வர வர இணையதளங்களில் பாதுகாப்பு மிகக் குறைந்து வருகிறது. வலைத்தளங்கள் ஹேக் செய்யப் படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. அதை ஹேக் செய்தவன்...
வர வர இணையதளங்களில் பாதுகாப்பு மிகக் குறைந்து வருகிறது. வலைத்தளங்கள் ஹேக் செய்யப் படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. அதை ஹேக் செய்தவன் அதை அழிக்காவிட்டால்
பிரச்சனை இல்லை. ஆனால் அழித்து விட்டால் ??
சகப் பதிவரும் எனது தோழியும் ஆன சந்தியாவின் மின்னஞ்சலும் ,அவரது வலைப்பூவும் ஹேக் செய்யப் பட்டுவிட்டது., ஹேக் செய்தது யார் என்றுத் தெரியவில்லை. ஹேக் செய்தவன் அவரது மின்னஞ்சல் கணக்கை அளித்துவிட்டான் என்று நினைக்கிறேன் . அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பப் படும் மெயில்கள் பவுன்ஸ் ஆகின்றன. அவரது வலைப்பூவும் சரியாக வரவில்லை. sandhya-myfeelings. blogspot.com என்ற அவரது வலைப்பூவும் அழிக்கப்பட்டுவிட்டது.
எனக்குத் தெரிந்த வரையில், மின்னஞ்சல் அழிக்கப் பட்டால் அதனுடன் அந்த வலைப்பூவும் அழிந்து விடும் என்று எண்ணுகிறேன்.அவரது வலைத் தளத்தையும், மின்னஞ்சல் முகவரியையும் மீட்க இயலுமா? விவரம் அறிந்தவர்கள் உதவும் .
முடிந்தவரை , உங்களது கடவுசொல்லை கடினமாக அமைக்கவும். உங்கள் பெயரோ, உங்கள் மகன்,மகள்,கணவர்/மனைவி/காதலன் பெயர் வைப்பதை தவிர்க்கவும்.
அன்புடன் எல்கே
53 கருத்துகள்
இந்தப் பதிவை வெளியிட்டப் பின் , மற்றுமொரு ஈமெயில் மற்றும் பதிவு ஹேக் செய்யப் பட்டுள்ளது. "சின்ன அம்மிணி " பதிவுதான் ஹேக் செய்ய பட்டுள்ளது
நண்பா இதுப்போல் நானும் ஒரு சில தளத்தை கிளிக் செய்து பார்த்து குளோஸ் பன்னி இருக்கேன். ஏன் அப்படி வருகிறது.
@ப்ரபாதாமு
நீங்க என்ன சொல்ல வரீங்கன்ன்னு புரியல
அதிர்ச்சியான தகவல். இரண்டு மாதங்களுக்கு முன்பு எனது மின்னஞ்சல் கணக்கும் களவாடப்பட்டது. உடனடியாக அதை என்னால் மீட்க முடிந்தது. கடவுச்சொல்லை மிகவும் கடினமானதாக உருவாக்குவது மிகவும் அவசியம்.
//அளிக்காவிட்டால் //
அழிக்காவிட்டால்
கூகுளுக்கு மடல் அனுப்பியுள்ளேன். எட்டு மணிக்கு மெயில் செக் பண்ணினேன். பத்துமணிக்கு Disabled னு வருது.
@ சேட்டை - என் பாஸ்வேர்ட் பயங்கர ஸ்ட்ராங்குங்க. ஒரு மாதம்தான் இருக்கும் புது பாஸ்வேர்ட் மாத்தி :(
சின்னம்மணி
..... வேதனையாக இருக்கிறது..... அவர்கள் இருவருக்கும் என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.
அடக்கஷ்டமே..பிரபல பதிவரா இருக்கிறதுக்கு நிறையவே விலை கொடுக்க வேண்டியிருக்கே :-(
Enna idhu, blog kooda hack panraangala?? :-((
sorry to hear about chinna ammini, and sandhya..
bayamaa than irukku
பாஸ்வேர்ட்டை அடி கடி மாற்ற வேண்டும், எப்படி தான் இவர்கள் ஹேக் செய்கிறார்கள் இவர்களுக்கு என்ன லாபம் தெரியவில்லை
என்ன இது ரொம்ப வருத்தமாக இருக்கு.எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க.இனி இப்படி யாருக்கும் நிகழக்கூடாது.
என்ன கொடுமை...எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு பதிவு போடுகிறோம்...எவனோ ஒருவன் இப்படி செய்வது மிகவும் வருத்தப்பட வைக்கின்றது...
சீக்கிரம் இதற்கு யாரவது ஒரு solution கொடுங்க...புண்ணியமா போகும்..
சின்ன அம்மிணியோடதா? என்ன கொடும சார் இது?
மிகவும் வேதனையாக இருக்கிறது...
அய்யய்யோ! என்னக் கொடுமை இது. இப்படியெல்லாம் பண்றாங்க..
ரொம்பவும் கவனமாத்தான் இருக்கணும் போல..
தகவலுக்கு நன்றி கார்த்திக்!
ம்ம்ம்ம் ரொம்ப வருத்தமா இருக்கு, ஏற்கெனவே இருமுறை அவதிப்பட்டதால் அவங்க மனக்கஷ்டம் நல்லாவே உணர முடியுது. சின்னம்மிணிக்கு மீட்க முடியும்னு தோணுது. கூகிளில் உதவியை நாடி மொபைல் நம்பர் கொடுத்தால் அவங்க சொல்றபடி செய்ததும் அக்கவுண்டை மறுபடியும் ரெகவர் பண்ணித் தராங்க. என்னோடதை அப்படித் தான் மீட்டேன். முயற்சி செய்து பார்க்கச் சொல்லவும். இறைவனைப் பிரார்த்திக்கிறேன். முக்கியமாய் இப்படி எல்லாம் தொந்திரவு கொடுக்க நினைக்கும் நபர்களின் மனம் மாறவே பிரார்த்திக்கணும். :((((((((((
இப்படி செய்வதால் அவருக்கு என்ன லாபம்?! சரியான மனோவியாதிக்காரர்கள் போல் இருக்கிறது.
எல்லாரும் உஷாரா இருக்கறது நல்லது.
காலையிலேயே மோசமான செய்தி. அடுத்தவர்களை கஷ்டப்படுத்துவதில் இவர்களுக்கு ஒரு சந்தோஷம். கஷ்டம். :((
வெங்கட்.
பாவம்தான் :(
ஏன் இப்படி ஆகுதுன்னே புரியல..எப்படி இப்படி செய்யுறாங்க...ஹேக் பண்ணது போறாதுன்னு அக்கௌன்ட்ட அழிக்குறது ரொம்ப அக்கிரமம்..என் மாமி சந்தியாவின் அக்கௌன்ட் தான் போச்சுன்னு பாத்தேன்..இப்போ என்னடான்னா சின்னஅம்மணி அவங்க பதிவும் காணும்..
கண்டிப்பா நாம ஏதான செய்யணும்
டெலிட் செய்த பிளாக்கை மீட்க முடியுமா என தெரியாது. ஆனால், பதிவுகளையும், கமெண்ட்களையும், டிராப்ட்களையும் பேக்கப் செய்து வைத்து கொள்ளலாம்.
ஒவ்வொரு 3 நாளுக்கு ஒரு முறை நான் பேக்கப் செய்கிறேன். Dashboard->Settings->Basic->Blogtools->Export blog சென்றால் உங்கள் ஹார்ட் டிஸ்கில் சேமித்து வத்து கொள்ளலாம்.
பிளாக் டெலிட் ஆனாலும் உங்கள் உழைப்பு பத்திரமாக இருக்கும். அதை புதிய பிலாக் ஓபன் செய்து ஏற்றி விடலாம்... என்ன மறுபடியும் பிரபலமாக்க கஷ்டபட வேண்டும். ஆனால் நம் போன்ற பதிவர்கள் உதவியால் அதுவும் சுலபம்மே
வருத்தமாகவும் அதேசமயம் பயமாகவும் இருக்குது.
உஷார் படுத்தியதற்கு நன்றி கார்த்திக்.
இந்த மாதிரி ஹாக் பண்ணி, என்ன பண்ண போறாங்க!!!
@ கீதாம்மா - என்னோடது கூகிளால் Disable செய்யப்பட்டிருக்கு. கூகுள் Terms and Conditions மீறினதால் டிஸ்ஸேபிள் ஆகியிருக்கு. ஹேக் பண்ணினவங்க ஏதாவது செய்துட்டாங்களான்னு தெரியலை
dear friend, please contact Mr.Suryakannan he is well experienced in this kind of issues.. even few months ago he recoverd his blog & maild id... so visit his blog & he will help u...
http://suryakannan.blogspot.com/
Regards,
RK Nanban
என்ன கொடுமைங்க இது ..? நிச்சயம் நமது கடவுச் சொற்களை கடினமாக அமைப்பது அவசியமாகிறது ..!! அருண் அண்ணா சொன்னா மாதிரி எதுக்கும் செய்து கொள்வது நல்லது ..!!
டெலிட் செய்த பிளாக்கை மீட்க முடியுமா என தெரியாது. ஆனால், பதிவுகளையும், கமெண்ட்களையும், டிராப்ட்களையும் பேக்கப் செய்து வைத்து கொள்ளலாம்.
romba nandri anna..
migavum varuttham adainthen..
kondippai nalla mudiu kaanapada vendum..
இந்த மாதிரி செய்வதால் திருட்டை செய்தவர்கள் என்ன பயனை அடைய போகிறார்கள் என்று தெரியவில்லை... அடுத்தவர்களின் மன வலியை உணராதவர்கள். நம்மை போன்றோரும் கவனமாக இருக்கணும்.
என் தோழி சந்த்யாவுக்கு இந்த நிலை ஏற்பட்டதுக்கும் சின்ன அம்மிணியின் நிலைக்கும் மிகவும் வருந்துகிறேன் கார்த்திக்
:((
@சேட்டை
அப்படி இருந்தாலும் பிஷிங் தளங்கள் மூலம் திருட வாய்ப்புள்ளது
@சின்ன அம்மிணி
கவலை வேண்டாம். மீட்கலாம்
@சித்ரா
:((
@சாரல்
இதில் பிரபலம் , பிரபலம் இல்லை என்றெல்லாம் இல்லை. யார் கவனக் குறைவாக உள்ளார்களோ அவர்கள் மாட்டுவார்கள்
@ஆனந்தி
ஆமாம்
@சௌந்தர்
அதுதான் செய்யணும் தம்பி
@ஆசியா
:((
@கீதா அச்சில்
இதற்க்கு தீர்வு இல்லை
@தினேஷ்
அதேதான் நானும் கேக்கறேன்
@வெறும்பய
:(
@ஸ்ரீஅகிலா
கவனமா இருங்க
@மாமி
இது வேற மாதிரி பிரச்சனை
@காயத்ரி
எதுவும் பண்ண முடியாது
@வெங்கட்,கவிச்வா, சை,கோ,ப
:((
@அருண்
நன்றி
@சுந்தரா
நன்றிங்க
@ஆர் கே
நன்றி
@கௌசல்யா
ஒரு அல்ப சந்தோசம் அவர்களுக்கு
கடவுளே.. ஆவ்வ்வ்வ்..
கடவுளே.. இத்தனை நாள் எழுதினது எல்லாம் என்ன ஆகும்..??
தேனம்மை, பதிவுகள் சேமித்து வைத்திருந்தால் பிரச்சனை இல்லை. அதேப் போல், கூகிள் ரீடர் உபயோகிப்பவர்கள் இவரது பதிவுகளை பின்பற்றினால் அவர்களிடம் இருந்தும் பெறலாம்.
Very sad to hear that. Sorry Sandhya and Chinnaammani
There should be a way to locate this culprits using IP address or something like that. If Google (blogger) takes initiative they should be able to find it
Above all, what would someone benefit by deleting somebody's blog. Must be a Psycho I guess, eroding people work and knowledge
கஷ்டம்தேன் கார்த்திக் ண்ணா,
நான் இப்போதுதான் பதிவுகளை பேக்கப் செய்ய ஆரம்பித்துள்ளேன். குறைந்தது மாதம் ஒரு முறையாவது பேக்கப் செய்யறது நல்லது. மத்தபடி எனக்கும் விஷய ஞானம் இல்லை. சூர்ய கண்ணன் பிளாகும் திருடு போயி அவர் அதை மீட்டதும் தெரியும். உதவி கேட்டு பாக்கலாம். சாரி சின்னம்மிணி மற்றும் சந்தியா க்கா.
ஓருவரின் உழைப்பு கொள்ளையடிக்கப்பட்டதை நினைத்தால் மனம் வருந்துகிறது...
ஆஹா....
என்னது சந்தியா, சின்ன அம்மிணி வலைகள் ஹேக்கிங்கா... அப்போ, பிரபல பதிவராயிட்டாங்கன்னு அர்த்தம்...
பிரபலமில்லாத என்னோட வலையே அவங்களோட வாயில் விழுந்து, பின் சூர்யா கண்ணன் தான் மீட்டு தந்தார்...
www.suryakannan.blogspot.com
முயற்சி செய்தால், மீட்டெடுக்கலாம்..
வாழ்த்துக்கள்...
நண்பரே! எப்படி எல்லாம் கொடுமைகள் நடக்கின்றன. மயில் என்பவரின் ப்ளாகும் Delete ஆகி இருக்கிறது. இதில் ஒரு அற்ப சந்தோஷம் போலும்.
நல்ல பதிவு நணபரே! நன்றிகள்!
This is second time hearing@ BLOG HIKING after Suryakannan's blog hiked last month.
It's an alert for all bloggers to save..,
If there is problem, there will be a solution..,
Rgds
Sai Gokulakrishna
http://saigokulakrishna.blogspot.com
கருத்துரையிடுக