பழைய வியாபாரங்களைப் பார்க்க சிறிதுநேரம் முயற்சி செய்துபார்த்தும் அவன் எண் கிடைக்கவில்லை. என்ன செய்வது என்ற யோசித்துவிட்டு சேலம் வழியாக ச...
சிறிதுநேரம் முயற்சி செய்துபார்த்தும் அவன் எண் கிடைக்கவில்லை. என்ன செய்வது என்ற யோசித்துவிட்டு சேலம் வழியாக சுற்றி செல்வதுதான் ஒரே வழி என்று முடிவு செய்தனர். முடிவு செய்தவண்ணம் திரும்பவும் வந்தவழியே செல்ல ஆரம்பித்தனர். முதலில் எதிர்பட்ட செக்போஸ்ட்டில் எந்தவிதப் பிரச்னையும் இல்லாதக் காரணத்தால் சேலம் நகரை நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் அங்கே சேகர் ராஜுவிடம்
"சொல்லுங்க எத்தனை மணிக்கு உங்க கார் காணாம போச்சு ? '
"ஒரு ரெண்டு மணி இருக்கும் சார் "
"காரை எங்க நிறுத்தி இருந்தீங்க ?"
"வழக்கமா நிறுத்தற இடத்தில்தான் சார். எங்க சந்துக்குள்ள கார் வராது. மெயின் ரோட்ல நிறுத்தி இருந்தேன் ."
"கார் லாக் பண்ணி இருந்தீங்களா ??"
"பண்ண மாதிரி நியாபகம் இருக்கு சார் "
"இதுக்கு முன்னாடி அந்த ஏரியாவில் கார் காணாம போயிருக்கா ?"
"இல்லை சார்."
"ம்ம். வண்டி நம்பர் என்ன சொன்னீங்க ? "
அவன் சொன்ன வண்டி எண்ணை நோட் செய்த சேகர் , கண்ட்ரோல் ரூமை தொடர்புக் கொண்டார் .குறிப்பிட்ட எண் காரை மடக்க சொல்லி செக்போச்ட்களுக்குத் தகவல் கொடுக்க சொன்னார்.
"ரமேஷை எத்தனை வருசமாத் தெரியும் ?"
"சின்ன வயசில் இருந்தேத் தெரியும் " என்று சொல்லிய ராஜு, ஜெயிடம் ஏற்கனவே சொன்னதைத் திரும்ப சொல்லத் துவங்கினான்.
"சோ, ரொம்ப நாள் பழக்கம் . அவன் ஒருத்தரைக் கடத்த காரைக் கொடுத்து இருக்க . கரெக்ட் ?"
"கடத்தலா ? நான் காரைக் கொடுத்தானா ?"
"ரொம்ப நடிக்காத . ஒழுங்கா உண்மையை ஒத்துக்க. உன் பிரெண்ட் ரமேஷ் எல்லாத்தையும் சொல்லிட்டான் . இனி நடிச்சு பிரயோஜனம் இல்லை . ஒழுங்கா உண்மையை சொன்னா உனக்கு அதிகம் பிரச்சனை இல்லை. கேசை வேற மாதிரி கொண்டு போய்டறேன். இல்லை இன்னமும் கார் காணாம போச்சுன்னு சொல்லிட்டு இருந்தா என்ன பண்றதுன்னு எனக்குத் தெரியும் ?"
ரமேஷ் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான் என்றுத் தெரிந்தவுடன் ,ராஜுவிற்கு இனித் தான் நடித்துப் பிரயோஜனம் இல்லை என்று விளங்கிவிட்டது.
"கார் நான்தான் கொடுத்தேன். ஆனால் அது கடத்தரதுக்குன்னு சத்தியமா எனக்குத் தெரியாது சார் ."
"குட். ஜெய் ஒரு ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கிடுங்க . அந்த ரமேஷோட மொபைல் எங்க."
"இதோ இங்க இருக்கு சார் ."
அந்த போனை கையில் வாங்கி சிறிது நேரம் யோசித்த சேகர் பின் ராஜுவிடம் "நீ காரைக் கொண்டு போய் கொடுத்தவங்க மொபைல் நம்பர் இருக்கா ?"
"இருக்கு சார் "
"சரி ஒரு வேலை பண்ணு . அவர்களுக்கு போன் பண்ணி எங்க இருக்காங்கன்னு கேளு . யார் கேட்க சொன்னான்னு கேட்ட , ரமேஷ்தான் கேட்க சொன்னார். அவருக்கு சின்ன விபத்துன்னு ஒரு பொய் சொல்லு ."
"ஓ ஓகே சார்."
ராஜுவிடம் அவனோட மொபைல் போனைக் கொடுத்தார் ஜெய் .
ரமேஷின் நண்பர்களின் எண்ணை அதில் தேடி எடுத்து அழைத்தான். சில ரிங் சென்றப் பிறகு
"ஹலோ "
"சார் நாந்தான் ராஜு பேசறேன்."
"என்ன விஷயம் ? அதான் கார் ரெண்டு நாளில் தரேன்னு சொன்னோம் தானே ?"
"அதில்லை சார். ரமேஷுக்கு ஆக்சிடென்ட். ஆஸ்பத்திரில சேர்த்து இருக்காங்க ."
"எந்த ஆஸ்பத்திரி ?"
இங்கு என்ன பதில் சொல்வது என்று ராஜுவிற்கு தெரியவில்லை .
சிறிது யோசித்துவிட்டு "எனக்குத் தெரியலை சார். இப்பதான் அவங்க அம்மா சொல்லிட்டு போச்சு. கேட்டுட்டு போன் பண்றேன். " என்று சொல்லிவிட்டு லைனை கட் செய்தான்.
'எந்த ஆஸ்பத்திரி சார் சொல்றது ?"
"ஜெய் இந்த டைம்ல எந்த ரோட் ப்ரீயா இருக்கும் ?"
"ஏன் சார் ?"
" இவங்களை அங்க வர சொல்லிடலாம். ட்ராபிக் இல்லாத ஏரியாவா இருந்தா வசதியா இருக்கும் ."
"சென்ட்ரல் இறக்கம் பிரீயாதான் இருக்கும் "
"அப்ப கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு வரவெச்சிடலாம்."
"ராஜு, முதல்ல அவங்க எங்க இருக்காங்கனு கேளு. அப்புறம் கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு உடனடியா வர சொல்லு
மறுபடியும் அவர்களை அழைத்த ராஜு "சார் எங்க இருக்கீங்க இப்ப ?"
"இப்ப அம்மாபேட்டை வழியா வந்துகிட்டு இருக்கோம் ."
"சரி அப்ப நேர கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு வந்திருங்க சார். கொஞ்சம் சீரியஸ்னு சொல்றாங்க "
"ம்ம். சரி ஒரு அரைமணி நேரத்துல அங்க இருப்பேன் ."
அழைப்பைத் துண்டித்தவன், காரை ஓட்டிக் கொண்டிருப்பவனைப் பார்த்து "என்ன பண்ணலாம் ? ரமேஷ் இப்ப ஹாஸ்பிட்டல்ல இருக்கான் . அவனைப் போய் பார்ப்போமா இல்லை ...?
"ரெண்டு பேரும் போறது ரிஸ்க். நான் கொஞ்சம் தூரம் முன்னாடி வண்டியை நிறுத்திடறேன். நீ மட்டும் தனியா போய் பார்த்துவிட்டு வா. இவரை வண்டில வெச்சிகிட்டு அங்க போறது ரொம்ப ரிஸ்க். நீ இறங்கினவுடனே நான் வண்டியை மூவ் பண்ணிடுவேன். உள்ள போயிட்டு வந்தவுடனே போன் பண்ணு ,வந்து பிக் பண்ணிக்கறேன். "
"ம்ம் அதுவும் சரிதான் ...."
அவர்கள் காரை அங்கிருந்து கிளப்பினர்.
அதே சமயத்தில் , சேகர் அங்கு அவர்களை மடக்க தேவையானவற்றை செய்துக் கொண்டிருந்தார். அவர்கள் ஆஸ்பத்திரியை அடைய இரண்டு வழிகளே இருந்ததால் ,அந்த வழிகளில் போலிசை மப்டியில் நிறுத்தினார். ஆஸ்பத்திரிக்கு முன்பு இருந்த பாலத்தின் அடியில் இருந்த இருட்டு அவர்களுக்கு சாதகமாக இருந்தது . அங்கு இரண்டு பக்கமும் தடுப்புகளை அமைத்து தற்காலிக செக் போஸ்ட் ஒன்றை ரெடி செய்தார்.
நேரம் கடந்து கொண்டிருக்க , சரியாக இருபது நிமிடம் கழித்து , டவுன் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இருந்து வேகமாக வந்தக் கார் ஒன்று திடீரென கோகுல்நாதா பள்ளி எதிரே இருண்டிருந்த ரயில்வே ட்ரேக் அருகே நின்றது. அதிலிருந்து ஒரு மனிதன் இறங்கியவுடன் , மீண்டும் வேகமாகக் கிளம்பியக் கார் , நேராக வராமல், கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றது. இதை எதிர்பாராததால் சிறிது திகைத்த சேகர் , ராஜுவை நோக்க, அவன் அது தன் கார்தான் என்று உறுதி சொன்னான்.
தன் வாக்கி டாக்கி மூலம் அந்தக் காரின் விவரங்களை கலெக்டர் அலுவலகம் அருகே இருந்த காவலர்களுக்கு சொல்லி அந்தக் காரை நிறுத்த சொன்ன சேகர், நடந்து வரும் அந்த மனிதனைப் பிடிக்க தயாரானார்.
மிக நிதானமாக நடந்து வந்துக் கொண்டிருந்தவன், சுற்றிலும் பலமுறைப் பார்த்துக் கொண்டே வந்தான். பாலத்தின் அருகே வந்தவன் , சிறிது தயங்கி பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.
பி.கு . அலுவலக ஆணியின் காரணமாக தொடர்ந்து எழுத முடியலை. அடுத்த பகுதியில் முடிச்சிடறேன்.
-தொடரும்
15 கருத்துகள்
விறுவிறுப்பாகத் தொடர்கிறது. பாராட்டுக்கள்.
நல்லா விறுவிறு.
தொடர க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ம்ம்... அடுத்த பகுதிதான் கடைசியா.... அதையும் சீக்கிரம் வெளியிட்டு விடுங்கள்...
விறுவிறுப்பாக பார்த்துக் கொண்டிருக்கும்போது, பவர் கட் ஆனதுபோலாகிவிட்டது. viyaabaram fully loaded.
நல்ல விறுவிறுப்பான climax ..சீக்கிரமாக முடிவை வெளியிடுங்கள்...
வியாபாரம் நல்லா விறுவிறுப்பாகவே போகுதுங்க. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
கடை ஒனரே! அடுத்த வியாபாரம் எப்போ? ;-)
விறுவிறுப்பாகத் தொடர்கிறது.
விறுவிறுப்பான தொடர்
முடியப் போகிறதே
என்ற கவலையும்
முடிவு தெரியப் போகிறதே
என்ற சந்தோஷமும்
கலவையாக
சங்கமமிக்கிறது
இப்பத்தான் கடைக்கே வந்து லிஸ்ட் கொடுத்தேன் ( படிக்க ஆரம்பித்தேன் )
வியாபாரத்தை முடிக்க போறிங்களா..
அதுக்குள்ள நானும் முடிச்சிட்டு முடிவுக்கு ரெடியாய்க்கிறேன்..
படித்தவரை.. சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்குது....
அடுத்த பதிவுல முடிச்சிடுவேன்னு சொன்னீர்கள்...முடிக்காதது குறையாகத் தெரியவில்லை. சுவாரஸ்யமாகவே போகிறது.
அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம்
செம விறுவிறுப்பா போகுது..
விறு விறு தான்.. நோ டவுட்... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போடுங்க சார்...:)
கருத்துரையிடுக