வர வர நெறைய சீனியர் பதிவர்கள் பதிவு எழுதறதை குறைத்து விட்டார்கள் அல்லது எழுதுவதையே நிறுத்தி விட்டார்கள். ஆனால் காணாமல் போகவில்லை. இணையத்தில்...
வர வர நெறைய சீனியர் பதிவர்கள் பதிவு எழுதறதை குறைத்து விட்டார்கள் அல்லது எழுதுவதையே நிறுத்தி விட்டார்கள். ஆனால் காணாமல் போகவில்லை. இணையத்தில்தான் இருக்காங்க . இன்னும் எழுதறாங்க ஆனால் பதிவில் அல்ல ? அப்புறம் எங்க ? கூகிள் பஸ்ஸில்.
அன்புடன் எல்கே
அதென்னயா கூகிள் பஸ் ? இன்னொரு சோசியல் நெட்வொர்கிங் தளம் என்று சொல்லலாம். இது எல்லோரயும் இழுத்த முக்கியக் காரணம், இதுக்காக தனி விண்டோ ஓபன் பண்ண வேண்டாம் . ஜிமெயிலில் இருந்து கொண்டே பஸ்ஸில் சுத்தலாம். பதிவு ரொம்பப் பெருசா இல்லை சின்னதா என்று எந்தக் கவலையும் வேண்டாம். ஒரே வரில கூட ஏதாவது சொல்லிவிட்டு நிறுத்திக்கலாம் . அதுக்கு உங்கள் நண்பர்கள் பின்னூட்டம் இடலாம். இப்ப பல பிரச்சனைகளில் சூடான விவாதக் களம் கூகிள் பஸ்தான்.
ஒரு சிலர் கூட மட்டும் ஏதாவது விவாதிக்கனுமா ? அதுக்கும் வழி இருக்கு. ப்ரைவேட் பஸ் விட்டுடலாம். அப்புறம் கமென்ட் வேண்டாமா ? அந்த விவாதத்துக்கு மட்டும் பின்னூட்டத்தை க்ளோஸ் பண்ணி வெச்சிடலாம். யார் யார் உங்களை பாலோ பண்ணலாம் என்பது வரை உங்கள் கண்ட்ரோலில் இருக்கும் . அதனால இப்ப பாதி பதிவர்கள் அங்கதான் இருக்கோம் ,அடியேன் உட்பட.
ஆனால், அதுவும் ஒரு நேரம் விழுங்கி என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அங்கப் போனப்புறம் பதிவெழுதறது குறைஞ்சு போச்சு . அதே சமயத்தில் பலரின் புதிய நட்புகள் கிடைத்திருக்கிறது. ஆனால் முகநூல்/ஆர்குட்டை விட இதில் ஆபத்து குறைவு . சில சமயங்களில் பஸ் ஓடும் ரூட்கள் ஆபத்தா இருந்தாலும், பல நாட்கள் ரூட் எல்லாம் ஜாலியாதான் இருக்கும் .
இதில் இன்னொரு முக்கிய விஷயம் , பதிவுக்கு பின்னூட்டம் வரும் வேகத்தை விட இங்கு வரும் வேகம் அதிகம். உலகக் கோப்பையின் போது ,நேரடி வர்ணனை ஓடிக் கொண்டிருந்தது பஸ்ஸில்.
ஆனாலும் இதெல்லாம் ஒரு சங்கிலிப் போன்றதோ என எண்ணுகிறேன். முதலில் ஆர்குட் அப்புறம் முக நூல் வந்தது அப்புறம் ட்விட்டர் இப்ப பஸ் அடுத்து ?? கொஞ்ச நாளில் இதில் மக்களின் ஆர்வம் குறையலாம்.பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.
பி.கு வியாபாரம் இன்னும் ஒரே ஒரு பதிவில் முடிந்துவிடும். அதுக்கப்புறம் ஒரு விடுமுறை எழுதுவதற்கு .....
அன்புடன் எல்கே
26 கருத்துகள்
ஹா ஹா உண்மை தான் பெரியப்பா..
Never heard about this thing, LK.
@சி பி
இன்றையப் பிரபலமே ஒத்துக்கிட்டீங்க அப்புறம் என்ன .
@வாணி
நல்லது அப்படியே இருக்கணும்
கூகிள் பஸ் குறித்து எனக்கு இருந்த ஈர்ப்பு இப்போது கணிசமாய்க் குறைந்து விட்டது. (காரணத்தை நீங்கள் அறிவீர்கள் தானே?). அதை சரியாக பயன்படுத்தத் தவறிவிட்டேன் என்றே தோன்றுகிறது.
வலைப்பதிவில் எழுதுவதற்கு அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது; நிறைய வாசித்து, தவறுகளில்லாமல் இடுகை தருவது அவசியமாகிறது. அந்த அளவுக்கு கூகிள் பஸ்-சில் உரையாட கவனம் எடுக்கத் தேவையில்லை என்று பலர் எண்ணுகிறார்களோ என்னவோ? எனது அனுமானம் தவறாய் இருக்கும்பட்சத்தில் யாரும் தவறாய் எண்ண வேண்டாம்.
ஆனால், பல பிரபலங்கள் முன்போல எழுதுவதில்லை என்ற ஆதங்கம் எனக்கும் இருக்கிறது. அதற்கு கூகிள் பஸ் ஒரு காரணமாயிருக்குமென்றால், வருந்தத்தக்க விஷயம் தான் கார்த்தி!
ப்ளாக் மெய்ன் கோளாகவும் ... பஸ் துணைக்கோளாகவும் இருக்கிறது ... என்ன சிலர் பஸ்ஸை யே சுற்றிக் கொண்டுள்ளார்கள் ...
புதிய செய்திதான் நானும் முயற்சித்து பார்க்கிறேன், திரு எல் கே
புதிய செய்திதான். இதுபத்தி எனக்குதெரிஞ்சிருக்கலை.
கூகிள் பஸ் பற்றிய, ஒரு அலசலைத் தந்திருக்கிறீங்க...
நன்றி பெரியப்பா.
பயனுள்ள பகிர்வு. நன்றி.
புதிய செய்திதான் நானும் முயற்சித்து பார்க்கிறேன்.
இதுவரை அதைப்பற்றி ஒன்றுமே எனக்குத் தெரியாவிட்டாலும், அங்கு போவதாகச்சொல்லி இங்கிருந்து தப்பித்துக்கொள்ளலாமா என்று எனக்கும் தோன்றுகிறது. தகவலுக்கு நன்றி.
நாங்க பதிவு எழுதிட்டு பஸ்ஸிலே விளம்பரமும் கொடுப்போமே! :D இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க?? :P
கூகிள் பஸ் பற்றி உங்களுடைய பதிவிலிருந்து தெரிந்துகொண்டேன்.நன்றி
"பஸ்" பயணமும் சுகமானதுதான்...
நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன்.
எழுதுவதற்கு விடுமுறையா!!!! ஏன்?
இந்த பஸ்'க்கு கண்டக்டர் இல்லையா சார்...ரைட் ரைட் வண்டிய எடுங்க...:))
பதிவிற்கு விடுமுறைனாலும் பஸ் பயணம் உண்டுதானே.
கூகிள்பஸ் பற்றி நல்ல தகவல்கள்.. இவையெல்லாம் படிக்கும் நேரத்தை எடுத்துக் கொண்டு விடுகிறதே..
உணமைதான், பஸ்ஸு/ட்விட்டர் இதால பதிவுகள் நிறைய குறைஞ்சு போச்சு. பதிவுலகம் என்னை மிஸ் பண்ணிடக்கூடாதேன்னுதான் நான் அந்தப் பக்கமெல்லாம் போறதில்லை. ;-)))))
//வலைப்பதிவில் எழுதுவதற்கு ... நிறைய வாசித்து, தவறுகளில்லாமல் இடுகை தருவது அவசியமாகிறது. அந்த அளவுக்கு கூகிள் பஸ்-சில் உரையாட கவனம் எடுக்கத் தேவையில்லை //
சேட்டைக்காரர் சொல்லும் காரணங்களாகவும் இருக்கலாம்.
பஸ்.... அவ்வளவாக நான் யாரையும் தொடராததால், எனக்கு அவ்வளவாய் இதில் நேரம் போவதில்லை....
கேள்விப்பட்டிருக்கேனே தவிர இது பத்தி முழுசா தெரியாது
புதிய தகவலுக்கு அன்பு நன்றி!
நல்ல செய்தி.
பஸ்சில் ஏறுவதா..வேண்டாமா....
உண்மைதான். ஃபேஸ்புக்கில் நான் அப்படித்தான் நேரம் செலவிடுகிறேன். இப்போது கூகுள் ப்ளஸ் வேறூ வந்திருக்கு.:)
ரொம்ப நல்லா இருக்கு கார்த்திக். விட்டதையும் படிச்சிட்டேன் :)
கருத்துரையிடுக