நாட்டுப் பாதுகாப்பு : பாகிஸ்தானில் நமது தூதரகத்தில் வேளை செய்தப் பெண் காதலுக்காக நமது நாடு ஆவணங்களை பாகிஸ்தானிற்கு கொடுத்திருக்கிறார்....
நாட்டுப் பாதுகாப்பு :
பாகிஸ்தானில் நமது தூதரகத்தில் வேளை செய்தப் பெண் காதலுக்காக நமது நாடு ஆவணங்களை பாகிஸ்தானிற்கு கொடுத்திருக்கிறார்.அந்தப் பெண் செய்த தவறு ஒருபுறம் இருக்கட்டும். இதை என் நமது உளவுத் துறையினர் இவ்வளவு காலம் இதை எவ்வாறு அனுமதித்தனர்? தூதரகத்தில் வேலை செய்யும் அனைவரையும் கண்காணிக்க வேண்டியது அவர்களின் முக்கிய பணி இல்லையா ?
அலட்சியம் :
கதிரியக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய பொருள் ஒன்றை பழைய பொருட்கள் விற்கும் கடையில் இருந்து எடுத்து இருக்கிறார்கள். அதை கண்டுபிடிக்கும் முன்பே பலர் அதான் கதிர் வீசினால் பாதிப்படைந்துள்ளனர். பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிக்கு உபயோகப்பட்ட அந்தப் பொருள் எவ்வாறு இங்கே வந்தது? யார் இதற்குப் பொறுப்பு? வழக்கம் போல் இந்திய அணு ஆராய்ச்சிக் கழகம் ஒரு குழு அமைத்துள்ளது ? இதற்கு விடை தெரியும் பொழுது சம்பந்தப்பட்ட நபர்கள் ஓய்வுப் பெற்று எங்காவது ஒரு நாட்டில் செட்டில் ஆகி இருப்பார். மீடியாவிற்கும் இரண்டு நாட்களில் வேறு ஒரு விஷயம் கிடைக்கும் இதுவம் மறக்கப்படும்.
வாழ்த்துக்கள் :
இந்த வாரம் நமது சகப்பதிவர்கள் சிலரின் படைப்புகள் யூத் விகடனில் வெளி வந்துள்ளது . அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நாளை உழைப்பாளர்கள் தினம். உழைக்கும் அனைவரும் உழைப்பாளர்கள்தான். எனவே உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
மாற்றம் :
எனது வலைப்பூவின் பெயர் மாற்றம் செய்துள்ளேன். "என் எண்ணங்கள்" என்ற பெயரில் ஏற்கனவே இரண்டு மூன்று வலைப்பூக்கள் உள்ளதை இன்றுதான் பார்த்தேன். எனவே அதற்கு பதிலாக எனது அன்னையின் பெயரான "பாகீரதி" என்பதை வைத்துள்ளேன்.
விடுமுறை :
கோடை விடுமுறை துவங்கி விட்டது. பள்ளிகளுக்கு விடுமுறையும் விட்டாயிற்று. இப்ப விடுமுறைகளில் கூட தமது குழந்தைகளை சுதந்திரமாக இருக்க விடுவதில்லை பலரும். அந்த கேம்ப் இந்த கோச்சிங் என்று அவர்களைப் போட்டு வாட்டி வதைக்கின்றனர். ஏற்கனவே பள்ளி பாடங்களின் சுமையால் கஷ்டப்படும் நமது குழந்தைகளை இப்பொழுதாவது சுதந்திரமாக இருக்க விடுங்கள். அவர்களுக்கு படிக்கும் வழக்கத்தை உண்டு பண்ண இதுவே சரியான காலம். நல்ல புத்தகங்களை அறிமுகப் படுத்துங்கள். முடிந்தால் எங்கேயாவது சுற்றுலா சென்று வாருங்கள். உங்களுக்கும் ஒரு மாற்றமாக அமையும்.
இன்று இரவு பழனி செல்கிறேன். எனவே மீண்டும் ஞாயிறு அன்று சந்திப்போம்.
23 கருத்துகள்
May dhina vazhthukkal uzhaikkum karangalae. Nalla leave enjoy pannunga unga kids kooda. May dhinathulayum neenga anga sila idangalla paartheenganna kooli velai seiravanga velai seithuttu thaan iruppanga naal sambalam vaangaravangalukku vera vazhiye illai.
nan etho poricha kutai pathinu ninaichuten! :P
poyitu vanga, nallapadiya muruganai tharisanam seythuttu vanga. bye.
ok sir!!!!..:)
கதிரியக்க அலட்சியம் ரொம்ப ஆபத்தான விஷயம்
@SathyaSridhar
நன்றி சத்யாஸ்ரீதர். நீங்க சொல்றதும் உண்மைதான்
@கீதா
நன்றி பாட்டி. எப்பவும் சாப்பாடு நினைப்புதானா
@பாண்டி
:)
@அம்மணி
உண்மைதான் அம்மணி. என்ன பண்றது நம்ம நாட்டுல யாரு பொறுப்ப iruk
பத்திரமா போய் தரிசனம் செஞ்சுட்டு வாங்க. கூட்டு நல்லாருக்கு. கதிரியக்க தாளிப்பும் வாசனையாயிருக்கு.
vazhththukkal :)
இனிய கோடை விடுமுறை அமைய வாழ்த்துக்கள்! தொடர் பதிவு ப்ளாக் மூன் முடிஞ்ச ஒடனே போட்டுடறேன். :)
கீதா பாட்டி மிரட்டினதுக்கு எல்லாம் பயந்து எதுக்கு "என் எண்ணங்கள்" "பாகீரதி" ஆகிடுச்சு?
kootu nnu pottappo nan podalanga kootu,kathrikkai kootu nnu ninachai pa...parthal ithu vere kootu aache ....
Nethu dhaan indha embassy vishayam pathi kelvi patten. Enna matter nu detailed padikanum. 80 vayasu paatiya operation pannikka vandhavangala ulla vidamattanga. Aana indha madhiri secret leak aagaradha pathukittu vedikai paapaanga. Ippa enga pochu security threat etc etc? Onnum puriyala.
Very nice - new template - new blog name - new writing style - new materials - kalakkureenga!!!
//ஏற்கனவே பள்ளி பாடங்களின் சுமையால் கஷ்டப்படும் நமது குழந்தைகளை இப்பொழுதாவது சுதந்திரமாக இருக்க விடுங்கள். அவர்களுக்கு படிக்கும் வழக்கத்தை உண்டு பண்ண இதுவே சரியான காலம். நல்ல புத்தகங்களை அறிமுகப் படுத்துங்கள். முடிந்தால் எங்கேயாவது சுற்றுலா சென்று வாருங்கள். உங்களுக்கும் ஒரு மாற்றமாக அமையும்.//
நல்ல யோசனை, வரவேற்கிறேன். நன்றி.
கதிரியக்கப் பொருள் காயலான் கடையில்....அலட்சியத்தின் உச்சம்.
இளமை விகடனில் இந்த வாரம் சக பதிவர்கள்...இந்த வாரம் மட்டும்தானா?
brilliant.. migavum nalla ezhuththu!
//கீதா பாட்டி மிரட்டினதுக்கு எல்லாம் பயந்து எதுக்கு "என் எண்ணங்கள்" "பாகீரதி" ஆகிடுச்சு? //
போர்க்கொடி, நேரடியா மோதறதுக்கு தைரியம் இல்லை?? இதிலே எல்கேயை வேறே உசுப்பி விடறீங்க??? நறநறநறநற
@சாரல்
நன்றிங்க. பயணம் நல்ல படிய முடிஞ்சது
@ஆனந்தி
எதுக்கு?? சரி சொன்னதுக்கு நன்றி
@பொற்ஸ்
என்ன பண்றது மிரட்டியது தானைத் தலைவியாச்சே?
@eglesscooking
:(
@சித்ரா
நன்றிங்கோ ..
@சந்தியா
:D:D:D
@அமைதி அப்பா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ஸ்ரீராம்
அண்ணா, எனக்கு இந்த வாரம் தெரிஞ்சது சொல்லிட்டேன் . இப்பதான் விதிமுறைகள மாற்றலாமா என்று குழு அமைச்சு இருக்காங்க
@மாதங்கி
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி . தொடர்ந்து வாங்க
nalla pathivu! antha kathiriyakkam patriya seithi naan unga blog-la paathu thaan therinchunden.
May dina vaazhthukkal! Intha kodai-la en cousin TPL velayada poraan chennai-la so avanoda senthu naanum "match paaka kooda polaam"nu irukkennu solla vanthen. :P
கருத்துரையிடுக