டிசம்பர் 26, 2009

ஹரிஹர தேவாலயம்

ஹரிஹர தேவாலயம்


ஒரு சில கோவில்களை பற்றி ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதினேன். இப்ப மறுபடியும் ஒரு கோவில் பத்தி எழுத போறேன் ..இது ரொம்ப பெரிய கோவில் இல்ல கண்டிப்பா பாடல் பெற்ற ஸ்தலம் இல்லை. நான் பிறந்து வளர்ந்த செவ்வாய்பேட்டையில் (அதுவே சின்ன ஊர்தான்) கடைவீதி அருகில் இருக்கு. சேலத்தில பல பெரிய கோவில் இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த கோவில்தான்.ஹரி+ஹரன் இரண்டு பேரும் இருக்கறதுனால ஹரிஹர தேவாலயம். கோவிலோட வரலாறுன்னு பார்த்தால் ஒரு 200 வருசத்துக்கு முன்னாடி கட்ட பட்ட கோவில்னு சொல்லலாம். இப்ப 2002 ல கும்பாபிஷேகம் நடைபெற்றது .( அரசாங்க அனுமதி வாங்கி பண்றதுக்குள்ள நாங்க பட்ட பாடு இருக்கே அதை ஒரு புத்தகமா போடலாம்). அதுக்கு முன்னாடி முழுவதும் கருங்கல்லால் கட்டபட்டிருந்த கோவில் இது. இப்ப சிமெண்ட் திருப்பணிதான் பண்ண முடிஞ்சது.

பிரதான வாயிலான வடக்கு வாயில் வழியா உள்ள வந்த முதல்ல நம்மள வரவேற்கறது வழம்சுழி விநாயகர். அவரை வணங்கிட்டு அடுத்து சனீஸ்வரன் .நம்ம வாழ்க்கைல இவருக்கு பெரும்பங்கு இருக்கரதுனால இவருக்கு தனியா ஒரு இடம் கொடுத்து இருக்காங்க. அவருக்கு அடுத்து சூர்யன் மற்றும் சந்திரன். அப்புறம் காயத்ரி தேவி மற்றும் ஆதி சங்கரர் . இவங்களை வணங்கிட்டு உள் மண்டபம் போவோம்

கோதண்டபாணி

உள் மண்டபத்துல வடக்கு பார்த்த சன்னதியில் சீதா,லக்ஷ்மண அஞ்சநேய சகிதமா காட்சி அளிக்கிறார் ஸ்ரீராமன். பழைய சிலை என்பதாலோ என்னமோ சீதையின் முகம் மிக அருமையாக உள்ளது.. ஸ்ரீராமருக்கு நேர் எதிர் பக்கம் அவரை வணங்கியவாறு பக்த ஆஞ்சநேயர் ....

ஆஞ்சநேயர் சந்நிதிக்கு வலப்புறம் யோக நரசிம்மர் மற்றும் சுதர்ஷன மூர்த்தி ....(கோவில் திருப்பணி நடந்தபோது பிரதிஷ்டை செய்யப்பட்டது)

விஸ்வநாதர்

மேற்கு பார்த்த சந்நிதியில் லிங்க ரூபத்தில் நமக்கு அருள் பாலிப்பது விஸ்வநாதர் . சந்நிதிக்கு நேர் எதிரில் பெரிய நந்தி (பிரதோஷ அபிஷேகம் இவருக்குத்தான், இவரும் கோவில் திருப்பணி நடந்தபோது கோவிலுக்கு புதுசா வந்தவர்தான்). கர்ப்பக்ருகத்தின் முன்னால் மற்றுமொரு விநாயகர் . மூலவர் பாணலிங்கம் என்பதால் ஒரு விநாயகர் இருக்கணும் என்ற விதிப்படி இவர் இங்க இருக்கார்..

சிவன் சந்நிதியின் வலப்புற சுற்றில் வடக்கு பார்த்தவாறு துர்க்கை கிழக்கு பார்த்தவாறு லிங்கோத்பவர் , தெற்கு பார்த்தவாறு தக்ஷினாமூர்த்தி.

விசாலாக்ஷி

சிவன் சந்நிதயின் வலப்புறம் தெற்கு நோக்கி நின்று நமது கோரிக்கைகளை கேட்டு அதை தீர்த்து வைக்க கனிந்த முகத்துடன் அன்னை விசாலாக்ஷி வீற்றிருக்கிறாள். இங்கு அம்ப்ளிடம் வேண்டியது கிடைக்கும். ஒரு மண்டலம் (48 நாட்கள்) தினமும் அம்பாள் சந்நிதி முன் அமர்ந்து லலிதா சகஸ்ர நாமம் படித்தால் நாம் வேண்டியதை அடையாளம்.(இது யாரும் சொல்லி கேட்டது இல்லை. நான் படிச்சு கேட்டது கிடைச்சு எழுதறேன் ).

அம்பாள் சந்நிதிக்கு வலப்புறம் வடக்கு நோக்கியவாறு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகன். அவரை வணங்கி வெளி பிரகாரத்தில் பிரவேசித்தால் ஸ்ரீ அய்யப்பன் . அவருக்கு அடுத்தபடியா பிரம்மாண்டமாக நின்று கொண்டு இருப்பது கோவிலின் காவல் தெய்வமான ஸ்ரீ பைரவர் . தேய் பிறையில் வரும் அஷ்டமியன்று இவருக்கு அபிஷேகம் விஷேசமாக செய்யபடுகிறது ....இவருக்கு எதிர்பக்கம் நவக்ரக சந்நிதி.

முக்கிய விழாக்கள்

விநாயகர் சதுர்த்தியில் தொடங்கி ஸ்ரீராம நவமி வரைக்கும் அனைத்து முக்கிய விழாக்களும் உண்டு...

ஸ்ரீராம நவமி

சித்திரையில் வரும் ஸ்ரீராம நவமி இங்க ரொம்ப விஷேசம். பொதுவா ராம நவமி 2 விதமா செய்வாங்க.. ஒன்னு பஜனை சம்ப்ரதாயம் இன்னொன்னு வைதீக சம்ப்ரதாயம் . இந்த கோவில்ல இந்த 2 சம்பிரதாயத்தையும் கலந்து செய்யறாங்க ... திருகல்யாணத்திற்கு முதல் நாள் வரை வைதீக சம்ப்ரதாயம். கல்யாணம் முதற்கொண்டு ஆஞ்சநேயர் உற்சவம் வரை பஜனை சம்ப்ரதாயம்.

கல்யாணம் ஆகாத பெண்கள்/ஆண்களின் பெற்றோர் இங்கு வேண்டிக்கொண்டு அவர்கள் மகன்/மகளின் திருமணம் நடைபெற்றால் அடுத்த வருட கல்யாண உற்சவ செலவை ஏற்றுகொள்கிறார்கள்.


புகைப்படம் எதுவும் என்னிடம் இப்ப கைவசம் இல்லை. அடுத்த முறை செவ்வை செல்லும் பொழுது புகைப்படம் எடுத்து பதிவை புதுப்பிக்கறேன்..

மார்க்கம்

சேலம் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ மூலம்தான் போகணும்.

டிசம்பர் 24, 2009

நான்காவது தூண்

நான்காவது தூண்

ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீடியானு சொல்றாங்க. நடைமுறைல இது எப்படி இருக்கு . மீடியா அவங்க கடமைய ஒழுங்கா பண்றாங்களா இல்லையா ???

மீடியால இப்ப 3 பிரிவு இருக்கு . ஒன்னு செய்திதாள் , ரெண்டாவது செய்தி தொலைகாட்சிகள், கடைசியா இணைய செய்தி தளங்கள்.

செய்திதாள்கள்

இவங்களுக்கு நாடு எப்படி பட்ட நிலைமைல இருந்தாலும் பரவாயில்லை , ஆனா இவங்க பேப்பர்க்கு பரபரப்பான செய்தி வேணும்.. எப்படி பட்ட செய்தி??? நடிகை பரபரப்பு பேட்டி!! இல்லேன்னா இந்த தலைவரும் அவரும் சந்திப்பு கூட்டணியில் மாற்றம் வருமா? என்னமோ இவன்தான் பக்கத்தில இருந்து பார்த்த மாதிரி எழுதுவான்.. சரி எதோ விசயம் இருக்கும் போலன்னு நீங்க வாங்கி படிச்சா ஏமாந்து போவீங்க .. அந்த 2 தலைவர்களும் எதாவது விமான நிலையத்தில பார்த்துகிட்டு ஒரு ஹாய் சொல்லிடு போயிருப்பாங்க . நம்ம ஆளுங்க அத ஒரு தலைப்பு செய்தியா போட்ருவாங்க .. நாம்தான் காச வேஸ்ட் பண்ணுவோம் அத வாங்கி

அரசாங்கம் தப்பு பண்றப்ப அதை தட்டி கேட்பதுதான் பத்திரிகை தர்மம் .. எத்தனை பேர் அதை செய்கின்றனர்? அவனோட பிசினஸ் நல்லா நடந்தா போதும்.. நாடு எப்படி போன அவனுக்கு என்ன?
நாம்தான் இந்த பத்திரிகை நடு நிலைமை தவறாம இருக்குனு டீ கடை பென்ச்ல உக்காந்து பேசிகிட்டு இருப்போம்.

செய்தி தொலைகாட்சிகள்

இவங்க தொல்லை சொல்லி மாளாது .. 24 மணி நேர செய்திகள் என்னிக்கு ஸ்டார்ட் ஆச்சோ அன்னிக்கு இந்தியாக்கு பிடிச்சது சனி ... ஆமாம் . ஆனா ஊனா ஒரு வண்டிய எடுத்துகிட்டு வந்துர வேண்டியது ... அதுல ஒரு 25 - 30 வயசுல இருக்கற ஒரு பொண்ணு கூட ஒரு கேமரா ... ஒன்னும் இல்லாத விசயத்த எப்படி ஊத்தி பெருசு பண்ணனும்னு இவங்ககிட்டதான் கத்துக்கணும் ..

மும்பைல தாஜ்ல நம்ம கமண்டோஸ் சண்டை போட்டுகிட்டு இருக்காங்க ... இவங்க ரொம்ப முக்கியமா கமண்டோஸ் எங்க போறாங்க , வேற எதாவது கமண்டோஸ் குழு வருதா சண்டை போடணு கிரிக்கெட் மேட்ச் ரன்னிங் கமெண்டரி கொடுத்துகிட்டு இருக்காங்க... இதுல கொடுமை என்னன்னா இது அவங்க கடமை எதுவும் தப்பு இல்லைன்னு சாதிச்சங்க ஒருத்தங்க .. அது யாருன்னு எல்லாருக்கும் தெரியும் .. அதனால நான் அதை இங்க சொல்லல

அப்புறம் 9 மணிக்கு மேல பார்த்த சில பல விவாதங்கள் நடக்கும். முடிவா ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. வந்து பேசினதுக்கு நன்றின்னு போனை கட் பண்ணிடுவாங்க.. கட்சிகாரனும் போய்டுவான்.. ஆனா நம்ம அதை நாலு நாளைக்கு பேசிட்டு இருப்போம்...

தேர்தல் கணிப்புகள்

இதுதாங்க செம காமெடிய இருக்கும். நம்ம வானிலை அறிக்கை கூட பலிச்சிரும் ஆனா இவங்க தேர்தல் அறிக்கை பலிக்காது..ஒரே சிட்டில நாலு தொலைக்காட்சி எடுக்கற கணிப்பும் 4 விதமா இருக்கும் ..எப்படியும்
இவங்க கணிப்பு பலிக்காது .. அதுக்கும் ரெடியா வச்சிருப்பாங்க காரணத்தை .. இவருடைய கடைசி நேர பிரச்சாரம் மாற்றிவிட்டது/ ஆளும் கட்சிக்கு எதிரான அலை(இது கணிப்பு எடுக்கறப்ப இவனுக்கு தெரியாதா!!??) .. இப்படி எதாவது ஒன்னு சொல்லி தேர்தல் கணிப்பை முடிச்சிருவாங்க ..

நீங்க பார்த்து இருப்பீங்க , உங்க டிவில கீழ ஒரு லைன் ஓட ஆரம்பிக்கும் Breaking நியூஸ்... ஒரு சில காலம் அது நாள்தான் இருந்துச்சி ஆனா எப்ப இவங்க மீடியாவோட கடமைல இருந்து மாறி TRP Ratingskaga வேலை செய்ய ஸ்டார்ட் பண்ணன்களோ அன்னிக்கு பிடிச்சது சனி ...இவர் கார்ல ஏறினர் அவர் விமானத்தை இறக்க சொன்னார் .. இதெல்லாம் ஒரு செய்தியா??? அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு இத பத்தி ஒரு மணிநேரம் விவாதம் வேற நடக்கும்....


மீதம் அதுத்த பதிவில்

டிசம்பர் 12, 2009

விலைவாசி

மிக நீண்ட இடைவெளிக்கு பின் என்னுடைய பதிப்பு.. விலைவாசி

இன்னிக்கு நாட்ல இருக்கற விலைவாசி எல்லாருக்கும் தெரியும்.. யாரு கவலை படவேண்டுமோ அவங்க இதை பத்தி யோசிக்கறதாவே தெரியல.. பாவம் அவங்க என்ன பண்ணுவாக ஒரு கட்சி தலைவர் மாநிலத்தை பிரிக்கணும்னு உண்ணாவிரதமிருந்த இன்னொருத்தர் பிரிக்க கூடாதுன்னு சொல்றார் . அவங்களை எப்படியோ சமாளிச்சு அப்பாடான்னு உக்காந்த இன்னொரு மாநிலத்தில இன்னொருத்தர்....பாவம் மக்களை பத்தி நினைக்க அவங்களுக்கு எங்க டைம் இருக்கு....

அவங்கதான் டைம் இல்லாம இருக்காங்க. இந்த நியூஸ் தொலைக்காட்சிகாரங்களுகவது டைம் இருக்கானு பார்த்த அவங்களுக்கும் டைம் இல்ல...அப்படி என்ன நியூஸ் போடறாங்க.. ராகுல் காந்தி விமானத்தை தரை இறங்க சொன்னாருன்னு ஒரு நியூஸ் கொஞ்ச நேரம் கழிச்சு இல்ல அவர் அப்படி சொல்லலன்னு ஒரு நியூஸ் .. நாடு விளங்கிடும்....

நம்ம பத்திரிகைகாரங்க இருக்காங்களே அவங்க இவங்கள விட சூப்பர்... அவங்களுக்கு பரபரப்பான செய்திதான் வேணும்..அதாவது சென்னையில் இரட்டை கொலை... இவர் அரசியலை விட்டு விலக போகிறார்....பிரபல நடிகை விவாகரத்து .. இப்படித்தான் தலையங்கம் .. உள்ள இருக்கற விசயமும் உருப்படியா இல்ல..

சரி அப்ப யாரு இதெல்லாம் பத்தி கவலை படறது? விலைவாசி உயர்வ பத்தி ஒரு பதிப்பு போட்ட நானும், இத படிக்கற நீங்களும்தங்க.. படிச்சு முடிச்ச உடனே கடைக்கு போய் மளிகை சாமானை வாங்கிடுங்க. லேட்டா போன இன்னும் விலை ஏறிடபோது...