கேள்வி 1 : வீரரின் அறையில் பாம்பு இருந்தது பதில் : ஏங்க சரியாப் பாருங்க . அதுவும் ஏதாவது போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் கேள்வி 2 ...
பதில் : ஏங்க சரியாப் பாருங்க . அதுவும் ஏதாவது போட்டியில் பங்கேற்க வந்திருக்கும்
கேள்வி 2 : மிதியடியில் கால்தடம் படிந்து இருக்கு
பதில் : இதெல்லாம் ஒரு பிரச்சனையா? இதெல்லாம் இல்லாட்டி அப்புறம் எப்படி நாங்க சர்வதேஷ புகழ் பெறுவது ? இப்ப பாருங்க அந்த நபர் சொல்லிக்கலாம் என் கால் தடம் சர்வதேசப் புகழ் பெற்றதுன்னு
கேள்வி 3 : பளுதூக்கும் அரங்கத்தின் மேல்கூரையில் இருந்து டைல்ஸ் கீழே விழுந்தது?
பதில் : அவ்ளோ எடையை தூக்கறாங்க? தம்மா துண்டு டைல்ஸ் தூக்கி அப்படி போட்டுட்டு
விளையாட மாட்டாங்களா ??
கேள்வி 4 : மைதானத்திற்கு செல்லும் வழி தண்ணீரால் சூழப் பட்டுள்ளது
பதில் : தப்பா நினைச்சிடீன்களா ?? நீச்சல் வீரர்கள் பயிற்சி பெற வசதின்னு அப்படியே விட்டு வச்சிருக்கோம் அவ்ளோதான். வேற ஒன்னும் இல்லை.
கேள்வி 5 : விளையாட்டு வீரர்கள் தங்கும் இடத்தில் சரியான வழிகாட்டிகள் இல்லை
பதில் : இதுவும் ஒரு விளையாட்டுதான். ட்ரெசர் ஹன்ட் கேள்வி பட்டது இல்லை ?? அந்த மாதிரித்தான் இது உங்க இடத்தை சரியா கண்டுபிடிக்கரீங்கலானு பாக்கத்தான் ..
கேள்வி 6 : இன்னும் ஒரு வாரம் கூட இல்லை . எதுவும் தயார் ஆகவில்லை
பதில் : இது தீவிரவாதிகளை ஏமாத்த . எதுவும் ரெடி ஆகாட்டி கேம்ஸ் இல்லைன்னு ஏமாந்துடுவாங்க. நாங்க கடைசி நேரத்துல எல்லாம் ரெடி பண்ணிடுவோம் ..
இதுவே சென்னையில் நடைபெற்று இருந்தால், எவ்வாறு இந்தக் கேள்விகளுக்கு பதில் வரும் ...எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான்.
கழக ஆட்சியில் சீரும் சிறப்புடனும் இந்தப் போட்டிகள் நடைபெற்றால் , எங்கே எனக்குப் பெயர் கிடைத்துவிடுமோ என்று பயந்து , சில பார்ப்பன விஷம ஏடுகள் செய்யும் சதியே இந்த செய்திகள். இதில் எள்ளளவும் உண்மை இல்லை.
டிஸ்கி : சிரிக்க மட்டுமே
அன்புடன் எல்கே
27 கருத்துகள்
ஹா ஹா ஹா
இடுக்கண் வருங்கால் நகுக!
வேற வழி தலையில் துண்டு போட்டுக்கறதைத் தவிர :(
:-)
:)
ha..ha.. pathil super
:-))))))))
அட!! இப்படி கூட சமாளிக்கலாம் போல :))
kandravi....
ஹா..ஹா...
ரொம்பவே நல்லாருக்கு. சமாளிக்கிறதுக்கு நம்ம ஆளுங்களுக்கு சொல்லியாத் தரணும். நல்ல கற்பனை.
@ சுரேஷ் கல்மாடி
சார், உங்களுக்கு LK மாதிரி ஒரு ஆள் தேவை... எப்படி சமாளிக்கிறார் பாருங்க. உங்க அட்வைசரா சேர்த்துக்கோங்க
vedhanaiyana visiam...
:(((((
நிஜமாவே இப்படித் தான் சொல்லுவாங்கனு நினைக்கிறேன். என்னதான் தொலைக்காட்சிகள் எல்லாம் அதிகமா எக்ஸ்போஸ் செய்யுதுனு சொன்னாலும் இதற்கு முழுக்காரணம் மன்மோகன் சிங்கின் ஆட்சியாளர்களின் அலட்சியமே. திரும்ப நாம வரப் போறதில்லைங்கற நம்பிக்கையிலே முதல் மூன்று வருடங்கள் காட்டிய அலக்ஷியம் தொடர்ந்து வந்து இப்போக் கடைசி நிமிஷம் வரையும் நீடிக்கிறது. முழுப்பொறுப்பும் மன்மோகன் சிங்கே ஏத்துக்கணும்! :(((((((((((
:))))
நல்லாருக்கு
ஹா....ஹா.ஹா...(சிவாஜி கணேசன் போல சோகமாகச் சிரிக்கவும்)
ஏற்கெனவே சிரிப்பா சிரிச்சிக்கிட்டுருக்கு விஷயம் ...எப்படிங்க சிரிப்பு வரும்?!!
நல்லாருக்கு
//அருண் பிரசாத் said...
@ சுரேஷ் கல்மாடி
சார், உங்களுக்கு LK மாதிரி ஒரு ஆள் தேவை... எப்படி சமாளிக்கிறார் பாருங்க. உங்க அட்வைசரா சேர்த்துக்கோங்க//
ரிப்பீட்!!
ungala and kal maadya man madiya.avaruku bhadhila poturukkkalaam, super padhivu
:(
haa haa nice!!
//பதில் : ஏங்க சரியாப் பாருங்க . அதுவும் ஏதாவது போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் /
இது வரலாற்று சிறப்பு மிக்க போட்டி , அதனால இருக்கலாம் ..!!
//பதில் : அவ்ளோ எடையை தூக்கறாங்க? தம்மா துண்டு டைல்ஸ் தூக்கி அப்படி போட்டுட்டு
விளையாட மாட்டாங்களா ??//
இது அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக செய்யப்பட்டது ..
இதற்கு அவர்கள் பெருமைப்பட வேண்டும் ..!!
ha ha ha!!!!!!
முந்தைய காமன்வெல்த் நல்லாயிருக்குது!
எல்கே, சூப்பர். நல்ல நகைச்சுவையான பதிவு.
ஜெய் போல கேள்விகள் மட்டும் கேட்பதோடு நிற்காமல் பதில்களும் தந்து... எங்கேயோ போய்ட்டீங்க.
இருக்கண் வருங்கால் நகுக...
//இது தீவிரவாதிகளை ஏமாத்த . எதுவும் ரெடி ஆகாட்டி கேம்ஸ் இல்லைன்னு ஏமாந்துடுவாங்க. நாங்க கடைசி நேரத்துல எல்லாம் ரெடி பண்ணிடுவோம்//
ஹா ஹா ஹா.. இந்த பதில் ரெம்ப சூப்பர்
காமெடியா இருந்தாலும் அதே நேரம் வருத்தமாவும் இருக்கு Karthi... இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த போட்டி நடத்த தேர்வாகி இப்படி மானம் போகுதேனு வருத்தமா இருக்கு... இங்க இருக்கற ஜென்மங்க எல்லாம் கேள்வி கேக்குதுங்க... நேரம் தான் எல்லாம்
அப்போ மறுபடியும் ஃபார்முக்கு வந்துட்டீங்ணா!! சரி நக்கல் பதிவு. கூடவே மத்திய மற்றும் தமிழக வயதானவர்களின் ஃபோட்டோவையும் இணைத்திருந்தாலு இன்னும் டாப்பா இருந்திருக்கும்! நடத்துங்ணா!!
hilarious.--geetha
கருத்துரையிடுக