்தது. அதில் சீதை அயோத்தியில் இருந்து வெளியேறியப் பிறகு , ஹனுமான் அவரைக் காண செல்கிறார். அப்பொழுது சீதை அழுதுக்கொண்டிருக்கிறாள். ஹனுமனும் சீதையை அயோத்தியில் இருந்து அனுப்பியதற்காக ராமன் மேல் கோபம் கொண்டிருந்தார். அதுவே அவரது வார்த்தையில் வெளிப்படுகிறது. 

அப்பொழுது சீதை"அஞ்சனை புத்ரா ! நீயுமா அவரைப் புரிந்துக் கொள்ளவில்லை. நான் இப்பொழுது அழுவது எனக்காக இல்லை. அசோகவனத்தில் நான் இருந்தபொழுது வேண்டுமளவுக்கு எனக்காக அழுது தீர்த்துவிட்டேன். இப்பொழுது நான் அழுவது அவருக்காகத் தான். ஆம், மனைவியை பிரிந்திருப்பது எவ்வளவு கடினம் ? அதுவும் பல காலம் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் பிரிவது என்பது எத்தகைய வருத்தத்தை தரும் . அந்த வருத்தத்தையும் தாங்கிக் கொண்டு , கட்டிய மனைவியை காட்டுக்கு அனுப்பி விட்டான் என்ற பழிச்சொல்லையும் ஏற்றுக் கொண்டிருக்கிறாரே அவருக்காகத் தான் அழுகிறேன் " என்று சொல்லுவாள். 

இந்தப் புத்தகம் என்னிடம் இப்பொழுது இல்லை. கிடைத்தவுடன் இதைப் பற்றி விரிவாக ஒரு பதிவுப் போடுகிறேன். ராமரை மட்டுமல்ல, பழைய நிகழ்வுகள் பலவற்றையும் தவறாக புரிந்துக் கொண்டிருக்கிறோம். பழையக் கால நிகழ்வுகளை அலசும் பொழுது இன்றையக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம். உங்களுக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் சரியாகப் புரிந்து கொண்டு சொல்லுங்கள் இல்லையேல் விட்டுவிடுங்கள்.








89 கருத்துகள்

Geetha Sambasivam சொன்னது…

இதற்க்கு அடுத்த கட்டம், சீதை அயோத்தியில் இருந்தபொழுது , இரவில் ராமர் நகர்வலம் வரும் சமயம் யாரோ இருவர் பேசிக்கொள்வதை கேட்க நேருகிறது. அப்பொழுது அந்த இடத்தில், ராமர் என்ன நடக்கக்கூடாது என்று நினைத்தாரோ அதேதான் நடக்கிறது. சீதையை பற்றிய அவதூறு காதில் விழுகிறது. இந்த சமயத்தில் ராமன் மிகுந்த மனக் குழப்பங்களுக்குப் பிறகே சீதையை அயோத்தியில் இருந்து செல்லுமாறு கூறுகிறான். //

இந்த இடத்தில் மூலத்தில் இருந்து சற்று மாறுபட்டு எழுதி உள்ளீர்கள். ஸ்ரீராமன் நாடு பூராவும் சென்று தன் ஆட்சியைப் பற்றி மக்கள் பேசிக்கொள்வதைத் தெரிந்து வர அனுப்பிய தூதுவர்கள் கூறிய செய்திகள் அவை. அதிலும் முதலில் பத்ரன் என்பவன் கூற மற்றவர்கள் அதை ஆமோதிப்பார்கள். இது குறித்து நான் போட்டிருக்கும் பதிவின் சுட்டியைப் பின்னர் தருகிறேன். :))))

மற்றபடி உங்கள் பதிவு அருமையான பதிவு. தேவையானதும் கூட.

Geetha Sambasivam சொன்னது…

தொடர

'பரிவை' சே.குமார் சொன்னது…

உங்கள் ஆதங்கம் ராமர் குறித்த அருமையான பகிர்வை தந்துள்ளது. வாழ்த்துக்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

நல்ல பகிர்வு....

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்,
விபரங்களுக்கு LINK- ஐ பார்க்கவும். இன்னும் இரண்டு நாட்களே உள்ளது.

Geetha6 சொன்னது…

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்!

Geetha Sambasivam சொன்னது…

http://sivamgss.blogspot.com/2008/07/72_12.html


http://sivamgss.blogspot.com/2008/07/blog-post_13.html

http://sivamgss.blogspot.com/2008/07/blog-post_16.html

Geetha Sambasivam சொன்னது…

sorry, time illai, athanal link appadiye koduthuten. :(

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான விளக்கமான பதிவு
வாழ்த்துக்களுடன்

Asiya Omar சொன்னது…

மகளிர் தின வாழ்த்துக்கள்.வாசித்து விட்டு வருகிறேன்.

Chitra சொன்னது…

உங்கள் கருத்துக்களை அறிந்து கொண்டோம்.

settaikkaran சொன்னது…

அக்கினி பிரவேசம் இராமாயணத்தில் எனக்கும் ஒரு காலத்தில் நெருடல் ஏற்படுத்திய ஒரு காட்சி. அதை பலரிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்த வரிசையில் உங்களது இடுகையும், கீதாம்மாவின் பின்னூட்டமும் மேலும் சில தகவல்களை அளித்திருக்கின்றன கார்த்தி. மற்றபடி, புராண இதிகாசங்கள் குறித்து அதிகம் உரையாடாமல் இருப்பதே நலம்என்பதே எனது நிலைப்பாடு என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். பகிர்வுக்கு நன்றி...!

குறையொன்றுமில்லை. சொன்னது…

நல்ல தெளிவான அலசல்தான்.பொதுவாக ராமாயணம் படித்தவர்கள் ராமர் மேல்தான் தவறு சொல்வார்கள். ஆனால் நீங்கள் கூறி இருப்பதுபோல அவர்களின் காலகட்டமே வேறு. அதை மனதில் நிறுத்திப்பார்த்தால் புரியும்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பெரியப்பா.. நீங்க சொன்னது சரிதான். இது பற்றி துக்ளக்ல சோ அட்டகாசமா சொல்லி இருந்தார்.3 வார தொடரா வந்தது.. தேடிப்பார்க்கறேன்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அதே மாதிரி ராமாயணத்துல ஊர்மிளா (லட்சுமணன் மனைவி)பற்றிய அதிர்ச்சி ஊட்டும் தகவலும் உண்டு.. விரைவில் பதிவா போடறேன்

Geetha Sambasivam சொன்னது…

இரண்டாம் முறையாக சீதை காட்டுக்கு அனுப்பப்பட்டது ஏன்? இங்கே

சுட்டியை எடுக்கிறதுக்குள்ளே அப்போ ஆற்காட்டார் விசிட். :D

raji சொன்னது…

ராமன் ஆணாதிக்கம் உடையவனாய் இருந்திருந்தால்
சீதையால் லக்ஷ்மணன் மீது அவதூறான வார்த்தைகளை
அள்ளி தெளித்திருக்க இயலாது.

இந்த வார்த்தைகளை பெண்ணை பார்த்து ஆண் சொல்லியிருந்தால் அவளது பெண்மையை
களங்கம் செய்ததாகக் கூறப்பட்டிருக்கும்.ஆனால் லக்ஷ்மணனின் ஆண்மைக்கு களங்கம்
கற்பித்திருப்பது சீதைதான்.அவள் மனதில் ஏற்பட்ட அந்த தவறான கற்பனை
அவள் மனதை களங்கப் படுத்தியது.கற்பு உடலுக்கு அல்ல.மனதிற்குதான்.
அந்த வகையில் தவறான கற்பனையினால் சீதை மனதளவில் களங்கப் பட்டவள்தான்

எல் கே சொன்னது…

@ராஜி
நீங்கள் உண்மையில் ஒரு வித்யாசமான கோணத்தை சொல்லி இருக்கீர்கள். பார்ப்போம் இதைப் பற்றி கீதா மாமி என்ன சொல்கிறார்கள் என்று.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்லா விரிவா விளக்கி இருக்கீங்க...

சுசி சொன்னது…

நல்ல பகிர்வு கார்த்திக்.

ADHI VENKAT சொன்னது…

நல்ல பகிர்வு.

Geetha Sambasivam சொன்னது…

நீங்கள் உண்மையில் ஒரு வித்யாசமான கோணத்தை சொல்லி இருக்கீர்கள். பார்ப்போம் இதைப் பற்றி கீதா மாமி என்ன சொல்கிறார்கள் என்று. //

இது சாதாரணமான ஒரு பெண்ணின் கோணத்தில் பேசப்பட்டது. எல்லாரையும் போல் சீதையும் ஒரு சாமானியப் பெண்ணாகவே பேசினாள், நடந்து கொண்டாள். ராமரும் கூட ஒரு சாதாரணமான மானிடனாக அப்படியே நடந்தார். ஆனால் அதன் பின்னர் வந்தவர்கள் ஸ்ரீராமரை ஒரு தெய்வமாக முக்கியமாய்க்கம்பன், அதை ஒட்டி துளசி தாசர் போன்றவர்கள் சொல்ல, சில மாற்றங்களையும் அவர்கள் செய்ய இது பற்றிய விவாதங்கள் ஏற்பட்டிருக்கும் என்பது என் கருத்து. இதைப் பற்றிய பதிவின் சுட்டியைத் தேடித்தரேன்.

Geetha Sambasivam சொன்னது…

சீதை லக்ஷ்மணன் மேல் சந்தேகம் அடைந்தே பேசினாள். வால்மீகி தெளிவாய்க் கூறி உள்ளார். ஏனெனில் அவர் எழுதியது இதி ஹாஸஹ என்னும் நடந்ததை நடந்தபடியே சொல்லும் ஒன்று. அதோடு அவர் இதை எழுதிய சமயம் கதாபாத்திரங்கள் உயிருடன் இருந்து அவரவர் சொந்தக் கதையை அவரவர் கேட்டனர். ஆகவே மாற்றி எழுதி இருக்க வாய்ப்பே இல்லை. சாதாரணமாய் உங்களுக்கும், எனக்கும் வரும் கோபம் போலவே சீதைக்கும் கோபம் வந்து லக்ஷ்மணனைத் தாறுமாறாய்ப் பேசினாள். அங்கே அவள் ஒரு பெண்ணாய்த் தான் செயல்பட்டாளே தவிர, அவதாரம் அல்ல. ஆகவே இது அந்தச் சந்தர்ப்பத்திற்குப் பொருந்தக் கூடிய ஒன்றே. உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்க்கவேண்டும். :D இங்கே

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

நான் ஒரு இதிகாசமும் படித்ததில்லை,புராணத் தொடர்களை தொலைக் காட்சியில் பார்த்ததோடு சரி பதிவையும் விமர்சனங்களையும் படித்தேன்,நல்லவைகளை தெரிந்து கொள்வோம்.

middleclassmadhavi சொன்னது…

நீங்கள் பதிவில் சொன்னபடி அந்தக் காலகட்டத்தில் ராமர் நடந்து கொண்ட விதம் சரி. கீதா மேடம் சொல்வது போல இதிஹாசத்தில் எழுதப்பட்டது.

காலம் மாற மாற, கண்ணோட்டமும் மாறித் தான் - சீதா தேவிக்கு பதிலாக வேதவதி என்றும், ராவணன் மகள் சீதா என்றும் விதவிதமாக புராணங்கள் எழுந்தன.

Geetha Sambasivam சொன்னது…

வேதவதி கதை உண்மைதான். அதையும் என்னோட பதிவுகளிலே படிக்கலாம். வேதவதியின் சாபத்தினாலும், குபேரனின் மருமகளின் சாபத்தினாலுமே ராவணனால் எந்தப் பெண்ணையும் பலவந்தம் செய்ய முடியாமல் போனது.

RVS சொன்னது…

மகளிர் தினத்தில் சுவாரஸ்யமான பின்னூட்டங்கள்.. குறிப்பாக கீதா மேடம், ராஜி.... ;-))) நல்ல பதிவு... நன்றி எல்.கே ;-)

raji சொன்னது…

கீதா சாம்பசிவம் said..

//சீதைக்கும் கோபம் வந்து லக்ஷ்மணனைத் தாறுமாறாய்ப் பேசினாள். அங்கே அவள் ஒரு பெண்ணாய்த் தான் செயல்பட்டாளே தவிர, அவதாரம் அல்ல. ஆகவே இது அந்தச் சந்தர்ப்பத்திற்குப் பொருந்தக் கூடிய ஒன்றே. உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்க்கவேண்டும்//

சீதை சாதாரணப் பெண்ணாக செயல்பட்டாள், அவளுடைய சந்தர்ப்பம் அது
என்றும் நியாயம் கற்பிக்கும் பட்சத்தில் ராமனின் சந்தர்ப்பத்தையும் அவனும் சாதாரண
மானுட அரசனாக இருந்தவன் என்பதயும் நாம் கருத்தில் கொண்டால் விவாதத்திற்கு
இடமே இல்லை.இருவருமே சாதாரணமானவர்கள் என்றும் சந்தர்ப்பங்கள்தான்
காரணம் என்றும் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அது அவர்கள் குடும்ப
விஷயமாகி விடும்.அதை பற்றி பேசவோ எழுதவோ எவருக்கும் உரிமை இல்லை என்றாகிறது

raji சொன்னது…

ஆர் வி எஸ் சார் விவாதம் உங்களுக்கு ரொம்ப குஷியாருக்கு போல்ருக்கே :-)

Menaga Sathia சொன்னது…

நல்ல பகிர்வு!!

Geetha Sambasivam சொன்னது…

இருவருமே சாதாரணமானவர்கள் என்றும் சந்தர்ப்பங்கள்தான்
காரணம் என்றும் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அது அவர்கள் குடும்ப
விஷயமாகி விடும்.அதை பற்றி பேசவோ எழுதவோ எவருக்கும் உரிமை இல்லை என்றாகிறது//

அவங்க வாழ்க்கை தான் கதையாகி விட்டது. அதோடு ஒரு அரசன், சக்கரவர்த்தியின் நோக்கில் ராமன் செய்வதைப் பார்க்கணும். ஒரு கணவனுக்கும், மனைவிக்கும் உள்ள தனிப்பட்ட உறவை நீங்க சொல்லி இருக்கீங்க. ஆனால் இங்கே நாடு சம்பந்தப் பட்டிருக்கிறதல்லவா? மன்னன் மக்களைக் காக்கக் கடமைப்பட்டவன், மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டியவன். அதனால் சீதையைத் தள்ளி வைத்தான். அதே ராமன் ஒரு மனிதனாகத் தனிமையில் அழுதான். ஆக அவன் கடமையில் தவறாமல் இருந்த அதே சமயம் மனைவியை நினைத்து ஏங்கவும் செய்தான். இது அவனுக்குக் கிடைத்த சாபம்.

vanathy சொன்னது…

nalla irukku, LK.

எல் கே சொன்னது…

@கீதா

மாமி சுட்டிகளுக்கு நன்றி. ஒவ்வொரு ராமாயணத்தில் மாறுபாடு உண்டல்லவா ? அதனால் ஏற்ப்பட்ட குழப்பம் இது

எல் கே சொன்னது…

@குமார்

நன்றி

@தமிழ்வாசி

நன்றி நண்பரே

எல் கே சொன்னது…

@கீதா

நன்றிங்க


@ரமணி
நன்றி சார்


@ஆசியா
நன்றி சகோ


சித்ரா

நன்றி

எல் கே சொன்னது…

@சேட்டை

உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கு ஏற்படுத்தும் நெருடல் இடம் அது. உங்கள் நிலைப்பாடு எனக்குத் தெரியும் சேட்டை. நன்றி

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

ஆமாம். மேலோட்டமாகப் பார்த்தால் அப்படிதான் தெரியும்.

எல் கே சொன்னது…

@செந்தில்
சித்தப்பு அப்படியா, நடுவில் சில காலனம் துக்ளக் வாங்கவில்லை. சீக்கிரம் போடு படிக்கிறேன்

எல் கே சொன்னது…

@வெங்கட்

நன்றி

@ஆதி

நன்றி

எல் கே சொன்னது…

@ராஜி

கீதா மாமி கூறியது போல் , அந்த கணத்தில் உங்களை நிறுத்திப் பாருங்கள் , என்ன பேசுவோம் என்று ? (உதாரணம் மட்டுமே தவறாக என்ன வேண்டாம் )

எல் கே சொன்னது…

@மனோ
நன்றி மக்கா


@சுசி

நன்றி

@ஆச்சி

இப்ப என்ன ? இப்பக கூடக் கத்துக்கலாம்

எல் கே சொன்னது…

@மாதவி

வேதவதி வேறு சீதை வேறு. குழப்பமோ ??

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்

அப்படி இருந்தாதானே நல்லா இருக்கும் ??

எல் கே சொன்னது…

@ராஜி

வாதம் பிரதிவாதம் இருந்தால் மட்டுமே எழுதப் பட்டதற்கு மதிப்பு. சரிதானே?

raji சொன்னது…

//ஆனால் இங்கே நாடு சம்பந்தப் பட்டிருக்கிறதல்லவா? மன்னன் மக்களைக் காக்கக் கடமைப்பட்டவன், மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டியவன். அதனால் சீதையைத் தள்ளி வைத்தான். அதே ராமன் ஒரு மனிதனாகத் தனிமையில் அழுதான். ஆக அவன் கடமையில் தவறாமல் இருந்த அதே சமயம் மனைவியை நினைத்து ஏங்கவும் செய்தான். இது அவனுக்குக் கிடைத்த சாபம்.//

இவ்வாறிருக்க இதில் ராமனின் தவறும் ஆணாதிக்கமும் எங்கிருந்து
வந்தது என்பதே என் கேள்வி

எல் கே சொன்னது…

@ராஜி

இது உங்களுக்கும் எனக்கும் புரியுது . நெறையப் பேருக்கு புரியலை. அதனால்தான் இந்தப் பதிவு :))

raji சொன்னது…

//கீதா மாமி கூறியது போல் , அந்த கணத்தில் உங்களை நிறுத்திப் பாருங்கள் , என்ன பேசுவோம் என்று ? //

சந்தர்ப்பம் அமையும் போது மட்டுமே நம்முடைய கீழ்த்தர குணங்கள்
வெளிப்படும்.இது எல்லாருக்குமே பொருந்துமல்லவா?

எல் கே சொன்னது…

@ராஜி

ஆமாம் கண்டிப்பா. அதில் எந்த மாற்றமும் இல்லை . நானும் இதில் உண்டு

raji சொன்னது…

இனி இது பற்றிய விஷயங்களை எனது பதிவிற்கும் வருகை தந்து
படித்து அனைவரும் பின்னூட்டமிடலாமென கேட்டுக் கொள்கிறேன்
http://suharaji.blogspot.com/2011/03/blog-post_08.html

கோலா பூரி. சொன்னது…

இப்பதான் பாத்தேன்.என்ன சொல்ரதுன்னு தெரியலை.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Karthik - Nice Post... Nice interpretation... I agree to some and disagree to some...:))

முதல் முறை அக்னி பிரவேசம் செய்தது "ஊருக்கு உண்மை உரைக்க"னு சொல்லியாச்சு... ஒகே, I agree... பின்ன ஏன் மறுபடியும் யாரோ சொன்ன வார்த்தைக்காய் காட்டுக்கு அனுப்பினார்? அப்ப காலம் பூராவும் மத்தவங்க அபிப்ராயத்துக்கு முன்னுரிமை குடுத்து தன்னை நம்பி வரித்தவளை வதைப்பது தான் அவதாரங்கள் காட்டும் முன்னுதாரணமா? அப்ப "அவதார புருஷன்"னு சொல்றதோட அர்த்தம் என்ன?

ராமபிரானை வணங்குபவள் தான் நானும்... இது ஆன்மிக பார்வையில் நான் சொல்லும் எதிர்கருத்து அல்ல... சின்னதுல இருந்து பதிஞ்சு போன அந்த ஈடுபாடு தனி விஷயம்... ஒரு கதையா / ஒரு நிகழ்வா இதை பாக்கறப்ப ஏத்துக்க முடியலைனு சொல்ல வந்தேன்...

அந்த காலம் இந்த காலம்னு பாகுபாடு இல்லாம ஒரு விஷயம் இருக்கு... தன் மனைவி பத்தி யாரும் தப்பா ஒரு வார்த்த சொல்றத கஞ்சிக்கு வழி இல்லாதவன் கூட இன்னைக்கும் ஏத்துக்க மாட்டான். தன் மனைவி சரியானவள் தான்னு நிரூபிக்க தன்னால ஆனதை செய்வான்... but it shouldn't be on account of spoiling their own lives I would say... what would then be the purpose of proving it, when you don't have a life anymore to live?

Man is a social animal...so, சமுதாயத்தின் விமர்சனங்களுக்கு செவி சாய்த்து தான் வாழணும், ஒத்துக்கறேன்... ஆனா அதுக்கும் ஒரு எல்லை உண்டு... காட்டுக்கு அனுப்பினப்ப அந்த எல்லையை ராமர் மீறினார்ங்கறது என்னோட வாதம்... இதை பத்தி நெறைய வாதம் / விவாதம் கல்லூரி நாட்கள்ல பல மேடைகள்ல செஞ்சது தான்... ஒருபோதும் சரியான முடிவுக்கு வர முடிஞ்சதில்ல... இனியும் முடியும்னு தோணல...

ஒரு பெண்ணா இருந்து ஒரு தரப்பு ஞாயமா மட்டும் நான் இதை சொல்லலை... ஒரு neutral position ல இருந்து யோசிச்சாலும் என்னமோ இதை முழு மனசா ஏத்துக்க முடிஞ்சதில்ல...

ஆனா இந்த நாளுல இந்த தலைப்ப பத்தி யோசிக்க ஒரு வாய்ப்பு குடுத்ததுக்கு தேங்க்ஸ் பிரதர்...:)))

Honestly, very nice interpretation from your point of view... Write more thought provoking posts like this...

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ராமாயணத்தில் இன்றைக்கும் நெருடுகிற இடங்கள்..

ஹேமா சொன்னது…

கடைசியாக வந்திருக்கிறபடியால் பதிவும் பின்னூட்டங்களும் மிகத் தெளிவாய் பதிவை மெருகூட்டியிருக்கிறது கார்த்திக் !

Unknown சொன்னது…

நீங்க சொல்லி இருக்கிறது முற்றிலும் சரிதாங்க.புராணங்களையும் இதிகாசங்களையும் பற்றி முழுமையா தெரிஞ்சிக்காம அதைப் பற்றி விவாதிக்கக் கூடாதுன்னு.ஆனா ஒவ்வொரு புத்தகங்களில் ஒவ்வொரு மாதிரி எழுதி இருக்காங்களே? நாம அந்தக் காலத்தில் இல்லாததால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம்மாக எழுதி இருக்கின்றனர்.
சிலர் ராமாயணமே கற்பனை என்கின்றனர்.இதில் நாம் எதை ஏற்பது?
நீங்கள் சீதையின் அக்னிப் பிரவேசம் பற்றி சொல்லி இருந்தீர்கள்.அதில் சீதை தாமாக முன்வந்து தான் தீக்குளித்ததாக சொல்லி இருக்கிறீர்கள்.ஆனால் ராவணன் சீதையைக் கடத்திப் போனதால், அவளது கற்பில் சந்தேகப் பட்டு, அதை நிரூபிக்கும் வகையில் தீக்குளிக்கச் சொன்னதாகத் தான் படித்திருக்கிறேன்.இதை ஆணாதிக்கம் என்று சொல்ல வரவில்லை.என்னுடைய சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளவே கேட்கிறேன்.

எல் கே சொன்னது…

@அப்பாவி

// அப்ப "அவதார புருஷன்"னு சொல்றதோட அர்த்தம் என்ன?
//

இந்த அவதார புருஷன் அப்படிங்கற அர்த்தத்தில் அவர் எந்த செயலையும் செய்யவில்லை. அவர் சராசரி மனிதனாகவே இருந்தார்.

ராவண வதம் முடிந்த நிலையில் கூட இதை அவரே சொல்வார் .

"நான் யார் ? அயோத்தியில் சூர்ய குலத்தில் தோன்றிய தசரத மகாராஜாவின் மகன். வேறு எதுவும் எனக்குத் தெரியாது "

ராமாயணம் முழுக்கவே அவர் சாதாரண மனிதனாகவே வாழ்ந்தவர்

எல் கே சொன்னது…

@அப்பாவி

கீதா மாமியின் விளக்கத்தை படிக்கவும்

raji சொன்னது…

என் பதிவுல கோபி சாருக்கு பதில் போட்டுருந்தீங்களே உங்களுக்கு எப்படி அதை படிக்க முடிஞ்சது?எனக்கு அது என் போஸ்டில் டிஸ்ப்ளே ஆகலையே?கமென்ட் பாக்ஸ்ல உக்காந்துகிட்டு பப்ளிஷ் ஆகாம இருக்குதே.அது மட்டுமில்லை அப்பாவி தங்கமணி அவர்கள்.திரு வெங்கட் நாகராஜ்,திரு ரமணி இவங்கள்ளாம் போட்டதும் எத்தனை
தடவை பப்ளிஷ் கொடுத்தாலும் டிஸ்ப்ளே ஆகலையே?உங்களுக்கு அதெல்லாமும் தெரியுதா?

எல் கே சொன்னது…

@ஜி ஜி

வாங்க ரொம்ப நாளுக்கு பிறகு வரீங்க.ராமர் எந்த இடத்திலும் சீதையை தீக்குளிக்க சொல்லவில்லை. அதே போல் அவருக்கு எந்த வித சந்தேகமும் இல்லை சீதை மேல். அந்த காலத்தில் சமூகத்திற்கு பயந்தே வாழ்ந்தாகவேண்டும் அது அரசன் என்றாலும். தன் தூய்மையை நிரூபிக்க சீதை தானாகவே தீயில் இறங்கினாள்

எல் கே சொன்னது…

ஓ வருதே. உங்கள் கமெண்ட்ஸ் ஓபன் பண்ணிட்டு அதில் ஸ்பேம் இருக்கும் அதில் இருக்கா பாருங்கள்

velsfed சொன்னது…

ஜெய் ஸ்ரீ ராம்..... நீங்கள் சொல்வது சரியென வைத்து கொள்வோம் நண்பரே, அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு கொடுத்த உரிமை தான் தற்போதும் வழங்கப்படுகிறதா என்று எனை கேட்டால் ஆம் என்பேன்.. இருந்த போதிலும் அன்று ராமர் ஒரு சிறு தவறு செய்துவிட்டார் என்பதை நீங்கள் இந்த நேரத்தில் ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். என்னவென்றால் " அன்று சீதா தேவியரை தீக்குளிக்கும் நேரம் ராமர் தானும் சேர்ந்து தீக்குளிதிருக்க வேண்டும்", அப்படி அன்று அவர் செய்திருந்தால் கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒன்று என இந்து சமயம் பறை சாற்றியிருக்கும். அன்று அந்த சம்பவம் நடைபெறாததால் தான் இன்றளவும் சமூகத்தில் பெண்களுக்கு மட்டுமே இழுக்கு ஏற்படுகிறது. மேலை நாடுகளை எடுத்து கொண்டால் காமம் என்பது அவர்களின் அடிப்படை உரிமையாக கருதுகிறார்கள் அதனால் தான் அங்கு கற்பழிப்புகள் பெரும்பாலும் நடை பெறுவதில்லை. அவர்கள் முதல் உரிமை கல்விக்கும் இரண்டாவதாக பணத்திற்கும் கடைசியாகவே காமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால் தான் அவர்களால் ஆண் பெண் பேதம் இல்லாமல் உழைக்க முடிகிறது! முன்னேற முடிகிறது . ஆனால் இந்தியாவில் அதற்கு மறைமுகமாக முன்னுரிமை வழங்குகிறார்கள்.

ஒரு மனிதன் எதற்கு மறைமுகமாக முன்னுரிமை வழங்குகிறானோ விரைவில் அதற்கு அடிமையாகிறான். இப்படிதான் காமத்திலும் ஆண்கள் மிக விரைவாக அடிமைப்படுகிறார்கள் என்றால் மறுக்கப்பட முடியாத உண்மை.


இந்த நடைமுறை மாற வேண்டும். அதற்கு கடுமையான சட்டம் வர வேண்டும். கற்பழிப்பு வழக்குகளில் ஈடுபடுபவர்களுக்கு தூக்குதண்டனை கொடுக்க வேண்டும்.

இதை தவறாக பயன்படுத்தும் பெண்களுக்கும் பெண்களுக்கும் சரியான தண்டனை அளிக்க வேண்டும். செக்ஸ் குறித்து இளம் தலைமுறையிடம் சரியான கருத்துக்கள் சென்றடைய வேண்டும்.

facebook , orkut போன்ற சமூக சேவை இணையதளங்கள் இந்தியாவுக்கு தேவையில்லாதது. இதை போன்றவற்றையும் தடை செய்வதன் மூலமும் தனி மனித ஒழுக்கம் பாதுகாக்கப்படும்.

"என்னை பெற்றவள் பெண், என்னுடன் பிறந்தவள் பெண், என் மனைவிக்கும் நாளை தீங்கு நேரலாம்" என ஒவ்வொரு மனிதனும் மனிதில் நினைக்க வேண்டும்.

"மகளிர் தின வாழ்த்துக்கள்"

hayyram சொன்னது…

மகளிர் தினமாம் மகளிர் தினம் http://hayyram.blogspot.com/2011/03/blog-post_08.html

எல் கே சொன்னது…

velsfed

வணக்கம் நண்பரே. மீண்டும் எல்லோரும் செய்யும் அதே தவறு. ராமர் சீதையை தீக்குளிக்க சொல்லவில்லை. சீதை தானாக எடுத்த முடிவு . அன்றைய சமூக ஒழுக்கங்களை மதிக்கும் சராசரி மனிதனாகத்தான் ராமர் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார். அவர் எங்கும் தான் அவதாரம் என்று சொல்லவே இல்லை .

R. Gopi சொன்னது…

\\இதன்பின் சீதையிடம் பேசும் ராமன் "தான் தன் கடமையை நிறைவேற்றி விட்டதாகக் கூறுகிறான் . சீதை மீண்டு வந்ததற்கு உண்டான மகிழ்ச்சியின் அறிகுறி முகத்தில் இல்லை என்பதாக பல ஆசிரியர்களும் எழுதி வைத்துள்ளனர்.


இதன் பின் சீதை தீக்குளிக்கிறாள் . அதை ராமன் தடுக்கவும் இல்லை ,ஆதரிக்கவும் இல்லை. இதனால் நம் சமகால பெண்ணுரிமைவாதிகள் ராமன் ஆணாதிக்கவாதி என்று கூறுகின்றனர். \\

இந்த ரெண்டு பாராவிற்கு இடையில் நடக்கும் நிறைய விசயங்களை நீங்கள் எழுதவில்லை.

சீதை அக்னிப் பிரவேசம் செய்வதை ராமர் தடுக்கவில்லை. அவருக்கும் சம்மதம் போலும் என்றுதான் லக்ஷ்மணன் நினைக்கிறான்.

R. Gopi சொன்னது…

கர்ப்பவதியாக இருப்பவளை ஊரார் பேச்சைக் கேட்டுத் துறப்பது, பின் அவளையே பல ஆண்டுகள் கழித்து அவைக்கு வந்து கற்பு குறித்துப் பிரமாணம் எடுக்கச் சொல்வது எல்லாம் என்ன விதத்தில் சேர்த்தி? சீதை எத்தனை முறை, யார் யாருக்கெல்லாம் தான் ஒழுக்கமானவள் என்பதைப் பிரகடனப் படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்?

ராமர் அர்ச்சாவதாரம். ஒரு சராசரி ஆணுக்குத் தோன்றுவதை எல்லாம் செய்கிறார். அவ்வளவே.

எல் கே சொன்னது…

@கோபி

இது ராமாயணத்தை தன் வலைப்பூவில் எழுதிய திருமதி கீதா அவர்களின் பதிவில் இருந்து எடுத்தது

சீதைக்கு ராமன் மனது தெரியாமலோ,ராமனுக்கு சீதையின் மனம் தெரியாமலோ, அல்லது அவள் கற்பிற் சிறந்தவள் எனத் தெரியாமலோ இல்லை. எனினும், உலகத்தார் கண் முன்னால் சீதை தன் கற்பை நிரூபிக்கவேண்டும் எனவே ராமன் விரும்பி இருக்கின்றான். சீதையும் தன் கணவனின் மனக் குறிப்பை அறிந்து அதை நிறைவேற்றத் துணிந்திருக்கிறாள். இதையே சீதை நெருப்பிலிருந்து மாசுபடாமல் வெளியே வந்தபோது ராமரும் தன்னிலை விளக்கமாயும் அளிக்கின்றார். எனினும் ஒரு மானுடனாகவே வாழ்ந்த ராமர் இந்த இடத்திலும் மானுடனாகவே, சாதாரண மனிதன் எவ்வாறு தன் மனைவியிடம் கோபத்துடனும், அதிகாரத்துடனும், கடுமையாகவும் நடப்பானோ அவ்வாறே நடந்து, தான் மனிதனாய் இருப்பதில் இருந்து சற்றும் மாறவில்லை என நிரூபித்திருக்கின்றார் என்றும் கொள்ளலாம்.

எல் கே சொன்னது…

http://sivamgss.blogspot.com/2008/07/78.html

எல் கே சொன்னது…

@கோபி

மீண்டும் அவருடைய வலைப்பூவில் இருந்து

ராமரின் பட்டாபிஷேகம் முடிந்தது. அனைவருக்கும் பரிசுகள் அளிக்கப் பட்டு அனைத்துக் கொண்டாட்டங்களும் முடிந்து சில ஆண்டுகள். சீதை முதல் முதலாய்க் கருவுற்றாள். பட்டமகிஷி அல்லவா?? அனைவரின் மனமகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்? ராமரும் குதூகலத்தில் ஆழ்ந்தார். சீதையிடம் உனக்கு என்ன இஷ்டமோ அதை நிறைவேற்றித் தருவது என்னுடைய பொறுப்பாகும், என்ன வேண்டுமோ கேள், என்கின்றார். சீதையின் நாவில் இது என்ன??? சனி பகவான் வந்து உட்கார்ந்தானோ??? சீதை கேட்கின்றாள்: "கிழங்குகளையும், கனிகளையுமே உண்டு நாம் வாழ்ந்து வந்த அந்தக் காட்டு வாழ்வை மீண்டும் ஒருமுறை வாழ ஆசைப் படுகின்றேன். ரிஷி, முனிவர்களின் ஆசிரமத்தில் ஒரு நாளாவது அவர்களுடன் பொழுதைக் கழிக்க ஆசைப்படுகின்றேன்." என்று சொல்ல, ராமரும் அதை நிறைவேற்றித் தருவதாய்ச் சொல்கின்றார்.

R. Gopi சொன்னது…

@கார்த்திக்,

எல்லாப் பின்னூட்டங்களையும் படிக்கவில்லை. அவற்றில் தரப்பட்டிருக்கும் சுட்டிகளையும் படிக்கவில்லை. எல்லாம் படித்துமுடித்துவிட்டு மறுபடியும் வருகிறேன்.

GEETHA ACHAL சொன்னது…

//அவ்வளவு சிரமேற்கொண்டு சீதையை அவர் காப்பாற்ற வேண்டிய அவசியமே இல்லை. வேறு ஒரு திருமணம் செய்து கொண்டிருக்கலாம். அப்படியா செய்தார் ராமர் ? அவருக்குத் தெரியாதா தன் மனைவியைப் பற்றி ? இன்றைக்கு வேண்டுமானால் நாம் சமூகத்தை பற்றி கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அன்று அப்படி இருக்க இயலாது. மற்றவர்களும் சீதையின் தூய்மையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றே இதை செய்தார். இதில் என்ன ஆணாதிக்கம் இருக்கிறது என்று புரியவில்லை எனக்கு //

அருமை...

இரண்டு பதில்களுமே திருப்தி அளிக்கின்றது...தெளிவான விளக்கம்...அருமை...

Geetha Sambasivam சொன்னது…

@Velsfed,அன்று ராமர் ஒரு சிறு தவறு செய்துவிட்டார் என்பதை நீங்கள் இந்த நேரத்தில் ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். என்னவென்றால் " அன்று சீதா தேவியரை தீக்குளிக்கும் நேரம் ராமர் தானும் சேர்ந்து தீக்குளிதிருக்க வேண்டும்",//

ராமருக்கு நான் வக்காலத்து வாங்க வில்லை என்றாலும் சீதையைப் பிரிந்த அந்தப் பதினொரு மாதங்கள் ராமர் காட்டில் தவ வாழ்க்கைதான் வாழ்ந்தார். வேறொரு பெண்ணின் மாளிகையிலோ, அல்லது கிஷ்கிந்தையின் சுக்ரீவனின் அரண்மனையிலோ கூட வாழவில்லை. காட்டில், மலைக்குகையில் தான் வாழ்ந்தார். இப்போதும் கிஷ்கிந்தையில் ஸ்ரீராமர் தங்கிய இடங்களை, குறிப்பாய் அந்தக் குகையை எங்கே படுத்துக்கொண்டார் என்பதிலிருந்து பார்க்க முடியும். தமிழ்நாட்டு இளம் சித்தர் ஒருவர் இப்போது அங்கே வாழ்ந்து வருகிறார். (மூணு வருஷம் முன்னே பார்த்தது, இப்போவும் அங்கே இருக்காரானு தெரியாது.) அந்த இளம் சித்தரின் சீடர் ஒரு வயதான யோகி! தக்ஷிணாமூர்த்தியை நினைவூட்டும் சம்பவம். நேரில் கண்டு மகிழ்ந்தோம்.

ஹிஹி, எங்கே இருந்தோ எங்கேயோ போயிட்டேனோ? :)))))

நான் சொல்ல வந்தது, சீதையைத் தேடும் முயற்சிகளிலும், அதன் பின்னர் சீதையைச் சிறை மீட்கப் படைகள் திரட்டும் வேலைகளிலும் சமுத்திரத்திற்குப் பாலம் கட்டிச் செல்லும் வேலைகளிலும் முழுதாக ஈடுபட்டிருந்த ராமர் ஏன் நிரூபிக்கணும்?? சீதை ஒரு பெண், அவளுக்கு விருப்பமில்லை எனினும், ராவணன் பலவந்தப் படுத்தித் தூக்கிச் சென்ற மாதிரி பலவந்தம் செய்திருக்க இடமிருக்குமோ என்ற எண்ணம் மக்களிடையே தோன்றும் என்பதாலேயே தீக்குளிப்பு. இதுகுறித்து இன்னும் கொஞ்சம் விபரமாய்ப் பதிவு போடுகிறேன்.

இந்தக் காலத்திலேயே இன்னும் பல இடங்களில் ஒரு பெண் வெளியே இரவு தங்கினால் பயப்படும் தாய் தந்தையர் இருக்கும்போது, ராமாயண கால கட்டத்தில் இப்படி இருந்ததில் ஒரு ஆச்சரியமும் இல்லை.

R. Gopi சொன்னது…

சீதை மாதக்கணக்கில் வேறோருவனின் அரண்மனையில் இருந்திருக்கிறாள். ராவணனும் சகல தேஜஸ் கொண்டவன்தான். வீரம், கல்வி, கேள்விகளில் சோடை போனவனில்லை.

இயல்பாகவே ஆண்மகனுக்கு இருக்கும் சந்தேகம்தான் போர் முடிந்ததும் வார்த்தைகளாக வருகின்றன ராமனிடமிருந்து. அப்போது ராமன் பேசுவதை எல்லாம் கேட்க ரொம்பவே நாராசமாக இருக்கும். கிட்டத்தட்ட “எவன் கூட வேண்டுமானாலும் போ” (பரதன், சுக்ரீவன், லக்ஷ்மணன், விபீஷணன் இவர்கள் எவருடன் வேண்டுமானாலும் செல்லலாம்) என்கிற ரீதியில் இருக்கும். உங்கள் பதிவில் இது குறித்து நீங்கள் எழுதவே இல்லை. கீதா மேடத்தின் பதிவில் லேசாக எழுதியுள்ளார்.

சீதை, “நான் மாயந்துபோகிறேன்” என்று லக்ஷ்மணனைத் தீ மூட்டச் சொல்லும்போதும் ராமர் மவுனம் காக்கிறார். இது ஒரு விதத்தில் அவருக்கு சம்மதமே. இதைக் கீதா மேடம் அவருடைய பதிவில் ஒப்புக்கொண்டுள்ளார்.

சரி, அக்னிப்பிரவேசம் அவசியமான ஒன்று (சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பற்பட்டவளாக இருக்கவேண்டும்) என்றே எடுத்துக்கொள்வோம்.

லக்ஷ்மணனோடு போ, சத்ருக்கனனோடு போ, விபீஷணனோடு போ என்று சொல்வதெல்லாம் எந்த விதத்தில் சேர்த்தி? அப்படிச் சொன்னால்தான் சீதை அக்னிப் பிரவேசமே செய்வாள், அதனால்தான் ராமர் அப்படிச் சொன்னார் என்று சொல்வீர்களோ?

சரி, ஏற்கனவே ஒருமுறை சீதை புனிதமானவள் என்று நிரூபித்தாகிவிட்டது. மீண்டும் அயோத்தி மக்கள் தவறாகப் பேசியதால் மனைவியைத் துறக்கிறார். அதுவும் கர்ப்பிணியை. கங்கைக்கரை கொண்டுவந்து விடும் லக்ஷ்மணன் சீதையை வால்மீகி ஆசிரமத்தில் போய் வசிக்குமாறு சொல்லிவிட்டுப் போய்விடுகிறான்.

சீதை முனிவர்கள் வசிக்கும் ஆசிரமத்தில் வசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது ஓரிரு நாட்கள் அங்கே இருப்பதற்காக. ஆயுட்காலம் முழுதும் அங்கேயே இருப்பதற்கில்லை. அவர் வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்த காலத்தில் மகிழ்ச்சியாக இருந்ததாகத் தெரியவில்லை. சீதையின் ஆசையை அங்கீகரிக்கும் பொருட்டே ராமர் சீதையைத் துறந்தார் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

பட்டத்து மகிஷி, அண்ணி, கர்ப்பிணி அவளை ஆசிரமம் வரை கூடச் சென்று கொண்டுவிட முடியாத சூழல் லக்ஷ்மணனுக்கு. அவனுக்கு முனிவரிடம் காட்ட முகம் ஏது?

சரி, எல்லாம் போய்த் தொலைகிறது. பல ஆண்டுகள் கழித்து சீதையை மீண்டும் அவைக்கு வரவைத்து கற்பு குறித்து சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டுவது ஏன்? எத்தனை முறை அவள் கற்பை நிரூபிக்கவேண்டும? யார் யாருக்கெல்லாம் நிரூபிக்கவேண்டும்?

ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோம். ஒருவேளை சீதை அதன் பின் ராமருடன் சிலகாலம் வாழ்ந்து வந்து ஊர் மறுபடியும் தவறாய்ப் பேசினால் மறுபடியும் ராமர் மனைவியைத் துறக்கத்தானே வேண்டும்?

R. Gopi சொன்னது…

\\தமிழ்நாட்டு இளம் சித்தர் ஒருவர் இப்போது அங்கே வாழ்ந்து வருகிறார். (மூணு வருஷம் முன்னே பார்த்தது, இப்போவும் அங்கே இருக்காரானு தெரியாது.) \\

கீதா மேடம், நானும் மூன்று வருடங்களுக்கு முன் பார்த்தேன்!

என்னைப் பார்த்தவுடன் நிறைய உடற்பயிற்சி செய்து உடம்பை நல்லபடியாகப் பேணும்படி அறிவுரை கூறினார்!

raji சொன்னது…

//சரி, எல்லாம் போய்த் தொலைகிறது. பல ஆண்டுகள் கழித்து சீதையை மீண்டும் அவைக்கு வரவைத்து கற்பு குறித்து சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டுவது ஏன்? எத்தனை முறை அவள் கற்பை நிரூபிக்கவேண்டும? யார் யாருக்கெல்லாம் நிரூபிக்கவேண்டும்?//

@கோபி ராமமூர்த்தி

இம்முறையும் சீதையை சத்திய பிரமாணம் எடுக்க தூண்டியது அயோத்தி மக்களே.

லவனும் குசனும் சொல்வதை நம்பி ராமரின் பிள்ளைகள் என எவ்வாறு கொள்ள முடியும்?
நாளைக்கே வேறு யாராவது வந்து நான்தான் ராமரின் வாரிசு என கூறினாலும்
ஏற்க இயலுமா? என மக்கள் கேட்க அதன் பின்தான் சீதை அவைக்கு வருகிறாள்.

அவைக்கு வந்தவள் தானே சத்திய பிரமாணத்திற்காக பூமாதேவியை அழைக்க,
லவனும் குசனும் அதை மறுக்கிறார்கள்.அதற்கு சீதா தேவி "பின்னாளில் என்றுமே
உங்களுக்கு மீண்டும் இந்நிலை வரகூடாது.எனவே நான் இம்மாதிரி சத்திய பிரமாணம் எடுக்கிறேன்"
என கூறி தாயுடன் சென்றாள்
இதில் ராமனின் தவறு என தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை

R. Gopi சொன்னது…

\\லவனும் குசனும் சொல்வதை நம்பி ராமரின் பிள்ளைகள் என எவ்வாறு கொள்ள முடியும்?
நாளைக்கே வேறு யாராவது வந்து நான்தான் ராமரின் வாரிசு என கூறினாலும்
ஏற்க இயலுமா? என மக்கள் கேட்க அதன் பின்தான் சீதை அவைக்கு வருகிறாள்.\\

நான் படித்தவரையில் இவ்வாறு கிடையாது. லவனும் குசனும் தன்னுடைய சரித்திரத்தைக் கூறக் கூற ராமருக்கு அவர்கள் தன் பிள்ளைகள்தான் என்று தோன்றுகிறது. ராமர் அவையில் இருக்கும் பெரியவர்களைப் பார்த்து வால்மீகியிடம் ஒரு செய்தி தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறார்.தெரிவிக்க வேண்டிய செய்தி இதுதான். "சீதை தூயமையான நடத்தை உடையவள் என்றால் அவள் தன் புனிதத் தன்மையை நிரூபிக்கட்டும். சபை முன் சத்தியப் பிரமாணம் செய்யட்டும்" என்றும் கூறுகிறார்.

நான் சொல்வது வால்மீகி ராமாயணத்தின் அடிப்படையில்.

R. Gopi சொன்னது…

ஊர் தூற்றுகிறது என்றவுடன் சீதையைத் துறக்க முயலும் ராமர் ஏன் சீதைக்கு அவள் களங்கமில்லாதவள் என்று நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கக் கூடாது?

ஏன் மற்ற அமைச்சர் பெருமக்கள், குலகுரு ஆகியோரிடம் கலந்து பேசி ஆக வேண்டியது என்ன என்று கேட்டிருக்கக் கூடாது? அப்படிக் கலந்து பேசிய பிறகுதான் இந்த முடிவு (நதிக்கரையில் தனித்து விடுதல்)எட்டப்பட்டதா? ஆம் என்றால் அது என்ன மாதிரியான பெரியோர் நிறைந்த அவை?


அரசியும் நாட்டின் ஒரு பிரஜையே. அவள் நடத்தை கெட்டவளாக (நடத்தை கெட்டவள் இல்லை. அந்த சந்தேகம் ஊருக்கு மட்டுமே) இருந்திருந்தால் கூட அவளை (அதுவும் கர்ப்பமுற்றிருக்கும்போது)
நதிக்கரையில் விட எப்படி மனம் வந்தது ஒரு அரசனுக்கு? அவள் அவமானத்தில் ஏதேனும் செய்துகொண்டால்? நடத்தை கெட்டவள் என்று சந்தேகிக்கப்படும் எல்லாப் பெண்களையும் இப்படித்தான் ஒரு அரசர் நடத்துவாரோ?

Geetha Sambasivam சொன்னது…

உங்கள் பதிவில் இது குறித்து நீங்கள் எழுதவே இல்லை. கீதா மேடத்தின் பதிவில் லேசாக எழுதியுள்ளார்.//

ராமர் கடுமையாகத் தான் பேசினார். விவரிச்சு எழுதவில்லைதான். பதிவின் நீளம் கருதி நிறைய உபகதைகளையே எழுதவில்லை. ஆகவே அன்றைய நிலையில் நீக்கி இருக்கலாம். என்றாலும் ஒரு கணவன் சந்தேகப் படும் மனைவியிடம் என்னவெல்லாம் பேசுவானோ அப்படியே ராமர் பேசினார் என்பது உண்மைதான். எத்தனை முறை தன்னுடைய பதிவிரதாத் தன்மையை நிரூபிக்க முடியும் என்பதாலேயே கடைசியில் சீதை நிரந்தரமாய்ப் பிரிகிறாள். அதன் பிறகும் ராமர் ஆட்சி புரிந்துவிட்டுக் கடைசியில் தன் குமாரர்களுக்கும் ராஜ்யப் பங்கீடு செய்துவிட்டு, அன்பிற்குரிய லக்ஷ்மணனையும் பிரிந்து, பின்னர் சரயு நதியில் மூழ்கி ஜலசமாதி ஆகின்றார். இது குறித்தும் எழுதி உள்ளேன். ராமர் மனைவியைப் பிரிந்து வருந்தவேண்டும் என்பது பிருகு முனிவர் அவருக்குக் கொடுத்த சாபம்.

Geetha Sambasivam சொன்னது…

கீதா மேடம், நானும் மூன்று வருடங்களுக்கு முன் பார்த்தேன்!//

அட, அப்படியா?? எங்கள் குழுவில் ஒருவருக்குக் குடும்பப் பிரச்னை இருப்பதை எப்படியோ தெரிந்து கொண்டு நடந்தவற்றை மட்டும் சொல்லாமல், அதற்கான தீர்வையும் கூறினார். ஆனால் எங்களை எல்லாம் போகச் சொல்லிவிட்டார். நண்பர் அவர் கூறியவற்றை ஒத்துக்கொண்டு பேசியதில் இருந்து தெரிந்தது.

Geetha Sambasivam சொன்னது…

கோபி ராமமூர்த்தி, ராஜிக்கு நீங்கள் அளித்திருக்கும் பதில் சரியானதே. வால்மீகி அப்படித் தான் கூறுகிறார்.

Geetha Sambasivam சொன்னது…

உங்கள் மற்றக் கேள்விகளுக்கு நான் பதிவு தான் எழுதவேண்டும். கொஞ்சம் நேரம் ஆகும். ஆனால் நினைவில் குறித்துக்கொள்கிறேன். நன்றி. :))))) இப்படி ஆக்கபூர்வமான கேள்விகளையும், பதில்களையும், தேடல்களையும் கண்டால் சந்தோஷமாய் இருக்கிறது. அனைவருக்கும் என் நன்றி.

Geetha Sambasivam சொன்னது…

விவேகம், விநயம், தேடல், உண்மையின் தெளிவு ஆகியன கொண்ட ஒரு குழுவினரிடம் பேசியதில் எனக்குத் தான் லாபம்.

எல் கே சொன்னது…

உண்மைதான் மாமி. கோபி மற்றும் ராஜி இருவருக்கும் எனது நன்றிகள். வெகு நாட்களுக்குப் பிறகு மிகத் தெளிவான அருமையான வாதம் நடப்பதற்கு நீங்கள் இருவருமே காரணம்,. இப்படி ஒரு பதிவு போட வாய்ப்பு வந்தமைக்கு கருணாகரசு அவர்களுக்கும் எனது நன்றி

சுந்தரா சொன்னது…

பதிவின்மூலமும் பின்னூட்டங்களின்மூலமும்
நிறையத் தெரிஞ்சுக்கமுடியுது.

நன்றி கார்த்திக்!

R. Gopi சொன்னது…

\\ கீதா சாம்பசிவம் said...
உங்கள் பதிவில் இது குறித்து நீங்கள் எழுதவே இல்லை. கீதா மேடத்தின் பதிவில் லேசாக எழுதியுள்ளார்.//

ராமர் கடுமையாகத் தான் பேசினார். விவரிச்சு எழுதவில்லைதான். பதிவின் நீளம் கருதி நிறைய உபகதைகளையே எழுதவில்லை. ஆகவே அன்றைய நிலையில் நீக்கி இருக்கலாம்\\

புரியுது கீதா மேடம். நீங்க வேற ஒரு context இல் இதை எழுதி இருக்கிறீர்கள் என்று புரிகிறது. காப்பி அடிச்ச கார்த்திக் இடைல பில் இன் தி ப்லான்க்ஸ் சரியா பண்ணலை:-)

R. Gopi சொன்னது…

\\கீதா சாம்பசிவம் said...
உங்கள் மற்றக் கேள்விகளுக்கு நான் பதிவு தான் எழுதவேண்டும்\\

நன்றி. அப்போ இன்னொரு கேள்வி. சாபம் காரணமாக (பிருகுவின் மனைவி அசுரருக்கு அடைக்கலம் கொடுத்து அதனால் விஷ்ணு சினந்து அவள் தலையைக் சக்ராயுதம் ஏந்திக் கொள்கிறார். பிருகு சாபம் தருகிறார்)ராமர் கஷ்டப்பட்டார் ஓகே. சீதை ஏன் கஷ்டப்பட வேண்டும்?

அவள் செய்த ஒரே தவறு லக்ஷ்மணனை சந்தேகப்படுவதுதான். ஆனால் அதற்கு அவள் ஆயுள் முழுதும் கணவனைப் பிரிந்திருக்க வேண்டும் என்ற தண்டனை சரியா?

விஷ்ணு செய்தது ஸ்த்ரிஹத்தி. அதுவும் மைத்துனனைத் தவறாகப் பேசுவதும் ஒன்றாகிவிடுமா? அல்லது சீதையின் துன்பத்திற்கு வேறு காரணங்கள் உண்டா?

raji சொன்னது…

@கோபி

ராமரின் காலத்தில் இருந்த சட்ட திட்டங்களையும்
எந்த பிரச்சனைகளுக்கு என்ன தீர்ப்பு என்பதையும்
முழுமையாக அறியாத பட்சத்தில் இந்த பிரச்சனைக்கு முடிவு காண்பது எளிதல்ல.

@எல் கே.கோபி ராமமூர்த்தி, கீதா சாம்பசிவம்

ஆனால் இந்த பதிவினாலும் பதில்களாலும் நான் நிறைய
அறிந்து கொண்டேன்
நன்றி எல் கே சார்,கோபி சார், கீதா மேடம்

எல் கே சொன்னது…

கோபி, பொதுவா நான் பதிவில் போடும் விஷயங்கள் வேறு ஒருவரிடம் இருந்து பெற்றாலோ இல்லை வேறு ஒருவர் பதிவில் இருந்து எடுத்து போட்டாலோ அதை குறிப்பிட்டு இருப்பேன். இந்தப் பதிவில் வேறு எங்கிருந்தும் நான் விஷயங்களை எடுக்கவில்லை

Matangi Mawley சொன்னது…

நடந்த கதை, நம் முன்னே. ஆனாலும்- அக்னி பிரவேசத்தையோ, சீதையை அயோத்தியை விட்டு அனுப்பியதையோ என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த கால சூழ்நிலையை என்னால் ஏற்க்க இயலவில்லை.
சரி- ராமர் சீதையை அக்னி பிரவேசம் செய்ய சொல்ல வில்லை என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால்- அவள் செய்யப் போக- அதைத் தடுத்திருக்கலாம். எத்தனையோ விஷயங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ராமரின் கதா பாத்திரம்- பத்தினியின் பேரில் நம்பிக்கை கொள்ளல்- என்ற விஷயத்திற்கும்- எடுத்துக்காட்டாக விளங்கியிருக்கலாம்!

நீங்கள் கூறுவது சரி தான். அந்த கால சூழ்நிலையை- இந்த கால சூழ்நிலை கொண்டு ஒப்பிட்டு பார்க்கக் கூடாது தான்.

என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை.
அதை நான் விரும்பவும் இல்லை.
ராமர் மீது த்வேஷமும் இல்லை.
ப்ரீதியும் இல்லை.

உங்கள் பதிவு-- அற்புதம்!

எல் கே சொன்னது…

/த்தினியின் பேரில் நம்பிக்கை கொள்ளல்- என்ற விஷயத்திற்கும்-//

அவருக்கு நம்பிக்கை இல்லாட்டி கூட்டிக்கிட்டு போயிருக்கமாட்டார் !!!
அவருக்குத் தெரியும் சீதையை பத்தி.. ஊரார் என்ன சொல்வார்களோ என்றுதான் பிரச்சனை :)

Geetha Sambasivam சொன்னது…

மறுபடியும் சீதையின் அக்னிப்ரவேசம் குறித்த சந்தேகம்! :)))))

ராமரை சீதையின் கணவராகவே பார்ப்பதால் எழும் பிரச்னை இது. இந்தக் கால கட்டத்திற்கு சுயநலம், தன்னலம் மட்டுமே இருந்தால் தான் சரியா இருக்கு. அதை வைத்துப் பார்க்கிறோம். ஆனால் அரசர்களுக்கு எனத் தனியாகக் கடமைகள், தர்மம் உண்டு. அந்த தர்மத்தின்படி, தன் குடிமக்களுக்கு அரசன் ஒரு முன்னுதாரணமாகவே திகழ வேண்டும். சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவனாய் இருக்க வேண்டும்.

நம் அரசனே இப்படி இன்னொருத்தர் வீட்டில் தங்கிய பெண்ணை அவள் மீதுள்ள ஆசையால் தன்னோடு சேர்த்துக் கொண்டு விட்டான் என்றால், நம் மனைவிமார்களும் தவறு செய்தால் நாமும் ஏற்கவேண்டி இருக்குமே எனக் குடிமக்கள் பேசிக்கொள்வதை ஒற்றர்கள் வந்து சொல்லவே, குடிமக்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும், அவர்களுக்காக எதையும் , அவர்களின் நலனுக்காக எதையும் செய்யத் தயாராய் இருக்கிறான் நம் அரசன் என்பதைத் தெரிவிக்க வேண்டியும் எடுத்த முடிவு.

சட்டென்று ஒரு நிமிஷச் சிந்தனையிலோ, ஆவேசத்திலோ எடுக்கவில்லை. பின்னர் அவன் நிரூபிக்கச் சொன்னதின் காரணமும், பொதுவான மக்கள் சபையின் முன்னர் அனைவரும் தெரியும் வண்ணம் சீதையின் பரிசுத்தம் நிரூபிக்கப்படவேண்டும் என்ற ஆசையே ஆகும். மற்றபடி ராமன் சீதைச் சந்தேகப் பட்டான் என்று கொள்ள முடியாது.

சீதைக்கு ராமனின் மேல் வருத்தமும், கோபமும் ஒரு மனைவிக்கு உள்ள நியாயமான கோபம் இருக்கத் தான் செய்தது. அதே சமயம் அவனின் அரச கடமையையும் புரிந்து கொண்டதாலேயே காட்டில் வசித்தாள். பின்னரும் இவ்வளவெல்லாம் நிரூபித்துக் கொண்டு கணவனுடன் சேர்ந்து வாழ்ந்தே ஆகவேண்டுமா என்ற சுய அபிமானம்/சுய கெளரவம் காரணமாய் பூமித் தாயை வேண்டிக்கொண்டு மறைந்து போனாள்/

dondu(#11168674346665545885) சொன்னது…

நீங்கள் எனது பதிவில் இட்டப் பின்னூட்டத்தைப் பார்த்து இங்கே வந்தேன். என் மனது இன்னும் ஆற மாட்டேன் என்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்