தேடலை பற்றி எழுதிக் கொண்டிருந்தபொழுது குருவின் முக்கியத்துவத்தை சிலர் கேட்டிருந்தனர். அதே சமயத்தில் எதேச்சையாக திரு பாலகுமாரன் எழுதிய ...
தேடலை பற்றி எழுதிக் கொண்டிருந்தபொழுது குருவின் முக்கியத்துவத்தை சிலர் கேட்டிருந்தனர். அதே சமயத்தில் எதேச்சையாக திரு பாலகுமாரன் எழுதிய "காலடித் தாமரை " என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அந்தப் புத்தகம் ஜகத்குரு ஆதி சங்கரர் அவர்களை பற்றிய புத்தகம்.
பலமுறை படித்திருந்தாலும் , பாலகுமாரன் எழுத்துகளும் அவர் சொல்லும் முறையும் கொஞ்சம் மாற்பட்டு இருந்தன மற்றவர்களிடம் இருந்து. ஒரு சில இடங்கள் பலமுறை படித்தப் பின்தான் புரிந்தது.
அதை படித்து முடித்தப் பின், ஆதி சங்கரரை பற்றியும் அவர் தனது குறுகிய வாழ்நாளில் செய்த சாதனைகளை பற்றியும் எழுத வேண்டும் என்று ஒரு வாரமாக மனதில் ஒரு ஆசை. ஒரு பக்கம் பயம் இருந்தாலும் ,மறு பக்கம் எப்படியும் எழுதிவிடலாம் என்று ஒரு நம்பிக்கை. வாரம் இரண்டு பதிவுகளில் ,ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிகிழமைகளில் இந்தத் தொடர் வரும்.
இந்தப் புண்ணிய பூமியில் எத்தனையோ மகான்கள் பற்பல காலக் கட்டங்களில் அவதரித்துள்ளனர். அப்படி அவதரித்தவர்களில் , சாட்ஷாத் அந்த பரம்பொருள் உமா மகேஸ்வரனின் அவதாரமாகவே கருதப்படுவர் ஆதி சங்கரர். கடவுளின் தேசமாகக் கருதப் படும் கேரளாவிலே காலடி என்னும் சிறு கிராமத்திலே பிறந்து இந்த தேசம் எல்லாம், பிரயாணித்து , ஹிந்து மதத்தின் பெருமைகளை பரப்பி, அன்றைய காலகட்டத்திலே பலவித மூடப் பழக்கங்களுக்கு மக்களை அதில் இருந்து விடுவித்து ஆறு வித பக்தி மார்க்கங்களை நிறுவினார். அவை கணாபத்யம்(கணபதி வழிபாடு) சைவம் ,வைணவம், சாக்தம் (ஷக்தி வழிபாடு),கௌமாரம்(முருகன் வழிபாடு), சௌரம்(சூரியன் வழிபாடு ).
இவர் அத்வைத சித்தாந்தை நிலை நிறுத்தி, வேறு மார்கத்தில் இருந்த பலரையும் வாதத்தால் வென்று அத்வைத கொள்கைகளை பரப்பினார். இது மட்டுமில்லாது பல்வேறு சுலோகங்களையும் இயற்றி உள்ளார். இவை அத்தனையும் செய்து இவர் சமாதி அடைந்த பொழுது இவருக்கு வயது வெறும் முப்பத்தி இரண்டு தான்.
இனி வரும் பகுதிகளில் ,அவரது வாழ்க்கை வரலாற்றையும் அவரது சித்தாந்தமான அத்வைதத்தை பற்றியும் பார்ப்போம்.
இந்தத் தொடருக்கு நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன் எல்கே
50 கருத்துகள்
அருமையான பகிர்வு.
Lk... எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... எனக்கு கொஞ்சமும் ஈடுபாடும் உடன்பாடும் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி எழுத இருக்கிறீர்கள்... இன்னும் சில வாரங்களுக்கு நான் உங்க கடைப்பக்கம் வருவது கடினம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்... தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... மன்னிக்கவும்...
@பிரபாகரன்
வெளிப்படையாக பேசியதற்கு நன்றி நண்பா.. இது எனது ஆத்மா திருப்திக்காக எழுத ஆரம்பித்துள்ள தொடர். இத்தகைய நிகழ்வுகளை எதிர்ப்பார்த்தே ஆரமிபிதுள்ளேன் இது வாரம் இருமுறைதான் வரும் ...
சித்தாந்தம் என்ற வகையிலே, அத்வைதத்துக்கு முழு மதிப்பு உண்டு எனக்கு. ஆத்திக, நாத்திக வாதங்கள் இரண்டுக்குமே, விடை தருவது அத்வைதம் என்று நம்புகிறேன். கடவுள் என்று ஆதிசங்கரரைப் பார்க்காமல் (தத் த்வம் அஸி என்றால், அவருள் நிறைந்த தத் என்னுள்ளும் இருப்பதால்), நம்மைப் போன்ற மனிதராய்ப் பார்த்து, அவருடைய நிறைகுறைகளை எழுதுங்களேன். இல்லை என்றாலும் பரவாயில்லை, என் ஆதரவு உண்டு!
@கெக்கே பிக்குணி
முதல் வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்லுவது சரிதான். நாத்திக வாதங்களையும் எதிர்த்துதான் அத்வைத சித்தாந்தத்தை நிறுவினார். என்னால் முயன்ற வரையில் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயலுகிறேன்
நல்ல முயற்சி LK.
சிறப்பாக எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
மிக விரிவாகவும் எழுதுங்கள் LK.. :)
present sir!
அருமையான பகிர்வு.
happily waiting for the post...
வாழ்த்துகள் எல்கே, நான் எழுதறதை விடவும், நீங்க எழுதுவதினால் உங்க சக வயதுக்காரர்களுக்குப் புரியவேண்டிய விதத்தில் கொடுப்பீங்க. முன்னுரைனு தானே ஆரம்பிச்சிருக்கீங்க?? நாளைக்கு விநாயகர் வணக்கத்தோட ஆரம்பிக்கவும். தொடர் நல்லா வர வாழ்த்துகள்.
அப்புறம் நேயர் விருப்பத்தில் பிலாசபி பிரபாகரனின் கருத்தைப் பார்க்க ஆச்சரியமாயும், கெபியின் கேள்வியைப் பார்த்து அதிசயமாயும் இருக்கு. ம்ம்ம்ம்ம்?? ஆதிசங்கரர் கிட்டே குறை, நிறைகளை அலசச் சொல்லி இருக்காங்களே?? குறைனு எதைச் சொல்ல முடியும்?? எட்டு வயசிலே அம்மாவை விட்டுத் துறவறம் மேற்கொண்டதையா?? அல்லது சரசவாணியோடு அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் கூடு விட்டுக் கூடு பாய்ந்ததிலா??
நம்மைப் போன்ற மனிதராய்த் தான் இருந்தார். என்ன?? பிறவி ஞாநி! எதுக்கும் Original Sankaracharya by Eastern Publications download பண்ணிக்குங்க. அவர் இருந்த காலத்தில் உள்ள அரசியல், மத, மக்கள் வாழ்வுமுறை, சூழ்நிலைகள் புரியும். இன்னும் நிறையப் புத்தகம் இருக்கு படிக்க. வெறும் பாலகுமாரன் மட்டுமே போதாது.
பி.கு. நான் பாலகுமாரனைப் படிக்கிறதை நிறுத்திப் பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது!:)))))))) பின்னூட்டம் ரொம்பப் பெரிசா இருந்தால் வெளியிட வேண்டாம். தனிப்பட்ட கருத்தாய் இருக்கட்டும்.
to follow
மிக நல்ல விஷயம். இன்னும் விரிவாக
எழுதவும். சங்கரரைப்பற்றி முழுவதுமாகத்தெரிந்துகொள்ள உங்கள் பதிவு உபயோகமாக இருக்கும். நன்றி
கார்த்திக், உங்கள் நல்முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அறிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்..!!
முயற்சிக்கு வாழ்த்துகள்.
மேலும் பல தகவல்கள் அறிய ஆவலாயுள்ளேன்.
மகா பெரியவரின் தெய்வத்தின் குரலில் நிறைய செய்திகள் இருக்கும் எல்.கே.
பாலகுமாரன் நல்ல ஆரம்பம் மட்டுமே. பிறவிப் பெருங்கடல் நீந்தி கரை சேர்வதற்கு சன்மார்க்கங்களை தோற்றுவித்தவர் ஆதி சங்கர பகவத்பாதாள். நிறைய சம்பவங்கள் இருக்கிறது. கோர்வையாக முயற்சிக்கவும்.
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!!!
//இந்தத் தொடருக்கு நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.//
நிச்சயமாக.
எல்லோரும் படிக்க வேண்டிய தொடர்.இந்த நல்ல முயற்சிக்கு என் வாழ்த்துகள்.
அருமையான பகிர்வு.
விரிவாக எழுதுங்கள்....
நல்ல பதிவுங்க. தொடருங்கள் புதிய தகவல்களுடன். நன்றி.
நல்ல முயறசி எல் கே... புரியும்படி தருவீர்கள் என நினைக்கிறேன்
அருமையான பகிர்வு.
Really very good. I'm also trying to know about Sri Aathisankarar luckly you have published ..... thank you very much.... i await for next post about Sri Aathisankarar. By P.Dhanagopal.
நல்ல தொடர். வாழ்த்துக்கள்
ஆதி சங்கரர்...அத்வைதம்....
பாலகுமாரன் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறூ எழுதவில்லை. காலடித்தாமரையிலும், கூடு என்ற புத்தகத்திலும் வாழ்வின் சில பாகங்களை மட்டும் கதையாக்கி கொடுத்திருப்பார். ஒருவேளை முழுமையாக எழுதியிருந்தால் அதுவும் அற்புதமாகத்தான் வரும்....
ஆதி சங்கரர் என்னும் கடல் பற்றி.. வரப்போகும் நாட்களில் நீங்கள் பகிரப்போகும் செய்திகள் பற்றி வாசிக்க ஆவலாயுள்ளேன்...!
அருமையான முயற்சி, வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
நல்ல முயற்சி... பாலகுமாரன் அவர்களின் அந்த புத்தகத்தை படிக்க கிடைத்ததே பெரும்பாக்கியம்..
தொடருங்கள்..சமிபத்தில் மாங்காடு சென்றபொழுது அவர் நிறுவிய பூஜை செய்த சக்கிரங்களை பார்த்த பொழுது மெய் சிலிர்த்தது..
சிறப்பாக வடிக்க வாழ்த்துக்கள்...
`` குரு சரணாம்புஜ நிர்பர பக்தா....``
@பாலாஜி
நன்றி பாலாஜி. இயன்றவரையில் உங்கள் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவேன்
@தெய்வ சுகந்தி
நன்றி
@மகாராஜன்
நன்றி
@சிவா
நன்றி சிவா
@கீதா மாமி
நன்றி. எனக்கு பிரபாகரனின் கருத்துக்களில் ஆச்சர்யம் இல்லை. பாலகுமாரன் புத்தகம் இதை எழுத தூண்டியது
@கோமு
நன்றி
@வெங்கட்
நன்றி
@வித்யா
நன்றி
@ஆர் வீ எஸ்
ஆமாம் நண்பா. அந்தப் புத்தகமும் இருக்கிறது,.,.கண்டிப்பாக இயன்றவரையில் விரிவாக எழுதுகிறேன்
@சென்னை பித்தன்
நன்றி சார்
@குமார்
நன்றி
@நித்திலம்
நன்றி
@அருண்
கண்டிப்பா அருண். எளிமையாக சொல்ல விரும்புகிறேன்
@ச்டார்ஜன்
நன்றி
@தனபால்
முதல் வருகைக்கு நன்றி சார் . இயன்றவரையில் அவரது வாழ்க்கையை விரிவாக எழுதுகிறேன்
@கீதா சந்தானம்
நன்றி
@தேவா
உண்மைதான். அது பெருங்கடல் . முடிந்தவரை பகிர்கிறேன் பாஸ்
@தளபதி
நன்றி
@பத்மநாபன்
நன்றி. நலமா இருக்கீர்களா
ஆதிசங்கரரை பற்றி தெரிந்து கொள்ள அருமையான வைப்பு, சுப்பர் , தொடர்ந்து எழுதுங்கள் கண்டிப்பா படிக்கிறேன்
தொடருங்கள். நல்ல பகிர்வு.
அருமையான முயற்சி.. தொடர்ந்து எழுதுங்க கார்த்திக் :))
முன்னுரையே அருமையாக அமைந்திருக்கு, தொடர்ந்து எழுதுங்கள் கார்த்திக்!
நல்ல பகிர்வு தொடருங்கள் நண்பரே
நான் வந்து பிரசென்ட் மட்டும் சொல்லிட்டுப் போயிடறேங்க.. :-)
நல்ல பகிர்வு,தொடருங்கள்..
அருமையான பகிர்வு..... LK
தொடரட்டும் உங்கள் பகிர்வு ....
http://advaitham.blogspot.com/
எல்கே, எழுதுங்கள். நான் முடியும் போது படிக்கிறேன். வாழ்வில் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்களால் சிலவற்றின் மீது முழுதாக நம்பிக்கை இன்னும் வரவில்லை. சில நேரம் உங்கள் பதிவுகள் மனமாற்றத்தினை உண்டு பண்ணலாம் என்று நினைக்கிறேன்.
நல்லா இருக்கிறது, நிச்சயமாக ஆதரவு உண்டு
//இந்தத் தொடருக்கு நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.//
********
கண்டிப்பாக என் ஆதரவு உண்டு... உங்கள் எழுத்தில் ஜகத்குரு பற்றி படிக்க ஆவலுடன் உள்ளேன்...
தேவா குறிப்பிட்டு கூறிய, எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய “கூடு” என்ற புத்தகத்தில் வாழ்வியல் பற்றிய ஒரு சில விஷயங்களை மட்டுமே எழுதியிருப்பார், கூடு விட்டு கூடு பாயும் விஷயங்கள் உட்பட....
waiting to read boss! best of luck!
Nice start mate...Looking forward to more....
கருத்துரையிடுக