Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

மறந்த கதை

வாழ்க்கையில் நாம நெறைய தொலைக்கறோம் .சில பேரு வாழ்க்கையே தொலைக்கறாங்க(தத்துவம் ..) சில பொருட்கள் தொலைஞ்சி  உடனே கிடைக்கும் சிலது கிடைக்கவே கி...

வாழ்க்கையில் நாம நெறைய தொலைக்கறோம் .சில பேரு வாழ்க்கையே தொலைக்கறாங்க(தத்துவம் ..) சில பொருட்கள் தொலைஞ்சி  உடனே கிடைக்கும் சிலது கிடைக்கவே கிடைக்காது .  நாம தொலைச்சிட்டோம்னு நினைக்கிற பொருள் திரும்பி கிடைச்சா எப்படி இருக்கும் ?

2007 ஆம் வருடம் சேலத்துக்கு போறதுக்கு கிளம்பிகிட்டு இருந்தோம் ( நான் + தங்கமணி). 9  மணிக்கு ட்ரெயின். அன்னிக்குன்னு பார்த்து ஆபிஸ்ல நெறைய ஆணி புடுங்க வேண்டி இருந்துச்சி. எப்பவும் இப்படித்தான் நமக்கு வீட்ல வேலை இருக்குனா அன்னிக்கு  ஆபிஸ்ல நெறைய ஆணி இருக்கும் புடுங்க. நான் வீட்டுக்கு வந்தப்பவே மணி ஏழு. அவசர அவசரமா ரெடியாகி வீட்டை பூட்டினப்ப மணி 8 . அன்னிக்குன்னு பார்த்து ஆட்டோவும் கிடைக்கல.எனக்கோ டென்ஷன் . 

 
ஒரு வழியா ஆட்டோ பிடிச்சு சென்ட்ரல் போனப்ப மணி 8 .55 . அங்க இருந்த கூட்டத்துல நுழைஞ்சு பிளாட்பார்ம் போனா ட்ரெயின் கிளம்ப சிக்னல் போட்டாச்சு. தமிழ் படத்துல கிளைமாக்ஸ்ல ஹீரோ ஓடற மாதிரி ஓடி ஏறி உக்காந்தாச்சு. இப்பதான் அடுத்த டென்ஷன் . சேலத்துக்கு போன் பண்ணி கிளம்பிட்டோம்னு சொல்றதுக்காக தங்கமணி செல்போன தேடினாங்க. அப்பதான் செல்போன காணோம்னு தெரிஞ்சது.


உடனே என்கிட்டே உங்ககிட்டதான கொடுத்தேன் எங்க வச்சீங்கன்னு ஒரு கேள்வி. (அதெப்படி இவங்க தொலைக்கற எல்லா பொருளையும்  ரங்கமணிகிட்டயே கொடுத்தேன்னு சொல்றாங்க ??). எனக்கோ செல்போன தொலைச்சிட்டா ஊர்ல இருந்து வந்துடனே எவ்வளவு செலவோனு கணக்கு ஓடிகிட்டு இருக்கு . என் செல்போன்ல இருந்து கால் பண்ணி பார்த்தா ரிங் போகுது  ஆனா யாரும் எடுக்கல. அப்போதைக்கு ஒண்ணும் பண்ண முடியாது தொலைஞ்சது தொலைஞ்சதுதான் ஊருக்கு போயிட்டு வந்து பார்த்துக்கலாம்னு சேலம் போயாச்சு .(வேற என்ன பண்ண ?).

ரெண்டு நாள் கழிச்சு ஊருக்கு வந்த, வீட்டு ஓனர் "இது உங்க செல்போனா ? கொஞ்சம் பாருங்கன்னு" கொடுக்கறார் .உங்களுக்கு எப்படி கிடைச்சதுன்னு கேட்டா அவர் ரொம்ப கூலா உங்க ஜன்னல் மேல இருந்துச்சி . நீங்க கிளம்பரப்பவே பார்த்தேன் . அவசரமா போறவங்கள ஏன் தடுக்கணும்னு சொல்லலைன்னு சொல்றார். கஷ்டப்பட்டு ஒரு புன்னகையோட (மவனே உன்னை... ) தேங்க்ஸ் சொல்லிட்டு தங்கமணிய ஒரு பார்வை பார்த்தேன். அவங்களோ ஒண்ணுமே நடக்காதது மாதிரி ஒரு பார்வை பாக்கறாங்க. 

அப்புறமா ஏம்மா நீ மறந்து போய் வச்சிட்டு என்னை குற்றம் சொன்னியே இது நியாயமானு கேட்டா அதான் திரும்ப கிடைச்சிருச்சே  ஏன் இப்ப டென்ஷன் ப்ரீயா விடுங்கன்னு ஒரு பதில் . நான் என்னத்த சொல்ல ????? அப்ப அந்த போன் கிடைக்காம போயிருந்தா நான்தான் குற்றவாளி . என்ன கொடுமை இது ????

41 கருத்துகள்

vinothamanavan சொன்னது…

HEEE HEEE......HELLO NEENGA THAANE JANNAL MELA VACHATHU....

என்றும் அன்புடன் உங்கள் ராஜா சொன்னது…

என்ன LK உங்க சொந்த கதை மாதிரி தெரியுது.....பரவாயில்ல, நல்லா ஒரு சிறுகதை படிச்சா மாதிரி இருக்கு....

பித்தனின் வாக்கு சொன்னது…

செல்போன் தொலைந்த அவஸ்த்தையை இன்னமும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருந்தால் நல்லா இருக்கும், பதிவுக்கும் ஒரு விறுவிறுப்பு இருக்கும்.

இப்படித்தான் பயணங்களில் எதாவது ஒன்றை தொலைத்து விட்டு, அந்த பிராயண சுகத்தையே மறந்து விடுவார்கள். தங்கமணி தொலைத்து விட்டால் அப்பா இரங்கமணி கொடுக்கும் அட்வைஸ் மழை இருக்கின்றதே அய்யே.

அதுவே இரங்கமணி தொலைத்து விட்டால் தங்கமணியின் வாய் ஓயாமல் போடும் புலம்பல் இருக்கே சாமி ஆளை விடுரான்ற கண்டிசனில் இருக்கும்

நல்ல பதிவு. செல்போன் கிடைத்தால் கீதாம்மாவைப் பொங்கலும், அனன்யா அம்மாவை கதம்பமும் செய்ய சொல்லி, சுதாகருக்கு(எனக்குத்தாம்பா) கொடுக்கின்றேன்னு வேண்டியிருந்தால் போன் அப்பவே கிடைத்து இருக்கும் அல்லவா?

பெசொவி சொன்னது…

//அப்ப அந்த போன் கிடைக்காம போயிருந்தா நான்தான் குற்றவாளி . என்ன கொடுமை இது ????
//

Why Blood, Same Blood!

எல் கே சொன்னது…

//vinothamanavan said...

HEEE HEEE......HELLO NEENGA THAANE JANNAL MELA VACHATHU.... //

ithu public place :D :D

எல் கே சொன்னது…

// என்றும் அன்புடன் உங்கள் ராஜா said...

என்ன LK உங்க சொந்த கதை மாதிரி தெரியுது.....பரவாயில்ல, நல்லா ஒரு சிறுகதை படிச்சா மாதிரி இருக்கு..../

சிறுகதையா நீங்க வேற நானே எதோ எழுதிகிட்டு இருக்கேன். இது சொந்த கதைதான்

எல் கே சொன்னது…

//பித்தனின் வாக்கு said...

செல்போன் தொலைந்த அவஸ்த்தையை இன்னமும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருந்தால் நல்லா இருக்கும், //

ரோம்பலாம் அவஸ்தை இல்லை. என்ன தங்கமணி அப்பதான் செல்போன் உபயோகிக்க ஆரமிசிருந்தாங்க

எல் கே சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Why Blood, Same Blood!//

:) varugaikku nandri sir

Ananya Mahadevan சொன்னது…

ஏய்,
அவசரத்துல உன் தங்க்ஸ் உன் கிட்டே தான் கொடுத்து இருக்கா.. நீ தான் வீட்டை பூட்டறதுக்கு ஃபோனை ஜன்னல்லே வெச்சு இருக்கே.. நைஸா அவ மேல பழியை போட்டுட்டு அப்பாவியா மூஞ்சியை வெச்சுண்டா உன்னை விட்டுட முடியுமா? அப்பாவி ரங்கமணின்ங்கற ஐடி ஏற்கனவே என் ரங்ஸ் எடுத்தாச்சு! க்ர்ர்... மாத்தா கீத்தானந்த மயி எங்கேய்யா? தள்ளுயா.. வரட்டும்..
தாயே.. நீயே சொல்வாய் ஞாயத்தை!

தக்குடு சொன்னது…

//தேங்க்ஸ் சொல்லிட்டு தங்கமணிய ஒரு பார்வை பார்த்தேன். அவங்களோ ஒண்ணுமே நடக்காதது மாதிரி ஒரு பார்வை பாக்கறாங்க.
//

கேட்டா அப்பாவி தங்கமணிகள் சங்கத்துல கம்பெளய்ண்ட் கொடுத்துவிடுவார்கள்....:)

நாமக்கல் சிபி சொன்னது…

கிடைச்சிடுச்சுல்ல! ஃப்ரீயா விடுங்க!

நாமக்கல் சிபி சொன்னது…

//செல்போன் தொலைந்த அவஸ்த்தையை இன்னமும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருந்தால் நல்லா இருக்கும், //

ரொம்ப அழுத்தினா செல்ஃபோன் உடைஞ்சிடாது?

egglesscooking சொன்னது…

Ennoda blog visit adichadhukku nandri boss. Tamizh la ezhudharadha? Yen tamizh mozhi nalla badiya irukkiradhu ungalukku pidikalaya? Comment ezhudharathukku tamizh la type adikaradhukulla enakku mel moochu keezh moochu vangudhu. Indha rangeukku naan tamizh la recipe ezhudhina, varushathukku oru recipe dhaan poda mudiyum.

Ananya katchi naan. Naan eppavum en rangamani kitta solluven. "unga kitta pesumbodhu video record pannikitte pesanumnu". Edhu sonnalum nee sollave illaiye, kudukka ve illaiye nu saadhikiradhu. Idhellam Rangamani Syndrome pola irukku.

எல் கே சொன்னது…

/egglesscooking said...//
மதுரம் ஆன்டி , ஒரு நாலு நாளைக்கு கஷ்டமா இருக்கும் அப்புறம் சரி ஆய்டும். ட்ரை பண்ணுங்க

SathyaSridhar சொன்னது…

Vanakkam LK,,EPDI SUGAMA...EN BLOG UKKU VANTHU ORU KEZHVI KETTU ATHUKKU APRAM ORU NALLA COMMENTAH KODUTHATHUKKU ROMBHA NANDRI THALAIVA,, EN VEETUKKAARARUKKU ROMBHA PIDICHA INIPPU PAA ATHU,,, ATHALA NEENGA BAYAPADAMA SEITHU SAAPDUNGA...INTHA MOBILE PHONE KADHAI ORU SIRUKATHAIYA ALLATHU ORU MEGA SERIAL EDUTHA EPDI IRUKUMNU NINAICHU PAARTHEN THALAI SUTHIDUCHU,,NALLA VAELAI NEENGA CLIMAX VARAIKKUM VANTHUTEENGA...

Porkodi (பொற்கொடி) சொன்னது…

ennanavo thonudhu.. onnum solla vendam nu mudivu panni, attendance potutu kilambaren boss! :)

சாந்தி மாரியப்பன் சொன்னது…

மேலே இருக்கிற மொபைல்போன்தான் காணாமபோய் கிடைச்சதா :-))))

எனக்கென்னவோ அனன்யா சொல்றதுதான் நடந்திருக்கும்ன்னு தோணுது. :-))))))))

Harini Nagarajan சொன்னது…

aamam intha post pota vishiyam manniku theriyuma?? :P

Harini Nagarajan சொன்னது…

//"unga kitta pesumbodhu video record pannikitte pesanumnu". //

Ithai naanum aamothikkiren! :P

vgr சொன்னது…

Hello LK,

Padithu agi vittadu :) Nicely written. Its extremely extremely difficult to safeguard cell phones.

ana unga house owner konjam over. Patha odane kodukarthukenna?

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

Cell phone ellam soothaanamaa vachikkonum..

engayo ketta madhiri irukka :P :P

:-)

எல் கே சொன்னது…

//அநன்யா மஹாதேவன் //

செல்லாது

எல் கே சொன்னது…

//கேட்டா அப்பாவி தங்கமணிகள் சங்கத்துல கம்பெளய்ண்ட் கொடுத்துவிடுவார்கள்....:)//

சரிதான் தக்குடு பேசாம அப்பாவி ரங்கமணிகள் சங்கம் ஒன்னு உன் அண்ணன் தலைமைல ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்

எல் கே சொன்னது…

//SathyaSridhar said...

NALLA VAELAI NEENGA CLIMAX VARAIKKUM VANTHUTEENGA...//

இதுக்கு தொடர்ச்சி இருக்கு ஆனா இப்ப வரது கொஞ்சம் நாள் கழிச்சி வரும்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

எல் கே சொன்னது…

//என்.ஆர்.சிபி said..
ரொம்ப அழுத்தினா செல்ஃபோன் உடைஞ்சிடாது?//

எப்படினே எப்படி

எல் கே சொன்னது…

//Porkodi (பொற்கொடி) said...

ennanavo thonudhu.. onnum solla vendam nu mudivu panni, attendance potutu kilambaren boss! :)//

நன்றி பொற்ஸ் ஏதுவ இருந்தாலும் நாம பேசி தீர்த்துக்கலாம்

எல் கே சொன்னது…

@சாரல்
காலம் கேட்டு போச்சு .ஒரு அப்பாவிய யாரும் நம்ப மட்டேங்கறேல்.
இதே மாடல். அந்த செல்போன் இப்பொழுது நிம்மதியாக உறங்கி கொண்டு இருக்கிறது என் குட்டி பொண்ணோட உபயத்தில்

எல் கே சொன்னது…

//Ananthi said...

Cell phone ellam soothaanamaa vachikkonum..

engayo ketta madhiri irukka :P :ப/

நாங்க சூதானமாதன் இருக்கோம். வீட்ல இருக்கவங்க இந்த மாதிரி
இல்லையே ...

@VGR

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸ்ரீராம். சொன்னது…

எப்படியோ பொருள் கிடைச்சுதே ...அதுவே சந்தோஷம்.

Jaleela Kamal சொன்னது…

ஹா ஹா இது அவசரத்தில் கிளம்பும் எல்லோருக்கும் நடப்பது, நிறைய பேர் பாக்கெட்டிலேயே வைத்து கொண்டு தேடியவர்கலும் உண்டு.

Geetha Sambasivam சொன்னது…

தாத்தா, நாங்க ஞாபகமா மறந்து வீட்டிலேயே வச்சுட்டுப் போவோம் செல்லை! ஹிஹிஹி, பழக்கம் இல்லையா அதான்!.

அது சரி தலைகீழாத் தொங்கறாரே விநோதமாய், செல்லைக் கொடுத்துடறது தானே அவ்ர் கிட்டே! :P

//க்ர்ர்... மாத்தா கீத்தானந்த மயி எங்கேய்யா? தள்ளுயா.. வரட்டும்..
தாயே.. நீயே சொல்வாய் ஞாயத்தை//

அதானே,
அநன்யா அக்கா, இதோ வந்துட்டேன், ஒரு ரெண்டு நாளைக்குத் தலையைக் காட்டலைனா இப்படியா பயமுறுத்தறது தாத்தா? அப்புறம் அநன்யா அக்கா, இந்த க்ர்ர்ர்ர்ர்ர், நறநற,:P., அ.வ.சி. வி.வி.சி. எல்லாத்துக்கும் ராயல்டி உண்டுட்டளா???

Priya சொன்னது…

உங்க "மற‌ந்த கதை" நல்லா இருக்குங்க!

எல் கே சொன்னது…

//ஸ்ரீராம். said...

எப்படியோ பொருள் கிடைச்சுதே ...அதுவே சந்தோஷம்.//
:)

எல் கே சொன்னது…

@ஜலீலா

சரிதான். அந்தமாதிறியும் நடக்கும்

@கீதா பாட்டி

நல்ல பழக்கம்

எல் கே சொன்னது…

@பிரியா

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெஸ்வந்தி - Jeswanthy சொன்னது…

உங்க கதை நல்லா இருக்குங்க!

எல் கே சொன்னது…

// ஜெஸ்வந்தி said...

உங்க கதை நல்லா இருக்குங்க!///

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெஸ்வந்தி ...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

சந்தடி சாக்குல தமிழ் பட ஹீரோனு சொல்லிக்கிட்டாச்சு...ம்.... நடக்கட்டும் நடக்கட்டும்

அது ஏன் உங்க தங்கமணி அப்படி சொல்றாங்கன்னா default ஆ எப்பவும் ரங்கமணிக தான் தப்பு செய்வீங்க... அந்த flow ல சொல்லிட்டாங்க... free யா விடுங்க பிரதர்

எல் கே சொன்னது…

@அப்பாவி

பண்ற தப்புலாம் பண்ணிட்டு ரங்கஸ் மேல பழிய போடறது

ஹுஸைனம்மா சொன்னது…

//அப்ப அந்த போன் கிடைக்காம போயிருந்தா நான்தான் குற்றவாளி . என்ன கொடுமை இது ????//

இத அங்க சொல்லி புலம்ப முடியாததால, இங்க எங்ககிட்ட புலம்பி ஆத்திக்கலாம்னு நெனச்சீங்களோ? இங்க கிடைக்கிற குட்டுகளைப் பாத்து நொந்து, இதுக்கு அங்கயே புலம்பிருக்கலாம்னு நெனக்க வேண்டி வரும், ஜாக்கிரதை!!

2007ல நடந்ததியே இன்னும் நெனச்சு புலம்பறதைப் பாத்தா, அதுக்கப்புறம் பல்பே கெடக்கலையா இல்ல இதான் துவக்கமா?

எல் கே சொன்னது…

ஹுசைனம்மா , கல்யாணம் ஆகி தங்கமணி சென்னைக்கு வந்த புதுசல நடந்தது . அதனால மறக்க முடியாது


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி