டிசம்பர் 06, 2010

ஜகத்குரு -2. பிறப்பு


தோடகாஷ்டகம்
 
விதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

பொருள் (நன்றி கீதா சாம்பசிவம்

புகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும், ஆன அந்தப்பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி
*******************************************************************************************
 அடுத்த நாள் மதியம் உணவுக்குப் பிறகு , "மாமா , சங்கரர் பத்தி சொல்றேன்னு சொன்னீங்க!"

"ஒரு விஷயத்தை முழுசா தெரிஞ்சிக்கற வரைக்கும் விட மாட்டியே. சரி உக்காரு சொல்றேன் "

கேரளாவில் காலடின்னு ஒரு சின்ன கிராமம். அந்த ஊரில் சிவகுரு ஆர்யாம்பா தம்பதிகள். சிவகுரு பரம சிவபக்தர் . கல்யாணத்திற்கு பிறகு குழந்தை வேண்டி திருச்சூரில் இருக்கும் வடுகநாதரை பிரார்த்தித்து ஒரு மண்டலம் விரதம் இருந்தாங்க. அந்த ஒரு மண்டல விரதத்தின் பயனாய், கி.பி. 788 ஆம் ஆண்டு வைசாக சுக்ல பக்ஷ திருவாதிரை நட்சரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. என்ன ஒரு பொருத்தம் பார்த்தியா வெங்கட் ?  திருவாதிரைக்கு உரியவன் அந்த சிவன்.அவருடைய நட்சரத்தில் சங்கரர் பிறந்தார்.  "சங்கரன்" என்றப் பெயரை சூட்டினர் அவர்கள். சங்கரன் என்றால் எல்லா நலன்களும் அளிப்பவன் என்று பொருள்.

சங்கரர் பிறந்த வருடங்களை மாற்றி சொல்பவர்களும் உண்டு. அவர் வாழ்ந்தது இன்னும் பழைய காலத்தில் என்று சொல்கிறார்கள். ஆனால் ஸ்ருங்கேரி மடத்தில் உள்ள கணக்குகளின் படி அவர் பிறந்தது  இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் வருடம்தான் என்று நிரூபணம் ஆகிறது "

சங்கரர் பிறந்து சில வருடங்களில் சிவகுரு பரம்பதம் அடைந்தார். எந்த ஒரு காலத்திலும், சிறு வயதில் தந்தையை இழப்பது என்பது மிக கொடுமையான ஒரு விஷயம். தந்தைதான் அனைவருக்கும் முதல் குரு. மேலும், ஒரு குடும்பம் நல்லபடி நடக்க ஒரு தலைவன் வேண்டும்.

ஆனால், காலடியில் இருந்த மக்கள், சங்கரர் தனது தந்தை இழந்த வருத்தம் தெரியாமல் பார்த்துக் கொண்டனர். அந்த காலத்தில், ஒருத்தருக்கு எதாவது பிரச்சனை என்றால், அருகில் வசிக்கும் மக்கள் உதவி செய்வார்கள். இப்ப இருக்கற மாதிரி பக்கத்து வீட்டில் இருப்பது யாருன்னு கூட தெரியாம இருக்க மாட்டாங்க.

சங்கரருக்கு அடிப்படை அக்ஷரப்யாசம் போன்றவை செய்ய அந்த கிராமத்தில் இருந்த அந்தணர்களே உதவிப் புரிந்தனர். அதுமட்டுமிலாமல், சங்கரரது குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்தனர்.

அடிப்படை கல்வி ஓரளவு அங்கு முடிந்தாலும், அந்த கால முறைப்படி குருகுலத்தில் முறைப்படி பயிலனுமே. அதற்காக சங்கரர் முதன்முறையாக காலடியை விட்டு குருகுலத்திற்கு சென்றார்."

"மிச்சத்தை நாளைக்கு பார்ப்போம்டா வெங்கட் "

பி.கு : மேலே நான் பதிவு செய்துள்ளது தோடகர் எழுதிய "தோடகாஷ்டகம்" . தோடகம் என்ற விருத்தத்தில் அமைந்த அஷ்டகம். இது சங்கரர் பற்றி அவரது சீடர் பாடியது. தமிழில் இதன் பொருளை எனக்குத் தந்தது கீதா சாம்பசிவம் அவர்கள். அவர்களுக்கு என் நன்றி.


அன்புடன் எல்கே

39 கருத்துகள்:

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

அருமை எல்.கே.

கீதா சாம்பசிவம் அவர்களின் விளக்கமும் அருமை.

தொடருங்கள் எல்.கே, வாழ்த்துக்கள்.

பத்மநாபன் சொன்னது…

ஆதி சங்கரர் பற்றிய தகவல்களை திகட்டாமல் சொல்லி வருகிறிர்கள்..

பாடலின் பொருள் விளக்கம் அருமை..

தொடர வாழ்த்துக்கள்...

Balaji saravana சொன்னது…

காலைலயிருந்து மனது கொஞ்சம் சஞ்சலமாவே இருந்துச்சு. அந்தப் பாடலின் விளக்கம் படிச்சவுடன் ஒரு சின்ன தெளிவு கிடைச்சிருக்கு LK!
மிக்க நன்றி. மிக அழகாய் தொடருகிறீர்கள் :)

Madhavan Srinivasagopalan சொன்னது…

// "மிச்சத்தை நாளைக்கு பார்ப்போம்டா வெங்கட் "//

ஒக்கே.. நான் ஈவினிங் கூட ஃப்ரீதான்..

R.Gopi சொன்னது…

அருமை.... மிக அருமை....

தொடரை படிக்க ஆனந்தமாக இருக்கிறது...

வாழ்த்துக்கள்....

nis சொன்னது…

விரிவான விளக்கம்

ஜீ... சொன்னது…

நன்றி! தொடருங்கள்! :-)

komu சொன்னது…

தொடர் மிக அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.

Lakshmi சொன்னது…

கார்த்திக் ஒரு நல்ல விஷயத்தை எல்லாருடனும் பகிர்ந்து கொள்கிரீகள். நம் ஆச்சாரியார்கள்பற்றி தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பைத்தருகிரீர்கள். வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லது... தொடருங்கள்.

சே.குமார் சொன்னது…

தொடருங்கள் எல்.கே, வாழ்த்துக்கள்.

geetha santhanam சொன்னது…

தொடரைத் தொடர்ந்து படித்து வருகிறேன். மேலும் நங்கு தொடர வாழ்த்துக்கள்.

RVS சொன்னது…

தொடர் நன்றாக இருக்கிறது.. தொடருங்கள்.. ஜெய ஜெய சங்கர. ஹர ஹர சங்கர..
திருவடி சரணம் குருவடி சரணம்.

asiya omar சொன்னது…

தொடருங்கள்,முதல் பகுதியும் படித்தாயிற்று.

LK சொன்னது…

@சங்கரி

நன்றிங்க

LK சொன்னது…

@பத்மநாபன்

அண்ணா, பாடலின் பொருள் கீதா மாமி தந்தது

நன்றி

LK சொன்னது…

@பாலாஜி
நன்றி. மொத்தம் 8 ஸ்லோகங்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொன்று வரும்

LK சொன்னது…

@மாதவன்
சுந்தரம் மாமா ப்ரீ இல்லைங்க. அடுத்தப் பகுதி வெள்ளியன்று வரும்

LK சொன்னது…

@கோபி
நன்றிங்க. உங்கள் ஊக்கம் எனக்கு மகிழ்ச்சியளிகிறது

LK சொன்னது…

@ஜி
நன்றி

@நிஸ்
நன்றி

@கோமு
நன்றிங்க

LK சொன்னது…

@லக்ஷ்மி
நமக்கு தெரிந்த விஷயத்தை பிறருடன் பகிர வேண்டும். அப்பொழுதுதான் நல்ல விஷயம் பரவும். உங்கள் வருகையும் பின்னூட்டமும் எனக்கு ஊகம் அழிக்கறது. நன்றிமா

LK சொன்னது…

@வெங்கட்
நன்றி

@குமார்
நன்றி

@கீதா சந்தானம்
நன்றிங்க

LK சொன்னது…

@ஆர்.வீ.எஸ்
அண்ணே, பாடல்கள் பதிவை பார்க்கலியா ?? உங்கள் பின்னூட்டம் அதில் எதிர்பார்த்தேன். நன்றி

LK சொன்னது…

@ஆசியா
நன்றி சகோ

கோவை2தில்லி சொன்னது…

தொடருங்கள். வாழ்த்துக்கள்.

Gayathri சொன்னது…

நல்ல தகவல்கள் ப்ரோ, இப்படி பட்ட அறிய நல்ல விஷயங்களை நீங்க பதிவு செய்யும் விதம் பின் வரும் சந்ததியினருக்கும் எளிதில் புரியும் வகையில் உள்ளது ..வாழ்த்துக்கள்

தயவுசெய்து தொடருங்கள்

அமைதிச்சாரல் சொன்னது…

நல்லாருக்கு.. கீதாம்மாவுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்.

S.Menaga சொன்னது…

very nice LK!!

சென்னை பித்தன் சொன்னது…

ஒரு நல்ல முயற்சியில் இறங்கியிருக்கிறீகள்.ஆதி சங்கரரின் ஆசியே உங்களுக்குத் துணை நிற்கும்.

வெறும்பய சொன்னது…

தொடருங்க அண்ணா.. காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு..

பெயரில்லா சொன்னது…

அருமை எல்.கே.

மாணவன் சொன்னது…

சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
நன்றி

LK சொன்னது…

@கோவை

நன்றி

LK சொன்னது…

@காயத்ரி

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால் பலர் ??? தொடர்ந்து படித்து ஊக்கம் தரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்

LK சொன்னது…

@சாரல்

நன்றி

@மேனகா

நன்றி

LK சொன்னது…

@பித்தன்

நன்றி சார். உங்களை போன்றவர்களின் வாழ்த்துக்களும் தான் சார்

LK சொன்னது…

@கல்பனா
நன்றி

@ஜெயந்த்

நன்றி

ஸ்ரீராம். சொன்னது…

இப்ப இருக்கற மாதிரி பக்கத்து வீட்டில் இருப்பது யாருன்னு கூட தெரியாம இருக்க மாட்டாங்க"//

உண்மை. சிறு சிறு பகுதிகளாய் அழகாய் கொண்டு போகிறீர்கள்.

Harini Sree சொன்னது…

arumai. ithoda specialty a chinna chinna posts a irukku. ellarukum manasula pathiyum.