Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin
Tuesday, December 3

Pages

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

கல்யாணத்திற்கு முன்பு

ஆறாவதோ இல்லை ஏழாவதோ படித்துகொண்டிருந்த சமயம் , எனது சித்தியின் (அம்மாவின் பெரியம்மாவின் பெண் ) திருமணத்திற்கு என் பாட்டி வீட்டில் இருந்து கி...

ஆறாவதோ இல்லை ஏழாவதோ படித்துகொண்டிருந்த சமயம் , எனது சித்தியின் (அம்மாவின் பெரியம்மாவின் பெண் ) திருமணத்திற்கு என் பாட்டி வீட்டில் இருந்து கிளம்பினோம். நான், எனது தாத்தா,பாட்டி, எனது பெரியம்மா அவருடைய பையன்(எனது தம்பி) மற்றும் அவனது தங்கை. அங்கிருந்து மண்டபத்திற்கு இரண்டு பேருந்துகள் மாறி செல்ல வேண்டும்.

இந்த இடத்தில என் தம்பியப் பத்தி சொல்லணும். தலைவர் கொஞ்சம் சேட்டை ஜாஸ்தி பண்ணுவார். பொதுவா யாருக்கும் பயப்படாத ஆளு. முதல் பேருந்தைப் பிடித்து பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சு . அடுத்த பேருந்தைப் பிடித்து மண்டபத்துல போய் இறங்கி பார்த்தா ஆளக் காணோம். எல்லாத்துக்கும் தூக்கி வாரி போட்டுச்சு. அவன் ஊருக்கு வேற புதுசு. வர வழில எதாவது ஸ்டாப்ல இறங்கிட்டனா இல்லை இறங்கமா பஸ்ல போயிட்டானா யாருக்கும் தெரியல ..


எல்லாரும் என்னைக் கேள்வி கேக்க ஆரம்பிசிட்டாங்க. உன் பக்கத்திலதான இருந்தான் எங்க போனான்னு பார்க்க வேண்டாமா ? அவன விட பெரியவன்(அவனை விட 6  மாசம்தான் ) உனக்கு பொறுப்பு வேண்டாம் ? இது என் தாத்தா. எங்க குடும்பத்துல எல்லாரும் பயப்படற ஒரே ஆள் என் தாத்தாதான் அவ்ளோ கோபக்காரர்.

  ஒரு பக்கம் அவங்க அம்மா அழ ஆரம்பிக்க , இன்னொரு பக்கம் என் தாத்தாவும் பாட்டியும் கோபத்தில (இந்த இடத்துல யாருக்காவது கீதா பாட்டி நினைவு வந்தா கம்பெனி பொறுப்பல்ல )அவங்களை திட்ட ஆரம்பிக்க, மண்டபத்துல கல்யாண வேலை முழுக்க நின்னுப்போச்சு.

என் மாமா வந்தவழில போய் பாக்கலாம்னு வண்டிய எடுத்துகிட்டு போனார். எங்க வீடு மண்டபத்துக்கு பக்கத்தில்தான். நானும் (தேடறதுக்கு எவ்ளோ பெரிய ஆள்) என் பாட்டியும் அங்க ஒரு முறை போயிட்டு வந்தோம். அதுக்குள்ள தேடிட்டு போன மாமாவும் திரும்பி வந்துட்டார். அவருக்கும் அவன் அகப்படலை. இதுல யாரோ ஒருத்தர் , இப்படித்தான் சின்ன பசங்களை அடிக்கடி கடத்தி விக்கறாங்கனு போற போக்கில சொல்லிட்டு போய்ட்டார்.  அந்த மண்டபம் கல்யாண மண்டபமா மாதிரி இல்லை. எங்க சித்தி  பாவம், கல்யாணத்த நினச்சு  சந்தோஷப்படறத இல்ல இதை நினைச்சு டென்ஷன் ஆகறதானு தெரியாம ஒரு குழப்பத்தில இருந்தாங்க.

அப்பதான் ஒருத்தர் உருப்படியான யோசனை சொன்னார். எந்த பஸ்ல வந்தீங்களோ அந்த பஸ் எந்த இடத்துக்கு கடைசியா போறதோ அங்க போய் பாருங்க. பஸ்லயே போயிருந்தா அங்க இருக்க வாய்ப்பு இருக்குனு சொன்னார் . அப்புறம் எங்க மாமாவும் பெரியம்மாவும் கிளம்பி போய் பார்த்த, அங்க டிரைவர் கூட உக்காந்து டீ குடிச்சிட்டு இருக்கான் என் தம்பி.

ஏன்டா அங்கேயே இறங்கலைன்னு கேட்டா , இல்ல தாத்தா மாதிரியே ஒருத்தர் சட்டை போட்டுக்கிட்டு இருந்தார். அதான் இன்னும் நாம இறங்கற இடம் வரலைன்னு நினைச்சிட்டு உக்காந்திருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது நீங்க இறங்கிட்டீங்கன்னு .எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல அதான் இது வரைக்கும் இவங்ககூடவே வந்துட்டேன்னு சொல்றான்.

எதோ ஆண்டவன் புண்ணியம் திருப்பி கிடைச்சது அப்படின்னு மண்டபத்துக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. அதுக்கப்புறம்  தலைவர்க்கும் இவனால அவனோட அம்மாவுக்கும் எல்லார் கிட்ட இருந்தும் இலவச அர்ச்சனை கிடைச்சது.

இன்னும் கூட அந்த மண்டபம் இருக்கற ரோட்ல போறப்ப இந்த ஞாபகம் வரும் எனக்கு. ஒரு கல்யாண பத்திரிகை வந்துச்சு . அதில் இந்த மண்டபத்தின் பெற பார்த்த உடன் கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சிடுச்சி .

இதனால நான் சொல்ல வர்றது  என்னன்னா , வெளில போறப்ப உங்க குழந்தைகளை பத்திரமா பார்த்துகோங்க.

டிஸ்கி : தலைப்பை வைத்து என் கல்யாணத்திற்கு முன்பு நடந்த சம்பவம் என்று நினைத்து வந்து ஏமாந்திருந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல

35 கருத்துகள்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

nalla velai.. unga thambi kidaichanga.. illanna..ungala pinni iruppanga pola irukku :)

Ananya Mahadevan சொன்னது…

//தலைப்பை வைத்து என் கல்யாணத்திற்கு முன்பு நடந்த சம்பவம் என்று நினைத்து வந்து ஏமாந்திருந்தால் நிர்வாகம் பொறுப்பல்// நல்லா கிளப்புராய்ங்க பீதிய! சூப்பர்! பதட்டப்படாம பையனை உட்கார வெச்சு டீ குடுத்த அந்த டிரைவர் வாழ்க!

தெய்வசுகந்தி சொன்னது…

நல்லா கொசுவத்தி சுத்துனீங்க!!
நாந்தான் மொதல்ல ஏனாந்தனா?:-)

BalajiVenkat சொன்னது…

U deliberately chose the topic ... And now telling company is not responsible ...… Grrrrrr ...... But nalla tortoise ...... Suthunga suthunga anniya ooruku anupittu nalla suthurar...

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நல்ல கொசுவத்திதான். எனக்கு கீதா பாட்டி நினைவு வரல்லியே ஏன்!!! :-))

டீ கொடுத்த ட்ரைவர் வாழ்க..(பாவம் அநன்யா தனியா கோஷம் போட்டுக்கிட்டிருக்காங்க. அவங்களுக்கு மொதல்ல டீ கொடுங்க) :-)

Chitra சொன்னது…

Good one. :-)

தக்குடு சொன்னது…

//இதனால நான் சொல்ல வர்றது என்னன்னா , வெளில போறப்ப உங்க குழந்தைகளை பத்திரமா பார்த்துகோங்க//

அதானே பார்த்தேன். கருத்து கந்தசாமி இன்னும் கருத்து ஒன்னும் சொல்லலையே?னு பார்த்தேன்...:)

அன்புடன் மலிக்கா சொன்னது…

//தலைப்பை வைத்து என் கல்யாணத்திற்கு முன்பு நடந்த சம்பவம் என்று நினைத்து வந்து ஏமாந்திருந்தால் நிர்வாகம் பொறுப்பல்// நல்லா கிளப்புராய்ங்க பீதிய! சூப்பர்! பதட்டப்படாம பையனை உட்கார வெச்சு டீ குடுத்த அந்த டிரைவர் வாழ்க//

நானும்உங்க கூட சேர்ந்துக்கிட்டேன் அநன்யா..

//இதனால நான் சொல்ல வர்றது என்னன்னா , வெளில போறப்ப உங்க குழந்தைகளை பத்திரமா பார்த்துகோங்க//

கருத்து கந்தசாமி இல்லயில்ல கார்த்திக் வாழ்க.

ஆனாலும் இது நல்ல மேட்டருங்க.எல்லாரும் கவனமா படிங்க கோட்டவிட்டுடாதீங்க..

அமைதி அப்பா சொன்னது…

//இதனால நான் சொல்ல வர்றது என்னன்னா , வெளில போறப்ப உங்க குழந்தைகளை பத்திரமா பார்த்துகோங்க.//

கோடை விடுமுறைக்கு அனைவரும் வெளியில் செல்லும்,
இந்த நேரத்தில், அவசியமான பகிர்வு.
நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நிச்சயம் பின்னி பெடல் எடுத்து இருப்பாங்க...நல்ல தம்பி உங்களைக் காப்பாத்திட்டார்

பெயரில்லா சொன்னது…

தம்பி உடையான் அடிக்கு அஞ்சான் :)

எல் கே சொன்னது…

//Ananthi said...
nalla velai.. unga thambi kidaichanga.. illanna..ungala pinni iruppanga pola irukku :)/
ஆமாம் நடந்திருக்கும் .
வருகைக்கு நன்றி

எல் கே சொன்னது…

@அனன்யா
அவரைத்தான் பாராட்டனும்

எல் கே சொன்னது…

@தெய்வ சுகந்தி

உங்களுக்கு முன்னாடியே ரெண்டு பேரு ஏமாந்து போய்ட்டாங்க நீங்க மூணாவது,

எல் கே சொன்னது…

@balaji

:D :D

thanks for comment

எல் கே சொன்னது…

@சாரல்

அவங்க நினைவுக்கு வராட்டி நான் பொறுப்பில்ல
@chitra
thanks :)

எல் கே சொன்னது…

@தக்குடு
நல்ல கருத்தா இருந்த கேட்டுக்கோ . உனக்கு பின்னாடி தேவை படும்

@மலிக்கா
வாழ்த்துக்கு நன்றி

எல் கே சொன்னது…

@அமைதி அப்பா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@தேனம்மை
இப்படியும் சொல்லலாமா ? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@அம்மணி
ஒரு தம்பி இருந்த பரவில்லை. எனக்கு தம்பி தங்கைகள் (கூட பிறந்தது ஒரு அக்கா மட்டும்தான் )
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Menaga Sathia சொன்னது…

நானும் தலைப்பை பார்த்து ஏமாந்துட்டேன்...

Mythili (மைதிலி ) சொன்னது…

It has happened for my younger brother too. We too got him back too but now he is no more. It brought back my old memories of the day we were searching for him.

malar சொன்னது…

உங்கள் பதிவில் ஓட்டு பட்டை இல்லை...

ஜெய்லானி சொன்னது…

கடைசில அடி யாருக்கு கிடைச்சுதுன்னு சொல்லவே இல்லையே.

எல் கே சொன்னது…

@மேனகா
வருகைக்கு நன்றி
@மைதிலி
ரொம்ப வருத்தமா இருக்கு .

@மலர்
இருக்கே ..tamil10 தமிளிஷ், தமிழ்மணம் மூன்றுமே இருக்கே . கொஞ்சம் நிதானமா வந்திருக்கும்

@ஜெய்லானி
எனக்கு அடி விழல

geethasmbsvm6 சொன்னது…

இந்த இடத்துல யாருக்காவது கீதா பாட்டி நினைவு வந்தா கம்பெனி பொறுப்பல்ல )//

grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

geethasmbsvm6 சொன்னது…

enga vitileyum kita thata ippadi oru sambavam nadanthathu, irunga chutti eduthutu varen, freeya vilambaram kodukalame??

geethasmbsvm6 சொன்னது…

Bagirathi yaru?? unga amma? patti? kollu patti??

எல் கே சொன்னது…

அது என்னோட அம்மா பெயர் . தாராளமா போடுங்க

Geetha Sambasivam சொன்னது…

காயத்ரி மந்திரத்தை
காயத்ரிமந்திரத்தை

SathyaSridhar சொன்னது…

Haa haaa haaa,,,nalla comedy aana sambavam paa,,ungalukku 6 maasam thann chinna vayasu ungalai poruppu illayannu kettangala.. nalla velai angeyum sutti thanatha kaatama amaithiya driver oeda tea kudichuttu iruntharae,,athuvaraikkum santhosham...Mr.Karthik, enakku ungaludaya posting updates la vara maatenguthunga athukku enna seiyanum..athanala unga nalla kathaigala oru naal thalli padikka avendiyatha irukku.

எல் கே சொன்னது…

@sathya

nandri. alreay neenga en followers listla iruntha unfollow pannitu marubaidum follow panni parunga. work aga vaippundu

GEETHA ACHAL சொன்னது…

உங்களுக்கும் இப்படி ஒரு கொசுவத்தி சுற்றியா...இந்த காலத்து குழந்தைகள் எல்லாம் பலே கில்லாடிகள்...3 வயது ஆனதும் குழந்தைகளுக்கு எல்லோரும் அவங்களுடைய வீட்டு phone number சொல்லிகொடுப்பது மிகவும் அவசியம்...

எல் கே சொன்னது…

@கீதா
சரியாய் சொன்னீங்க

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

கல்யாணத்துக்கு முன்னாடின்னு தலைப்பு வெச்சு இப்படி ஏமாத்தலாமா பிரதர்... சரி சரி... ஆனாலும் உங்க தம்பி நல்லாவே அலைய வெச்சுருக்கார்... சரியான ஆள் தான் போல (யாரு தம்பி???????)

Harini Nagarajan சொன்னது…

lols! appa unga parithaaba moonchi a nenachu paakkaren athaan ennayum maranthu sirichutten! :P

குந்தவை சொன்னது…

//தலைப்பை வைத்து என் கல்யாணத்திற்கு முன்பு நடந்த சம்பவம் என்று நினைத்து வந்து ஏமாந்திருந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல

இப்படி கவுத்திட்டீங்களே.

எங்க வீட்டிலேயும் இப்படி ஒரு சம்பவம் நடந்திச்சு. ஆனா அதில் நாயகி நான் தான். திருவிழாக் கூட்டத்தில், அம்மான்னு நினைச்சி அம்மா மாதிரியே பட்டு புடவை கட்டிக்கொண்டிருந்தவரின் முந்தி பிடித்து கொண்டு அலைந்தேன்.