Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

முதல் முறையாக

என் பதிவுலக வரலாற்றிலே முதல் முறையாக ஒரு படத்தைப் பற்றி எழுதினேன் என்றால் அது எந்திரன்  தான். உள்ளூர ஒரு பயம் இருந்து கொண்டுதான் இருந்தத...

என் பதிவுலக வரலாற்றிலே முதல் முறையாக ஒரு படத்தைப் பற்றி எழுதினேன் என்றால் அது எந்திரன்  தான்.உள்ளூர ஒரு பயம் இருந்து கொண்டுதான் இருந்தது. எங்கே அவர்கள் மெள்ள வசதியாக படம் தோற்று விடுமோ என்று ? அன்று புறக்கணிப்போம் என்று கூவியவர்களின் வாயை அடைப்பது போல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது ...

படத்தின் கதையை எல்லோரும் அக்கு வேறு ஆணி வேற பிரிச்சி மேஞ்சிட்டாங்க  . இதுல நான் இன்னும் தனியா என்ன சொல்ல இருக்கு ?? படத்தில் அவர்கள் குறை என்று சொல்வது அந்த பிரசவக் காட்சி ,கட்டிடம் தீப்பிடித்து எரியும் இடம் போன்றவை. தீப்பிடிக்கும் காட்சியில் அப்பட்டமாக கிராபிக்ஸ் என்று தெரிகிறது. அதை கொஞ்சம் சரி செய்து இருக்கலாம். சரி விடுங்க. எதாவது ஒரு குறை இருக்கட்டும்.

அடுத்து படத்தின் இரண்டாவது பகுதி கொஞ்சம் போர் அடிக்கிறது, குழந்தைகள் படம் போல உள்ளது என்று எனது நண்பர்கள் சிலர் முகப் புத்தகத்தில் சொல்லி இருந்தனர். இதே கிராபிக்ஸ் வைத்து படம் முழுதும் கிராபிக்ஸ் மட்டுமே இருக்கும் ஆங்கில படங்களை ஆகா ஓஹோ என்று புகழும் நீங்கள் தமிழில் அத்தகைய முயற்சிகளை ஏன் வரவேற்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள் ???

 அதேப் போல் இந்தப் படத்தில் மறைந்து இருக்கும் ஒரு செய்தி "படைத்தல் கடவுளின்  வேலை. அதில் மனிதன் தலையிட்டால் விபரீதமே நிகழும் ". இதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.


எனக்குத் தெரிந்து படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் தொய்வு அடைவதாகத் தெரியவில்லை. அதுவும் இரண்டாம் பகுதிதான் படத்தின் முக்கியப் பகுதி. சிட்டி வில்லனாக மாறி வரும் இடங்களில் பழைய தலைவரை காண முடிகிறது. க்ளைமாக்ஸ் சண்டை அதகளம் பண்ணி இருக்கிறார்கள்.  கண்டிப்பாக எல்லோரும் பார்க்கவேண்டிய படம் இது dot தலைவரின் படத்திற்கு சென்று சிறிது சோகத்துடன் திரும்பியது இதுவே முதல் முறை. காரணம்  இறுதிக் காட்சி..பார்க்காதவர்கள் சென்று பாருங்கள் புரியும்.

குடும்பத்துடன் நேற்று காசி தியேட்டரில் மதிய காட்சி பார்த்தேன். திவ்யா ஆரம்பம் முதல் இறுதி வரை மிக ரசித்துப் பார்த்தாள். காதல் அணுக்கள் பாட்டு மட்டும் பிடிக்கவில்லை, அப்பொழுது கொஞ்சம் கலாட்டா இங்கும் அங்கும் இடம் மாறி. மற்றப் படி ஆரம்பம் முதல் இறுதி வரை அவள் மிகவும் ரசித்துப் பார்த்தாள்.

படத்தின் ஆரம்பக் காட்சியில் ரஜினி வர , உடனே திவ்யா "சூப்பர் ஸ்டார் " என ஒரு சத்தம் போட, எனது தங்கமணியின் அருகில் அமர்ந்த இருந்த கல்லூரி மாணவிகள் ஆச்சர்யத்துடன் திவ்யாவை பார்த்தனர்.

தலைவரின் அடுத்த தலைமுறை ரசிகர்கள் வந்துவிட்டனர்.


அன்புடன் எல்கே

43 கருத்துகள்

கவிதா | Kavitha சொன்னது…

ஏங்க திவ்யா என்ன நேத்திக்கு பிறந்த குழந்தை கூட தலைவர் படம் பார்த்தால் விசில் அடிக்குங்க... இதை எல்லாம் பார்த்தா ஆச்சரியப்படறது..???? ம்ம்ம்?!

எத்தனை ஹூரோ வந்தாலும் தலைவர் இன்னும் நிக்கறாரு.. 60 வயதிலும்... :) !!

நாங்க படம் பார்க்க நாளாகும், ஆனாலும் இப்படி விமர்சனங்கள் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு....

தலைவர் சார்ப்பா உங்களுக்கு ஒரு விசில்ல்.ல்.. உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ! :) (எனக்கு இன்னும் சரியா விசில் அடிக்க வரால .பாத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.) :)

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

இன்றுதான் பாக்கப்போறேன்!!

Asiya Omar சொன்னது…

நீங்களும் பார்த்தாச்சா?பகிர்வு அருமை.

எல் கே சொன்னது…

@கவிதா

அது உண்மைதான்... இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும். அவர்தான் மாஸ்.

முதல் முறையா இரண்டாவது நாளே படம் பார்த்து இருக்கேன்.

விசிலுக்கு நன்றி

எல் கே சொன்னது…

@சை.கோ.ப

பார்த்தப்புறம் சொல்லுங்க

எல் கே சொன்னது…

@ஆசியா
பார்த்தாச்சு, அப்புறம் மறுபடியும் ஒரு முறை போவேன்.. நன்றி

kousalya raj சொன்னது…

வாழ்த்துக்கள். விமர்சனம் நல்லா இருக்கிறது கார்த்திக்.

எல் கே சொன்னது…

@கௌசல்யா

விமர்சனமா?? அதெல்லாம் இல்லை.. தலைவர் ரசிகனா என்னுடைய கருத்துக்கள் அவ்வளவே

Thenammai Lakshmanan சொன்னது…

தலைவரின் அடுத்த தலைமுறை ரசிகர்கள் வந்துவிட்டனர்//

ஹஹஹா அருமை..இனும் ரஜனியை ரசிக்க முடிகிறது பாருங்கள்.. அதுதான் அருமை..

விமர்சனம் சூப்பெர்.. நடுநிலையா இருக்கு..

Thenammai Lakshmanan சொன்னது…

தலைவரின் அடுத்த தலைமுறை ரசிகர்கள் வந்துவிட்டனர்//

விமர்சனம் அருமை,, கார்த்திக்

சாந்தி மாரியப்பன் சொன்னது…

சூப்பர் படம்.. நான் இந்திவெர்ஷன் பார்த்தேன். வாய்ப்புக்கிடைச்சா தமிழிலும் பார்க்கணும்..

ஸ்ரீராம். சொன்னது…

வில்லன் ரஜினி கேரக்டர் சிட்டியைத்தான் எல்லோரும் ரசிப்பதாகச் சொல்கிறார்கள். கத்தற கூட்டம்லாம் போகட்டும் மெல்லப் பார்க்கலாம்.!!

எல் கே சொன்னது…

@தேனம்மை
இன்னும் சில வருடங்கள் ஆனாலும் அவரை ரசிக்கலாம்

எல் கே சொன்னது…

@சாரல்

கண்டிப்பா பாருங்கள்.

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

அண்ணா உண்மைதான். சிட்டிதான் அனைவரையும் கவர்ந்துள்ளது...

அருண் பிரசாத் சொன்னது…

உங்கள் விமர்சனம்தான் என் விமர்சனமும்... இரண்டாவது பாதிதான் கலக்கல்... அதுவும் வில்லன் ரஜினி ஆக்டிங் சூப்பர்

BalajiVenkat சொன்னது…

I also saw the movie yesterday..

I watched Rajini's movie in theater after so long years, i saw his movie Arunachalam in the theater at last.

it's nice to watch Rajini acting in the movie... upto its not a Rajini movie and its Shankar's movie...

Unknown சொன்னது…

"நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...

நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின்
இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு,
இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத்
தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை..

உங்கள் கவிதைகளை bharathphysics2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

எங்கள் நண்பரின் கவிதையாய் bharathbharathi.blogspot.com வலைப்பூவில் வெளியிடுகிறோம்;
அல்லது

உங்கள் கவிதைகளை,உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுவிட்டுஎங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வந்துப் பார்க்கிறோம் யாரோவாக....

முடியுமா என்பதுதான் கேள்வி. எங்கே வெளியிடுவது என்பதல்ல...
Start MUSIC.......

Gayathri சொன்னது…

சமயா இருக்கு ப்ரோ படம் நேத்துதான் பார்த்தேன்..உனுறு வாட்டி பாக்கபோறேன் சூப்பர் படம்

ஹேமா சொன்னது…

கார்த்திக்...அட....ரஜனி படமா எனக்குப் பிடிக்காதுன்னு சொன்னாலும் அவர் படம் வந்ததும் ஒரு பரபரப்பு.
இதுதான் அவரது சக்தி !

எல் கே சொன்னது…

@அருண்
உண்மைதான். பலர் தலைவரின் வழக்கமான ஸ்டைல் எதிர்பார்த்து ஏமாறுகிறார்கள். திறந்த மனதுடன் சென்றால் நல்ல விருந்து

எல் கே சொன்னது…

@பாலாஜி

உண்மை இது ஷங்கரின் படம்.

எல் கே சொன்னது…

@ஹேமா

சரியா சொன்னீங்க. ரஜினி பிடிக்காது என்று சொல்வது ஒருவித பேசன்

எல் கே சொன்னது…

@பாரத் பாரதி

கண்டிப்பாக முயற்சிக்கிறேன்

எல் கே சொன்னது…

@காயத்ரி

கண்டிப்பா நானும் இன்னொருமுறை பார்ப்பேன்

தெய்வசுகந்தி சொன்னது…

கரெக்ட்தாங்க கார்த்திக். இது வழக்கமான ரஜினி படம் அல்ல,சங்கர் படம். நானும் நேற்றுதான் பார்த்தேன். என் பையனுக்கும் பிடிச்சது.

சுசி சொன்னது…

//தலைவரின் அடுத்த தலைமுறை ரசிகர்கள் வந்துவிட்டனர். //

திவ்யா குட்டி கியூட்..

தலைவருக்கு சல்யூட்..

எல் கே சொன்னது…

@தெய்வசுகந்தி
பார்த்தாச்ச அருமை.

எல் கே சொன்னது…

@சுசி

நன்றி சுசி

Unknown சொன்னது…

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

மங்குனி அமைச்சர் சொன்னது…

சார் , எந்திரங்கள் எல்லாம் சேர்ந்து பந்து போல் உருள்வது , சுவர் மாதிரி எழுவது, பாம்புபோல் சண்டை இடுவது , பூமியை குடைந்து கொண்டு போவது இவர்ற்றை எல்லாம் நீங்கள் ரசித்தீர்களா ???

வேலைக்கார எல்லா ரோபோக்களும் ரஜினி சாயலில் இருப்பது நன்றாக இருந்ததா ??

எல் கே சொன்னது…

@மங்குனி அமைச்சர்

ரொம்ப நல்ல ரசிச்சேன் சார். என்னை விட என் மகள் ரசித்தாள். அது போதும் எனக்கு

மங்குனி அமைச்சர் சொன்னது…

LK said...

@மங்குனி அமைச்சர்

ரொம்ப நல்ல ரசிச்சேன் சார். என்னை விட என் மகள் ரசித்தாள். அது போதும் எனக்கு////

நானும் அதைதான் சார் சொல்றேன் , குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்

adhvaithan சொன்னது…

mohenjadaro paatu and arima song.. whoa.. placed in very apt situation... konjam kooda thoivae illai.. :):) those two songs helped the movie to go more faster.. it doubled the speed of the movie.. whoa whoa.. :):)

vanathy சொன்னது…

very good, LK. I haven,t seen this movie yet.

அப்பாவி தங்கமணி சொன்னது…

wow...really tempting to see the movie... good post

dheva சொன்னது…

கரும்பு தின்ன கூலியா... தலைவர் படம் பார்த்தது பற்றி படிக்க அலுப்பா?

திவ்யா மட்டும் இல்ல பாஸ் இனி பொறக்க போர புள்ளங்க கூட.. சூப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்டார்னு கத்திகிட்டே பொறக்கும்..........உண்மைதானெ..

படம் பத்தி தப்பா சொன்னவங்க எல்லாம் அந்த கருத்த கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் பண்ணிடுங்க.. டாட்.

அப்போ வர்ட்டா.....!

Geetha Sambasivam சொன்னது…

ஹிஹிஹி, மை டியர் குட்டிச் சாத்தான் படம் தான் சென்னைத் தியேட்டர்களில் கடைசியாப் பார்த்த படம்! அப்புறமாப் படங்களே பார்க்கலை. எப்போவானும் தொலைக்காட்சியில் பார்க்கிறதோடு சரி. படையப்பா படத்தைப் பத்தி யாரோ ஒரு உறவினர் என்னோடு பேசப் போக, நான் திருதிரு! ஹிஹிஹி, படையப்பா பார்க்காத ஜன்மமும் ஒரு ஜன்மமானு அவங்க என்னைக் கேவலமாப் பார்த்ததாய் என் அண்ணா பொண்ணு சொன்னா! :)))))))))))

Unknown சொன்னது…

நான் இன்னும் படம் பார்க்கலை..அதனால பகிர்வுக்கு நன்றி..

தங்கள் பகிர்வை எனது ப்ளாகில் பகிர்ந்துள்ளேன் நன்றி.

Jaleela Kamal சொன்னது…

ம்ம் எல்லோரும் பார்த்தாச்சா, போக நேரம் கிடைக்கல, எல்லோரும் விமர்சனம் போட்டுவத பார்த்தா போகனும் போல் இருக்கு

Mahi சொன்னது…

படம் எனக்கும் பிடிச்சிருந்ததுங்க.நாங்க போன தியேட்டர்லயும் திவ்யா மாதிரி ஆட்கள் அதிகம்.:) ரஜினி என்ட்ரி சீன்ல ஒரே சவுண்டு..கிளி மாஞ்சாரோ பாட்டுல சூப்பர்ஸ்டார் க்ளோஸ்-அப் காட்சிகள்-ல ஒரே விசில்!! :):)

SathyaSridhar சொன்னது…

Hmm,,nalla vimarsanam seithirukeenga.Thalaivar padamna summava eppaumae top thaan. Unga ponnu samartha irukaangalae very good epdi thalaivar kuttiz kooda impress panittaru.

SathyaSridhar சொன்னது…

Hmm,,nalla vimarsanam seithirukeenga.Thalaivar padamna summava eppaumae top thaan. Unga ponnu samartha irukaangalae very good epdi thalaivar kuttiz kooda impress panittaru.