மே 25, 2010

பதிவுலகம் - ஒரு பார்வை

நண்பர் திரு ராஜன் அவர்கள், புதியதாக வலைப்பூ ஆரம்பிப்பதை பற்றி ஒரு பதிவு போடுமாறு கேட்டிருந்தார். அவர் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பதிவு.

வலைப்பூ :

   இது உங்களுக்காக உங்களால் தொடங்கப்படும் ஒரு தளம். இதில் நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். இதுதான் எழுத வேண்டும், இப்படித்தான் எழுத வேண்டும் என்று எந்த வித வரைமுறைகளும் இல்லை. உங்களுக்கு என்ன எழுத விருப்பமோ அதை எழுதித் தள்ளலாம். பன்னீர் சோடா பற்றிகூட எழுதலாம். என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதற்க்கு வரும் பின்னூட்டங்களை சரியான முறையில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். கருத்துகளுக்கு மட்டும் பதில் கருத்து சொல்லுங்கள். எந்த நிலையிலும் தனிப் பட்ட ஒருத்தரை தாக்கி பதிவு எழுதுவதோ அல்லது பின்னூட்டம் இடுவதோ வேண்டாம். அவை நாகரீகமற்றவை என்பது என் கருத்து.

வலைப்பூ வசதி தரும் தளங்கள்

   எண்ணற்ற இணையத்தளங்கள் இலவச வலைப்பூ தொடங்கும் வசதி அளித்தாலும் ,மிக அதிகமானோர் உபயோகிப்பது கூகிள் அளிக்கும் ப்ளாகர் மற்றும் வோர்ட்ப்ரஸ் அளிக்கும் இலவச வலைப்பூக்களே.

  கூகிள் அளிக்கும் வலைப்பூ வசதியை பெற உங்களிடம் கூகிள் ஐடி இருந்தால் போதுமானது . https://www.blogger.com/start தளத்திற்கு சென்று நீங்கள் உங்களுக்கென ஒரு வலைப்பூ தொடங்கலாம். அதேப்போல் வோர்ட்ப்ரஸ் சேவையைப் பெற நீங்கள் செல்லவேண்டிய  தளம் http://wordpress.com/ . இதில் முதலில் இரண்டு விஷயங்கள் கவனிக்க வேண்டும். ஒன்று உங்கள் ப்ளாக்கு என்னப் பெயர் வைப்பது மற்றும் முகவரி. ப்ளாக் பெயர் வைக்கறதுதான் கஷ்டமான விசயம். நீங்க ரொம்ப யோசிச்சு ஒரு பெயர் வச்சிருப்பீங்க. சில நாள் கழிச்சு பார்த்த ஏற்கனவே அதே பெயரில் வேறு ஒரு வலைப்பூ இருக்கும். இப்ப உங்க வலைப்பூ பேர மாத  வேண்டி இருக்கும். அதனால கொஞ்சம் கவனமா பெயர முடிவு பண்ணுங்க. (நான் ரொம்ப நாள் கழிச்சுதான் என் எண்ணங்கள்னு இன்னொரு வலைப்பூ இருக்குனு தெரிஞ்சிகிட்டேன் ).

திரட்டிகள் :

    பதிவுகளை திரட்டி நமக்கு தரதுதாங்க இந்த திரட்டிகளோட வேலை. இப்ப தமிழ்ல நிறைய திரட்டிகள் இருக்கு, இதுல அதிகப் பெயரால் உபயோகிக்கப் படுவது தமிழ்மணம் மற்றும் தமிழிஷ். இதுல உங்க வலைப் பூக்களை இணைப்பதால் நிறைய பேர் உங்கள் பதிவுகளைப் படிக்க வாய்ப்பு உள்ளது.

பின்னூட்டங்கள் :

 உங்க பதிவை படிப்பவர்கள் அவர்களது கருத்தை சொல்லுவது இந்தப் பின்னூட்டங்கள் மூலம்தான். முடிந்தவரை அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் பதில் அளியுங்கள்.அதேப் போல் மாற்றுக் கருத்து சொல்லி இருந்தால் ,அதற்க்கு மட்டும் பதில் சொல்லுங்கள், மாற்றுக் கருத்து சொல்பவரை தாக்கி பதில் சொல்லாதீர்கள். அதேப்போல் பின்னூட்டங்களுக்கு மட்டுறுத்தல் வசதி அவசியம். தேவையற்ற கருத்துக்களை இதன் மூலம் தவிர்க்கலாம்.

எனக்குத் தெரிந்த விசயங்களை சொல்லி விட்டேன்.  எதாவது விடுபட்டிருந்தால் நீங்கள் சொல்லுங்கள்.

45 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

// மாற்றுக் கருத்து சொல்லி இருந்தால் ,அதற்க்கு மட்டும் பதில் சொல்லுங்கள், மாற்றுக் கருத்து சொல்பவரை தாக்கி பதில் சொல்லாதீர்கள். //

எல்லார் மண்டைலயும் இது ஏறாது. :)

அநன்யா மஹாதேவன் சொன்னது…

நல்ல பதிவு கார்த்திக். எவ்வளவோ பேர் படிக்கறாங்க. அவங்களுக்கு எழுத ஒரு தூண்டுகோலா அமையும். நல்ல கருத்துக்கள். மிக நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்.

dheva சொன்னது…

கார்த்திக்..... நல்ல காரியம் செஞ்சீங்க...! கேக்குறவங்க எல்லாருக்கும் உங்க வலைப்பூ முகவரியை கொடுத்திடுறேன்.......

இன்னும் கொஞ்ச நாள்ல வீட்டுக்கு 6 பேர் வலைப்பூ வைத்திருப்பார்கள். இதன் கூட ஒரு செய்தியையும் சொல்ல விரும்புகிறேன் கார்த்திக்....புதுசா வலைபூ தொடங்குபவர்கள் சமுதாயத்தில் இருக்கும் இழி நிலையைய் போக்கும் வகையிலும், சாதாரண மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையிலும்...

" நாமார்க்கும் குடியல்லோம்...
நமனை அஞ்சோம் "

என்கிற ரீதியில் ஒவ்வொரு வலைப்பூவும் கொளுந்து விட்டு எரிந்து நல்லதொரு சமுதாயம் காண வழிவகுக்கும் வரையில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

கார்த்தியின் இந்த பதிவு மூலம் புது வலைப்பூ தொடங்க இருக்கும் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்!

ஸ்ரீராம். சொன்னது…

இதுக்கு வோட்டுப் போடாம வேற எதுக்கு போடறது...இல்லையா?!
உபயோகமான பதிவு.

கண்மணி/kanmani சொன்னது…

விடுபட்டது..

...பின்னூட்டமே வரலைன்னாலும் நாம பாட்டுக்கு எதையாவது எழுதிக் கிட்டே இருக்கும் தைரியம் வேனும்..
அதுக்கு பேர்தான் பதிவு
இங்கேயும் பாலிடிக்ஸ் உண்டு அதையும் எதிர் கொள்ளனும்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

உங்களின் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் !
உங்களின் கருத்துக்களுக்கு என் நன்றிகள் !

SathyaSridhar சொன்னது…

Nalla pathivu LK. Ella idathulaium oru ethirppu irukkum maraimuga thaakuthalum irukkum athai samaalikkanum.

பெயரில்லா சொன்னது…

சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளீர்கள்; பலருக்கும் பயன்படும்.

- அ. நம்பி

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உபயோகமான ஒரு பதிவு. பலர் புதிய வலைப்பூ ஆரம்பிக்கத் தயங்குவதற்கு முக்கிய காரணமே இவ்விஷயங்கள் அறியாதது தான்.

வாழ்த்துக்கள்.

கீதா சாம்பசிவம் சொன்னது…

பின்னூட்டமே வரலைன்னாலும் நாம பாட்டுக்கு எதையாவது எழுதிக் கிட்டே இருக்கும் தைரியம் வேனும்..
அதுக்கு பேர்தான் பதிவு
இங்கேயும் பாலிடிக்ஸ் உண்டு அதையும் எதிர் கொள்ளனும் //

ஹிஹிஹி, என்னைப் பாராட்டி இருக்கீங்க, நன்னிங்கோ!

கீதா சாம்பசிவம் சொன்னது…

முக்கியமா அந்தப் பன்னீர் சோடாவுக்கு லிங்க் கொடுத்தீங்க இல்லை, அங்கே தான் நீங்க உட்கார்ந்துக்கறீங்க, (எத்தனை நாளைக்கு நிக்கறீங்கனே சொல்றது? :P)

கீதா சாம்பசிவம் சொன்னது…

தாத்தா, உபயோகமான விஷயங்களைச் சொல்றீங்க, நன்னிங்கோ.

Mrs.Menagasathia சொன்னது…

உபயோகமான பதிவு!!

LK சொன்னது…

@அம்மிணி
கேக்கறவங்க கேக்கட்டும்
வருகைக்கு நன்றி

@அனன்யா
வாழ்த்துகளுக்கு நன்றி

@தேவா
ரொம்ப நன்றி தேவா
@ஸ்ரீராம்
ரொம்ப நன்றி

LK சொன்னது…

@ஷங்கர்

நன்றிங்க

@சத்யா ஸ்ரீதர்
சரியாய் சொன்னேங்க . நன்றி

@நம்பி
முதல் வரவுக்கு வருகைக்கும் நன்றி

@நாகராஜ்
வாழ்த்துக்களுக்கு நன்றி

LK சொன்னது…

@பாட்டி

நான் உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் போடறேன் மறந்தாச்சா சரி இல்ல

நன்றி

@மேனகா

நன்றிங்க

Chitra சொன்னது…

Useful one!

பெயரில்லா சொன்னது…

//இப்படித்தான் எழுத வேண்டும் என்று எந்த வித வரைமுறைகளும் இல்லை//

வரைமுறைகள் இல்லயென்ற கரணியத்தால் எதையும் எழுதிவிடலாமென நினைப்பது சரியா?

தனக்குத்தானே ஒரு வரைமுறைகள் வைத்துக்கொள்வதே சரி.

soundar சொன்னது…

நானும் என்னடைய ப்ளாக் க்கு வெச்ச பெயர் ஏற்கனவே இருக்குனு அப்புறம் தான் தெரிந்து கொண்டேன்

அமைதிச்சாரல் சொன்னது…

நல்லா சொல்லியிருக்கீங்க. நாம எழுதறது யாருக்காவது கொஞ்சம் உபயோகப்பட்டாலே போதும்.

//பின்னூட்டமே வரலைன்னாலும் நாம பாட்டுக்கு எதையாவது எழுதிக் கிட்டே இருக்கும் தைரியம் வேனும்..
அதுக்கு பேர்தான் பதிவு//

நெத்தியடி.. இதுக்கு ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்.

Jaleela சொன்னது…

மிகச்சரியாக சொல்லி இருக்கீங்க
நானுமே இத பற்றி பதிவு போடனும் என்று நினைத்து இருந்தேன்.

பயனுள்ள பகிர்வு

அப்பாவி தங்கமணி சொன்னது…

Super LK. நல்ல உபயோகமான பதிவு... ப்ளாக் டாக்டர் LK வாழ்க (எனக்கு கதை கவிதை தவிர ஒண்ணுமே தோன்றதில்லியே... இதுக்கு எதுனா வைத்தியம் இருந்தா சொல்லுங்க பிரதர்)

vanathy சொன்னது…

எல்கே, நல்ல பதிவு. கோபமாக இருக்கும் போது பின்னூட்டங்களுக்கு பதில் போடாமல் இருப்பது நலம்.

எல்கே, நீங்கள் இத்தனை ப்ளாக் வைத்திருந்தால் எனக்கெப்பூடி தெரியும். ஏதோ தடுமாறி வந்து சேர்ந்தேன்.

பட்டாபட்டி.. சொன்னது…

யூஸ்புல் பதிவு...

Krishnaveni சொன்னது…

useful information to all...must read topic. well done LK.

LK சொன்னது…

@கண்மணி
விடுபட்டதை சொன்னதற்கு நன்றி

@ஜோ
அது தனிப்பட்ட ஒழுக்கம். அதைப் பற்றி நான் பேசவில்லை இங்கு.

#சாரல்

சரிதான்..

@சித்ரா
நன்றி

@சௌந்தர்

எங்கயும் அதே கதைதான்

@ஜலீலா

நன்றிங்க . நீங்களும் எழுதுங்க.

@வானதி

மொத்தம் மூன்று ப்ளாக்தான் வைத்து இருக்கிறேன்,.இது மட்டும்தான் தினமும் அப்டேட் ஆகும்.. நன்றிங்க

@அப்பாவி தங்ஸ்
இந்த கிண்டல் வேண்டாம். நானே என்ன எழுதறதுன்னு தெரியாம இத எழுதினேன் இன்னிக்கு

@பட்டாப்பட்டி

நன்றி

@கிருஷ்ணவேணி

நன்றிங்க

LK சொன்னது…

//ப்ளாக் டாக்டர் LK வாழ்க //

நன்றி

asiya omar சொன்னது…

தேவையான பகிர்வு.இலகுவாக விளங்கும் படி கொடுத்து இருப்பது சிறப்பு.

தக்குடுபாண்டி சொன்னது…

பன்னீர் சோடா matter suuuuuuper...;PP

காரட் சாதம், உப்புமா பத்தியும் எழுதலாம் இல்லையா?? (திரட்டிப்பாலும்தான்( நான் என்னை சொன்னேன்!)...:))

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

சூப்பர் பதிவுங்க .... நான் குடிக்கிறது பன்னீர் சோடா இல்லை....பாருங்களேன் இங்க
http://trichisundar.blogspot.com/2010/05/blog-post_23.html

அக்பர் சொன்னது…

உபயோகமான பதிவு.

ஜெயந்தி சொன்னது…

புதிதாக பதிவு தொடங்க வேண்டும் நினைப்பவர்களுக்கு உபயோகமான வேலை செய்து கொடுத்துள்ளீர்கள்.

LK சொன்னது…

@ஆசியா
நன்றி சகோதரி

@தக்குடு
:))

@அது ஒருக் கனா காலம்
படித்தேன்

@அக்பர்
நன்றி
@ஜெயந்தி
தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

asiya omar சொன்னது…

யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்கில் இந்த பதிவு வந்திருக்கு.வாழ்த்துக்கள்.

LK சொன்னது…

நன்றி சகோதரி இதை எனக்குத் தெரியப் படுத்தியதற்கு

Harini Sree சொன்னது…

Migavum ubayogamana pathivu! :)

ஜெய்லானி சொன்னது…

//என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதற்க்கு வரும் பின்னூட்டங்களை சரியான முறையில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.//

சரியா சொன்னீங்க!!பொதுவா யார் படிச்சாலும் அது முகம் சுளிக்கிற மாதிரி இருக்கக்கூடாது , இது ஒன்னே போதும்

நல்ல பதிவு...

vanathy சொன்னது…

எல்கே,
//மொத்தம் மூன்று ப்ளாக்தான் வைத்து இருக்கிறேன்,.இது மட்டும்தான் தினமும் அப்டேட் ஆகும்.. நன்றிங்க//

அப்படியா??? நான் இது தெரியாமல் உங்கள் மற்ற ப்ளாக்கில் போய் தினமும் சாமி கும்பிட்டுகிட்டு இருக்கேன்.

rajan சொன்னது…

//நண்பர் திரு ராஜன் அவர்கள், புதியதாக வலைப்பூ ஆரம்பிப்பதை பற்றி ஒரு பதிவு போடுமாறு கேட்டிருந்தார். அவர் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பதிவு.//
நன்றி கார்த்திக்,
தங்களது இந்த பதிவின் மூலம் நிச்சயமாக வலைப்பூ உலகத்தில் பல பேர் பயனடைவார்கள். எனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை இந்த பதிவு கொடுத்துள்ளது. "யூத் விகடனின்" அங்கீகாரத்திற்கு பாராட்டுகள்.
தொடரட்டும் உங்கள் சேவை...

LK சொன்னது…

@ஜெய்

சரிதான். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பின்னூட்டம் இடுவதை தவிர்க்கலாம்
நன்றி

@வானதி
:)

@ராஜன்
எனக்கு இந்த வாய்ப்புக் கொடுத்ததுக்கு நன்றி

ஜோதிஜி சொன்னது…

உங்கள் கருத்துக்களும் வந்துள்ள விமர்சனங்களும் என்னை நானே திரும்பி பார்ப்பது போல் இருக்கிறது.

முக்கியமாக தைரியம், தாளில் எதையாவது கிறுக்குவதைப் போல எழுதத் தொடங்கி சற்று உற்று நோக்கி பின்னார் உள்வாங்கி.

உணர்ந்து கொள்பவர்கள் நிச்சயம் பின்தொடர்வார்கள்.

எழுதுபவர்க்கு நீங்கள் சொன்ன நோக்கம் முக்கியமானது?

Geetha6 சொன்னது…

வாழ்த்துகள்!

LK சொன்னது…

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி geetha6

அமுதா கிருஷ்ணா சொன்னது…

நல்ல பதிவு..

பெயரில்லா சொன்னது…

Very nice Advise and useful info.., to new Blog creators!