Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin
Tuesday, November 26

Pages

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

ஜகத்குரு -8- துறவறம்

குருபுங்க புங்கவ கேதந தே ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ: சரணாகத வத்ஸல தத்வநிதே பவ சங்கர தேசிக மே சரணம்!! ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேச்வர ஸ்...

குருபுங்க புங்கவ கேதந தே
ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:
சரணாகத வத்ஸல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!!

ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேச்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் மேலான குரு சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே! உம்மைச் சரணம் என அடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே! ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!



**********************************************************************************************

"ஆர்யாம்பாளின் வாயில் இருந்து அந்த வார்த்தை வந்தவுடன் ,சங்கரரின் காலை பற்றியிருந்த முதலை விலகி மறைந்தது ."


"மாமா ! அவருடைய காலை பற்றியது இந்திரன்தான் என நான் கேள்விப் பட்டிருக்கிறேன். நீங்க வேற மாதிரி சொல்றேளே ?"

"ரெண்டு மூணு விதமா இதை சொல்லுவா. அந்த பரமேஸ்வரனே முதலையாய் வந்ததாவும் இருக்கு. கந்தர்வன் ஒருவன் சாப விமோஷனதிற்காக இப்படி முதலையாய் வந்ததாவும் இருக்கு. நீ சொல்ற மாதிரி இந்திரன் வந்ததாவும் இருக்கு . யார் முதலையாய் வந்தது என்பது முக்கியம் இல்லை . அந்த காரியம் நடந்துச்சா அதுதான் முக்கியம் .

இந்த இடத்தில் இன்னொரு விஷயம் கவனிக்கணும். அம்மாவோட அனுமதி இல்லாம சந்நியாசம் வாங்கக் கூடாது என்பது. சங்கரர் நினைத்திருந்தால் அவர் அனுமதி இல்லாமல் சந்நியாசம் வாங்கி இருக்க இயலும். ஆனால் எதையும் முறைப்படி செய்யவேண்டும் என்று தன் தாயின் அனுமதி பெற்றப் பிறகே சந்நியாசம் மேற்கொள்கிறார். "

"எனக்கு ஒரு சந்தேகம். பொதுவா, பிரம்மச்சரியம்,க்ரஹச்தாச்ரமம் என்று முடித்தப் பிறகுதானே சந்நியாசம் வாங்க வேண்டும். ஏன் சங்கரர் அதை செய்யவில்லை ?"

"நல்ல கேள்வி . நீ சொன்னது பொதுவான ஒரு விதி. ஆனால் சங்கரர் பிறவி ஞானி. அதுவும் இல்லாம அவர் வாழ்வின் நோக்கமே, சிதறுண்டு இருந்த இந்து மதத்தை சரி பண்றதுதான். ஒரு சில சிறப்புக் காரணங்கள் இருக்கும் பொழுது பொதுவான சில விதிகள் மீறப் படலாம். தவறில்லை ."


"சந்நியாசம் வாங்க அனுமதிக் கொடுத்தாலும், தாயின் மனது பிரிவை ஒத்துக் கொள்ள மறுக்குது."

" சங்கரா, நானும் உன்கூட வரேன். வேண்டாம்னு சொல்லாதப்பா. கடைசி காலத்தில் ,உன் கூட இருக்கணும்னு ஆசைப் படறேன். மறுக்காதே!"

"இல்லை அன்னையே ! துறவரம்னு வந்தப் பிறகு எந்தப் பாசங்களும் இருக்கக் கூடாது. காடு ,மலைகள்னு உன்னால் நடக்க முடியாது . நீ கூட வந்தால் உன் பாதுகாப்பே என் நோக்கமாய் போய் விடும். உன் இறுதி காலத்தில் நான் உன்னுடன் இருப்பேன். இது உறுதி ".

"இப்படி சொல்லி மறுத்துவிட்டு, சந்நியாசதிற்கு உரிய ஆடைகள் அணிந்துகொண்டு, வீட்டை விட்டு வெளியேறி வடக்கு நோக்கிப் பயணிக்கத் துவங்கினார்"

-தொடரும்

அன்புடன் எல்கே

16 கருத்துகள்

குறையொன்றுமில்லை. சொன்னது…

ஜகத்குருபற்றி சுவாரஸ்யமா சொல்கிரீர்கள். நன்னா இருக்கு.

ADHI VENKAT சொன்னது…

நல்ல நோக்கம் இருக்கும் போது பொதுவான விதிகள் மீறப்படலாம். இது நன்றாயிருக்கு. தொடருங்கள் வருகிறோம்.

பெயரில்லா சொன்னது…

சிறப்பான நடையில் தொடர் நல்லாப் போகுது LK!

RVS சொன்னது…

சைவத்தில சந்நியாசத்திற்கு க்ரஹஸ்தாஸ்ரமம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். வைஷ்ணவத்தில் உண்டு. குட். தொடர் நல்லாப் போகுது எல்.கே. ;-)

ஸ்ரீராம். சொன்னது…

அம்மாவிடம் அனுமதி பெறாமல் எதையும் செய்யக் கூடாது, அதற்கு மாய முதலையைக் காரணம் காட்டுவது, தாயின் மனம்,...
நல்ல விஷயங்கள்.
முதலை விஷயத்தில் கூட பின்னணியில் ஒரு சாப விமோசனம், அதற்கு என்ன கதை என்று பார்க்கப் போனால் இன்னும் விரிவாக புராணங்கள்...பெரிய விஷயங்களைச் சுருக்கி தேவையானதை மட்டும் அழகாகச் சொல்லி வருகிறீர்கள் எல் கே.

Thenammai Lakshmanan சொன்னது…

மிக அருமையான பதிவு கார்த்திக்..

பத்மநாபன் சொன்னது…

தாயின் அனுமதியில்லாமல் எந்த காரியத்திலும் வெற்றியடைய முடியாது என்பதை சாதாரண விஷயங்களில் கூட நடைமுறை வாழ்வில் பார்க்கிறோம்.
பெற்ற மகனை துறவறத்தில் துறப்பது என்பது பெரிய விஷயம் ...அந்த தாயின் மன மாற்றத்திற்கு இறைவனின் திருவிளையாடல்...
சங்கரரின் வாழ்வில் இப்படி நிறைய திருவிளையாடல்கள்...

சிறப்பாக போகிறது எல்.கே...

தக்குடு சொன்னது…

ஜெகத்துக்கே குருனாலும் அகத்துல அம்மாவுக்கு புள்ளைதான் என்பதை லோகத்துக்கு காட்டிய குருவின் கதை அழகான பாதையில் நகர்கிறது. வாழ்த்துக்கள்!..:)

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி
நன்றிமா

@கோவை

நன்றிங்க


@பாலாஜி

நன்றி

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்

உங்களுக்கு உண்டான பதில் வாசு அண்ணா சொன்னது

//Tirumurti Vasudevan - பொதுவா, பிரம்மச்சரியம்,க்ரஹச்தாச்ரமம் என்று முடித்தப் பிறகுதானே சந்நியாசம் வாங்க வேண்டும்.//
அப்படி இல்லை. ப்ரம்ஹச்சரியம் முடிந்த உடனேயே வைராக்கியம் இருந்தால் சன்னியாசம் வாங்கிக்கொள்ள சாஸ்திரங்கள் அனுமதிக்கின்றன. ஆனால் கலியில் சன்னியாசத்துக்கு அனுமதி இல்லை. சில சம்பிரதாயமான மடங்கள் தவிர//

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

ஆமாம். அது இன்னும் பெருசா போகும் அதுதான் தொடவில்லை

எல் கே சொன்னது…

@தேனம்மை

நன்றிக்கா

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

ஆமாம் அண்ணா. என்ன இருந்தாலும் பெற்றத் தாய் அல்லவா ??

எல் கே சொன்னது…

@தக்குடு

நன்றி தக்குடு

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தொடர் அழகாய் போய்க்கொண்டு இருக்கிறது. தொடரவும்...

RAMA RAVI (RAMVI) சொன்னது…

கார்திக், தங்களின் ஜகத்குரு தொடரைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு, அறிமுகம் செய்து இருக்கிறேன். நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

ப்ரத்யுஷா

தென்னாப்பிரிக்க அணியின் இறங்கு முகம்

மீண்டும் தொடரலாமா...

இரண்டு வார்த்தைகள்

காவிரியின் மைந்தன்

கற்க வேண்டியது யார் ?

புது வீடு

மீண்டும் விருது

பள்ளித் துவக்கம்

அனைவரும் நலமா ?