ஜூலை 26, 2010

முடியுமா ???

வார்த்தைகளின் வீச்சை விட
மௌனத்தின் வீச்சு 
அதிகம் - உணர்ந்தேன்
இன்று ..

பெயரளவில்  கவிஞனாய் 
இருந்தேன் ...கவி பாட 
வைத்தது உன் நேசமே 

என்னை கவி பாட
வைத்து விட்டு - நீ
மௌனமானது ஏனோ ??

உயிருடன் இரண்டற
கலந்தாய் - பிரித்து
தர சொன்னால்
முடியுமா  ???

டிஸ்கி : கவிதையை மட்டும் ரசிக்கவும். இவை அனைத்தும் கல்லூரி நாட்களில் எழுதப்பட்டவை


With Love LK

59 கருத்துகள்:

dheva சொன்னது…

கவிதை.. நல்லா இருக்கு பாஸ்...! யாரு சொன்னா கல்லூரி நாட்கள் மட்டும்தான் கவிதை எழுதணும்னு....ஹா...ஹா...ஹா.... நாம எல்லாம் சாகுற வரைக்கும் கவிதையோட காதலோட இருப்போம் பாஸ்!

kavisiva சொன்னது…

என்னா ஃபீலிங்ஸு! நல்லாருக்கு எல்கே

Balaji saravana சொன்னது…

//என்னை கவி பாட
வைத்து விட்டு - நீ
மௌனமானது ஏனோ//

எனக்கு பிடித்த வரிகள்..
கவிதை நல்லா இருக்கு LK..

நட்புடன்,
பாலாஜி

பெயரில்லா சொன்னது…

//டிஸ்கி : கவிதையை மட்டும் ரசிக்கவும். இவை அனைத்தும் கல்லூரி நாட்களில் எழுதப்பட்டவை//
எங்களால அது முடியாதே :)

சௌந்தர் சொன்னது…

கவிதையை மட்டும் ரசிக்கவும். இவை அனைத்தும் கல்லூரி நாட்களில் எழுதப்பட்டவை//

கவிதை படிக்க வரும் எங்களை இப்படியா மிரட்டுவது(:

அமைதிச்சாரல் சொன்னது…

சின்ன அம்மிணி said...
//டிஸ்கி : கவிதையை மட்டும் ரசிக்கவும். இவை அனைத்தும் கல்லூரி நாட்களில் எழுதப்பட்டவை//
எங்களால அது முடியாதே :)//

கன்னாபின்னான்னு ரிப்பீட்ட்ட்ட்டேய் :-)))

பெயரில்லா சொன்னது…

"டிஸ்கி : கவிதையை மட்டும் ரசிக்கவும். இவை அனைத்தும் கல்லூரி நாட்களில் எழுதப்பட்டவை"

ஒ.கே கார்த்தி நான் ரசித்தேன் போதுமா ..

அருண் பிரசாத் சொன்னது…

பெரிய கவிஞர் ஆகிட்டீங்க. இன்னும் என்ன என்ன ஒளிச்சி வெச்சிருக்கீங்க தல

அருண் பிரசாத் சொன்னது…

நம்ம பக்கம் வந்து ரொம்ப நாள் ஆகுது, வந்து Attendance போட்டுட்டு போங்க

பத்மநாபன் சொன்னது…

முடியுமா???..கதையில்லாமல் கவிதையை மட்டும் ரசிக்கமுடியுமா???

ப.செல்வக்குமார் சொன்னது…

எப்பூடிஎல்லாம் எழுதிருக்காங்க ...??
நல்லா இருக்குங்க ..!!

Harini Sree சொன்னது…

ahem ahem disci pota nambidanuma?? :P Kavithai miga arumai!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ரசித்தேன். :) நன்றாக இருந்தது.

Riyas சொன்னது…

//என்னை கவி பாட
வைத்து விட்டு - நீ
மௌனமானது ஏனோ ??// ம்ம்ம்

rk guru சொன்னது…

என்னமோபோங்க....நானும் ஒரு கவிதை பதிவு போடணும் பார்கிறேன் கவிதைதான் வரமாட்டங்குது....உங்களுக்கு மட்டும் எப்படி...அது அப்படிதான்ள்ள...

LK சொன்னது…

@தேவா

நன்றி பாஸ். உண்மைலயே இது கல்லூரி நேரத்தில் எழுதியவை தான் . அது ஒரு வசந்த காலம்

LK சொன்னது…

@கவிசிவா
நன்றி பாஸ்

LK சொன்னது…

@பாலாஜி

கருத்துக்கு நன்றி பாலாஜி

LK சொன்னது…

@அம்மிணி
முடியனும், .. வருகைக்கு நன்றி

LK சொன்னது…

@சௌந்தர்
யாருங்க மிரட்டினா ?

LK சொன்னது…

@சாரல்
உங்களுக்கும் அதே பதில்தான்

LK சொன்னது…

@சந்த்யா

குட். நன்றி

LK சொன்னது…

@அருண்

ஏன் இந்த கொலை வெறி ? கண்டிப்பா சீக்கிரம் வரேன் பாஸ்

LK சொன்னது…

@பத்மநாபன்

முடியுமே ?

@செல்வக்குமார்

கையாலத்தான் எழுதினேன்

LK சொன்னது…

@ஹரிணி
நீயுமா ?? நன்றி

LK சொன்னது…

@ரியாஸ்

நன்றி

@குரு
ஹஹாஹ் . நன்றி

Mrs.Menagasathia சொன்னது…

//வார்த்தைகளின் வீச்சை விட

மௌனத்தின் வீச்சு
அதிகம் - உணர்ந்தேன்
இன்று ..// உண்மைதான்..மிகவும் ரசித்த வரிகள்..நல்லாயிருக்கு எல்கே...

தமிழ் உதயம் சொன்னது…

எப்போது எழுதி இருந்தால் என்ன. இப்போது படிக்கவும் நன்றாக உள்ளது.

Ananthi சொன்னது…

Nice Kavithai

ஹேமா சொன்னது…

காதலின் உணர்வு
அழுத்தமாயிருக்கு கார்த்திக்.

தெய்வசுகந்தி சொன்னது…

//உயிருடன் இரண்டற
கலந்தாய் - பிரித்து
தர சொன்னால்
முடியுமா ???
//
யாருங்க அது? :-))!!!!!!!!!!

அப்பாவி தங்கமணி சொன்னது…

//என்னை கவி பாட
வைத்து விட்டு - நீ
மௌனமானது ஏனோ ??//

simply superb karthi...esp these lines

கீதா சாம்பசிவம் சொன்னது…

எல்லாக் கவிதையும் படிச்சாச்

கீதா சாம்பசிவம் சொன்னது…

//டிஸ்கி : கவிதையை மட்டும் ரசிக்கவும். இவை அனைத்தும் கல்லூரி நாட்களில் எழுதப்பட்டவை//
எங்களால அது முடியாதே :)

ஹிஹிஹி அதே அதே சபாபதே

jothi சொன்னது…

"வார்த்தைகளின் வீச்சை விட
மௌனத்தின் வீச்சு
அதிகம் - உணர்ந்தேன்
இன்று"


நல்ல வரிகள் வெல்வதற்கு சிறந்த ஆயுதம் "மௌனம்" ,.

Kousalya சொன்னது…

//என்னை கவி பாட
வைத்து விட்டு //

உங்களை கவியாய் மாற்றிய அந்த யாரோவுக்கு நன்றிகள் பல.

அருமையான கவிதை தொடர்ந்து எழுதுங்கள்....

சுசி சொன்னது…

மலரும் நினைவுகள்??

நல்லாருக்கு..

Chitra சொன்னது…

டிஸ்கி : கவிதையை மட்டும் ரசிக்கவும்.


.....அங்கே போஸ்ட்ல கவிதை மட்டும் தான் இருந்தது.... ரசித்தேன்.... ரஜினி படம் இல்லையே..... விசிலும் சேர்த்து அடிக்க.... ஹா,ஹா,ஹா,ஹா....

vanathy சொன்னது…

LK, super!!

LK சொன்னது…

@மேனகா

நன்றிங்க

LK சொன்னது…

@தமிழ் உதயம்

படிக்க நல்ல இருக்குதா ?? நன்றிங்க

LK சொன்னது…

@ஆனந்தி
நன்றிங்க

LK சொன்னது…

@ஹேமா

ஹ்ம்ம்.. ஆமாம். மிக மிக அழுத்தமாய் இருக்கும்

LK சொன்னது…

@தெய்வ சுகந்தி

நீங்க டிஸ்கி படிக்கலையா ???

LK சொன்னது…

@கீதா மாமி

:)))

LK சொன்னது…

@ஜோதி
ஓஹ்ஹோ அப்படியா விஷயம்,

LK சொன்னது…

@கௌசல்யா

கண்டிப்பா எழுதுகிறேன் :)))

LK சொன்னது…

@சுசி

அப்படியும் சொல்லலாம் .. நன்றிங்க

LK சொன்னது…

@சித்ரா

அடுத்த முறை தலைவர் படம் போட்டுவிடுகிறேன், நன்றி

LK சொன்னது…

@வாணி

நன்றிங்க

Karthick Chidambaram சொன்னது…

உங்க வீட்ல படிச்சுட்டாங்களா ? கல்லூரி நாட்களில் யாருக்கு எழுதியது ?

ஜெய்லானி சொன்னது…

கவிதை சூப்பர்
டிஸ்கி சூப்பரோ சூப்பர்....((எல்லாம் ஒரு சேஃப்டிக்குதானே ))

ஸ்ரீராம். சொன்னது…

வார்த்தைகளின் வீச்சை விட
மௌனத்தின் வீச்சு அதிகம் - உணர்ந்தேன்
இன்று .//


சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.... நல்ல கவிதை.(டிஸ்கி எனக்காகத்தானே..!)

asiya omar சொன்னது…

”கல்லூரி நாட்களில் எழுதப்பட்டவை.”

இப்பக்கூட எழுதலாமே! எல்.கே.

LK சொன்னது…

@கார்த்திக்
படிச்சிட்டாங்க .. நன்றி

LK சொன்னது…

@ஜெய்
ஹிஹி. கவலை வேண்டாம். நான் ஜல்லி கரண்டி அனுப்ப மாட்டேன்

LK சொன்னது…

@ஸ்ரீராம்

"உங்களுக்கும் " சேர்த்து .. நன்றி

LK சொன்னது…

@ஆசியா

எழுதலாம். யாரை நினைத்து எழுதுவது (ச்சும்மா ஒரு பேச்சுக்கு )

சே.குமார் சொன்னது…

//என்னை கவி பாட
வைத்து விட்டு - நீ
மௌனமானது ஏனோ ??//

கவிதை நல்லா இருக்கு LK..