Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

பெயர்க் காரணம்

ஸ்ரீஅகிலா அவர்கள் பெயர்க்காரணம் என்றத் தொடருக்கு அழைத்திருக்கிறார்கள். அதாவது நமக்கு வெச்ச பெயரால் நாம் சந்தித்த சுவாரசியங்களையும் ,கிண்டல்...

ஸ்ரீஅகிலா அவர்கள் பெயர்க்காரணம் என்றத் தொடருக்கு அழைத்திருக்கிறார்கள். அதாவது நமக்கு வெச்ச பெயரால் நாம் சந்தித்த சுவாரசியங்களையும் ,கிண்டல்களையும் சொல்ல சொல்லி. 

நான் பிறந்த பொழுது என் பாட்டி (அம்மாவின் அம்மா ) எனக்கு வைத்தப் பெயர் வெங்கட்ராமன் (என் அப்பாவின் அப்பா பெயர் ). பிறப்பு சான்றிதழிலும்  இந்தப்  பெயர்தான் இருக்கும். ஆனால் என் தாத்தாவின் பெயரை சொல்லி எப்படிக் கூப்பிடுவது ? மரியாதையாக இருக்காது அல்லவா . சரி இன்னொரு பேரு வைக்கலாம் என்று வச்சதுதான் கார்த்திக். பெரிய காரணம் ஒன்றும் இல்லை, நான் பிறந்தது கார்த்திகை நட்சத்திரத்தில். எனவே கார்த்திக்னு வச்சிட்டாங்க. 

பள்ளியில் வருகைப் பதிவில் பெயர் நடுவில் வரும். ரொம்பப் பின்னாடியும் போகாது, முன்னாடியும் இருக்காது. கல்லூரி வரும் வரை எந்தப் பிரச்சனையும்  இல்லை . கல்லூரியில் இன்னொரு கார்த்திக் இருந்தான். சரி இனிசியல் வைத்து மாறுபடுத்திக் கொள்ளலாம் என்றால் அவனது இனிசியலும் எல் (L )  தான். அவன் வீரபாண்டி (சேலம் அருகே இருக்கும்) கிராமத்தில் இருந்து வருவான். எனவே அவன் வீரபாண்டி கார்த்திக் ஆகிட்டான். நான் எப்பவும் போல் கார்த்திக் தான் . 

வகுப்பில் லெக்சரர் என்னைக் கேள்வி கேட்டால், அவன் எழுந்து பதில் சொல்லுவான் ,அவனைக் கேட்டால் நான் எழுந்து சொல்லுவேன். பொதுவா கார்த்திக்னுதான் கூப்பிடுவாங்க,. மாத்தி எழுந்து நின்னு ஒரே காமெடியா இருக்கும். 


படிப்பு முடிஞ்சு வேலைக்கு வந்தப்புறம்தான் கார்த்திக் எல் கே வா மாறினது . இப்ப வேலை செய்யற ஆபிசில் ஏற்கனவே ஒரு கார்த்திக் இருந்ததால் நான் எல் கேவா மாறினேன் ,

என் மகளுக்கு பெயர் வைக்கும் பொழுது என் பாட்டியின் பெயர் அதில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன் . அவர்களது முழு பெயரையும் வைத்தால் ரொம்ப பழைய பெயரா இருக்கும்னு தோணியது. அதே சமயம் ரெண்டு மூணு பேர் வைக்க எனக்கு இஷ்டம் இல்லை. 

எங்களுடைய நெருங்கிய குடும்ப நண்பர், திவ்யா மக நட்சத்திரத்தில் பிறந்ததால் "த,தி " சொல்லில் துவங்கும் பெயரை வைக்க பரிந்துரை செய்தார். என் பாட்டியின் பெயரில் பின்பாதியும் சேர்த்து திவ்ய லக்ஷ்மி என்று வைத்தோம். 

இதுதாங்க என்னோட பெயர் புராணம். 

இதை தொடர சிலரைக் கூப்பிடனுமே , 





அன்புடன் எல்கே

56 கருத்துகள்

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

அருமை எல்கே.......உங்கள் பெயர் புராணம். ரொம்ப பாசக்காரப் புள்ளையா இருக்கீங்க........வாழ்த்துக்கள்.

RVS சொன்னது…

ஏற்கனவே சொல்லியிருக்கேன்.. என்னோட ப்ளோகோட பெயர்க்காரணம்.. இப்ப சொந்தப் பெயரோட காரணமா ... சரி செய்வோம்..

vanathy சொன்னது…

//நான் பிறந்தது கார்த்திகை நட்சத்திரத்தில். எனவே கார்த்திக்னு வச்சிட்டாங்க. //

ஓ! அப்படியா!!! நல்லவேளை மார்கழியில் நீங்க பிறக்கலை.

அப்பாதுரை சொன்னது…

வாழ்க!
(மறுபடி டெம்ப்லேட் மாறிடுச்சு - சூபரா இருக்கு)

Chitra சொன்னது…

உங்களின் மகளின் பெயரும் பெயர் காரணமும் அழகாக இருக்கிறது.

pudugaithendral சொன்னது…

ஆஹா என் தம்பி பேரும் கார்த்திக் தான். சந்தோஷ் கார்த்திக்.

Asiya Omar சொன்னது…

பெயர்க்காரணம் பகிர்வு நல்லாயிருக்கு.

பத்மநாபன் சொன்னது…

பிறந்த நாள் முதல் பெயர்கள் படும் பாடு சுவாரஸ்யமாக இருக்கும்.. பள்ளியில் பட்ட பாட்டை அழகாக சொல்லியிருக்கிறிர்கள்....
தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி.. போட்டுருவோம்...

எல் கே சொன்னது…

@சங்கரி

ஆமாம் என் பாட்டி மேல் பாசம் அதிகம்

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்

ப்ளாகர் பெயர்க் காரணம் வேண்டாம் . உங்கள் சொந்தப் பெயர்க் காரணம் சொல்லவேண்டும்

எல் கே சொன்னது…

@வாணி

கார்த்திகை மாதம் அல்ல நான் சொன்னது. கார்த்திகை நட்சத்திரம். மார்கழி என்று நட்சத்திரம் எதுவம் இல்லையே

எல் கே சொன்னது…

@அப்பாதுரை
வாழ்த்துக்கு நன்றி. நான் டெம்ப்ளேட் மாற்றி ரொம்ப நாள் ஆச்சு தலைவரே

எல் கே சொன்னது…

@புதுகை

கார்த்திக் ரொம்ப பொதுவான பெயர்

எல் கே சொன்னது…

@ஆசியா
நன்றிங்க

எல் கே சொன்னது…

@பத்மநாபன்
பள்ளி அல்ல. கல்லூரியில் தான் பிரச்சனை

Sriakila சொன்னது…

உங்கள் பெயர் 'வெங்கட்ராமன்', 'கார்த்திக்' என்ற அருமையான பெயர்களாக இருந்தாலும், பதிவுலகத்தில் 'எல்.கே' என்ற சுருக்கமான அடையாளம் உச்சரித்துப்பார்க்கும்போது அழகாகத் தெரிகிறது.

பொதுவாக பெயரை நீளமாக முழுப்பெயராக‌ கூப்பிடுவதைவிட அதை சுருக்கி கொஞ்சம் ஸ்டைலாக கூப்பிடுவதே அனைவருக்கும் பிடித்தமான விஷயம். அது நம்மை சுற்றியுள்ள நண்பர்கள் தான் அப்படி கூப்பிடுகிறார்கள்.

உங்கள் பெயர்க்காரணம் அருமையாக, ரசிக்கும்படி உள்ளது. வீரபாண்டி கார்த்திக், வெறும் கார்த்திக் காமெடி ட்ராக் நல்லா இருக்கே....

'திவ்ய லஷ்மி' லட்சணமான பெயர். என்னுடைய தொடர்பதிவை ஏற்றுக்கொண்டு உங்களுடைய சுவாரஸ்யமான அனுபவங்களை தந்ததற்கு நன்றி கார்த்திக்.

தக்குடு சொன்னது…

ஓஹோ! சுவாரசியமாதான் இருக்கு போங்கோ!!..:)

சாந்தி மாரியப்பன் சொன்னது…

பெயர்க்காரணம் அருமை.. பாட்டிகள் காலத்துலயெல்லாம் பேருவைக்கிறதுக்கு யோசிக்கவேண்டிய தேவையே இருந்திருக்காது, ரெண்டுபக்கத்து தாத்தா,பாட்டிகள் பேரே வழங்கிவருமே :-)))

geethasmbsvm6 சொன்னது…

எங்க வீடுகளில் எல்லாம் மூன்று பெயர் வைப்பாங்க, அம்மாவோட பிறந்த வீட்டுப் பெயர் ஒண்ணு, அப்பாவோட வழித் தாத்தா அல்லது பாட்டியின் பெயர் ஒண்ணு, கூப்பிடும் பெயர் ஒண்ணுனு. கடைசியில் கூப்பிடும் பெயர் தான் நிலைக்கும். இன்னிக்கு என்னோட பெயரும் அப்படித் தான் கூப்பிட வைச்ச பெயர் சட்டபூர்வமானதாகிவிட்டது. இதே கதைதான் எங்க குழந்தைகளுக்கும் :))))))))

geethasmbsvm6 சொன்னது…

தொடர

'பரிவை' சே.குமார் சொன்னது…

"பெயர்க்காரணம்" நல்லாயிருக்கு.

கோலா பூரி. சொன்னது…

கார்த்திக் பெயர்க்காரணம் நல்லா இருக்கு.ரசனையாகவும் இருக்கு.

குறையொன்றுமில்லை. சொன்னது…

கார்த்தி, இதுபோல எங்க வீட்டிலும் பெயர் வைப்பதில் ஏக காமெடிகள் நடந்திருக்கு. உங்க பதிவு படிச்சதும் அது எல்லாம் நினைவு வந்தது. அதுவும்
எங்களுக்கு தாராளமாகவே குழந்தைச்செல்வங்கள் உண்டே.

S Maharajan சொன்னது…

"பெயர்க்காரணம்" நல்லாயிருக்கு.

ஹுஸைனம்மா சொன்னது…

ம், இப்படித்தான் எங்க ஊர்லயும் தாத்தா பாட்டி பேரை வெச்சுட்டு, அப்புறம் கூப்பிடுறதுக்கு பாப்பா, குட்டி, தம்பின்னு ஆரம்பிப்பாங்க. அது அப்புறம் அவங்களே தாத்தாவானாலும் அதே பேர்தான் நிலைக்கும். நல்லவேளை உங்களுக்கு இன்னொரு பேர வச்சிட்டாங்க.

ஸ்ரீராம். சொன்னது…

சுருக்கமாகவும் அழகாகவும் முடித்து விட்டீர்கள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இதை வரலாருல பதியனும்...
பாட புஸ்தகத்துல படிக்கணும்....

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

பெயர்க்காரணம் சுவாரசியமாக இருக்குங்க.

ADHI VENKAT சொன்னது…

பெயர்க்காரணம் பதிவு நல்லாயிருக்கு. திவ்ய லஷ்மி பேர் நல்லாருக்கு.

Ram சொன்னது…

என்னோட பெயருக்கு காரணமா.???

யோசிச்சு இன்னைக்கே சொல்லிடுறன்.!!

உங்களதோட உங்க மகளுடையது சூப்பர்..

ஹேமா சொன்னது…

பெயர்க்காரணத்துக்கு ஒரு தொடரா...நல்லாருக்கு எல்கே !

பெயரில்லா சொன்னது…

சில பேருக்கு "பேரு" பேருக்குதான் இருக்கும்.பேரு வந்த காரணம் தெரிந்த பேறு சில பேருக்குத்தான் கிடைக்கும்.உங்கள் பெயர் வந்த காரணம் அருமை.

சென்னை பித்தன் சொன்னது…

எனது பால்ய கால நண்பன் ஒருவனுக்கு ஏன் இப்படிப் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை!--குப்பு சுந்தர ஸ்ரீநிவாசக வெங்கட ரங்கநாதன்!சுருக்கமாகக் ’குப்பு’

Vasagan சொன்னது…

Karthi
பேர் வைக்கிற புராணம் பெரிய புராணம் தான், மூத்த பிள்ளையா இருந்தா முதல அட்லீஸ்ட் இரண்டு பேர் இருக்கும், கடைசில சம்பந்தமே இல்லாம வேற ஒரு பேருதான் நிலைக்கும்,

அப்பாவி "பேரு வெச்ச புராணத்தை" பற்றி ஒரு பதிவு ஏற்கனவே போட்டாச்சு பத்திரகாளியா?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பெயர்க்காரணம் அருமை!

மோகன்ஜி சொன்னது…

சுவாரஸ்யமாய் இருக்குங்க!
திவ்ய லக்ஷ்மி.. திவ்யமான பேர்.

settaikkaran சொன்னது…

//நான் பிறந்தது கார்த்திகை நட்சத்திரத்தில். எனவே கார்த்திக்னு வச்சிட்டாங்க. //

நல்ல வேளை, எனக்கு தாத்தா பெயரை வைக்கவில்லை. இல்லாவிட்டால் என்னை ரேவதி என்றல்லவா அழைக்க வேண்டும்? :-)

எல் கே சொன்னது…

@ஸ்ரீஅகிலா

என்னை அழைத்ததற்கு நாந்தான் நன்றி சொல்ல வேண்டும். அலோவல்கம்,இணையம் ,நண்பர்கள் வட்டம் எல்லா இடத்திலும் எல் கே தான். வீட்டில் மட்டும்தான் கார்த்திக்.

எல் கே சொன்னது…

@தக்குடு

ஆர்வீஎஸ் உன்னை கூப்பிட்டு இருக்கார்

எல் கே சொன்னது…

@சாரல்

எதுக்கு அவ்வளவு தூரம்? எனக்கே என் தாத்தா பெயர் வச்சு இருக்காங்களே . இப்பதான் எல்லாம் மாறி போச்சு

எல் கே சொன்னது…

@கீதா

மாமி, இப்பலாம் பிறப்பு சான்றிதல் முக்கியமா போய்டுச்சு. நான் என் பிறப்பு சான்றிதழை எங்கயும் உபயோகிக்க முடியாது. அதில் வெங்கட்ராமன் தான் இருக்கு. இந்தமாதிரி குழப்பங்கள் வேண்டாம்னு ஒரே பேரா வச்சிட்டேன்

எல் கே சொன்னது…

@குமார்
நன்றி

@கோமு

நன்றி


@லக்ஷ்மி

ஆமாம். உங்கள் வீட்டில் நெறைய குழந்தைகள் ஆச்சே.

எல் கே சொன்னது…

@ஹுசைனம்மா

ஆமாம். அந்த மாதிரியும் நடக்கறது உண்டு. எங்கப்பா கொஞ்சம் மாடர்னா(ஒரு 29 வுர்சம் முன்னை ) பெயர் வைக்கணும்னு இப்படி கார்த்திக்னு வைத்தார். வீட்டில் பரிந்துரை செய்யப்பட்ட பெயர் கார்த்திகேயன்

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

அண்ணா, என்னிக்கு நான் பெருசா எழுதி இருக்கேன் ???

எல் கே சொன்னது…

@மனோ
மக்கா , இம்புட்டு ஆசை இருக்கா , பண்ணிடலாம் விடு

எல் கே சொன்னது…

@திருமதி

நன்றிங்க

@ஆதி

நன்றி

@கூர்மதி
அழைப்பை ஏற்று பதிவு போட்டதுக்கு நன்றி

எல் கே சொன்னது…

@ஹேமா
ஆமாம்

@குரட்டைப் புலி

நன்றி

@சென்னை பித்தன்

அட. இன்னும் சில இருக்கு, க்ரிஷ்ணமூர்த்தினு பேர் வைத்தால், கிச்சாதான். இந்த மாதிரி

எல் கே சொன்னது…

@வாசகன்
ஹ்ம்ம் அப்படி சொல்றதுக்கு இல்லை சார். அதெல்லாம் நாம தலைமுறையோட போயாச்சு. இப்ப மாடர்ன் பெயர்கள்தான் வைக்கின்றனர்

எல் கே சொன்னது…

@venkat naagaraj

nandri

எல் கே சொன்னது…

@மோகன் ஜி
நன்றி சார்

எல் கே சொன்னது…

@சேட்டை

சேட்டை உன் கமென்ட் படிச்சிட்டு ரெண்டு நிமிஷம் செம சிரிப்பு. உங்களை மாட்டி விட்டு இருந்த , உங்க பெயர் தெரிஞ்சு இருக்குமே ?

சுந்தரா சொன்னது…

பெயருக்கான காரணம்- சுவாரஸ்யம்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

வாவ்... இப்படி ஒரு தொடர் பதிவா....நல்ல ஐடியா தான்... உன் பெயர் காரணம் சூப்பர்... Dhivya's sooper dooper... என்னை கூப்பிட்டதுக்கு ரெம்ப நன்றி... ஆனா இன்னொரு வாட்டி "நான் பத்திரகாளியா..." போட்டா உன்னையும் சேத்து திட்ட போறாங்க... ha ha... ஜஸ்ட் கிட்டிங்... ரீ-பப்ளிஷ் பண்ணிடறேன் கார்த்திக்... thanks again for inviting me too....:)

Anisha Yunus சொன்னது…

//ரொம்ப பாசக்காரப் புள்ளையா இருக்கீங்க........வாழ்த்துக்கள்.//
ஹி ஹி ஹி... :))

அண்ணா, தொடர்பதிவுக்கு நன்றி. கண்டிப்பா எழுதறேன். :)

தெய்வசுகந்தி சொன்னது…

சுவாரசியமான "பெயர்க்காரணம்"!!!

Arun Ambie சொன்னது…

சுவாரசியமான பெயர்க்காரணம்!!! ஒரு சின்ன சந்தேகம். கேட்டை நட்சத்திரத்துல பொறந்தா என்னன்னு பேரு வெப்பாங்க???