ஆகஸ்ட் 03, 2010

சொந்த மண் I

இன்றைய இயந்திர உலகில், பலரும் தாங்கள் பிறந்த மண்ணை விட்டு வேறு ஒரு இடத்தில்தான் வாழ்க்கையை நடத்தி கொண்டு இருக்கிறோம். அவசரமான இந்த உலகில் , பிறந்த ஊருக்கு செல்லவும் நேரம் இன்றி இருப்பவர்கள் பலர். இதில் திருமணமான பெண்களில் நிலை இன்னும் கடினம். பிறந்தது ஒரு ஊர், கணவனின் சொந்த ஊர் வேறு, இப்பொழுது இருப்பது வேறு ஒரு ஊர். விடுமுறை வந்தால் எங்கு செல்வது என்பதே பாதி வீடுகளில் சண்டைக்கு காரணமாக அமைகிறது.

பிறந்த ஊர் எவ்வளவுதான் சிறிய ஊராக  இருந்தாலும், சொந்த ஊரின் பெருமையை பேசாத மனிதர்கள் ரொம்பக் குறைவு. நான் பிறந்து வளர்ந்த ஊராகிய சேலத்தை பற்றிய இந்த சொந்த மண் தொடரில் பேச இருக்கிறேன்.என்னடா இவன் இப்ப திடீர்னு சொந்த மண்ணை பற்றி எழுதறான்னு யோசிக்கறவங்களுக்கு , கடந்த ஞாயிறு நகர் வலம் போயிருந்தப்ப (வீடு தேட அலைஞ்சப்ப ) ஒரு இரண்டு அல்லது மூன்று மாரியம்மன் கோவில்களையும், விழாக்களையும் பார்க்க நேர்ந்தது .

ஆடி மாதம், மாரியம்மன் பண்டிகைக்கு பெயர் பெற்றது  சேலம். முதலில் பண்டிகையை பற்றி மட்டும்தான் எழுத நினச்சேன். அப்புறம்தான் , ஏன் சேலத்தை பற்றி விரிவா எழுதக் கூடாது நு யோசிச்சேன். அதுதான் இந்த தொடர் .( நீ எழுது ராசா .நாங்கதான கக்ஷ்டப் படப் போறது ---யாருப்பா அது??  )

.

அமைவிடம் :

தமிழகத்தின் வடக்கு மட்டும் கிழக்குப் பகுதிகளில் இருந்து கொங்கு மண்டலத்தில் நுழையும் நுழைவாயிலாக அமைந்துள்ளது சேலம்.

மலைகளால் சூழப்பட்ட இடம் என்ற பொருள் வரும் "சைலம் " என்பதே இதன் பெயராக இருந்து பின்பு "சேலம்" என்று மருவிவிட்டதாக கூறுவர். ஆம், சுற்றிலும், நகரமலை, சேர்வராயன் மலை, ஜருகு மலை ,கஞ்ச மலை போன்றவை இருக்க நடுவினில் சேலம் இருக்கிறது.

ஒரு காலத்தில் தமிழகத்தின் மிகப் பெரிய மாவட்டமாகவும், பல பெருமைகளுக்கு சொந்தமாகவும் இருந்த சேலம் இப்பொழுது அளவில் சுருங்கி விட்டது. இன்றைய கிருஷ்ணகிரி, தர்மபுரி,நாமக்கல் மாவட்டங்கள் சேலத்தை சேர்ந்தவையே. பின், நிறைவாக வசதிக்காகவும், ஓட்டுக்காகவும் அவை சேலத்தில் இருந்து பிரிக்கப் பட்டன


சென்னையில் இருந்து சாலை அரசுப் பேருந்தில் வழியே 7 அல்லது 8 மணி  நேரம்  ஆகும் சேலம் சென்றடைய. தனியார் பேருந்தில் ஆறு மணி நேரத்தில் சென்றடையலாம். சென்னையில் இருந்து சேலம் செல்ல மிக சுலபமான வழி , சென்னை பெங்களூரு பை பாஸ் சாலையில் வேலூர் வரை சென்று அங்கிருந்து ஊத்தங்கரை வழியாக செல்வதே.

ட்ரெயினில் செல்வது என்றால், சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் சிறந்தது. இரவு ஏறினால், அதிகாலை சேலம் சென்றடைய முடியும்.


இப்பொழுது வான்வழியாக செல்வது இல்லை. விமான நிலையம் இருந்தாலும், வர்த்தக ரீதியான விமானப் போக்குவரத்து இன்னும் இல்லை. கூடிய விரைவில் அதுவும் வரும் என்று நம்பிக்கொண்டு  இருக்கிறோம் .

நீங்கள் எத்தனை மணிக்கு சென்று இறங்கினாலும் (ட்ரெயின் அல்லது பேருந்து ) , நகரத்தின் எந்தப் பகுதிக்கும் நகரப் பேருந்துகள் மூலம் செல்ல இயலும். நாள் முழுவதும் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கும். அரசு பேருந்துகள் மட்டும் அல்லாமல், தனியார் பேருந்துகளும் இருப்பதால், நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு விரைவாக செல்ல முடியும் .

சேலம் போக வழிகளை பார்த்தோம், அடுத்த பகுதியில் சேலம் நகரை கொஞ்சம் சுத்தி பார்ப்போம்.

அன்புடன் எல்கே

66 கருத்துகள்:

Kousalya சொன்னது…

எனக்கு சேலம் பற்றி ஒண்ணும் இதுவரை தெரியாது (மாம்பழம் தவிர) இனி உங்க மூலமா தெரிந்து கொள்கிறேன்....

நல்ல பகிர்வு... very interesting

தொடருங்கள்.....

அருண் பிரசாத் சொன்னது…

கோவைக்கு செல்லும் போது ரயில் நிலையத்தையும், பேருந்து மாறுவதற்கும் மட்டுமே சேலத்து மண்ணை மிதித்து உள்ளேன். சொல்லுங்கள் சேலத்தை பற்றி தெரிந்து கொள்கிறேன்.

//வலம் போயிருந்தப்ப (வீடு தேட அலைஞ்சப்ப ) //

ஆகா, அங்கயும் சென்னை நிலைமைதானா?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எனக்கும் சேலத்திற்கும் சில தொடர்புகள் உண்டு. பெரும்பாலும் எனது ஊரிலிருந்து பெங்களுர் மற்றும் கோவை செல்லும்போது இரவு நேரங்களில் சேலம் வழியாக சென்றது உண்டு. தொடருங்கள் நண்பரே. சேலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

பாராட்டுகள் ... மண்ணின் பாசம் மாறவில்லை ...

பெயரில்லா சொன்னது…

சேலம் என்றால் மாம்பழம் தான் என் மனதில் வருவது ..இனி என்ன சேலம் பார்க்க கிளம்ப வேண்டியது தான் அதான் தங்கறதுக்கு நம்ம எல்.கே வீடு இருக்கு இல்லே அப்புறம் என்ன கவலை ...ஹி ஹி .

அடுத்த பகுதியில் சுத்தி பார்க்க நான் இப்பவே ரெடியா காத்திடிரிகிறேன் சரியா.
அடுத்த பாகத்தில் உங்க வீடு படம் கூட போட்ட நல்லா இருக்கும் முடிஞ்சா போடறிங்களா

Chitra சொன்னது…

Thank you for the post. :-)

சௌந்தர் சொன்னது…

சேலம் போக வழிகளை பார்த்தோம், அடுத்த பகுதியில் சேலம் நகரை கொஞ்சம் சுத்தி பார்ப்போம்.

நாங்க ரெடி எனக்கும் சேலம் பற்றி தெரியாது...தெரிந்து கொள்கிறேன்

LK சொன்னது…

@கௌசல்யா

கண்டிப்பா எல்லாரும் தெரிஞ்சிக்கத்தான் எழுத ஆரமிச்சேன். மாம்பழம் பத்தி அடுத்த பதிவில் ஒரு விஷயம் சொல்றேன்.. :))

LK சொன்னது…

@அருண்
நான் சென்னையில்தான் இருக்கிறேன் .

LK சொன்னது…

@வெங்கட்

இது ஒரு மையம். பல பகுதிகளுக்கு இங்கு வந்துதான் செல்ல வேண்டும் . நன்றி பாஸ்

LK சொன்னது…

@செந்தில்

அது மாறாது தல .. நன்றி

LK சொன்னது…

@சந்தியா

தாரளம வாங்க. வீட்டு போட்டோ இல்லை

LK சொன்னது…

@சித்ரா

கருத்துக்கு நன்றி

LK சொன்னது…

@சௌந்தர்

நிறைய தெரிஞ்சிபீங்க நன்றி

Balaji saravana சொன்னது…

நல்ல பதிவு.. நிறைய தெரிஞ்சுக்கலாம் சேலத்த பத்தி!
தொடருங்கள்...

jothi சொன்னது…

//சொந்த ஊரின் பெருமையை பேசாத மனிதர்கள் ரொம்பக் குறைவு.//

ஒவொருவரின் மனதிலும் பசுமை மாறாத நினைவுகள் இருக்கும் !......மண்வாசனை சுழலட்டும் .............,

நல்ல முயற்சி வாழ்த்துக்கள். sir, வேண்டாம் ப்ளிஸ்............distance...வேண்டாம் LK

சே.குமார் சொன்னது…

நல்ல பகிர்வு... very interesting

தொடருங்கள்.

பத்மநாபன் சொன்னது…

தமிழகத்தின் மையமான சேலம், மதுரை திருச்சியை போல் சுவராசியங்கள் நிறைந்தது.. ஏற்காடு சமாச்சாரங்களையும் இறக்குங்கள்.

நாங்கள் சேலம் அருகில்( ராசிபுரம் ) இரண்டு வருடங்கள் இருந்தோம். அப்பொழுது சேலம் தான் எங்களுக்கு பட்டணம்.

LK சொன்னது…

@பாலாஜி சரவணன்

நன்றிங்க

LK சொன்னது…

@ஜோதி

அனைவரின் மனதிலும் அது உண்டு.. சரி இனி சார் சொல்லல ..ஓகேவா பாஸ் ??

LK சொன்னது…

@குமார்
நன்றிங்க

LK சொன்னது…

@பத்மநாபன்
வாவ். நீங்க ராசிபுரம்ல இருந்து இருக்கீங்களா. நல்லது. கண்டிப்பா ஏற்காட விட்டுட்டு சேலத்தை பத்தி சொல்ல முடியுமா

vinoveenee சொன்னது…

Nalla muyarchi, salem the mango city endra kuzhumam inga FB la vechuruken ! I am sharing this there! Thodarndhu eludhungal

virutcham சொன்னது…

சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் என்ற பாடல் தவிர பெரிதாக சேலம் பற்றி ஒன்றும் தெரியாது. எழுதுங்க தெரிஞ்சுக்கலாம்

dheva சொன்னது…

சொந்த மண்.....மறக்கும் மனிதர்களுக்குள் மனிதம் இருப்பதற்கு சாத்தியமில்லை என்று நினைப்பவன் நான்..


சுவாரஸ்யமா இருந்தது...!

ஜெயந்தி சொன்னது…

சொந்த ஊர் பத்தி பேசணும்னா நினைவுகள் பொங்கி வரும். நல்ல இடுகை.

Mrs.Menagasathia சொன்னது…

very interesting post Lk!! continue...

தெய்வசுகந்தி சொன்னது…

நான் இரண்டு முறை சேலம் சென்றுள்ளேன். அது தவிர வேறு எதுவும் தெரியாது. நல்ல தொடர்!!!

asiya omar சொன்னது…

சொந்தமண் தொடர் அருமை.ஒரு நிமிடம் அசந்திட்டேன்,துபாய் க்ளாக் டவர் மாதிரி ஒரு ரவுண்டானா படம் அருமை.நானும் கல்லூரி சமயம் டூர் வந்திருக்கிறேன்,சேலம் மற்றும் ஏற்காடு.

rajan சொன்னது…

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!!!.......
நன்றி கார்த்திக், நானும் உங்களுடன் சேர்ந்து பெருமைப்பட்டு கொள்கிறேன், எனது தாயின் பிறந்த ஊரான சேலத்தின் நினைவுகளை என்னால் மறக்க முடியாது. பள்ளிக் காலத்தில் எப்பொழுது விடுமுறை வரும் என்று காத்துக்கிடப்போம். குறைந்தது ஒரு இருபது நாட்களாவது சேலத்தில் கழிப்போம். நாமெல்லாம் பாக்கியம் செய்தவர்கள் இப்பொழுது உள்ள குழந்தைகளுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் மிகக்குறைவு. எங்களுடைய தாத்தா, பாட்டி வீடு அரிசிபாளையத்தில் தான் இருந்தது, வீட்டின் நம்பர் 8G இன்றும் அந்த வீட்டை எங்களால் மறக்க முடியாது. உங்களுக்கு கூட நினைவிருக்கும் என நம்புகிறேன். சேலத்தின் கோட்டை மாரியம்மன், ராஜகணபதி, ஸ்கந்தாஷ்ரமம், பற்றியும் தொடர்ந்து எழுதுங்கள்... நன்றி.

LK சொன்னது…

@வினோ

நன்றி வினோ..

LK சொன்னது…

@விருட்சம்

அதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்

LK சொன்னது…

@தேவா

நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்

LK சொன்னது…

@ஜெயந்தி

ஆமா ஜெயந்தி பல நினைவுகள், பல நிகழ்வுகள்

LK சொன்னது…

@மேனகா

ஊக்கத்திற்கு நன்றி

LK சொன்னது…

@தெய்வ சுகந்தி

என்ன இது இவ்வளவு பக்கத்தில இருந்துகிட்டு இப்படி பண்ணி இருக்கீங்க ???

அப்பாவி தங்கமணி சொன்னது…

வாவ்... ஊர் கதையா? கேக்க கசக்குமா என்ன? nice write up ... இன்னும் படிக்க waiting ... சூப்பர்... தர்மபுரி எல்லாம் சேலத்தோட சேந்ததா முன்ன... இது புது information எனக்கு...

LK சொன்னது…

@ஆசியா ஒமார்

ஓ அபப்டியா. நன்றிங்க. இதுலல்லாம் சமீபத்தில ஏற்ப்பட்ட மாற்றங்கள் ... நானே பலவற்றை பார்க்கவில்லை...

LK சொன்னது…

@ராஜா

அதெப்படி மறக்க முடியும் ?? அதுவும் உங்கள் 8G வீடு மறக்க முடியாது .. கண்டிப்பா எழுதறேன்

rajan சொன்னது…

நன்றி !!

thenammailakshmanan சொன்னது…

சேலம் ஃபேர்லாண்ட்ஸில் நாங்க இரண்டு வருடம் இருந்தோம்.. மிக அருமையான பகிர்வு... கார்த்தி்.. அடுத்து படிக்க ஆவல்..

Mitr Friend - Bhushavali சொன்னது…

So real!!! Its feels so bad to live away from home for months together!!!

A visit to India Gate at night
A Stroll at the Bhudha Jayanthi Park

LK சொன்னது…

@தேனம்மை

அழகாபுரத்தில் இருந்தீர்களா ?? எந்த வருடம்???

நன்றிங்க

LK சொன்னது…

@பூஷா
ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க.. உண்மைதான்

நீச்சல்காரன் சொன்னது…

விக்கிப்பீடியாவில் உங்கள் பதிவை இணைத்துவிட்டேன். வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

நன்றி கார்த்திக்.நான் இன்னும் இந்தியா சுற்றிப் பார்க்கவில்லை.
பதிவுகள்,படங்களில் மட்டுமே !

ஸ்ரீராம். சொன்னது…

சொந்த ஊர் பற்றிய நினைவுகளைப் பகிரும்போது அந்த இடத்தைப் பற்றி தெரிந்து கொள்ள எங்களுக்கும் வாய்ப்பு வருகிறதே...

இளந்தென்றல் சொன்னது…

சேலம் சென்னை விமான போக்குவரத்து துவங்கி ரொம்ப நாள் ஆச்சு.

அமைதிச்சாரல் சொன்னது…

நிறைய எழுதுங்க..

சுசி சொன்னது…

கடைசியா வந்தேன்னு விட்டு போயிடாதிங்கப்பா..

நல்ல பதிவு.. நானும் வரேன் ஊர் சுத்த :))

கலாநேசன் சொன்னது…

நீங்க சேலத்தில் எங்கே? நான் மல்லூர். சேலத்தை பற்றி நானும் எழுத எண்ணியிருந்தேன். அசத்துங்க ஊர்ஸ்....

vanathy சொன்னது…

நல்லா சுத்திக்காட்டுங்க. நான் அங்கெல்லாம் போனதில்லை.

LK சொன்னது…

@நீச்சல்காரன்

மிக்க நன்றி

LK சொன்னது…

@ஹேமா

சேலமும் அப்படியே சுத்திப் பாக்கலாம்

LK சொன்னது…

@ஸ்ரீராம்
ஆமாம் பதிவுலகின் நன்மை அது

LK சொன்னது…

@இளந்தென்றல்


துவங்கியதும் பின்பு நிறுத்தியதும் எனக்குத் தெரியும்...

LK சொன்னது…

@சாரல்

எழுதிடலாம்

LK சொன்னது…

@சுசி
உங்களுக்கு கடைசி சீட் ஓகேய

LK சொன்னது…

@கலா நேசன்

அட .. நான் சேலம் நகருக்குள் செவ்வாய் பேட்டை

இளந்தென்றல் சொன்னது…

மீண்டும் துவங்கி இருக்கிறார்கள். இப்போது விமான போக்குவரத்து உண்டு. கிங் பிஷர்.
http://www.flykingfisher.com/plan-book/schedule.aspx
வேண்டுமானால் சரி பார்த்துக்கொள்ளவும்.
:)

LK சொன்னது…

@ilanthendral

தகவலுக்கு நன்றி..

கீதா சாம்பசிவம் சொன்னது…

இன்னும் சேலம் பார்த்ததில்லை. சேலம் வழியாக ரயிலில் பயணித்ததோடு சரி, எழுதுங்க ஆவலோடு காத்திருக்கேன்.

Sriakila சொன்னது…

சேலம் மிகவும் அருமையான ஊர். சொந்த ஊரைப் பற்றிப் பேசும்போது மனதிற்கு ஒரு தனி சுகம்தான். அதை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி. சேலத்தைப் பற்றி மேலும் கூறுங்கள், தெரிந்துக் கொள்கிறோம்.

siva சொன்னது…

எனக்குM சேலம் பற்றி ஒண்ணும் இதுவரை தெரியாது (மாம்பழம் தவிர) உங்க மூலமா தெரிந்து KONDATHU MIKKA SANTHOSAM...

MEENDUM VARUKIREN.
NANDRI

DINESH.G சொன்னது…

naanum salem dhan

DINESH.G சொன்னது…

naanum salem dhan