நவம்பர் 27, 2010

டெம்ப்ளேட் மாற்றம்

"பிலாசபி பிரபாகரன் " டெம்ப்ளேட் எப்படி மாற்றுவது  ? எங்கிருந்து தரவிறக்கம் செய்வது என்று கேட்டிருந்தார். அவருக்காகவும், இது  பற்றி தெரியாத மற்றவர்களுக்காகவும்  இந்தப் பதிவு .

இரண்டு வகையில் டெம்ப்ளேட்கள் நமக்கு கிடைக்கின்றன. ஒன்று ,ப்ளாக்ஸ்பாட் தரும் டெம்ப்ளேட்கள். இதை மாற்றுவது பற்றி அனைவருக்கும் தெரியும் என்று எண்ணுகிறேன். இன்னொன்று மற்ற தளங்களில் வலைப்பூக்களுக்கு என்று கிடைக்கும் டெம்ப்ளேட்கள். இத்தகைய டெம்ப்ளேட்கள் எப்படி நம் வலைப்பூக்களில் எப்படி கொண்டுவருவது என்றுப் பார்ப்போம்.

கீழ்க் கண்ட தளங்கள் நமக்கு பலவித டெம்ப்ளேட்களை தருகிறது.
http://www.templatesblock.com/
http://www.raytemplates.com/
http://compartidisimo.blogspot.com/

உதாரணத்திற்கு http://www.templatesblock.com/ சென்று ஒரு டெம்ப்ளேட் எப்படி டவுன்லோட் செய்வது என்று முதலில் பார்ப்போம். இந்ததளத்திற்கு  சென்றால் கிட்டத்தட்ட இருபது பக்கங்கள் இருக்கின்ற. உங்களுக்கு எந்த டெம்ப்ளேட் பிடித்து இருக்கிறதோ  அதன் கீழ் உள்ள ரீட் மோர் என்ற பட்டனை அமுக்கினால், டெமோ மற்றும் டவுன்லோட் என்ற இரு ஆப்சன்களை பார்க்கலாம். டெமோ பட்டன் மூலம், அந்த டெம்ப்ளேட் போட்டப்பின் ஒரு வலைத் தளம் எப்படி இருக்கும் என்று நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு டெம்ப்ளேட் தேர்வு செய்தாகிவிட்டது . அதை நீங்கள் உபயோகப் படுத்தவேண்டும் என்றால், முதலில் டவுன்லோட் பட்டனை  கிளிக்  செய்து அந்த டெம்ப்ளேட்டை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இப்பொழுது தரவிறக்கம் செய்த பைல் ஜிப் (ZIP ) செய்யப் பட்டிருக்கும். எனவே, அதை உங்கள் வலைப்பூவில் உபயோகப் படுத்தும் முன் அன்ஜிப்(UNZIP ) செய்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது உங்கள் வலைப்பூவிற்கு சென்று டாஷ்போர்ட் செல்லுங்கள். பிறகு டிசைன் . அதன் பிறகு எடிட் ஹெச் டி எம் எல் செல்லுங்கள். பின் இப்பொழுது நீங்கள் வைத்திருக்கும் டெம்ப்ளேட் பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு டவுன்லோட் புல் டெம்ப்ளேட் என்ற இணைப்பை கிளிக் செய்து உங்கள் கண்ணினியில் வைத்துக் கொள்ளவும்.டெம்ப்ளேட் மாற்றும் பொழுது எதாவது பிரச்சனை என்றால் பழைய டெம்ப்ளேட்டிற்கு மீண்டும் வந்து விடலாம்.

பிறகு, "Upload a template from a file on your hard drive"  இதற்க்கு அருகில் இருக்கும் "browse"  பட்டனை கிளிக் செய்து உங்கள் கணிணியில் தரவிறக்கம் செய்த புதிய டெம்ப்ளேட்டை தேர்வு செய்து கொண்டு,  upload பட்டனை கிளிக் செய்யவும்.

இதற்கு அடுத்த கட்டமாக கீழ்க்கண்ட படத்தில் உள்ளவாறு ஒரு ஸ்க்ரீன் வரும். இப்பொழுது நீங்கள் வைத்துள்ள விட்ஜெட்ஸ் வேண்டுமா இல்லை வேண்டாமா என்று கேட்கும். இங்கு "keep widgets" என்ற பட்டனை சொடுக்கினால் போடும். உங்கள் வலைப்பூ புதிய டெம்ப்ளேட்டில் காட்சியளிக்கும்.

டெம்ப்ளேட் மாற்றியப் பிறகு நீங்கள் எந்த எந்த திரட்டியின் ஓட்டுப் பெட்டிகளை வைத்து இருந்தீர்களோ அவற்றின் நிரல்களை மீண்டும் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் மீண்டும் ஓட்டுப் பெட்டி வரும்.

உங்களுக்குப் புதிய டெம்ப்ளேட் பிடிக்கவில்லை மீண்டும் பழைய டெம்ப்ளேட் வேண்டும் என்றால், மேலே சொன்ன அதே வழிகளைப் பின்பற்றி பழைய டெம்ப்ளேட்டிற்கு சென்று விடலாம்.

அன்புடன் எல்கே

38 கருத்துகள்:

வெறும்பய சொன்னது…

www.allblogtools.com

entra thalaththilum thevaiyaana visayankal irukkintrana..

dheva சொன்னது…

தெரியாதவர்களுக்கும், டெம்ளட் மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் ஒரு கையேடு ...!

எஸ்.கே சொன்னது…

மிகவும் பயனுள்ள தகவல்! நிறைய பேருக்கு பயன்படும்!

ப.செல்வக்குமார் சொன்னது…

நல்லா இருக்கு அண்ணா ., பயனுள்ள தகவல் .! நான் template மாற்ற நினைச்சா பயன்படுதிகிறேன் ..!

philosophy prabhakaran சொன்னது…

டெம்ப்ளேட்ஸ் பதிவிறக்கம் செய்ய நீங்கள் கொடுத்துள்ள மூன்று தளங்களும் அருமை... நான் வழக்கமாக கூகிளில் "FREE BLOGGER TEMPLATE DOWNLOAD" என்று டைப்படித்து தேடுவேன்... அப்போது இதுபோன்ற சிறப்பான டெம்ப்ளேட்கள் கிடைத்ததில்லை...

nis சொன்னது…

எப்படி Template மாற்றுவது என்பதை அருமையாக கூறி உள்ளீர்கள். புதிதாக Blog ஆரம்பிப்பவர்களிற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். super post

ஹரிஸ் சொன்னது…

பயனுள்ள பதிவு..நன்றி

Gayathri சொன்னது…

நல்ல தகவல், புதிதாய் வரும் பதிவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் , நிறைய இதுபோல் எழுதவும்

Jaleela Kamal சொன்னது…

நல்ல விளக்கம், வாழ்த்துக்கள்

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

நல்ல தகவல்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உபயோகமான நல்ல தகவல்கள். நான் பெரும்பாலும் blogger தளத்தில் உள்ளவை மட்டுமே பயன்படுத்துகிறேன். அடுத்த முறை மாற்றும்போது பயன்படும் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

asiya omar சொன்னது…

உபயோகமான பகிர்வு.நன்றி எல்.கே.

சே.குமார் சொன்னது…

மிகவும் பயனுள்ள தகவல்!

கோவை2தில்லி சொன்னது…

பயனுள்ள தகவலுக்கு நன்றி.

komu சொன்னது…

மிகவும் உபயோகமான தகவல். நன்றி.

வழிப்போக்கன் - யோகேஷ் சொன்னது…

பயனுள்ள பதிவு.....

தெய்வசுகந்தி சொன்னது…

நல்ல தகவல்!!

Porkodi (பொற்கொடி) சொன்னது…

kadavule, naa padika vendiya posts ekachakama irukke!!!!! :-O

S.Menaga சொன்னது…

thxs for sharing!!

S.Menaga சொன்னது…

//இப்பொழுது தரவிறக்கம் செய்த பைல் ஜிப் (ZIP ) செய்யப் பட்டிருக்கும். எனவே, அதை உங்கள் வலைப்பூவில் உபயோகப் படுத்தும் முன் அன்ஜிப்(UNZIP ) செய்துக் கொள்ளுங்கள்// இது புரியவில்லையே,எப்படி UNZIP செய்வது?

LK சொன்னது…

@ஜெயந்த்
நன்றி

@தேவா

நன்றி பாஸ்

LK சொன்னது…

@எஸ் கே

நன்றி


@செல்வா
நன்றி தம்பி

LK சொன்னது…

@பிரபாகரன்

உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு

LK சொன்னது…

@கங்கா
நன்றி


@ஹரிஸ்
நன்றி

@காயத்ரி

நன்றி .கண்டிப்பா எழுதறேன்

LK சொன்னது…

@ஜலீலா
நன்றி


@Starjan ( ஸ்டார்ஜன் )
நன்றி

LK சொன்னது…

@வெங்கட்
நானும் அப்படிதான் இருந்தேன். சமீபத்தில் இதை தெரிந்து கொண்டேன். எனவே இந்த இடுகை

LK சொன்னது…

@ஆசியா
நன்றி

@குமார்
நன்றி

@கோவை
நன்றி


@கோமு
நன்றி

LK சொன்னது…

@வழிப்போக்கன்

நன்றிங்க


@சுகந்தி
நன்றி

LK சொன்னது…

@பொற்கொடி

ஆடிக்கு ஒருமுறை இங்க வந்த இப்படிதான்

LK சொன்னது…

@மேனகா

நீங்கள் டவுன்லோட் செய்யும் டெம்ப்ளேட் zip file ஆக இருக்கும். அதை right click பண்ணா extract here ஆப்ஷன் வரும். அதை கிளிக் பண்ணுங்க. இப்ப அன் ஜிப் ஆகும்

vanathy சொன்னது…

thanks for sharing, Bro.

ஜோதிஜி சொன்னது…

ரொம்ப தெளிவாகொடுத்து இருக்கீங்க. முயற்சிக்கின்றேன்.

GEETHA ACHAL சொன்னது…

Thanks for sharing...

மனோ சாமிநாதன் சொன்னது…

உப‌யோகமான தகவல்கள்.
நல்ல பகிர்வு.
இனிய பாராட்டுக்கள்!!

விக்கி உலகம் சொன்னது…

நன்றி

Balaji saravana சொன்னது…

நன்றி LK!

S.Menaga சொன்னது…

thxs LK!! now i change my template...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

பயனுள்ள கைடு