நவம்பர் 17, 2010

பென் டிரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் -II

 சென்றப் பதிவில் பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் வாங்கும் முன் செய்ய வேண்டியவற்றைப் பற்றி பார்த்தோம். இதில் வாங்கியப் பிறகு செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்களை பார்ப்போம்.


நீங்கள் வாங்கிய பொருளுக்குத் தரும் ரசீதை பத்திரமாக வைக்கவும். பின்னால், வாரண்டி காலம் பற்றிய பிரச்சனை வந்தால் உதவும். ஒரு சில நிறுவனங்கள் வாரண்டியில் ரிப்பேர் செய்வதற்கு ரசீது கட்டாயம் என்றும் சொல்கின்றன. அதே போல் பென் டிரைவ் ,மெமரி கார்டு வரும் பேக்கிங் தொலைத்து விடாதீர்கள் . அவற்றில் சில எண்கள் இருக்கும். அவை தேவைப்படும். 

அடுத்து ,பெரும்பாலான நிறுவனங்கள்  தங்கள் இணையத் தளத்தில்,வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய பென் டிரைவ் /ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை பதிவு செய்ய வசதிகள் வழங்கியுள்ளன. குறிப்பாக இதை சொல்லுவதின் காரணம், iomega ஹார்ட் டிஸ்க் பொதுவாக ஒரு வருட வாரண்டி மட்டுமே. ஆனால் நீங்கள் அவர்கள் இணையத் தளத்தில் பதிவு செய்தால் மூன்று வருட வாரண்டி கிட்டும் .

இது மட்டுமில்லாது, நீங்கள் வாங்கும் பென் டிரைவ் போலியா என்பதையும் அவர்களது இணையத் தளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். பென் டிரைவ் மார்க்கெட்டில் நிறைய போலிகள் உலவுகின்றன.

பென் டிரைவ்,எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் இவற்றின் மேல்புறத்தை முடிந்தவரை கீறல் விழாதவாறு பார்த்துக் கொள்ளவும். பெரும்பாலான சமயத்தில் கீறல் விழுந்த பென் டிரைவ்கள் ரிப்பேர் செய்து தரப்படுவது இல்லை. அவை வாரண்டி விதிமுறைகளில் வராது. 

எனக்குத் தெரிந்த சில நிறுவனங்களின் கஸ்டமர் கேர் எண்களை பகிர்ந்துக் கொள்கிறேன். உங்களுக்கு உபயோகமாக இருக்கும் .

seagate -   1-800-425-4535
iomega  -  1-800-425-9888
beetel   -   1-800-10-23456
Gigabyte- 1-800-425-4945
Lacie     - 1-800-425-3969

அன்புடன் எல்கே

29 கருத்துகள்:

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

ME THE FIRST ?

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

நல்ல பயனுள்ள தகவல், பகிர்வுக்கு நன்றி எல்.கே.

philosophy prabhakaran சொன்னது…

present sir :-)

philosophy prabhakaran சொன்னது…

கஸ்டமர் கேர் என்ற வார்த்தையை கேட்டாலே காடுப்பாக இருக்கிறது....

மாணவன் சொன்னது…

மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே,

//எனக்குத் தெரிந்த சில நிறுவனங்களின் கஸ்டமர் கேர் எங்களை பகிர்ந்துக் கொள்கிறேன். உங்களுக்கு உபயோகமாக இருக்கும்//

இதில் ”எண்களை” என்பதற்கு பதிலாக ’எங்களை’ என்று உள்ளது முடிந்தால் திருத்தவும்

நன்றி
நட்புடன்
மாணவன்

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

இவ்ளோ விஷயங்கள் இருக்கா! நன்றி கார்த்திக்.

வெறும்பய சொன்னது…

நல்ல பயனுள்ள தகவல், பகிர்வுக்கு நன்றி

அமைதிச்சாரல் சொன்னது…

தகவல்களுக்கு நன்றி..

அமைதிச்சாரல் சொன்னது…

தகவல்களுக்கு நன்றி..

nis சொன்னது…

பயனுள்ள தகவல்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பயனுள்ள தகவல், பகிர்வுக்கு நன்றி எல்.கே.

சே.குமார் சொன்னது…

பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி.

பதிவுலகில் பாபு சொன்னது…

பயனுள்ள தகவல்.. நன்றி..

அருண் பிரசாத் சொன்னது…

இவ்வளவு விஷயங்கள் இந்த தம்மாதுண்டு பெண்டிரைவுக்கு இருக்கா!

சூப்பர் எல் கே

வித்யா சொன்னது…

பயனுள்ள தகவல்கள்..

RVS சொன்னது…

உபயோகமான தகவல்கள். நன்றி. ;-)

நவீன் சொன்னது…

எனது எக்ஸ்டெர்னல் ஹர்ட் டிஸ்கில் ஒரு பிரச்சனை
நான் வைத்து இருப்பது 1 TB Seagate வாங்கும் பொழுது அதன்
total available space 900 GB இருந்ததாக ஞாபகம், இப்போது வெறும்
624GB மட்டுமே total space என்று காட்டுகிறது. சமீபமாக சில
திரைப்படங்களை அதில் சேமிக்கும் பொழுது தான் பார்த்தேன்.

நவீன்

LK சொன்னது…

@நித்திலம்
நீங்கதான் முதலில். வடை உங்களுக்கே

LK சொன்னது…

@பிரபாகரன்
எனக்கு சோறு போடும் தொழிலை திட்டாதீர்கள்

LK சொன்னது…

@பிரபாகரன்
எனக்கு சோறு போடும் தொழிலை திட்டாதீர்கள்

LK சொன்னது…

@மாணவன்
முதல் (?!) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. திருத்தி விட்டேன்

LK சொன்னது…

@சை.கொ.ப
ஆமாம் நண்பா . நன்றி

@ஜெயந்த்
நன்றி

@சாரல்
நன்றி

@கங்கா
நன்றி

@குமார்
நன்றி

LK சொன்னது…

@பாபு
நன்றி

@அருண்
ஆமாம்

@வித்யா
நன்றிங்க

@ஆர்வீஎஸ்
நன்றி

LK சொன்னது…

@நவீன்
நீங்கள் சொல்லி உள்ள பிரச்சனை பற்றி அடுத்த பதிவில் விரிவாக விளக்குகிறேன்.

Mrs.Menagasathia சொன்னது…

thxs lk!!

GEETHA ACHAL சொன்னது…

தகவலுக்கு நன்றி...போன் நம்பர் எல்லாம் தேடி போட்டு இருக்கின்றிங்க...Note செய்து கொள்கிறேன்..நன்றி..

ஸ்ரீராம். சொன்னது…

சர்வீசுக்கு விடும்போது ஃ பார்மேட்டே செய்தால் கூட அதற்கான மென்பொருள் உதவியோடு அதில் இருந்த விஷயங்களைத் திருடும் கில்லாடிகள் இருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன்.

Harini Sree சொன்னது…

Nalla post! :)

Gayathri சொன்னது…

nalla post brother. oru time poem oru time story oru time travel blog ippo techie kalakarenga nenga