சேலத்தில எனக்கு பிடிச்ச பல விஷயங்கள் உண்டு. அந்த பரபரப்பு இல்லாத வாழ்க்கை , ஓரளவு சுத்தமான காற்று (சென்னை கூட ஒப்பிட்டு பார்த்தால் ) மற்றும...
அதுல குறிப்பா சொல்ல வேண்டிய ஒண்னு தட்டுவடை செட் மற்றும் பொரி. எனக்கு தெரிஞ்சு இந்த தட்டுவடை செட் சென்னைல கிடைக்கறது இல்லை. இதை செய்யறது ரொம்ப சுலபம்.
தேவையான பொருட்கள் :
தட்டு வடை - வேண்டிய அளவு
காரட் - 2(துருவியது)
பீட்ரூட் - 2(துருவியது)
தேங்காய் அல்லது புதினா சட்னி (கெட்டியா அரைச்சது )
செய்முறை :
தட்டுவடை செட் செய்யறது ரொம்ப சுலபம். முதல்ல காரட் அண்ட் பீட்ரூட் துறுவல கலந்துருங்க .ஒரு தட்டுவடை எடுத்துகோங்க. கொஞ்சம் சட்னிய அதில தடவுங்க . இப்ப கலந்து வச்ச துருவலை கொஞ்சம் அந்த தட்டுவடை மேல வைங்க .இப்ப இன்னொரு தட்டுவடைல கொஞ்சம் சட்னிய வச்சி அதை இது மேல வச்ச தட்டுவடை செட் ரெடி . கொஞ்சம் காரம் வேணும்னா சட்னிக்கு பதிலா ஊறுகாய உபயோகப்படுத்திக்கலாம் .
இதுல நிறைய வகை இருக்குங்க. தக்காளி உபயோகப்படுத்தியும் இதை பண்ணலாம். தட்டுவடைக்கு பதிலா தக்காளிய வெட்டி (வட்டமா ) உபயோகப்படுத்திக்கலாம். கொஞ்சம் மிளகுப்பொடி தூவின இன்னும் நல்லா இருக்கும்.
பொரி :
சென்னைவாசிகளுக்கு பொரின்னு சொன்ன ஆயுத பூஜைதான் ஞாபகம் வரும். வெறும் பொரிய சாப்பிடாம அதுல கொஞ்சம் காய்கறிய கலந்து சாப்பிட்ட சத்தும் கிடைக்கும்.
தேவையான பொருட்கள் :
தட்டு வடை - நொறுக்கி போட
காரட் - 2(துருவியது)
பீட்ரூட் - 2(துருவியது)
பொரி : வேண்டிய அளவு
நல்லெண்ணெய் : 1 அல்லது 2 தேக்கரண்டி
உப்பு : வேண்டிய அளவு
இட்லி மிளகாய் போடி : கொஞ்சம்.
செய்முறை :
முதல்ல ஒரு கிண்ணத்துல பொரி மற்றும் துருவி வாய்த்த காய்களை போட்டு நல்லா கலக்குங்க. அப்புறம் மிளகாய் பொடி,உப்பு ,நல்லெண்ணெய் ஊத்தி இரண்டு அல்லது மூன்று தட்டுவடைய நொறுக்கி போட்டு ஒரு கலக்கு கலக்குங்க. சுவையான பொரி தயார்.
கொஞ்சம் மாறுதலா வேணும்னா தக்காளிய பொடிப்பொடியா வெட்டி கலந்துக்கலாம்.
இந்த ரெண்டுமே உடம்புக்கு கெடுதி இல்லாதது . சும்மா எப்பவும் சமோசா இல்லேன்னா பர்கர்னு சாப்பிடாம கொஞ்சம் மாறுதலா இருக்கும் .
24 கருத்துகள்
one side is chilli chutney
other side is kothamalli chutney
you have
garlic set
tomoto set
masala pori
kalavai ...
etcc
mouth watering
Me too frm salem
தட்டு வடை செட் எனக்கும் பிடிக்கும்!
தாத்தா, சென்னையிலேயும் கிடைக்குது, வேறே பேரிலே தட்டுவடை செட்ங்கறது, பானிபூரிங்கற பேரிலே, தஹி பூரிங்கற பேரிலே, பொரி பேல் பூரிங்கற பேரிலே! :P:P:P
இப்படி தினம் மூணு போஸ்ட் போட்டீங்கன்னா படிக்க ஆற்காட்டார் நேரமே கொடுக்கிறதில்லை! :(
தட்டு வடை செட் எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்!
@LK Geetha sonna maari ithellaam vera perla kedaikarthu. Antha thattu vadai set kurippaaga "Sev Poori" apdindra perla kedaikkum. Adadaa nenaikkum pothe naakkil echil oorugirathu. Neengal sonnathum different a iruku adutha murai salem pogum pothu try panren.
Naan salem-la virumbi saapta oru item enakku nalla gnyabagam irukku athu "sweet popcorn" appa chennai-la ellam athu kedaikkaathu. So yeppa salem ponalum athu kandipa rendu allathu moonu packet ulla pogum. poga poga athoda tharam and taste koranchu pochu. ippa kedaikuthaanu theriyala.
:)))))
தட்டு வடை செட் சூப்பராக இருக்கு,நாங்க இதை தட்டைன்னு சொல்வோம்,இனிமே தட்டையை நொறுக்கிபோட்டு காய்கறிகளூடன் நொறுக்கு தீனி ரெடி செய்திடலாம்.
Looks good. Thank you.
@யாசவி
முதல் வருகைக்கு நன்றி. நம்ம ஒஊரை சேர்ந்த ஒருத்தரை இங்க பார்கரதுல ரொம்ப சந்தோசம். ஆமாம் வித விதமா நமக்கு தேவையான, சட்னி உபயோகிக்கலாம் .
@சிபி
நல்லது
@கீதா பாட்டி
தினமும் மூணா? நன் தினமும் ஒரு பதிவுதான் போடறேன். இன்னும் 1 மாசத்துக்கு தினமும் ஒரு பதிவு வரும்
@தக்குடு
:))
@கீதா பாட்டி அண்ட் ஹரிணி
கிடைக்கறது இல்லேன்னு சொல்லல. ஆனால் அதுல அவன் எதை போட்டு கலக்கரானு இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது . அதுக்கு இது நல்லதுன்னு சொல்லுவேன்
@ஆஸியா
நல்லது . செஞ்சு பாத்து சொல்லுங்க
@சித்ரா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தட்டுவடை சூப்பர். அப்படியே எனக்குத்தானே. ஸ்டாபெரியை எடுக்காமதரனும் ஓகே..
நெஜமாவே எதோ recipe னு நம்பி வர்ற என்னை மாதிரி அப்பவிகள ஏமாத்தறது என்ன ஞாயம்? ( திரட்டு பாலை மிஞ்சிடீங்க போங்க)
எனக்கு இந்த காம்பினேஷன் ரொம்ப பிடிக்கும்.
//அன்புடன் மலிக்கா said...
தட்டுவடை சூப்பர். அப்படியே எனக்குத்தானே. ஸ்டாபெரியை எடுக்காமதரனும் ஓகே..//
ஓ தாராளமா எடுத்துகோங்க
வருகைக்கு நன்றி மலிக்கா
// அப்பாவி தங்கமணி said...
நெஜமாவே எதோ recipe னு நம்பி வர்ற என்னை மாதிரி அப்பவிகள ஏமாத்தறது என்ன ஞாயம்? ( திரட்டு பாலை மிஞ்சிடீங்க போங்க)//
நான் எங்கயாவது சமையல் குறிப்புன்னு போட்டேன பதிவுல . நீங்க தப்பா நினச்சா நிர்வாகம் பொறுப்பில்லை
// Jaleela said...
எனக்கு இந்த காம்பினேஷன் ரொம்ப பிடிக்கும்.//
நன்றி ஜலீலா
அம்மாபேட்டையில்(சேலம்)நான் தினமும் மாலையில் தட்டுவடை செட் சாப்பிடுவேன்...சூப்பர்..
this looks very interesting and exotic
தட்டுவடை வித்தியாசமா இருக்கு.
பேல்பூரியோட சவுத் இந்தியன் வெர்ஷனை பொரின்னு அறிமுகப்படுத்தி இருக்கே. ஆனா பொரி லோ கலோரி டயட். அதுனால ஆமோதிக்கறேன்.. நைஸ்!
எல்கே நல்ல பதிவு, இந்த தட்டுவடை அருமையா இருக்கு. இது போல என்னுடைய பதிவு ஒன்னும் இருக்கு பாருங்க.
http://imsaiilavarasan.blogspot.com/2009/10/blog-post_1784.html
//தமிழ் வெங்கட் said...
அம்மாபேட்டையில்(சேலம்)நான் தினமும் மாலையில் தட்டுவடை செட் சாப்பிடுவேன்...சூப்பர்..//
அம்மாபேட்டை, டவுன் ரயில்வே ஸ்டேஷன், செவ்வாய் பேட்டை ....
@அநன்யா மஹாதேவன்
தப்பு .இதோட நார்த் இந்தியன் பதிப்புதான் பேல்பூரி
hmm... paakavae azhagaa irukku :)
// Ananthi said...
hmm... paakavae azhagaa irukku :)//
நன்றி ஆனந்தி. சாப்பிட்டாலும் நல்ல இருக்கும்
கருத்துரையிடுக