அக்டோபர் 02, 2010

சொந்த மண் VII

  இது வரை சேலம் நகரின் சில பகுதிகளையும் அங்கு உள்ள கோவில்கள், கல்வி நிலையங்களையும் பார்த்தோம். நகரின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விதமான தொழில்கள் மேற்கொள்ளப் படுகின்றன.


செவ்வாய்ப்பேட்டை பகுதி பொதுவாக வியாபரம் நடக்கும் பகுதி. இங்கு பெரிய அலுவலகமோ, நிறுவனமோ இருக்காது. எல்லாம் கடைகள்தான். பரம்பரை பரம்பரையாக நடத்தப் பட்டு வருபவை.இந்தப் பகுதியில்தான் எங்களது கடையும் உள்ளது. செவ்வாய்ப்பேட்டையில் மூன்று தலைமுறையாக சிறிய ஹோட்டல் வைத்துள்ளோம். எனது தாத்தாவின் மாமா, பிறகு எனது தாத்தா , இப்பொழுது எனது தந்தை. அதிகப் பட்சம் இன்னும் ஒரு வருடம் பிறகு அதை நிறுத்த முடிவெடுத்துள்ளோம்.

இதைப் போல் அம்மாப்பேட்டை,தில்லை நகர், குகை  போன்றப் பகுதிகள் கைத்தறி நெசவாளர்கள் நிறைந்தப் பகுதி. ஒரு காலத்தில் தில்லை நகருக்கு அதிகாலையில் சென்றால், வீதி முழுக்க கைத்தறி நெசவாளர்கள் அந்த நூற்களை காய வைத்துக் கொண்டும் அது சம்பந்தமான பிற வேலைகளில்  ஈடுபட்டு இருப்பர்.  விசைத் தறிகள் வந்தப் பிறகு இவர்களது வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளது. முன்பு கல்யாணத்திற்கு வேண்டிய வேட்டிகள், புடவைகள் இங்கு உள்ள நெசவாளர்களிடம் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்து செய்யப் படும். இப்பொழுதோ விவாஹாவும், சாமுத்ரிகாவும் இவர்களது வாழ்வை பாழ்படுத்திவிட்டன.

சேலத்தில், சௌராஷ்டிரா மக்கள் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களது   முக்கியத் தொழில் வெள்ளி மற்றும் பட்டு நூல். அதுமட்டும் இல்லாமல், கந்து வட்டிக்கு  காசு கொடுக்கும் தொழிலில் இருக்கின்றனர் இவர்கள்.

மற்றப் பகுதிகளில் பொதுவாக வேலைக்கு செல்பவர்களே அதிகம். அதனால் அதை பற்றி நாம் அதிகம் கவனிக்க வேண்டியது இல்லை.இனி வரும் பகுதிகளில், சேலத்தின் புகழ் பெற்ற சேலம் ஸ்டீல் பிளான்ட், ஏற்காடு பகுதிகளுக்கு செல்வோம்.


அன்புடன் எல்கே

21 கருத்துகள்:

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

ஏற்காடு செல்ல காத்திருக்கிறேன்!

ரிஷபன் சொன்னது…

சேலம் அம்மாப்பேட்டையில்தான் என் இனிய நண்பர் இருந்தார். பழைய நினைவுகளில் இப்போது நான்.

dheva சொன்னது…

சேலத்தை பற்றி நுணுக்கமான தகவல்கள் அறியப் பெறுகிறோம். சேலத்துக்கு வரும் முன் உங்க போஸ்ட் படிச்சுட்டு வரலாம் போல....

நல்ல விசங்களின் பகிர்வுக்கு காத்திருக்கிறேன்.. !

அமைதிச்சாரல் சொன்னது…

அந்தப்படம் ஜில்ஜில் ஏற்காடு ஏரிதானே..

LK சொன்னது…

@சை. கோ. ப

சீக்கிரம் போலாம்

LK சொன்னது…

@ரிஷபன்

அங்கே எந்தப் பகுதியில் நண்பரே

LK சொன்னது…

@தேவா

இவ்வளவு சீக்கிரம் உங்க கமெண்ட்டா ??? நன்றி பாஸ்

LK சொன்னது…

@அமைதி சாரல்

அதே அதே

கீதா சாம்பசிவம் சொன்னது…

புது விஷயங்கள். ஏற்காடு வேறே, ஏலகிரி வேறே தானே?? எனக்குக் கொஞ்சம் இரண்டும் குழம்பும், ஏலகிரி இங்கே வேலூர் பக்கத்திலேனு நினைக்கிறேன். :))))

அது சரி, திகில்க் கதை என்ன ஆச்சு?? முடிச்சாச்சா???

வெறும்பய சொன்னது…

அருமையா சொல்லியிருக்கீங்க சேலத்தை பற்றி...

Kousalya சொன்னது…

நல்ல தகவல்கள்...படங்களும் அருமை. தொடருங்கள்....!

ஹேமா சொன்னது…

படங்கள் அழகோஅழகு கார்த்திக்.

LK சொன்னது…

@கீதா மாமி

இரண்டும் வேற வேற. ஏலகிரி வேலூர் அருகே. ஏற்காடு சேலம் அருகே..

LK சொன்னது…

@கீதா
எழுதவே இல்ல. சீக்கிரம் எழுதறேன்

LK சொன்னது…

@வெறும்பய

நன்றி

LK சொன்னது…

@கௌசல்யா

:))

LK சொன்னது…

@ஹேமா

நன்றி

ரிஷபன் சொன்னது…

அந்த நண்பர் இப்போது உயிருடன் இல்லை. அகால மரணம். அவரது குடும்பம் இப்போது எங்கே என்று கூடத் தெரியவில்லை. தொடர்பு விட்டுப் போனது.

denim சொன்னது…

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

அப்பாவி தங்கமணி சொன்னது…

Never heard of this temple..thanks for sharing. Nice pictures too

மனசாட்சியே நண்பன் சொன்னது…

நண்பரே நானும் என்னவரும் திருமணம் முடித்து சென்ற முதல் இடம் சேலம் மற்றும் ஏற்காடு மட்டுமே. இன்று வியட்நாமில் இருந்தாலும் எப்போதுமே இனிய நினைவு அது.

நன்றி
வித்யா