Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin
Tuesday, December 3

Pages

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

பிடித்த ஐந்து பாடகர்/பாடகியர்

இன்று பிறந்தநாள் காணும் எனது மனைவியின் தாயாருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலைகளில் மிகுந்த ஈடுபாடு உள்ள அவருக்குகாக இந்த பதிவு . எனக...

இன்று பிறந்தநாள் காணும் எனது மனைவியின் தாயாருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலைகளில் மிகுந்த ஈடுபாடு உள்ள அவருக்குகாக இந்த பதிவு .

எனக்கு இசையில் அவ்வளவு ஞானம் இல்லை. மனதுக்கு இதமாக இருந்தால் கேட்பேன். அந்த வகையில் எனக்குப் பிடித்த ஐந்து  பாடகர்/பாடகியரின் வரிசை.

திருமதி M . S . சுப்புலட்சுமி

கர்னாடக சங்கீதத்தில் ஞானம் இல்லாதவர்களை கூட கவர்ந்து இழுத்தவர். கர்நாடக சங்கீதத்தின் முடிசூடா ராணி என்றே இவரை அழைக்கலாம். இவரது அனைத்து பாடல்களும் எனக்குப் பிடிக்கும். அதிலும் குறிப்பாக, குறை ஒன்று இல்லை மற்றும் அனைத்து மீரா பஜன் பாடல்கள். இதோ அதிலிருந்து ஒரு பாடல் உங்களுக்காக ..



2 . திரு. S .P . பாலசுப்ரமணியம்

 "பாடும் நிலா" என்று அன்புடன் அழைக்கப்படும் SPB  அவர்களின் குரல் தேனருவி போல் காதுகளில் பாயும். 80 களில் SPB இளையராஜா கூட்டணியில் வந்த அனைத்துப் பாடல்களும் மனதிற்கு அமைதி தருவதை நம்மை தாலாட்ட வைப்பதாய் இருக்கும். கர்நாடக சங்கீதம் முறையாக பயிலாத இவர் பாடிய சங்கராபரண பாடல்கள் அனைத்தும் ஹிட். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் தனக்கு தெரியாது என்பதற்காக அவர் அதை தவறாக பாடவில்லை. இவர் பாடிய எண்ணற்ற பாடல்களில் இருந்து உங்களுக்காக ஒரு பாடல்




3. K .J . யேசுதாஸ்

 கர்நாடக சங்கீதம் மற்றும் சினிமா இரண்டிலும் ஒரே சமயத்தில் புகழ் பெற்று விளங்குவது என்பது மிகக் கடினமான ஒன்று. இந்த சாதனைக்கு உரியவர் இவர். இவர் பாடிய கிருஷ்ணர் மற்றும் அய்யப்பன் பாடல்கள் மிகப் பிரபலம். ஆனால் இன்று வரை இவரால் அந்த கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய இயலாதது வேதனையான ஒன்று. இவரது குருநாதர் செம்பை அவர்கள் வருடம்தோறும் குருவாயூர் கோவிலில் கச்சேரி செய்வது வழக்கம். ஒரு முறை இவரை அனுமதிக்காத காரணத்தினால் கோவிலின் வெளியே கச்சேரி செய்தார் .



4 . சித்ரா :
  "சின்னக் குயில்" என்று அழைக்கப் படும் சித்ரா, மலையாளத்தை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் உச்சரிப்புப்  பிழையின்றி பாடக்கூடிய ஒரு பாடகி. (இன்றைய பாடகர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று ). இவர் பாடிய ஒரு அமுத கானம்.





5 . அருணா சாய்ராம்:

 இசையை கற்றுக்கொள்ள வயது ஒரு தடையில்லை என்று நிரூபித்த ஒரு பெண்மணி. இப்பொழுது பாடி வரும் கர்நாடகா இசை பாடகியரில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் இவர்.  இவர் பாடும் மராட்டிய abangangal  மொழி தெரியாவிட்டாலும் நம்மை தாளம் போட வைக்கும் .



இதுவரைக்கும் எனக்குப் பிடித்த பாடகர்களை பத்தி பாத்தோம். இப்ப உங்களுக்கு யாரை பிடிக்கும்னு பார்க்கலாமா?

இதை ஒரு தொடர் பதிவாக மாற்ற நான் அழைப்பது

அநன்யா
ஹரிணிஸ்ரீ
தக்குடு பாண்டி
பொற்கொடி
அமைதிசாரல்

விதிமுறைகள்

1 . உங்களுக்கு பிடித்த இந்திய பாடகர்கள் மட்டுமே

42 கருத்துகள்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

Nice karthik :-))

settaikkaran சொன்னது…

நம்ம தலை எஸ்.பி.பி.இருக்காரா? மிக்க மகிழ்ச்சி!!

Chitra சொன்னது…

Birthday wishes to your mother-in-law!

Ananya Mahadevan சொன்னது…

உன் மாமியாருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஐஞ்சே ஐஞ்சு பேர் தானா? :(( என் லிஸ்டு பெருசாச்சே.. சரி முடிஞ்ச வரைக்கும் போடுறேன்.
என்னை தொடர் பதிவுக்கு அழைச்சதுக்கு டாங்கீஸ்.. சீக்கிரம் போட்டுடறேன்!

Geetha Sambasivam சொன்னது…

நல்ல தேர்வு, அனைவருமே எனக்கும் பிடிச்சவங்க என்றாலும் லிஸ்ட் இன்னும் பெரிசாவும் இருக்கு. செளம்யா, பாம்பே ஜெயஸ்ரீ, காயத்ரி வெங்கடராகவன் போன்றவர்கள் பாடுவதும் நன்றாக இருக்கும். அப்புறம் பழைய பாடகர்களில் மிகவும் பிடித்த இன்னொருவர் மஹாராஜபுரம் சந்தானம். ஊத்துக்காடு அவர்களின் பாடல்களையும், சம்போ, சிவ சம்போ பாடலையும் இவரை விட அருமையாக வேறு யார் பாடினாலும் என்னால் ரசிக்க முடியவில்லை. இவர் குரலில் அப்படி ஒரு உருக்கம், பக்தி, கெஞ்சல் எல்லாம் இழையோடும்.

Geetha Sambasivam சொன்னது…

ஓஹோ, மாமியார் பிறந்த நாளா?? சரியாப் போச்சு, என்னோட வாழ்த்துகளைச் சொல்லிடுங்க. மாமியார் பிறந்த நாள் போஸ்ட் போட்ட முதல் நபர் நீங்கதான்னு நினைக்கிறேன். உங்களுக்கும் வாழ்த்துகள்.

adhvaithan சொன்னது…

என் இனிய பிறந்த நாள் வாழ்துக்கள்.. உங்கள் மாமியாருக்கு மனமார்ந்த நமஸ்காரங்கள்..

அருணா சாய்ராம்.. இந்த முறை த்யாகராஜர் ஆராதனை விழாவில் அவர் பாடல்களை நேரடியாய் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.. அவர் பாடிய "ஏலா நீ தயராது" - அடான ராகமும் "கந்தமு பொய்யருகா" - புன்னகவராளி ராகமும் இன்னும் செவியில் நிற்கிறது..

adhvaithan சொன்னது…

என் இனிய பிறந்த நாள் வாழ்துக்கள்.. உங்கள் மாமியாருக்கு மனமார்ந்த நமஸ்காரங்கள்..

அருணா சாய்ராம்.. இந்த முறை த்யாகராஜர் ஆராதனை விழாவில் அவர் பாடல்களை நேரடியாய் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.. அவர் பாடிய "ஏலா நீ தயராது" - அடான ராகமும் "கந்தமு பொய்யருகா" - புன்னகவராளி ராகமும் இன்னும் செவியில் நிற்கிறது..

Thenammai Lakshmanan சொன்னது…

அனைவருமே எனக்கும் பிடித்தவர்கள் LK...அருமை

சாந்தி மாரியப்பன் சொன்னது…

உங்களது இன்னொரு அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்க தேர்வு அருமையா இருக்கு.எனக்கும் இவங்களையெல்லாம் பிடிக்கும். ஊர் சுத்திக்கிட்டிருக்கேன்.முடிஞ்சதும் கண்டிப்பா தொடர்வேன். கரும்பு தின்ன கசக்குதா என்ன!!!

ஜெய்லானி சொன்னது…

கீதா சாம்பசிவம்--//ஓஹோ, மாமியார் பிறந்த நாளா?? சரியாப் போச்சு, என்னோட வாழ்த்துகளைச் சொல்லிடுங்க. மாமியார் பிறந்த நாள் போஸ்ட் போட்ட முதல் நபர் நீங்கதான்னு நினைக்கிறேன். உங்களுக்கும் வாழ்த்துகள்.//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

எல் கே சொன்னது…

@ananthi

நன்றி
@சேட்டைக்காரன்
ஆமாங்க அவருதாங்க நமக்கும் தல


@chitra

thanks

எல் கே சொன்னது…

@அநன்யா மஹாதேவன்

சீக்கிரம் போடு. என் லிஸ்டும் பெருசுதான். வீடியோ கிடைக்கல எனக்கு அதனால இதோட முடிச்சிட்டேன்

எல் கே சொன்னது…

@கீதா பாட்டி

சரிதான் , சம்போ பாட்டு அவர் குரல்ல கேட்க மட்டும்தான் எனக்கு பிடிக்கும். ஒரு வித்யாசமா இருக்கட்டும்னுதான்

எல் கே சொன்னது…

@hareaswar
நன்றி

எல் கே சொன்னது…

@thenammailakshmanan

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்களும் ஒரு பதிவு போடலாமே இதை பற்றி

எல் கே சொன்னது…

@அமைதிச்சாரல்

ஆஹா நல்லது எங்களுக்கு நிறைய பதிவு கிடைக்கும். வாழ்த்துக்கு நன்றி s

எல் கே சொன்னது…

nandri jai

Jaleela Kamal சொன்னது…

ஏன் உங்களுக்கு தமிழ் பாண்ட் வொர்க் ஆகைலையா?

நானும் இது வரை வலை தளங்களில் பிளாக்கோடு சேர்த்து 1200 குறிப்பு களுக்கு மேல் கொடுத்து இருக்கேன், ஆனால் தமிழ் எடிட்டர், இன்னும் வேறு யுனி கோட் மூலமாக ரொமப் கழ்ட பட்டு டைப் செய்து காப்பி பேஸ்ட் பண்ணுவேன்,

இப்ப 10 நாட்களாக மலிக்காவின் உதவியால் இந்த பிளாக்கில் இருந்து

http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html

இந்த இடத்தில் நல்ல தெளிவாக கொடுத்துள்ளார் பாருஙக்ள்.
இந்தNHM writer தரவிறக்கி வைத் து கொண்டே, இது நீங்கள் பதில் சொல்ல விரும்பிய இடத்தில் எல்லால் ரொம்ப சுலபமாக டைப்பண்ண முடியும். முயற்சி செய்து பாருங்கள்.

Jaleela Kamal சொன்னது…

உங்கள் மாமியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மாமியாரையும் எல்லோரும் வாழ்த்தனும் என்று நினைக்கிறீங்க. ரொமப் நல்ல உள்ளம் உங்களுக்கு வாழ்த்துகக்ள்

அன்புடன் மலிக்கா சொன்னது…

உங்கள் மாமியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மாமியாரையும் எல்லோரும் வாழ்த்தனும் என்று நினைக்கிறீங்க. ரொமப நல்ல உள்ளம் உங்களுக்கு வாழ்த்துககள்.//

நானும் அப்படியே ரிபீட்டு..

அப்புறம் நான் :பாலா: பிரியை.
குழலூதும் கண்ணனுக்கு. பாட்டு ரொம்பப்பிடிக்கும் கார்த்திக்.

நல்ல தேர்வுகள்.

Asiya Omar சொன்னது…

எல்.கே முதல் நால்வரும் தெரிந்தவர்க்கள்,இந்த அருணா சாய்ராம் எனக்கு புதுசு.நல்ல பதிவு,மாமியாருக்கு வாழ்த்துக்கள்.

எல் கே சொன்னது…

நன்றி ஜலீலா . அந்த மென்பொருள் என் கணினில சரியாய் வேலை செய்வது இல்லை. எனவே கூகிள் உபயோகிப்பேன். சில சமயம் ஆபிஸ்ல இருந்து பதில் போடறப தங்க்லீஷ் உபயோகிப்பேன்

வாழ்த்துக்களுக்கு நன்றி

@ஆஸியா
வாழ்த்துக்களுக்கு நன்றி. கேட்டு பாருங்க அவரயும் பிடிக்கும் உங்களுக்கு

எல் கே சொன்னது…

@மலிக்கா
நன்றி மலிக்கா அவர்களும் நமது உறவு தானே.

Priya சொன்னது…

உங்கள் மாமியாருக்கு அன்பின் வணக்கங்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களும்!

உங்க வரிசையில் சித்ராவின் இந்த‌ பாடல் எனக்கும் பிடித்த ஒன்று.

எல் கே சொன்னது…

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பிரியா

SathyaSridhar சொன்னது…

Mr.Karthik,,enakkum Subbu amma va rombha pidikkum avanga kural rombha inimaiyanathu endrum maraiyatha oru ninaivu,,,avangaloeda "Kurai ondrum illai marai moorthi kanna" paadal enakku rombha rombha pidithathu,, apram unga Maamiyarudaya pirantha naalukku ennudaya vazhthukkal,,,mudhal manushan maamiyara pathi ezhuthinathu neenga mattum thaan, enna maamiyarku ICE ahh..

தெய்வசுகந்தி சொன்னது…

நல்ல தேர்வு. அனைவருமே எனக்கும் பிடித்த பாடகர்கள். உங்கள் மாமியாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தக்குடு சொன்னது…

உருப்பிடியா ஒரு பதிவு போட்ருக்கேள் LK! மாமியாருக்கு எல்லாம் வைச்சாகர்து போலருக்கு??...:)

@ஹரிணி madam,- LK ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டார்! பதிவு நிச்சயமா தமிழ்லதான் எழுதனும், ஆர்குட் பழக்கம்! ஆட்டுக்குட்டி பழக்கம்!னு சொல்லி தங்கிலிஷ்ல எல்லாம் எழுதக் கூடாது! சரியா! எல்லார்க்கும் படிக்கர்து ரொம்ப கஷ்டமா இருக்கும்.

Harini Nagarajan சொன்னது…

Very nice selection! :)

எல் கே சொன்னது…

@சத்யாஸ்ரீதர்

நன்றி. அது எனக்கு மிகவும் பிடித்த பாடல் . எங்க ஒரு வாழ்த்து தெரிவிச்சா அது ஐஸா??

எல் கே சொன்னது…

@தெய்வ சுகந்தி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@தக்குடு

ஏன் சொல்லமாட்ட நீ

@ஹரிணி
நன்றி

அமைதி அப்பா சொன்னது…

நல்ல தேர்வு, மகிழ்ச்சி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

மாமிக்கு என்னோட வாழ்த்துகள சொல்லிடுங்க

சூப்பர் selection ஒப் சிங்கர்ஸ் (உங்கள ஏன் சூப்பர் சிங்கர்ஸ்க்கு ஜட்ஜ்ஆ போடல) Jokes apart, nice songs selected too

Mythili (மைதிலி ) சொன்னது…

//இன்று பிறந்தநாள் காணும் எனது மனைவியின் தாயாருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்//ரொம்ப நல்ல மருமகன் நீங்க..
நல்ல பதிவு...

ஸ்ரீராம். சொன்னது…

ரொம்பச் சுருக்கமா இருக்கு. இவ்வளவு சின்ன லிஸ்ட்டா எல்லாம் அடக்க முடியாதே...!

எல் கே சொன்னது…

@அமைதி அப்பா

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@அப்பாவி தங்கமணி

நன்றிங்க.. அதான் முன்னாடியே சொல்லிட்டோம்ல , நமக்கு இதுல அந்த அளவுக்கு ஞானம் இல்லைன்னு

@ஸ்ரீராம்

கால நேரம் கருதி சுருக்கப்பட்டது

@மைதிலி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

Ananya Mahadevan சொன்னது…

// வீடியோ கிடைக்கல எனக்கு அதனால இதோட முடிச்சிட்டேன்//

ஹலோ,
வீடியோ எல்லாம் போட முடியாதுபா.. ஒன்லி ஆடியோ.. ஓக்கே வா? ஃபைனல் லிஸ்டு ரெடி பண்ணிண்டு இருக்கேன்!

Jaleela Kamal சொன்னது…

www.tamileditor.org

இதிலும் ஈசியா வரும்

egglesscooking சொன்னது…

கீதா சாம்பசிவம்--//மாமியார் பிறந்த நாள் போஸ்ட் போட்ட முதல் நபர் நீங்கதான்னு நினைக்கிறேன். உங்களுக்கும் வாழ்த்துகள்.//

Enakku oru pazhamozhi dhaan gyabagathukku varadhu. "Sozhiyan kudumi summa aadadhu".

Enakkum Aruna Sairam romba pidikkum.

Harini Nagarajan சொன்னது…

//LK ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டார்! பதிவு நிச்சயமா தமிழ்லதான் எழுதனும், ஆர்குட் பழக்கம்! ஆட்டுக்குட்டி பழக்கம்!னு சொல்லி தங்கிலிஷ்ல எல்லாம் எழுதக் கூடாது! சரியா! எல்லார்க்கும் படிக்கர்து ரொம்ப கஷ்டமா இருக்கும்.//

சரிங்க ஆபீசர்! :P

எல் கே சொன்னது…

@மதுரம்

இதுல என்ன இருக்கு :-o