செப்டம்பர் 22, 2010

சொந்த மண் VI


நான் பள்ளி சென்ற பொழுது மிகக் குறைந்த அளவு பள்ளிகளே இருந்தது. இன்றோ தெருவுக்கு ஒரு பள்ளி என்ற அளவில் மாறி விட்டது. அந்த அளவுக்கு கல்வி ஒரு வியாபாரம் ஆகி விட்டது. நான் படித்த வாசவி உயர்நிலைப் பள்ளி இன்று மேல்நிலைப் பள்ளியாகி விட்டது. ஆனால் தரமோ மிகத் தாழ்ந்து விட்டது என்று அங்கிருப்பவர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு நகரத்திலும் புகழ்பெற்ற சிலப் பள்ளிகள் உண்டு. சேலத்தில் அவ்வாறு பழமை வாய்ந்தப் பள்ளிகள் என்றால், மரவனேரி பகுதில் உள்ள பாரதி வித்யாலயா, டவுன் ரயில்வே ஸ்டேசன் ரோட்டில் அமைந்திருக்கும் கோகுல்நாதா பள்ளி , ராமகிருஷ்ணா பள்ளி ஆகியவை பல ஆண்டுகளாக சேலத்தில் இருப்பவை. இதன்பின் வந்தவைகளில் பல, கிருத்துவ மிஷனரிகளால் நடத்தப் படும் க்ளூனி, செயின்ட் பால், செயின்ட் ஜோசப் ,செயின்ட் மேரி பள்ளிகளும் இன்று அதிகம் மக்களால் விரும்பப் படுகிறது. இவை தவிர்த்து, மத்தியப் பாட திட்டத்தை பின்பற்றும் வித்யா மந்திர் பள்ளிகளும் உள்ளது. ஒரு சிலப் பள்ளிகளைத் தவிர்த்து மற்றப் பள்ளிகளில் கொள்ளைதான் அடிக்கப் படுகிறது என்று சொல்லவேண்டுமா என்ன ?? இன்னும் கொடுமை என்னவென்றால் , ஒரு சிலப் பள்ளிகளைத் தவிர்த்து வேறு எதிலும், உடல் கல்விக்கோ, விளையாட்டுகளுக்கோ முக்கியத்துவம் அளிக்கப் படுவதில்லை.

நான் பள்ளி முடித்து கல்லூரி சேர வேண்டிய சமயத்தில் சேலத்தில் இருந்தது நான்கு கலைக் கல்லூரிகள் மட்டுமே. இப்பொழுதோ எனக்குத் தெரிந்து கிட்டதட்ட பத்து கல்லூரிகள் உள்ளன. அனைத்தும் பணத்தை நோக்கமாக கொண்டு துவங்கப் பட்டவையே.

ஒரு காலத்தில் சேலம் அரசுக் கல்லூரியில் வேதியியல் படிக்க இடம் கிடைக்காதாம். அவ்வளவு சிறப்பாக செயல் பட்ட கல்லூரி. இன்றோ அப்பெயரை சொன்னாலே, அங்கு நடைபெறும் சண்டைகளும், அடிதடிகளும் மட்டுமே மக்களுக்கு ஞாபகம் வருகிறது.

கலைக் கல்லூரிகளைப் போலவே , பொறியியல் கல்லூரிகளும் அதிகரித்து விட்டன. முன்பு , அரசுக் கல்லூரியும் வினயாகா மிஷன் கல்லூரியும் மட்டுமே இருந்தது. இன்றைக்கு தேவைக்கு அதிகமாகவே உள்ளது .

என்ன மருத்துவக் கல்லூரி மட்டும் இரண்டோடு நிற்கிறது. அதற்கு மேல் இன்னும் துவங்கவில்லை. அதுவரை சந்தோசம் ..

அடடே ஒண்ணு மறந்து போச்சு. சேலத்தில் ஒரு பல்கலைகழகம் இருக்குங்க .அதற்கு பெயர் பெரியார் பல்கலைக் கழகம். நாங்கதான் அதன் முதல் மாணவர்கள். எதுக்கு ஒண்ணு தனியா துவங்கினாங்கனு இன்னும் புரியலை. மொத்தத்தில் அது வேஸ்ட் ...


அன்புடன் எல்கே

48 கருத்துகள்:

Chitra சொன்னது…

அடடே ஒண்ணு மறந்து போச்சு. சேலத்தில் ஒரு பல்கலைகழகம் இருக்குங்க .அதற்கு பெயர் பெரியார் பல்கலைக் கழகம். நாங்கதான் அதன் முதல் மாணவர்கள். எதுக்கு ஒண்ணு தனியா துவங்கினாங்கனு இன்னும் புரியலை. மொத்தத்தில் அது வேஸ்ட் ...


...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... முதல் செட்னு பாராட்டலாம்னு வந்தேன். அடுத்த வரி வாசிச்சிட்டு, என்ன சொல்ல என்று தெரியலியே.

அமைதிச்சாரல் சொன்னது…

//சேலத்தில் ஒரு பல்கலைகழகம் இருக்குங்க .அதற்கு பெயர் பெரியார் பல்கலைக் கழகம். நாங்கதான் அதன் முதல் மாணவர்கள்.//

அங்கியும் 'மீ த ஃபர்ஸ்ட்டேய்'ன்னு கூவியிருப்பீங்கன்னு பாத்தா 'வட போச்சே'ன்னு சொல்றீங்களேப்பா :-))))

சௌந்தர் சொன்னது…

மொத்தத்தில் அது வேஸ்ட் ...///

எப்படி சொல்றிங்க வேஸ்ட் என்ன காரணம்

Jey சொன்னது…

//அந்த அளவுக்கு கல்வி ஒரு வியாபாரம் ஆகி விட்டது. நான் படித்த வாசவி உயர்நிலைப் பள்ளி இன்று மேல்நிலைப் பள்ளியாகி விட்டது. ஆனால் தரமோ மிகத் தாழ்ந்து விட்டது என்று அங்கிருப்பவர்கள் கூறுகின்றனர்.//

எல்லா கிராமத்திலுள்ள அரசு பள்ளிகளோட நிலைமை இப்ப அப்படிதான் இருக்கு. சம்பளம் ஏற ஏற ஆசிரியர்கள் தரம் குறைகிறதா தெரிய வில்லை.

சௌந்தர் சொன்னது…

சேலத்தில் இருப்பவர்கள் எல்லாம் வாங்க என்ன இவர் இப்படி சொல்றார் நீங்க எல்லாம் என்ன சொல்றிங்க

Sriakila சொன்னது…

//ஒரு காலத்தில் சேலம் அரசுக் கல்லூரியில் வேதியியல் படிக்க இடம் கிடைக்காதாம். அவ்வளவு சிறப்பாக செயல் பட்ட கல்லூரி. இன்றோ அப்பெயரை சொன்னாலே, அங்கு நடைபெறும் சண்டைகளும், அடிதடிகளும் மட்டுமே மக்களுக்கு ஞாபகம் வருகிறது//

இன்று நிறையக் கல்லூரிகள் அப்படித்தான் இருக்கு..

//சேலத்தில் ஒரு பல்கலைகழகம் இருக்குங்க .அதற்கு பெயர் பெரியார் பல்கலைக் கழகம். நாங்கதான் அதன் முதல் மாணவர்கள். எதுக்கு ஒண்ணு தனியா துவங்கினாங்கனு இன்னும் புரியலை. மொத்தத்தில் அது வேஸ்ட் ...//

நீங்களே இப்படி சொல்லீட்டீங்க.. அப்புறம் நாங்க என்ன சொல்ல..

அருண் பிரசாத் சொன்னது…

எல்லா கலைக்கல்லூரிகளின் நிலையும் இன்று அதுதான்

மங்குனி அமைசர் சொன்னது…

ஒரு காலத்தில் சேலம் அரசுக் கல்லூரியில் வேதியியல் படிக்க இடம் கிடைக்காதாம். அவ்வளவு சிறப்பாக செயல் பட்ட கல்லூரி.////\

மட்டமான பசங்களா இருந்திருப்பாணுக போல?

/// இன்றோ அப்பெயரை சொன்னாலே, அங்கு நடைபெறும் சண்டைகளும், அடிதடிகளும் மட்டுமே மக்களுக்கு ஞாபகம் வருகிறது.///

இம்...... இதுதான் காலேஜ் பசங்களுக்கு அழகு

Kousalya சொன்னது…

பள்ளி, கல்லூரிகளை பற்றிய தகவல்கள் சரிதான்...ம்...!!!

LK சொன்னது…

@சித்ரா
என்ன பண்ண உண்மையதான சொன்னேன் ??

கீதா சாம்பசிவம் சொன்னது…

சேலத்திலே பல்கலைக்கழகம் இருந்ததும் புதுச் செய்தி, பெரியார் பல்கலைக்கழகம்னு சொல்றதும் புதுசு. ஈரோட்டிலே பெரியார் பல்கலைக்கழகம்னு நினைச்சேன்.

LK சொன்னது…

@சாரல்
முதலில் அப்படிதான் சொன்னேன்
. அப்புறம் மாத்திட்டேன்

LK சொன்னது…

@சௌந்தர்
பல காரணம். சரியான வசதிகள் இல்லாமை. பழைய கால பாடங்கள்

LK சொன்னது…

@ஜெய்
சேலம் கிராமம் இல்லப்பா

கீதா சாம்பசிவம் சொன்னது…

சேலம் மட்டுமில்லை, தமிழ்நாடு பூராவுமே கல்வியின் தரம் தாழ்ந்துதான் இருக்கு! :(

LK சொன்னது…

@சௌந்தர்
ஏன் இந்தக் கொலை வெறி

LK சொன்னது…

@ஸ்ரீ அகிலா
குறிப்பா அரசுக் கல்லூரிகள்

LK சொன்னது…

@அருண்
உண்மைதான்

LK சொன்னது…

@மங்குனி
யோவ் உன்னை அந்தக் கல்லூரிக்கு முதல்வரா போடணும்

LK சொன்னது…

@கௌசல்யா
:))

LK சொன்னது…

@கீதா மாமி

உண்மைதான். சேலம்,நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களுக்கு மட்டுமே பெரியார் பல்கலைக் கழகம். ஈரோடு இதன் கீழ் வராது

மங்குனி அமைசர் சொன்னது…

LK said...

@மங்குனி
யோவ் உன்னை அந்தக் கல்லூரிக்கு முதல்வரா போடணும்
////

சார் , இன்னும் ஸ்கூல் படிப்பே முடியல , அதுக்குள்ளே முதல்வரா ? அந்த காலேஜுல படிக்க வேணா சேத்து விடுங்க முதியோர் கல்வி இல்லைங்கண்ணா ? (மங்கு அப்படித்தான் உசாரா இரு , இல்லை யாராவது முதியோர் கல்வியான்னு கேட்டு உன்னைய அசிங்கப்படுத்த போறாங்க )

சே.குமார் சொன்னது…

எல்லா கலைக்கல்லூரிகளின் நிலையும் இன்று அதுதான்...

Gayathri சொன்னது…

சேலம் என்று இல்லை இப்போ எந்த கல்லூரி ஒழுங்கா இருக்கு?? எல்லாமே ஒரே குட்டைல ஊரின மட்டை தான்

ஹுஸைனம்மா சொன்னது…

எல்லா ஊர்லயும் கல்விக்கூடங்களின் நிலை இப்படித்தான் போல!!

//நாங்கதான் அதன் முதல் மாணவர்கள். எதுக்கு ஒண்ணு தனியா துவங்கினாங்கனு இன்னும் புரியலை. மொத்தத்தில் அது வேஸ்ட் ...//

நீங்க படிச்சதுக்கப்புறந்தான் வேஸ்டாச்சா? ;-))))

ப.செல்வக்குமார் சொன்னது…

///அதற்கு பெயர் பெரியார் பல்கலைக் கழகம். நாங்கதான் அதன் முதல் மாணவர்கள். எதுக்கு ஒண்ணு தனியா துவங்கினாங்கனு இன்னும் புரியலை. மொத்தத்தில் அது வேஸ்ட் ...//

ஹி ஹி .. நானும் அங்கதான் இப்ப டிகிரி படிக்கிறேன் . ( தொலைநிலைக் கல்வி )

ஸ்ரீராம். சொன்னது…

இப்போதெல்லாம் பள்ளிகள், கல்லூரிகள் துவக்குவதுதான் வெற்றிகரமான பிசினெஸ்... குறிப்பாய் பொறியியல் கல்லூரிகள்..!

LK சொன்னது…

@மங்குனி

இப்படி வேற ஒரு கதை விட்டுகிட்டு திரியறையா நீ ? இரு உன் தங்கமணிகிட்ட போட்டு விடறேன்.

LK சொன்னது…

@குமார்
:((

LK சொன்னது…

@காயத்ரி
ஹ்ம்ம்

LK சொன்னது…

@ஹுசைனம்மா
ஏன் ? நல்லாதான போயிடு இருக்கு ??

LK சொன்னது…

@செல்வா
நம்ம இனமடா நீ

LK சொன்னது…

@ஸ்ரீராம்
உண்மைதான் அண்ணா

Mrs.Menagasathia சொன்னது…

நல்ல வேளை எங்க ஊர்ல இந்த நிலை இல்லை...

அன்புடன் மலிக்கா சொன்னது…

வரும் முன் காப்பது நல்லது. அக்கறையுடன் கூடிய பதிவு கார்த்திக்

கூப்பிட்டும் வராம இருப்பேனா.

புதுசா ஒரு முயற்ச்சி வந்து நோக்குங்கோ நம்ம பக்கம்..

ஹேமா சொன்னது…

கார்த்திக்....உங்கள் ஊர் பற்றி அறிந்துகொண்டே இருக்கிறேன்.

அப்பாவி தங்கமணி சொன்னது…

//மொத்தத்தில் அது வேஸ்ட் ...//

நீ படிச்சதாலையா? ஹா ஹா ஹா...

Just kidding.. nice infos and nice post... thanks for sharing

தக்குடுபாண்டி சொன்னது…

//முதல் செட்னு பாராட்டலாம்னு வந்தேன்.//

சித்ரா அக்கா - என்ன பெரிய சேவிங்செட்டு??...:))

அன்னு சொன்னது…

//அடடே ஒண்ணு மறந்து போச்சு. சேலத்தில் ஒரு பல்கலைகழகம் இருக்குங்க .அதற்கு பெயர் பெரியார் பல்கலைக் கழகம். நாங்கதான் அதன் முதல் மாணவர்கள். எதுக்கு ஒண்ணு தனியா துவங்கினாங்கனு இன்னும் புரியலை. மொத்தத்தில் அது வேஸ்ட் ..//

ஏனுங்ணா, இதுல நீ.சே.மு, நீ.சே.பி ன்னு பிரிவெல்லாம் எதுவும் கிடயாதா? (வேறென்ன, நீங்க சேர்றதுக்கு முன் நீங்க சேர்ந்த பின்) :)

Sai Gokulakrishna சொன்னது…

There are 425 Engg Colleges in Tamil Nadu, particularly in 2008, 65 Engg colleges got the AICTE approval, then 2009 & 10 only nearly 100 colleges got AICTE approval.
Like Sethan Kethai kind of Frauds occupy the AICTE management,then they send a fraud team, just visit and get more bribe in Suitcases(Lakhs)and spend time in star hotels with all (setup) facilities and signed the approval.

LK சொன்னது…

@மேனகா
சந்தோஷப் படுங்க

LK சொன்னது…

@மலிக்கா
தப்பா கமென்ட் போட்டாச்சோ ??? வருகைக்கு நன்றி.. உங்கப் பதிவு பார்த்தேன் , நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

LK சொன்னது…

@ஹேமா
வாங்க

LK சொன்னது…

@அப்பாவி
என்னத்த சொல்ல

LK சொன்னது…

@அன்னு
நாங்கதான் முதல் பேட்ச்

LK சொன்னது…

@கோகுல்

உண்மைதான்

vasan சொன்னது…

Dear. LK, nobody is stopping YOU from seeing 'ENTHIRIRAN', but DO NOT BURN Rs.1000.00 or 500.00 as an easy prey to their ad & the propagandas. (not an advice, but the effect of your slide.)

vanathy சொன்னது…

எல்கே, என்னத்தை சொல்ல?. ஆசிரியர்களை மட்டும் குற்றம் சொல்லி புண்ணியமில்லை. மாணவர்கள், பெற்றோர்களுக்கும் பெரும் பங்கு உண்டும்.