Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin
Thursday, April 24

Pages

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

எதிரெதிர் பதிவு

அப்பாவி தங்கமணி எழுதிய தங்க மணிக்கு பத்து கேள்விகள் - பதிவுக்கு எதிர்பதிவு ....பதிவுக்கு எதிரெதிர் பதிவு இது எதிர் பதிவு எல்லாம் உங்களுக்...

அப்பாவி தங்கமணி எழுதிய தங்க மணிக்கு பத்து கேள்விகள் - பதிவுக்கு எதிர்பதிவு....பதிவுக்கு எதிரெதிர் பதிவு இது

எதிர் பதிவு
எல்லாம் உங்களுக்கு தேவை பட்ற குப்பைக (!!!) தான். என்ன செய்ய? நீங்க கை வீசிட்டு வர்றப்ப நாங்களாச்சும் பொறுப்பா எல்லாத்தையும் கொண்டு வர வேண்டி இருக்கே...நல்லதுக்கு காலம் இல்ல... வேற என்ன சொல்ல

எதிரெதிர் பதிவு 
லிப்ஸ்டிக் , முகம் பார்க்கும் கண்ணாடி  (சின்னது) , அப்புறம் சில பல பில் (உபயோகம் இல்லாதது ) இதெல்லாம் எங்களுக்கு தேவையா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் 

எதிர் பதிவு
ரூபாயை எப்படி பிடிக்கறோம்கறது முக்கியம் இல்ல பாஸ்... எப்படி பிடிச்சு வெக்கறோம்கறது (சிக்கனம்) தான் மேட்டர்.... அதுல ரங்கமணிகள விட தங்கமணிகள் எப்பவும் சூப்பர் தான்னு statistics சொல்லுது... போய் பாருங்க...ஹா ஹா ஹா

எதிரெதிர் பதிவு 

எப்படி? மடிச்சு வச்ச காசு எல்லாம் உபயோகப் படுத்த முடியாம அப்படியே வச்சுக்கறதா ?


எதிர் பதிவு
சட்னி அரைச்சு குடுக்கராங்கல்ல அவங்கள சொல்லணும்... வெறும் தேங்காய கடிச்சுட்டு சாப்பிடுங்கன்னு விட்டுட்டா இனிமே சரியா போகும்... என்ன நான் சொல்றது....? (தேவையா இது தேவையா...ஹா ஹா ஹா)

எதிரெதிர் பதிவு
 
அப்படியாவது ஒழுங்கா செய்வீங்களா? நீங்க சரியா செய்யறது இல்லைனுதான் , எல்லாம் பாக்கெட் ரெடிமேட் செஞ்சு விக்கறாங்க.


எதிர் பதிவு
என்ன செய்ய? வாய்ச்சது தான் இப்படி விதின்னு ஆகி போச்சு.... நாம பெத்ததாச்சும் நல்லபடியா இருக்கட்டும்னு நெனைக்கறது தப்பாங்ண்ணா... நேரடியா சொன்னா உங்க மனசு கஷ்டப்படும்னு சொல்லாம விட்டது தங்கமணி தப்பு .... (இப்ப என்ன சொல்லுவீங்க... இப்ப என்ன சொல்லுவீங்க...ஹா ஹா ஹா)

எதிரெதிர் பதிவு
ஏனுங்க இதுக்கும் அவர் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்? இப்படி சம்பந்தம் இல்லமா பேசறதுதான் தங்கமணிகளோட வேலை ..

எதிர் பதிவு
அதுதாங்க மல்டி-டாஸ்கிங்.... ஓ... அப்படின்னா என்னனே ரங்க்ஸ்களுக்கு தெரியாதில்ல... அதாவது... ஒரு வேலை செய்யறப்பவே அவகாசம் கெடைச்சா பின்னாடி வேண்டியதையும் பாத்து வெச்சுக்கறது பெண்களுக்கே உரிய ஒரு குணம்... இல்லேனா உங்கள மாதிரி நூறு ரூபா பெறாத சட்டைய ஆயிரம் குடுத்து வாங்க வேண்டி வருமே பாஸ்... ஹே ஹே ஹே...

எதிரெதிர் பதிவு


 எப்படியும் அதை ரெண்டு மாசம்கழிச்சு இப்ப இது பேஷன் இல்லைன்னு சொல்லி வாங்க மாட்டீங்க? அப்புறம் எதுக்கு இப்ப தேவை இல்லாமா பார்த்து வைக்கணும் ??


எதிர் பதிவு
என்னங்க செய்ய? உங்கள மாதிரியா நாங்க... நாங்க உடுத்துற புடவை கூட உங்களுக்கும் பிடிச்சதா இருக்கணும்னு நெனக்கற நல்ல மனசு தங்கமணிகளுக்கு இருக்கே... (ஹா ஹா ஹா)

எதிரெதிர் பதிவு
எப்படி இருந்தாலும் , நாங்க சொல்றத வாங்க மாட்டீங்க ? அப்புறம் எதுக்கு இப்படி ஒரு சால்ஜாப்பு ???


எதிர் பதிவு
உங்கள போல கை வீசிட்டு கெளம்ப நாங்க என்ன நீங்களா? உங்களுக்கு கிளம்பறது ஒண்ணு தான் வேலை... எங்களுக்கு அதுவும் ஒரு வேலை... அதோட சமைக்கறது (நீங்க மேல சொன்னாப்ல அந்த நேரத்துல தானே உங்க சொந்த காரங்க கூட அரட்டை அடிச்சுட்டு நாங்க mixie போடறத வேற கிண்டல் பண்ணுவீங்க... பின்ன என்ன ஹெல்ப் பண்றதா போச்சு...), பிள்ளைகள கிளப்பறது, வீட்டை ஒழுங்கு பண்றது எல்லாமும் இருக்கே (கரெக்ட் தானே பாஸ்...)

எதிரெதிர் பதிவு
 இந்தப் போய்தான வேணாம்னு சொல்றது. சமைக்கரதுக்கும் வெளில போறதுக்கும் என்னங்க சம்பந்தம்?? எல்லா கேள்விக்கும் புத்திசாலித்தனமா குழப்பி சம்பந்தம் இல்லாதா பதிலா கொடுக்கறீங்க ??



எதிர் பதிவு
//"போதை வஸ்துக்கள்"// உங்களுக்கு ஏங்ண்ணா எல்லாமும் இப்படியே தோணுது...? ஓ... நீங்க ரங்கமணி ஆச்சே... அப்படி தான் இருக்கும்... யூஸ் பண்றதெல்லாம் பிட் நோட்டீஸ் அடிச்சு சொல்லிட்டா பண்ண முடியும்... எல்லாம் பண்றது தான்..

எதிரெதிர் பதிவு
என்ன பதில் சொல்றதுன்னு தெரியாட்டி இப்படி ஒரு பதிலா சொல்றதா ???

எதிர் பதிவு
அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு தெரிஞ்சு வெச்சு இருக்கறதுக்கு பாராட்டறத விட்டுட்டு இதுக்குமா குத்தம்... ஆண்டவா காப்பாத்து...

எதிரெதிர் பதிவு
அதெப்படிங்க அந்தக் கடைலதான் நல்லா இருக்குனு சொல்லுவீங்க?? வேற கடையே தெரியாதா? இல்லை வேற கடையே இல்லையா ஊர்ல ? அங்கதான் வாங்கனும்னு அடம் வேற பிடிப்பீங்க .. முடியல


.With Love LK

43 கருத்துகள்

Riyas சொன்னது…

எதிரெதிர் பதிவு..

ம்ம்ம் நல்லாயிருக்கு.

Riyas சொன்னது…

கார்த்திக் "வட" எனக்குத்தானா..?

Riyas சொன்னது…

கார்த்திக் "வட" எனக்குத்தானா..?

தக்குடு சொன்னது…

:))) no comments..:)

பெயரில்லா சொன்னது…

ம்ஹூம் உங்களுக்கு நேரம் சரியில்லை. உங்க தங்கமணியை இந்த படிவு படிக்கசொல்லணும் :)

எல் கே சொன்னது…

@ரியாஸ்

நன்றி. வடை உங்களுக்குத் தான்

@தக்குடு

என் இந்த பயம் உனக்கு

@அம்மிணி

என் பக்கத்தில்தான் இருக்காங்க.. எழுதறப்ப படிசிகிட்டுத் தான் இருந்தாங்க

சௌந்தர் சொன்னது…

என்ன நடக்குது இங்கு..... அடுத்து அவர் பதிவு போடுவாரா!!!!

அன்புடன் மலிக்கா சொன்னது…

நல்லாயிருக்குதே எதிரெதிரே!

பெயரில்லா சொன்னது…

//தக்குடுபாண்டி said...

:))) no comments..:) //

He he. Well said Tha-ku-du

//என்ன நடக்குது இங்கு..... அடுத்து அவர் பதிவு போடுவாரா!!!!//
She will, I think. This is not going to end. Yahoo

-Minnal (Anami)

பெயரில்லா சொன்னது…

சபாஷ் சரியான போட்டி ...வாழ்த்துக்கள் கார்த்தி

Karthick Chidambaram சொன்னது…

ஏன் இந்த பொல்லாப்பு ..... :-)

ஜெய்லானி சொன்னது…

தல நா அங்கயே கேள்விக்கு ஜீரோ மார்க் போட்டுட்டு வந்துட்டேன்.. இப்ப அதுக்கு பதில் போட்டா அவங்க சிரிக்க ஆரம்பிச்சிடுவாங்க ....

எல் கே சொன்னது…

@சௌந்தர்
அது நாளைக்கு அவங்க இந்தப் பதிவ படிச்சப்புறம் தெரியும்

எல் கே சொன்னது…

@மலிக்கா

நல்லா எஸ்கேப் ஆகரீங்க .. நன்றி

எல் கே சொன்னது…

@மின்னல்
ஏன் இப்படி அனானியா வரீங்க? சொந்தப் பெயரிலேயே போடலாமே ???

எல் கே சொன்னது…

@சந்தியா
நீ யாரு பக்கம்னு தெளிவா சொல்லு

எல் கே சொன்னது…

@கார்த்திக்
ஏன் ஏன் இப்படி பயம் ???

@ஜெய்
சரி தல

Gayathri சொன்னது…

இந்த போட்டிய விட்டுவிட்டு சமாதானமா போய் அமைதி புராவப் பறக்க விடலாமே..

pinkyrose சொன்னது…

என்னதாஆஆஆஅன் நடக்குது இங்காஆஆஆஆஅ?

ஸ்ரீராம். சொன்னது…

எதிர்ப்பதிவுகள்..ஹூம்....போதுமே...!

dheva சொன்னது…

பாஸ் கலக்கல் எதிர் ஷாட்................ரங்கமணிகளை பாதிப்பிலும் தலைகுனிவிலும் இருந்து தூக்கி நிறுத்திய ரங்கமணிகள் சங்க பொருளாலர் அவர்களை வாழ்த்தி... நாளை மறு நாள் மெரீனாவில் மிகப்பெரிய பேரணியும் பொதுக் கூட்டமும் நடைபெறும்...

ரங்கமணிகள் மானம் காத்த சிங்கமணியை சிறப்பிக்க எல்ல ரங்கமணிகளும் அணிதிரளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்........

ஏ இந்த படை போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா....!

கார்த்திக்.....கலக்கிட்டீங்க.....ஹா..ஹா..ஹா..!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

ஹா ஹா ஹா... நல்லாவே சமாளிக்கற கார்த்தி... அதுக்காக உன்னை பாராட்டத்தான் வேணும்... இந்த எதிர்ரெதிர் பதிவுக்கும் எதிர்பதிவு போடணும்னு கை துரு துருங்குது.... ஆனா எங்க பக்க ஞாயத்த மறுபடி மறுபடி சொல்லி தான் தெரியனும்னு இல்லைங்கரதால I rest the case your honour.... (ha ha ha)

சாந்தி மாரியப்பன் சொன்னது…

கலகலப்பா இருக்குது எதிரெதிர் பதிவு.

ஹேமா சொன்னது…

என்னமா யோசிக்கிறீங்க.அதுக்கே பாராட்டலாம் !உங்களையெல்லாம் எப்பிடித்தான் வீட்ல சமாளிக்கிறாங்களோ !

GEETHA ACHAL சொன்னது…

ஆஹா...ஆரம்பித்துவிட்டிங்களா....நல்ல பதிவு...

செந்தில்குமார் சொன்னது…

ம்ம்ம் நல்ல எதிர் பதிவு கார்த்திக் ஆனாலும்.........

ஹைஷ்126 சொன்னது…

இன்னும் கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம் :)

தெய்வசுகந்தி சொன்னது…

எங்க இன்னும் எதிர் பதிவு காணோமேன்னு பாத்தேன்!!!
ஆனாலும் நல்லாதான் சமாளிக்கிறீங்கப்பா!!! :-)

ஸாதிகா சொன்னது…

எதிரெதிர் பதிவு கலக்கல்.இதற்கு எதிரெதிரெதிர் பதிவு யார் போடப்போகின்றார்களோ?

பெயரில்லா சொன்னது…

கார்த்தி நீங்க என் குரு நான் இந்த பதிவுலகத்தில் வரதுக்கு நம்பிக்கை தந்தவர் நீங்க , அப்போ நான் உங்க பக்கம் தான் அதிலென்ன இதனை சந்தேஹம் ???

ஜீவன்பென்னி சொன்னது…

rangmaniyaa aana pinna unga sangaththula seralamnu irukken.

ஜீவன்பென்னி சொன்னது…

kalakkala irukkungna...

செல்வா சொன்னது…

ஐயோ என்னை யாராச்சும் காப்பாத்துங்க ...

எல் கே சொன்னது…

@காயத்ரி
செஞ்சிடலாம்

@பிங்கிரோஸ்
பின்னாடி நிறைய பதிவு இருக்கு படிச்சிட்டு வாங்க

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்
நிறுத்திடலாம்

@தேவா
ஹஹா

எல் கே சொன்னது…

@அப்பாவி
பதில் சொல்லத் தெரியலன்னா அதை சொல்லிடுங்க. இப்படில்லாம் சமாளிகாதீங்க

எல் கே சொன்னது…

@சாரல்
நன்றிங்க :))

@ஹேமா
ஹிஹி

எல் கே சொன்னது…

@கீதா அச்சில்
ஹிஹி

@செந்தில்குமார்
ஆனாலும் .....???

எல் கே சொன்னது…

@ஹைஷ்
அப்படியா பண்ணிடலாம்

@தெய்வசுகந்தி
ஹ்ம்ம் :)))

எல் கே சொன்னது…

@saathiga

athukuthaan waiting

@sandhya
thanks

@jeevan
vaanga vaanga

எல் கே சொன்னது…

@selvakkumar

athukkuthan sangam todangi irukom

vanathy சொன்னது…

சூப்பர்.

//ஆனா எங்க பக்க ஞாயத்த மறுபடி மறுபடி சொல்லி தான் தெரியனும்னு இல்லைங்கரதால I rest the case your honour.... (ha ha ha)//
எங்க தங்ஸ் கிட்ட நெருங்க முடியாது. நான் எஸ்கேப்பு....

பெயரில்லா சொன்னது…

//LK said...

@மின்னல்
ஏன் இப்படி அனானியா வரீங்க? சொந்தப் பெயரிலேயே போடலாமே ??? //

That was me karthi sir. I could not log in. :)