Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin
Tuesday, November 26

Pages

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

திவ்யாவும் ஸ்கூலும்

திவ்யாவை நேரடியாக எல் கே ஜி தான் அனுப்ப வேண்டும் என்று இருந்தேன் . ஆனால் எங்களை பிரிந்து இருக்க அடம்பிடிப்பதால் ஒரு மூன்று மாதம் ப்ளே ஸ்கூல்...

திவ்யாவை நேரடியாக எல் கே ஜி தான் அனுப்ப வேண்டும் என்று இருந்தேன் . ஆனால் எங்களை பிரிந்து இருக்க அடம்பிடிப்பதால் ஒரு மூன்று மாதம் ப்ளே ஸ்கூல் செல்லட்டும் என்று கடந்த திங்கள் அன்று வீட்டின் அருகே உள்ள ஒரு சிறு ப்ளே ஸ்கூலில் சேர்த்து விட்டோம் .

 ஞாயிறு அன்று பள்ளி செல்லத் தயாராகி விட்டாள் திவ்யா. பை எடுத்து வைத்துக் கொள்ளுவதும், அனைவரிடமும் சொல்லிக் கொள்வதுமாய் அவள் ஒரு புதியதொரு உலகத்தை எதிர்பார்த்து.

எப்பவுமே காலை ஏழு மணிக்கு எழுந்துவிடுவாள். அதானால் காலையில் பள்ளி செல்ல எழுப்ப வேண்டும் என்ற பிரச்சனை இல்லை.  பள்ளிக்கூடம் போகும் வரை எல்லாம் சரியாதான் போச்சு. வருடத்தின் முதல் நாள் என்பதால் எனக்கு அலுவலகத்தில் லீவ் / பர்மிசன் கிடைக்கவில்லை. எனவே திவ்யாவும்,அம்மாவுமாய் சென்றார்கள்.


முதல் நாள் அதிகம் அழுகையோ இல்லை ஆர்பாட்டமோ இல்லை. சரி பிரச்சனை இல்லை  அப்படின்னு சந்தோசமா இருந்தேன். ரொம்ப சந்தோசப் படரன்னு அடுத்த நாளே நிரூபணம் பண்ணா. வழக்கம்போல ஸ்கூல் போறவரைக்கும் பிரச்சனை இல்லை. அங்க போய்தான் அழுகை ஆர்பாட்டம் எல்லாம்.

சாயங்காலம், வீட்டிற்கு வந்தப்புறம் அவகிட்ட
"நாளைக்கு ஸ்கூலுக்கு போய் அழுவியா" ?
" அழுவேன் " .
"எதுக்கு அழுவே ? "
"அம்மா வேணும்னு அழுவேன் ."

"சரி. ஸ்கூலுக்கு போகாம இருப்பியா ?"
"ஸ்கூலுக்கு போனும். அம்மாவும் வரணும் "

இதெப்படி இருக்குது ?? நேற்று கொஞ்சம் அழுகை குறைவு என்று சொன்னார்கள். பார்ப்போம். ஓரிரு வாரத்தில் நார்மலுக்கு வந்துவிடுவாள் என்றுத் தோணுகிறது.

அன்புடன் எல்கே

41 கருத்துகள்

Porkodi (பொற்கொடி) சொன்னது…

LOL!! smartu kidu!

Madhavan Srinivasagopalan சொன்னது…

same blood

பெயரில்லா சொன்னது…

//"சரி. ஸ்கூலுக்கு போகாம இருப்பியா ?"
"ஸ்கூலுக்கு போனும். அம்மாவும் வரணும் "///

He he. Smart kid. Let me guess she is smart like amma :):):)

ஆமினா சொன்னது…

//
"சரி. ஸ்கூலுக்கு போகாம இருப்பியா ?"
"ஸ்கூலுக்கு போனும். அம்மாவும் வரணும் "//

விடுங்க விடுங்க!!!!

நாளைக்கு வரலாறு பேச வேண்டாமா? ? :)

GEETHA ACHAL சொன்னது…

வாழ்த்துகள் திவ்யா குட்டி...அதுக்குள்ளே ஸ்கூல் போக ஆரம்பித்துவிட்டாங்களா..

Asiya Omar சொன்னது…

திவ்யா ஸ்கூல் போக ஆரம்பிச்சாச்சா?வாழ்த்துக்கள்.

Chitra சொன்னது…

She will be fine. :-)

கோலா பூரி. சொன்னது…

குழந்தைகள் என்னிக்குமே குழந்தைகள்தான்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//"நாளைக்கு ஸ்கூலுக்கு போய் அழுவியா" ?
" அழுவேன் " .
"எதுக்கு அழுவே ? "
"அம்மா வேணும்னு அழுவேன் ."//

என் தம்பியின் பெண்ணும் இப்படித்தான் சொன்னாள். எப்படி அழுவேன்னு கேட்டதுக்கு, பத்து நிமிஷமா தரையில உருண்டு புரண்டு அழுதுகாமிச்சது ஹைலைட் :-))))))))))))

Vidhya Chandrasekaran சொன்னது…

ஓரிரு வாரங்களில் சரியாகிவிடும்.

ஸ்கூலுக்கும் போகனும் அம்மாவும் வேணும் - செம்ம:)

அருண் பிரசாத் சொன்னது…

சீக்கிரம் செட் ஆகிடுவாங்க.... கவலைய விடுங்க பாஸ்

test சொன்னது…

//அருண் பிரசாத் said...
சீக்கிரம் செட் ஆகிடுவாங்க.... கவலைய விடுங்க பாஸ்//
ரிப்பீட்டுகிறேன்!

பெயரில்லா சொன்னது…

ஹா ஹா! வெரி ஸ்மார்ட் :)

Unknown சொன்னது…

பொதுவாகவே சில குழந்தைகள் மட்டுமே பள்ளிக்கு அடம்பிடிக்காமல் போகும். பெரும்பாலான குழந்தைகள் பிரச்சினை பண்ணும்தான்.. போகப்போக சரியாகிவிடும் ...

பெயரில்லா சொன்னது…

@ அமைதிச்சாரல்,

//என் தம்பியின் பெண்ணும் இப்படித்தான் சொன்னாள். எப்படி அழுவேன்னு கேட்டதுக்கு, பத்து நிமிஷமா தரையில உருண்டு புரண்டு அழுதுகாமிச்சது ஹைலைட் :-))))))))))))//

உங்க மருமகள் தானே. வேற எப்டி இருப்பா. :):):) இந்த சின்ன வாண்டுகள் எல்லாம் ரொம்பவே விபரம் தான்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

திவ்யாகுட்டி பள்ளி செல்ல ஆரம்பித்தாச்சா? நல்லது. சில நாட்கள் இப்படித்தான் இருக்கும். போகப்போக சரியாகிவிடும்.

Sriakila சொன்னது…

ஆரம்பத்தில் குழந்தைகள் அழ‌த்தான் செய்வார்கள். என் குழந்தையும் அப்படித்தான் இருந்தாள்.

முதலில் ஒரு மணி நேரத்திலேயே கூட்டிக்கொண்டு வந்து விட வேண்டும். ஸ்கூலிலும் அப்படித்தானே சொல்வார்கள், இல்லையா? கொஞ்ச, கொஞ்சமாக நேரத்தை அதிகப்படுத்தி கூட்டிக்கொண்டு வந்தால் குழந்தை அந்த சூழலுக்கு செட்டாகி விடுவாள்.

அப்புறம் அவர்கள் நம்மை கண்டுகொள்ளவே மாட்டார்கள். அதன்பின்பு நீங்கள் தான் பாவமாகி விடுவீர்கள்.

All the Best!

பத்மநாபன் சொன்னது…

வாழ்த்துக்கள்... என்சாய் தி ரகளைஸ்..

'பரிவை' சே.குமார் சொன்னது…

திவ்யா பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்... பள்ளிக்கூட போக ஆரம்பிச்சாச்சா...?

எல் கே சொன்னது…

@பொற்கொடி
என்னோட பொண்ணாச்சே . smartaa தான் இருப்பா

@மாதவன்
:))

@அனாமிகா
க்ர்ர்.

@ஆமீனா
ஹஹா வரலாறு முக்கியம்

@கீதா அச்சில்
சும்மா பக்கத்தில் ஒரு ப்ளே ஸ்கூல்

@ஆசியா

சும்மா பக்கத்தில் ஒரு ப்ளே ஸ்கூல்

@சித்ரா
ஆமாம் விரைவில் சமாதானம் ஆகி விடுவாள்

எல் கே சொன்னது…

@கோமு
ஹ்ம்ம் ஆமாம்

@சாரல்
என் பொண்ணும் அழுது காமிப்பா .

@வித்யா
ஆமாம். இன்று ஓரளவு ஓகே

@அருண்
ஹ்ம்ம் ஓகே

@ஜி
நன்றி

@பாலாஜி
ஆமாம் என்னை போலவே

@செந்தில்
ஹ்ம்ம் சரிதான். நானும் அடம் பிடித்து இருக்கிறேன்

@அனாமிகா
நான் ஒன்னும் சொல்லலைப்பா

@வெங்கட்
ஆமாம் சரி ஆய்டுவா

எல் கே சொன்னது…

@அகிலா
ஆமாம். ஒன்றரை மணி நேரம்தான். மற்றவர்களுக்கு மூணு மணி நேரம்

@பத்மநாபன்
நன்றி

@குமார்
சும்மா பக்கத்தில் ஒரு ப்ளே ஸ்கூல்

சுசி சொன்னது…

எல்லாம் சரி ஆய்டும் கார்த்திக்.. :))))

முத்து முத்தா கண்ணீர் கொட்ட.. அம்மான்னு அழும்போது.. அய்யோன்னு வரும் பாருங்க.. உஸ்ஸ்ஸ்.. :((((

BalajiVenkat சொன்னது…

she is too smart... koozhukkum aasai meesaikum aasaingra mathiri....

i like her reply....

BalajiVenkat சொன்னது…

//ஹ்ம்ம் சரிதான். நானும் அடம் பிடித்து இருக்கிறேன் //

தாய போல புள்ள நூல போல சேலன்னு சும்மாவா சொல்லிருக்காங்க

ஹேமா சொன்னது…

மனசு நெகிழ்வாயிருக்கு கார்த்திக்.திவ்யாக்குட்டி மாதிரி சின்னக் குழந்தையாவே
இருந்திடலாம் அம்மாகூட !

ADHI VENKAT சொன்னது…

எங்க மகளை சும்மா விசாரிக்க கூட்டிட்டு போய் அப்பவே ப்ளே ஸ்கூலிலே சேர்த்து விட்டுட்டுட்டேன். வந்து தான் அவருக்கே போனில் சொன்னேன். ஒரு வாரம் தான் அழுவாங்க. அதற்கப்புறம் சரியாயிடும்.

Gayathri சொன்னது…

நல்லாத்தான் யோசிக்ரா. குழந்தைதானே ஆசை இருக்கும் ஆனா அங்க போனப்ரம்தான் அம்மவேனும்னு புரியும். சரியா போய்டும்

ராமலக்ஷ்மி சொன்னது…

க்யூட்:))!

சரியாப் போகும்:)!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

ஆஹா...அம்மாவும் சேந்து ஸ்கூல் போக வேண்டியது தான்...ஹா ஹா அஹ... சரி ஆய்டும் in no time... all the best

குறையொன்றுமில்லை. சொன்னது…

பேசாம அந்தஸ்கூலிலேயே அம்மாவுக்கும் ஒரு டீச்சர் வேலை வாங்கிட வேண்டியதுதானே.:)

ஸ்ரீராம். சொன்னது…

அடேடே...ஸ்கூல் போக ஆரம்பிச்சாச்சா..! வாழ்த்துக்கள்.

Ram சொன்னது…

கொடுமை படுத்திட்டீங்களே அண்ணா... அத விடுங்க 2 வயசுல நான் படிக்க போகாட்டி மாடு தான் மேய்கனும்னு எங்க பாட்டி சொன்னாங்களாம்.. அதனால என்ன ஸ்கூலுக்கு கூட்டி போகும்போது கீழ விழுந்து பிரண்டு நான் பின்னி(பன்னிய தான் அப்படி சொன்னனாம்) மேய்கிறன் பின்னி மேய்கிறன்னு அழுதனாம்.. அதுகப்பறம் கொஞ்ச நாள் ஆனதும் க்ளாஸ்ல ரொம்ப குட் ஸ்டூடண்ட்டா க்ளாஸ் பர்ஸ்ட்.. பின்னி.. சே.. பன்னி மேய்கிறன்னு சொன்ன நானே பெஸ்ட்னா திவ்யா குட்டி பெஸ்ட்லயும் பெஸ்ட்டா இருப்பாங்க.. நோ கவலை..(பாசம் புல் அரிக்குதுண்ணா..!!!)

அபி அப்பா சொன்னது…

அடடா கார்த்தி! எனக்கே இப்பவும் ஸ்கூல் பக்கம் போனாலே அழுகை அழுகையா வருது. பாவம் பச்ச சிசுவை போய் ஏன் தான் இப்படி கொடுமை படுத்துறீங்களோ? என்னவோ போங்க!

Philosophy Prabhakaran சொன்னது…

குழந்தைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க... ப்ரீயா விடுங்க... திவ்யாகுட்டிக்கு எங்களது வாழ்த்துக்கள்...

எல் கே சொன்னது…

@சுசி
இன்று அழவில்லை

@பாலாஜி

ஆமாம்

@பாலாஜி
தந்தையை போல


@ஹேமா
ஆமாம் ஹேமா

@கோவை
அட ...

@காயத்ரி
சரி ஆகிட்ட ஓரளவு

@ராமலக்ஷ்மி
நன்றிங்க

@அப்பாவி
அது சரி

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி
இது நல்ல ஐடியா

@ஸ்ரீராம்
ஆமாம் அண்ணா

எல் கே சொன்னது…

@கூர்மதியான்
தம்பி ,எனக்கும் இஷ்டம் இல்லை. இப்ப பழகனும் இல்லாவிடில் எல் கே ஜி போகும்பொழுது பிரச்சனை.

//ளாஸ்ல ரொம்ப குட் ஸ்டூடண்ட்டா க்ளாஸ் பர்ஸ்ட்//
நம்பிட்டேன் ...

@அபி அப்பா
என்ன பண்ண ? இதெல்லாம் ஒரு கட்டயமா ஆக்கிட்டாங்க

@பிரபாகரன் ...

நன்றி

Ram சொன்னது…

//நம்பிட்டேன் ...//

இன்னும் பயிற்சி வேண்டுமோ.??? நமது ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாணதே.!!!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

@அனாமிகா என்ற சுனாமியே...

கர்ர்ர்ர்ர்ர்..




மீ நல்ல பொண்ணுப்பா.. ஜஸ்ட் அஞ்சே நிமிஷம்தான் அழுதேனாம் :-))))))))

பெயரில்லா சொன்னது…

//ஜஸ்ட் அஞ்சே நிமிஷம்தான் அழுதேனாம் :-))))))))//

அழுதீங்களா? அழுது காட்டினீங்களா

ஹா ஹா.

நாங்க எல்லாம் அழவே இல்லை. ஆனால் எங்க டீச்சர் ரொம்பவே அழுதாங்க. நம்ம தொல்லை தாங்க முடியாமத் தான். ஹா ஹா.

ப்ரத்யுஷா

தென்னாப்பிரிக்க அணியின் இறங்கு முகம்

மீண்டும் தொடரலாமா...

இரண்டு வார்த்தைகள்

காவிரியின் மைந்தன்

கற்க வேண்டியது யார் ?

புது வீடு

மீண்டும் விருது

பள்ளித் துவக்கம்

அனைவரும் நலமா ?